கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2021

250 கதைகள் கிடைத்துள்ளன.

யமனை வென்றவள்

 

 இளவரசி சாவித்திரி அவளுடைய தந்தை முன் நின்று கொண்டிருந்தாள். மெல்லிய கொடி போல அவள் அழகாக இருந்தாலும், அவளது மனம் உறுதியாக இருந்தது. முகத் தில் பிடிவாதம் தெரிந்தது. இந்த மாதிரி சமயங்களில் அவ ளது தந்தை வளைந்து கொடுத்துவிடுவார். “தந்தையே, நினைவிருக்கிறதா? என் கணவரை நானே தேர்ந்தெடுக்கலாம் என்று நீங்கள் சொன்னதுண்டா இல் லையா? இப்போது உங்கள் வார்த்தையை நீங்களே மீறலாமா?” ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தார் மன்னர். அதற்குள் நல்ல வேளையாக நாரத முனிவர்


மாஸ்டர் உமைபாலன்!

 

 1 உமைபாலன் அந்தப் புதிய இடத்துக்கு வந்து சேர்ந்ததும், மறந்துவிடாமல் பெருமூச்சை வெளியேற்றிவிட்டான். அதே சூட்டோடு, உள்ளத்திலே பரவிக் கிடந்த சூட்டையும் தணித்துக் கொள்ள எண்ணினான். ஆகவே, தன் பிஞ்சு நெஞ்சில் எழுதி, மனப்பாடம் செய்து வைத்திருந்த அந்த மூதுரையை மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்திக் கொண்டான். பிறகுதான், அவனுக்குத் தன்னுடைய உடற்சூடும் நினைவுக்கு வந்தது. உடனே, அரைக் கைச் சட்டையின் பொத்தான்களைக் கழற்றினான்; பூந்தென்றலை உள்ளே புகச் செய்தான். ஒரு சில வினாடிகள் வரை கண்களை


சாந்தா

 

 முதன் முதலாக அன்று பார்வதி தன் தலைமை உபாத்தியா யருடன் தன் வகுப்பிற்கு சென்று கொண்டிருந்தாள். அந்த பள்ளிக் கூடம்தான் அந்த கிராமத்திலே பெரிய பள்ளிக்கூடம். ஆனால் மற்ற பள்ளிக்கூடங்களைப்போல், இதுவும் ஒரு குடிசையிலோ, திண்ணையிலோ அமைத்திருக்கவில்லை. கிராமத்திற்கு வெளியே ஒரு பெரிய தோட்டத்தின் நடுவே, அது அமைக்கப்பட்டிருந்தது. குழந்தை விளையாட வெற்றிடம், நகரத்தின் சப்தமும், கட்டமும் அங்கு எட்டிகூட பார்க்க முடியாது. நாகரீக வாழ்வின் சின்னமாகிய, பஸ், டிராம், இரண்டும் கிடையாது. பணக்காரர்களாக இருந்த ஒரு


ஸத்யாநந்தர்

 

 ராமாயண காலத்தில், தண்ட காரண்யத்திலே ஸத்யாநந்தர் என்றொரு ரிஷி இருந்தார். அவர் ஒரு சமயம், வட திசைக்கு மீண்டு மிதிலையில் ஜனகனுடைய சபைக்கு வந்தார். அப்போது அவ்விருவருக்கும் பின்வரும் சம்பாஷணை நடைபெற்றது : ஜனக மஹாராஜா கேட்கிறான்: “தண்டகாரண்யத்தில், ஹே, ஸத்யாநந்த மஹரிஷியே, தண்டகாரண்யத்தில் முக்கியமான குடிகள் எவர்?” ஸத்யாநந்தர் சொல்கிறார்: “ராட்சஸர்களும், பிசாசுகளும், குரங்குகளும்.” ஜனகன்:- “இவர்களுக்குள்ளே பரஸ்பர சம்பந்தங்கள் எப்படி?” ஸத்யாநந்தர்: “எப்போதும் சண்டை. குரங்குகள் ஒன்றையொன்று கொல்லுகின்றன. குரங்குகளை ராட்சஸர் கொல்லுகிறார்கள். இவர்கள்


சேதுபதியின் மோதிரம்

 

  கையை அசைத்துத் தொட்டில. ஆட்டிக் கொண்டே நாவையும் அசைத்துப் பாடிக் கொண்டிருந்தாள், அந்தப் பெண்மணி. முகத்திலே பொலிவின்றி, உடம்பிலே உரமின்றி, கழுத்திலே மங்கலமின்றி நின்றிருந்த அந்த மடந்தைக்கு நாவிலே மாத்திரம் இனிமையும் வன்மையும் இருந்தன. தொட்டிலிலே கிடந்த சின்னஞ் சிறு குழந்தையை ஆர்வம் பொங்கப் பார்த்தபடியே அவள் தாலாட்டிக் கொண்டிருந்தாள். அவள் உள்ளத்தில் என்ன என்ன நினைவுகள் ஒடினவோ, யார் கண்டார்கள்? இடையிடையே ஒரு பெருமூச்சு, சிறிது நேரம் மெளனம், சிறிது முகத்திலே புன்சிரிப்பு, பிறகு


கத்தியின்றி ரத்தமின்றி

 

  அந்த மலைகள் மிகவும் பயங்கரமாக எழுந்து நின்றன. மக்களின் உரிமை உடைமை இத்தியாதிகளை சங்காரம் செய்த தென்னாபிரிக்க வெள்ளைக்காரக் கொடுமைகளை விடக் கோரமானதாகத் தலை விரித்துக் கொண்டு நிற்கின்றன. உள்ளே எது நடந்தாலும் அதை வெளியுலகுக்குக் காட்டுவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டதுபோல் அவை அந்தத் தேயிலைத் தோட்டத்தை அரண் செய்து நிற்கின்றன. அந்த மலைகளின் ராட்சத உடலில் பட்டி பிடித்தாற்போல் மலைகளைச் சுற்றி வரும் செம்மண் பாதையில் கைப்பிரம்பைச் சுழற்றியபடி நடந்து கொண்டிருக்கிறார் தோட்டத்து


சக்கரவாகம்

 

 (1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “வேலுப்பிள்ளை, நாடி நல்லாய் விழுந்து போச்சு. வயதுமோ பின்னிட்ட வயது; இன்னும் இரண்டு மணித்தியாலத்திற்குள் எல்லாம் முடிந்து போய்விடும். மனதைத் தேற்றிக்கொள்.” இந்தக் கொடிய தீர்ப்பைத் தன் இளம் வயதிற்கு உரிய யோசனை யின்மையோடு அநியாயமாக வீசிவிட்டு, அதன் விளைவைப் பார்க்க விரும்பாதவன் போல் வைத்தியன் சால்வையை உதறித் தோளிற் போட்டுக்கொண்டு வீட்டு வாசலைக் கடந்து வேகமாக நடந்தான். வேலுப்பிள்ளை அசந்துபோய்த் திண்ணையிற்


அன்னயாவினும் புண்ணியம் கோடி…

 

 சூரியனின் சோம்பலான மஞ்சள்நிறக் கிரணங்கள், இப்போது தான் கீழ்வானைத் தடவத் துவங்கியிருந்தன. ஆனால், புதுப்பட்டிக் கிராமமோ எப்போதோ எழுந்துகொண்டு சுறுசுறுப்பை உலவ விட்டிருந்தது. அப்படி இருந்தால்தான் முடியும். நடுத்தர வர்க்கமும், அடித்தட்டு மக்களுமாய் நிரம்பி வாழ்கிற ஊருக்கு, சோம்பலைக் கொண்டாடவெல்லாம் நேரமும் கிடையாது, அது மாதிரியான சிந்தனையும் வராது. எழுந்து கொண்டதுமே வியர்வை சிந்தத் தயாராகி விடவேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு நாளும் நகரும். நகர்த்தவும் முடியும். சின்னத்தாயும், சில பெண்களுமாய் மலைப்பகுதியை நோக்கி நடக்கிறார்கள். ஃபாரஸ்ட் வாச்சர்


மரணிப்பிலும் உயிர்க்கும்

 

 (1986 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த இரவு ………. இதயப் பரப்பில் துயரக் கருமுகில் கவிந்து மூடியது! கண் விழித்தேன்! துக்கம் வரண்ட துயர் இரவு! நேரம் சென்று உதித்த நிலவு முக்கால் வட்டத்திலிருந்து அழுது கொண்டிருப்பது யன்னலுாடே தெரிந்தது. கனவின் பயங்கரம் இன்னும் மனதை விட்டகலவில்லை. அந்தச் சிவப்பு நிறக் ஹெலிகாப்டர் இன்னும் எங்கள் வீட்டைச் சுற்றிச் சுற்றிப் பறப்பதும் திடீரெனத் தாழ்ந்து குண்டு போட்டு நிமிர்வதும்


வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 

 அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 கொடியேற்று விழா நிகழ்ச்சிக்கு காலை . ஒன்பது மணிக்கு நேரம் குறிப்பிட்டிருந்ததால் விழாவேந்தன் இரவெல்லாம் கண்விழித்து அரண்மனை கிழக்கு வாசலில் பெரிய மாநாடுபோல் ஷாமியானா போட்டு, ‘இகபானா’ அலங்காரங்களுடன் மேடை அமைத்திருந்தார். சக்ரவர்த்தி குடும்பத்தார், ஜப்பான் நாட்டுப் பிரதமர், டோக்கியோ நகர மேயர், பார்லிமெண்ட் அங்கத்தினர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், வி.ஐ.பிக்கள், வெளிநாட்டு விருந்தாளிகள் அத்தனை பேரும் அவரவர்கள் இடத்தில் அமர, சக்ரவர்த்தியின் காரியதரிசி – யோஷினாரியும் விழாவேந்தன் முத்துவும் “ஆச்சா,