கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 4, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

செத்துப் போகும் தெய்வங்கள்

 

 அவசரமாகப் போக வேண்டும் என்பதனால் தான் பஸ்ஸில் ஏறினேன். ஏறினேன் என்பது தவறு. திணிந்தேன். என்னை நானே திணித்துக் கொண்டேன். திணிந்த பின் தான் காலூன்ற இடம் தேடுகின்றேன் காலூன்றும் இடம் எல்லாம் கால்கள். ஒற்றைக் காலின் விரல் நுனியில் சற்று நேரம் நிற்கின்றேன். ஏதோ ஒரு கால் அகஸ்மாத்தாக உயர்ந்த போது அந்த இடத்தில் ஊன்றிக் கொண்டேன் . இந்த ஆக்கிரமிப்பு இன்னொருவனை ஒற்றைக்காலில் நிற்கப் பண்ணியிருக்கும். என் மேல் எரிச்சல் கொள்ளச் செய்திருக்கும். ஒடித்தலும்


சாணைக் கூறை

 

 (2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இருபுறமும் இடியப்பத் தட்டுக்களை அடுக்கினாற் போல, இரு காதுகள் நிறைய பத்துக்சோடி அல்லுக்குத்துகளும் அசைந்தாட ஹாஜறா உம்மா சொன்னாள், “ஒண்டி என்ர வயித்தில பொறந்த புள்ள இப்ப இஞ்சினீர் ஆயிற்றான்; என்ர ஆசை தீர அவனுக்கு ஒரு கலியாணம் முடிச்சிற்றனெண்டா, மத்தநாள் கண்ண முடினாலும் கவல இல்லடி பாத்தும்மா” “எனக்குத் தெரியாதா ராத்தா, நீ பட்ட பாடும் உன் மக னுக்குக் கட்டின


சீமைப் பூ

 

 (1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அண்ணாவுக்கு டில்லியிலே பெரிய உத்தியோகம். இரண்டாயிரத் 5 துக்குக் கிட்டத் தட்டச் சம்பளம் வாங்குகிறார். உத்தியோகம் உயர்ந்ததிலிருந்து அவருடைய நடை உடை பாவனை யாவும் புதுவித மாய் மாறிவிட்டன. ஆங்கிலத் துரைமாரைப் போலவே ஆகிவிட்டார். நாலைந்து வருஷங்களுக்கு ஒரு முறை ஊர்ப்பக்கம் வருவார். ஒரு வாரத் திற்கு மேல் கிராம வாழ்க்கை இருப்புக் கொள்ளாது. “சுத்த ‘டர்ட்டி லேஸ்’, ‘ப்ரூட்ஸ் ஆல்’ (ஆபாசமான


நரிக்குறத்தி

 

 தர்மமிகு தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னைப் பட்டணத்தில் நெடுஞ்சாலையொன்று ரயில் பாதையைக் குறுக்கே வெட்டிக்கொண்டு பாழ் இடமான ஒரு லெவல் கிராஸ். அந்த லெவல் கிராஸிங் கதவுகள் வழக்கம் போல் சாத்திக் கிடந்தன. அவை சாத்தப்பெற்ற இரண்டொரு நிமிஷங்களில் ஜனங்கள் வந்து குழுமினர். அப்புறம் வழக்கம்போல் கார், பஸ், லாரி , ரிக்ஷா , ஜட்கா , சைக்கிள் முதலான வாகனாதிகள் போக்குவரத்து விடுதிகளை அனுசரித்து, சாலையின் இடது பக்கங்களில் எதிர்ப்புதிரிட்டு ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நிற்கலாயின. சென்னை


அந்த ஒன்று…

 

 கருணாவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.மனம் ஒரு நிலையில் இல்லாது தவித்தது. இண்டைக்கு ரித்தியுடன் கதைக்காமலே விட்டிருக்கலாம் என்று அவளுக்குத் தோன்றியது. “ம்…இனி கழிவிரக்கப்பட்டு என்ன செய்வது…?” “கருணா! வெறுமன முகநூலில உங்கட குடும்பப் படங்களையும் அங்க இங்க வக்கேசன் போனது எண்டு விளம்பரப் படுத்திர படங்களையும் போடாமல் உன்ற மச்சாள் போல உன்ற திறமையக் காட்டுர விடயங்களப் பதிவுசெய்தியெண்டால் உனக்கு ஒரு பெயர் நிலைக்கும் தானே.” ராதிகா என்ற பெயரை ரித்தி என மாற்றிக்கொண்டு “இன்றைய நாள்


கல் நூல்

 

 1 அன்புமிக்க நண்பா, இன்றைக்கு, அதுவும் இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த குறிப்பு உன்னை மட்டுமல்ல உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்த போகிறது. அதற்கான உறுதியான சான்றுகளை அண்மையில் ஆய்வுக்குறிப்புகளில் இருந்து கண்டடைந்து விட்டேன். லிபிகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்த வேளையில், அதற்கு பிறகான புனைவியம் குறித்த எனது தேடல் நீ அறிந்ததே. ஆனால் தற்போது நம் மொழியில் பண்டைய இன குழுவினர் செய்த காரியம் உலக மனித பரிணாம வரலாற்றில் இது வரை யாரும் செய்யாத


காணாது போகுமோ காதல்

 

 பாகம் 7 | பாகம் 8 அன்று காலையில் பங்களாவில் ஒரே ஆரவாரமாக இருந்தது. ஆபீஸிற்கு கிளம்பி ஃபைனலாக கண்ணாடியில் தன் கம்பீர அழகை ஒருமுறை சரிபார்த்து விட்டு தன் அறையை விட்டு வெளியே வந்த போது ஹாலில் சில உறவினர்கள். ஒன்றும் புரியாமலே அவர்களை வரவேற்றான் தீபக். “என்ன தீபக் வெளிநாடு எல்லாம் போயிட்டு வந்துட்டே போலிருக்கு.” “ஆமா ” “வெளிநாட்டிலிருந்து பொண்ணோடு வருவேன்னு நினைச்சோம். நல்லவேளை குடும்பத்து பேரை காப்பாத்திட்டே.” சட்டென்று தீபக்கிற்கு நைனிகா


கண்ணாடி நினைவுகள்

 

 (1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிட்டி ஹால் பெருவிரைவு ரயில் நிலையத்தில் இருந்து நகர்ந்த ரயிலில், டிங்..டிங்..டிங்..’ என்ற ஒலியைத் தொடர்ந்து, “நெக்ஸ்ட் ஸ்டேஷன் ஈஸ் இராஃபிள்ஸ் பிளேஸ், பேசஞ்சர்ஸ் ஹூ ஆர் கோயிங் டு தஞ்சோங் பகார், பூன்லே அண்ட் சுவா சூ காங், பிளீஸ் கிராஸ் த பிளாட்ஃபார்ம் அண்ட் போர்ட் த வெஸ்ட் பவுண்ட் டிரெய்ன்” என ஆங்கிலத்தில் அறிவிப்பு. அடுத்து, சீன மலாய்,


பெரியவன்

 

 “அம்மா ..! அம்மா ….!” சின்ன மகன் கூப்பிடுவது கேட்டாலும் எதற்காகக் கூப்பிடுகிறான் என்பது புரிந்ததால் அம்மா அலட்டிக் கொள்ளாமல் இருந்தாள். சின்ன மகன் தேடிக்கொண்டு வந்தான். “என்னம்மா…! கூப்பிடுறேன் தானே…. கேட்காத மாதிரி இருக்கீங்க….?” “ஏம்பா …!” அம்மா குரலில் எரிச்சல். “அங்க அப்பா அரைமணி நேரமாக் கத்திக்கிட்டு இருக்காரு…!” “கத்தட்டும்……! எனக்கும் வேணாம்னு போவுது…… ஒரேயடியா செத்துட்டா தொல்லையே இல்ல. ஓயாம முக்கி மொணங்கி….. செத்தும் சாவாம்….. என்ன வாழ்க்கை …… வாழ்க்கையே வேணாம்னு


மீன லோசனி

 

 (1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “நமஸ்காரம். சித்திக்குத் தாங்கள் ஒழுங்காக அனுப்பி வந்த பணத்தைத் திடீரென்று நிறுத்தி விட்டீர்கள். இரண்டு மாதங்களாக உங்கள் சித்தி மிகவும் சிரமப்படுகிறாள். ஞாபகப்படுத்தி எழுதிய கடிதத்துக்கும் பதில் இல்லை. உங்களுக்கு உடம்புக்கு ஏதாவது நேர்ந்துவிட்டதோ என்று சித்தி வருத்தப்படுகிறாள். இந்தக் கடிதத் துக்கும் பதில் இல்லை யென்றால் உங்கள் சித்தி புறப்பட்டு அங்கே வந்துவிடுவாள். உங்கள் சித்தி சொல்படி, மீனலோசனி.” இந்தக் கடிதத்தைப்