கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2021

172 கதைகள் கிடைத்துள்ளன.

தேவைகள்

 

 நேரம் பதினொரு மணிக்கு மேலிருக்கும் ‘ என அவன் நினைத்துக் கொண்டான். இரவு . காலி வீதியில் கொள்ளுப் பிட்டியை அண்மிய இடங்களில் இன்னும் சன நடமாட்டம் குறையவில்லை. இரத்மலானைவரை இப்படித்தான் இருக்கும். ஓரளவு அமைதியான சூழ்நிலை ஏற்பட வேண்டுமானால் இன்னும் ஓரிரு மணித்தியாலங்களாவது செல்ல வேண்டும். அவன் அதற் காகக் காத்திருந்தான். அமைதி என்றாலும் அதைப் பூரண அமைதி என்று சொல்ல முடியாது. அடிக்கடி ஏதாவது வாகனங் கள் விரைந்து கொண்டிருக்கும். இரவின் அமைதியில் அவற்றின்


நீயா?

 

 கருமேகங்கள் ஒன்று கூடி இருக்க,சில்லென்ற காற்றுடன் பரவலாக மழை பெய்து கொண்டு இருந்தது. அப்பொழுது தொலைக்காட்யில் நம்பர் ஒன் பிஸ்னஸ் மேன் அவார்ட் வாங்கிய சூர்யாவின் பேட்டி ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது.அதில் சூர்யா என்னோட இந்த வெற்றிக்கு காரணம் என் சித்தப்பா ராஜீவ் தான் என்றார்.அனைவரும் ராஜீவை பாராட்டினர்.பரவால அவர் அண்ணன் இறந்ததுக்கு அப்புறம் இவரு தான், தன்னோட பையன் மாரி சூர்யாவை வளர்க்கிறார் என்று பெருமையாக பேசினர்.வீட்டில் ராஜீவ் அவரது மகன் சந்துருவிடம் எப்பிடி?மை டியர்


அந்த அரபிக் கடலோரம்…

 

 மும்பாய் இந்துவை கொலை செய்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்து விட்டது.என்னைப் பலர் முன்னால் மூக்கை உடைத்தவளுக்கு சரியான பாடம் கற்பிக்க ஒரு அருமையான சந்தர்ப்பம். இதை நழுவ விட்டால் இனி ஒரு சந்தர்ப்பம் அமைவது கூட கஷ்டம். என்று மனதிற்குள் எண்ணிக்கொண்ட வினோத் சார் எனக்கு விசாகப்பட்டினம் கப்பலை பார்வையிட சர்வே பண்ண மிகுந்த சந்தோஷம் கூட. ஆனால் இதைப் பற்றி இந்துவிடம் ஒரு வார்த்தை பேசினால்… என்று தன் மேலதிகாரியிடம் வேண்டுமென்றே பற்ர வைத்தான்.


அப்பா, நான் உள்ளே வரலாமா…

 

 அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 இவனுக்கு முன்னாலே சேந்த பயலுங்க இன்னும் இங்கே கத்துண்டு வறா.நான் சொல்லிக் குடுக்கற மந்திரங்களை மறுபடியும் ,மறுபடியும்,சொல்லி பாக்கறதே இல்லே.சோம்பேறிப் பயலுங்க. இவனை நீ கோவிலுக்கு அழைச்சிண்டு போய் ஒரு குருக்கள் வேலேயே பண்ணச் சொல்லேன்” என்று சொன்னார்.மஹாதேவ குருக்கள் சாம்பசிவனைக் கூப்பிட்டு சில கோவில் மந்திரங்களை எல்லாம் கேட்டார்.சாம்பசிவன் எல்ல மந்திரங்ககளையும் ‘ஸ்பஷ்டமாகவும்’ தப்பு இல்லாமலும் சொன்னான். மஹாதேவ குருக்கள் மிகவும் சந்தோஷப் பட்டார். மஹாதேவ குருக்கள் இடம் குருக்களுக்கு சாம்பசிவனை


நாலு சுவத்துக்குள்ளே நடக்குதய்யா நாடகம்..!

 

  “சவிதா..மேல என்ன சத்தம்..உலக்கையால் யாரோ இடிக்கிற மாதிரி..! இந்த காலத்தில யாராவது உலக்கையில அரிசி குத்துவாங்களா…? தலவலி மண்டைய பொளக்குது…” “அய்யோ..அப்பா..அப்பா..! மேல என்னோடே ஃப்ரண்ட் நிமிஷா வீடுன்னு தெரியாதா..? அவ ஆன்லைன்ல டான்ஸ் கத்துக்கறாப்பா.!” “ஒரு நாள் பூராவுமா…? காலைல ஆரம்பிச்சது….!” “அதுக்கப்புறம் அவ சொல்லித்தராளே..இப்ப அவளுக்கு ஏக டிமாண்ட்..தெரியுமா..? இருபது ஸ்டூடண்டஸ்… பணம் கூரையைப் பிச்சிட்டு கொட்டுது….” இங்க நம்ப கூர பிஞ்சிடும் போலயே…நல்லா வந்துது லாக்டவுன்….” ஒரு வழியாய் ஒரு மணிக்கு


ஓடு

 

 நான் ஓடிகிட்டு இருக்கேன்?, யார் இவங்கல்லாம்? ஏன் என்னை துரத்துறாங்க? சும்மா துரத்துனா கூட பரவால்ல ஏழெட்டு பேர் கையிலும் பட்டா கத்தி, வீச்சு அருவா? நான் சினிமாலதான் இதல்லாம் பாத்துருக்கேன், அந்தளவுக்கு நான் என்ன தப்பு பண்ணேன்? நீங்க நினைக்கிற மாதிரி நான் மெமரி லாஸ் பெசண்டு இல்ல, ஆனாலும் எனக்கு எதுமே விளங்கல?. ஊருக்குள்ளேயே ஓடி இருந்தாலும் எங்கயாச்சும் மறையலாம்., இல்ல, யாராச்சும் காப்பாத்துவாங்க, இப்டி வெட்ட வெளி புழுதி வயகாட்டுல ஓடிட்டு இருக்கேன்,


மகன் தந்த பரிசு

 

 (குறிப்பு: இது தன்னைத்தானே உயிரை மாய்த்து(suicide) கொள்ளும் ஒருவருடைய கதை, இந்த வகை கதைகளை படிக்க விரும்பாதவர்கள் வேறு கதைக்கு செல்லவும்) சுட்ட செங்கற்களால் வரிசையாக வைத்து கட்டப்பட்ட நான்கு பக்கச்சுவர். சுவரின் மேற்பரப்பில் ஆரங்களாகப் பனைமரத்தைச் சேர்த்துக் கட்டிய விள்ளைவீட்டில்தான் ராமமூர்த்தி நெடுங்காலம் வாழ்ந்து வருகின்றார். தெருவுக்குக் கொஞ்சம் தள்ளியேதான் இவரின் வீடு அமைந்திருந்தது. கதவுகள் வெளிப்பக்கமாகத் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. யாராவது வந்து திறந்தால்தான் உண்டு. இந்த ஒருமாதமாய் அவ்வளவாக யாரும் இந்த வீட்டிற்கு வருவதாகத்


நல்ல வேலைக்காரன்

 

 மார்த்தாண்டம் பிள்ளைக்குக் குடும்பக் கவலை என்ற தொந்தரவு ஒன்றும் கிடையாது. மனைவி இறந்து வெகு நாட்களாகி விட்டது. பிள்ளை குட்டி என்ற விலங்குகள் அவருக்குத் தெரியாது. பொழுது போக்காக ஒரு மருந்து ஷாப் வைத்திருக்கிறார். அத்துடன் கொஞ்சம் லேவாதேவியும் உண்டு. அவருடைய வேலைக்காரன் ராமன் தம்பி – அவன் ஒரு மலையாளி – வேலைக்காரர்களுக்கு ஒரு இலக்ஷியம். சமையல் முதல் எல்லா வேலைகளையும் ஒரு தவறு வராமல் செய்துவைப்பதில் நிபுணன். அதிலே பிள்ளையவர்களுக்கு அவன் மீது ஒரு


வித்தைப் பாம்பு

 

 அணிந்துரை – சி.சுப்பிரமணியம் மொழி, நாகரிகம் , கலை முதலியவற்றில் பெரிதும் ஒற்றுமை யுடையவர்கள் தென் பகுதி மக்கள். சரித்திர காலத்திற்கு முன் பிருந்தே இவ்வொருமைப்பாடு வேரூன்றி இருந்தது. ஆனால், சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் இவ்வொற்றுமை உணர்ச்சி குறைந்து போய்விட்டது. காலம் செய்த இவ்விடையூற்றை நீக்கி, தென் பகுதி மக்களிடையே ஒரு பகுதியினரின் கருத்துக்கள், மற்றப் பகுதியினருக் கும் பரவும் வகையில் தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் பாடுபட்டு வரு வதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 1955-இல்


முத்துவின் உள்ளக் குமுறல்

 

 விரட்டிய நாயின் பிடியில் சிக்காத ஒருவனின் இதயத் துடிப்புடனும் பதட்டத்துடனும், முகத்தில் வழக்கமாய் இருப்பதைப் போல நடித்துக் கொண்டே சாதாரணமாய் வீட்டினுள் நுழைந்தான் முத்துக்குமார். தன் பேக்கை ஓரம் போட்டுவிட்டு, காஃபி கேட்போமா என்ற சிந்தனையில் இருந்தவனிடம் இந்தா காஃபி என்று கோப்பையை நீட்டினாள் தாய் பைரவி. ஒன்றும் கூறாமல் அதை வாங்கிக் குடித்துவிட்டு, உடைகளை மாற்றிக் கொண்டு டியூசன் புறப்பட்டான் முத்து. வழக்கம் போல டியூசன் முடித்துவிட்டு இரண்டு மணிநேரம் கழித்து வீட்டிற்கு வந்தவனின் உள்ளம்