நரைத்து மூத்தவர்களே, கேளீர்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,070 
 

நரிவெரூஉத்தலையார் தாம் கண்ட அனுபவங்களை உலகோர்க்கு, உரைக்க விரும்பினார்:

“பற்பல கொள்கைகள் பேசும் பெரியோர்களே!

மீன் முள் போன்று, நரை மயிர் நீண்டு நிற்கக் கண்களைச் சுறுக்கிப் பார்க்கும் பயனற்ற முதுமையை ஏற்றுக் குனிந்தோர்களே! கேளுங்கள் !

மழுவை ஏந்தி வரும் எமன், பாசக் கயிற்றால் உம்மைக் கட்டிக் கதறக் கதற இழுக்கும் போது வருந்துவீர்களே.

ஒன்று சொல்வேன் கேளுங்கள்: நீங்கள் உலகிற்கு நன்மை எதுவும் செய்ய வேண்டாம்: தீமை எதுவும் செய்யாமல் இருந்தால் போதும்!

அப்பொழுது, எல்லோர்க்கும் மனங் குளிரும்; அது மட்டுமின்றி, எமன் இழுப்பதற்குப் பதில் உம்மை, நல்லறம் வரவேற்று வாழ்த்துக் கூறும்!”

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *