உள்ளம் உன் வசமானதடி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 9, 2023
பார்வையிட்டோர்: 6,114 
 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7

சிறிது நேரம் கழித்து முகிலன் மாடிக்கு வந்தபோது, அழுத சுவடு தெரியாமல் மூகத்தை நீர் விட்டு அடித்துக் கழுவிவிட்டு அமர்ந்திருந்தாள் மிருணா.

“என்ன மகைக்குக் கஷ்டமா இருக்கா? சில விஷயங்களை ஜீரணிக்கறதுக்கு முடியாதுதான்”.

அவன் கூற பதைத்துப் போய் நிமிர்ந்தவளுக்கு, தங்கவேலுவைப் பற்றி மட்டும் அவனுக்குத் தெரிந்தால், அவன் தன் குடும்பத்தைப் பற்றி என்ன நினைப்பான் என்ற பயம், நடுக்கமாய் உடலெங்கும் ஓடியது.

“ஏய்… ஏன் இப்படி மழையில நனைஞ்ச பறவை மாதிரி ஓடுங்கிப் போயிருக்கே?” கேட்டுவிட்டு, அவள் கன்னத்தில் செல்லமாகத் தட்டினான் அவன்.

சட்டென்று சிறு பிள்ளைகளின் கையில் அகப்பட்ட தும்பியாய் மனம் சடசடத்தது.

அவனுடைய முதல் தொடுகையின் இதமான அந்த நேச நிழலில் மனம் சற்று இளைப்பாறினாலும், நெஞ்சம் வேதனையில் தளும்பியது.


அந்த நேரம் மீனாவும் தன் வாழ்க்கையை எண்ணிப் பார்க்க ஆரம்பிக்க அவளுடைய மனக்குடத்திலிருந்து கண்ணீர்த் துளிகள் சிதறின.

அவளுடைய திருமணமும், முதலிரவு நிகழ்வுகளும், நினைவலைகளில் மிதக்க ஆரம்பித்தன.

கையில் பால் செம்புடன், பல களவுகளையும் சுமந்து அவள் அறைக்குள் செல்ல. அவளை அமரச் சொல்லிய தங்கவேலு, “எனக்கு ஒரு உண்மை தெரியணும்” என்றான் முதல் வார்த்தையாய்!

பயத்துடன் நிமிர்ந்தவனிடம், ஒரு கடிதத்தைக் கொடுத்தவன், ”இதைப் படிச்சிட்டு உண்மை என்னங்கிறதை நீ சொன்னப்புறம்தான், நான் உன் கூட வாழறதா வேண்டாமான்னு முடிவெடுக்கணும்” என்றான் தீவிரமான குரலில்.

கைகள் நடுங்க அவள் அதைப் பிரித்துப் பார்த்தாள்.

அதில் யாரோ மீனாவைக் காதலித்ததாகவும், அவளுடன் சேர்ந்து ஊர் சுற்றியதாகவும் தான் வேண்டாமென்று வீசி றித்தவளை இப்போது தங்கவேலு திருமணம் செய்து கொண்டதாகவும் எவனோ ஒரு விஷமி எழுதி இருந்தான்.

அதைப் படித்தவுடன் மனம் பதறி விழிகள் நீரில் மிதக்க “சத்தியமா இது உண்மை இல்லீங்க…. நான் யாரையுமே விரும்பலை. இது பொய். நம்பாதீங்க. யாரோ வேணுமின்னே எழுதி இருக்காங்க” அவனிடம் கை கூப்பியவள் , முகம் மூடி அழ ஆரம்பித்தாள்.

அவன் சட்டென்று வாய்விட்டுச் சிரித்தவன்.

“இந்தக் கடிதம் பொய்யின்னு தெரியும்” என்றபடி, அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான்.

“அப்பாடா! இப்பத்தான் நிம்மதியாச்சு. நீ அழகா இருக்கே..உன்னை யாராவது விரும்பி இருப்பாங்க. விட்டு வச்சிருக்க மாட்டாங்கன்னு என் நண்பர்கள் சொன்னாங்க. அது உண்மையான்னு தெரிஞ்சுக்க நானே எழுதின கடிதம் தான் இது” என்று கூறியபடி அவன் அதைக் கிழித்துப் போட சுக்கல் சுக்கலாகச் சிதறியது மீனாவின் மனது.

‘போடா.. நீயும் வேண்டாம்; உன் வாழ்க்கையும் வேண்டாம்’ என்று கூறிவிட்டு எழுத்து வெளியில் சென்று விட வேண்டும் என்று எழுந்த எண்ணத்தை, குடும்ப சூழ்நிலையும், தங்கையின் நினைவும் தடுத்தன.

பிறகு மரக்கட்டைடியாய் உணர்வுகள் உறைந்த நிலையில் அவனுடன் வாழ ஆரம்பித்தவளுக்கு, அவன் பிறரைத் துன்புறுத்தி அதில் இன்பம் காணுபவனென்பது புரிந்தது.

பிறகும், அவனைப் பற்றி அக்கம் பக்கத்தில் கேள்விப் பட்ட விஷயங்கள் தவறானதாகவே இருந்தன.

அப்பா சரியாக விசாரிக்காமல் முடிவெடுத்து விட்டது புரிய, தன் குடும்பத்திற்கு அவனைப் பற்றித் தெரியாம லிருக்க வேண்டும் என்று தாயிடம் கூடக் கூறாமல் மறைத்து வைத்தாள்.

அதுவே அவனுக்கு வசதியாகிவிட ஒரு நாள் நிலைமை கை மீறிப் போய் விட்டது.

வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடமே அவன் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததைப் பார்த்தபோது, அவள் ஆறு மாதக் கருவைத் தனக்குள் சுமந்திருந்தாள்.

மானம் போனதால் உயிர் நீக்கிக் கொள்ள அவள் துடித்தாலும், வயிற்றிலிருக்கும் சிசுவை எண்ணித் தன்னை அடக்கிக் கொண்டாள்.

ஆனால், அன்றிரவு குடித்துவிட்டு வந்த தங்கவேலுவிடம் இதைப் பற்றிக் கேட்டபோது, “ஏய்… ஆம்பிளைன்னா அப்படி இப்படித்தான் இருப்பான், என்னையே கண்டிக்கற அளவுக்கு வந்திட்டியா? உன்னை நான் கல்யாணம் செஞ்சிக்கிட்டதுக்குக் காரணமே, தேவதை மாதிரி இருக்கற உன் தங்கச்சிதான்! என்னிக்கிருந்தாலும், அவளை வளைச்சிப் போடாம விடமாட்டேன்” என்று ஆணவத்துடன் கூறினான்.

அப்படியே இடிந்து போய் உட்கார்ந்தவளுக்கு, கதவை அடித்துச் சாத்திவிட்டு அவன் வெளியேறும் சப்தம், உணர்வு களுக்கு அடிக்கப்பட்ட சாவு மணியாய்!


மறு வாரமே, ஏழாம் மாதமென்று வளைகாப்பு செய்வதற்காகப் பிறந்த வீட்டிற்கு அவளை அழைத்துச் சென்றனர்.

மீனா ஒரு முடிவுடன் – தாய் தந்தையிடம் தங்கவேலுலைப் பற்றிய எல்லா உண்மைகளையும் கூறிவிட்டாள். அவளுடைய வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சோகமும் துரோகமும் இருந்திருப்பதை அறித்தவுடனே, இருவரும் உடைந்து போயினர்.

தங்கவேலு எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கீழிறங்குவான் என்ற உண்மை தெரிந்திருந்ததால், தன் தங்கையின் வாழ்க்கையாவது நன்றாக அமைய வேண்டுமே.. என்ற பதைப்பு வந்தது அவளுக்குள்!

தந்தையிடம் சொல்லி உடனே ஒரு மாப்பிள்ளை பார்த்து மிருணாளினிக்கு திருமணத்தை முடித்து விடும்படிக் கூறினாள் அவள்.

மறுநாளே தரகரை வரவழைத்தார் விங்கம்.

இந்த வருடமே தன்னுடைய இரண்டாவது பெண்ணுக்குத் திருமணம் செய்து விட முடிவெடுத்திருப்பதாகவும், நல்ல வரன் வந்தால் கூறும்படியும் சொல்லி அனுப்பினார். இரண்டு மாதத்தில், சுந்தரபாண்டியனின் வீட்டிலிருந்தே பெண் கேட்டு வர, இதுதான் நல்ல சமயமென்று உடனே அந்த சம்பந்தத்தை முடித்தும் விட்டார்.

அதனால் பெரும் கோடம் கொண்ட தங்கவேலு, இப்போது அவளிடம் சரியாகப் பேசுவதே இல்லை.

குழந்தை இறந்து விட்டதே என்ற பரிதாபமும் இல்லை. ‘பெரிய மாப்பிள்ளை’ என்று தன்னை மதித்து அனுமதி கேட்காமல் மிருணாவின் கல்யாணத்தை மாமனார் முடித்து விட்டாரே என்ற பெரும் கோபம் வந்திருந்தது. அவனுக்குள்!

தினமும் குடித்து விட்டு வந்து, பெண்மையை ஒரு போகப் பொருளாய் – உணர்வில்லா ஜடமாய் நடத்துபவனை எண்ணிய போது. தன் கையாலாகாத்தனத்தை நினைத்து விழிகளில் வழிந்த கண்ணீர் கையில் சூடாகப் பட்டுத் தெறிக்க, நினைவுகள் நிகழ்காலக் கரையில் ஒதுங்கின

ஆனால், சோகச் சூழலில் மாட்டிக் கரையேற முடியாமல் தனித்து நின்றது. அவள் எதிர்காலம்!

வாசல் கதவை யாரோ பலமாக இடிக்கும் ஈப்தம் கேட்டுக் கண் துடைத்தபடி எழுந்து கதவைத் திறந்தாள். நிற்க முடியாமல் முழு போதையுடன் தள்ளாடியபடி, அங்கு தங்கவேலு நின்றிருந்தான்.

அவனைத் தாங்கிப் பிடித்து அழைத்து வந்து படுக்க வைத்தபோது, நெஞ்சம் வெறுமையாகி விட, விரக்தி வேதனையும் கண்ணீர்த் துளிகளாய்ச் சிதறின.


மறுநாள் காலையில், ஒரு ஆளை விட்டு தங்கவேலுவை வரவழைத்த சுந்தர பாண்டியனுக்கு முதல் நாள் முகிலன் கூறியது நினைவுக்கு வந்தது.

ஒரு பைத்தியத்திடம் முறை தவறி நடந்து, அதனால் அவளை கர்ப்பமடையச் செய்தவனை நினைத்தபோது, பெரும் ஈனப் பிறவியாய்… மானுடம் தொலைத்தவனாய்த் தோன்றி, கோபத்தை வரவழைத்தது.

ஆனால், தென்னந்தோப்பிற்கு வந்த தங்கவேலு, தான் செய்த தவறை ஒப்புக்கொள்ள மறுத்தான்.

“உங்க மகன்தான் அந்தப் பைத்தியத்தை டாக்டர்கிட்ட அனுப்பி இருக்காரு அவர் செஞ்ச தப்பை என் மேல் போடப் பாக்கறிங்களா?” பழியை முகிலனின் மேல் திருப்பினான்.

“டேய் இந்த ஊருக்கே என் மகனைப் பத்தித் தெரியும். நீ தப்புப் பண்னியதைப் பாத்ததுக்கு சாட்சி இருக்கு. அதை வச்சு என்னால் உள்னை ஊர்ப் பஞ்சாயத்துல கொண்டு போய் நிறுத்த முடியும். என் மருமகளோட மாமாவாச்சேன்னு பாக்கறேன்” என்றார் பாண்டியன் பெரும் சினத்துடன்.

“சும்மா மிரட்டாதீங்க! உங்ககிட்டே வேலை செய்யற ஆளுங்க தானே வந்து அங்கே சாட்சி சொல்லுவாங்க நான் அதை ஒத்துக்க மாட்டேன்! உங்களால் முடிஞ்சதைப் பார்த்துக்கங்க” – திமிராகப் பேசினான்.

ஒரு கணம் அவனையே வெறுப்புடன் நோக்கியவர். “மனுஷங்களை ஏமாத்தலாம்… ஆனா, தெய்வத்தை ஏமாந்த முடியாது! போ!” என்று அவனை அனுப்பி விட்டு யோசனையுடன் அமர்ந்திருந்தார்.

அன்றிரவு முகிலனிடம் எல்லாவற்றையும் கூறினார்.

“பேசாம அந்தப் பொண்ணை மைக்கேல் நடத்துற கருணை இல்லத்துலே சேத்துடலாம். பிரசவம் ஆகட்டும்… அப்புறம் பார்ப்போம்” என்றார்.


நாட்கள் விரைந்து செல்ல, ஆடி மாதம் வந்து விட்டது.

மறுநாள் மகளை அழைத்துப் போக, சீருடன் வருவதாக லிங்கம் ஃபோன் செய்திருந்தார்.

ஆடி மாதம் முழுவதும் மிருணாளினி தாய் வீட்டில் இருக்க வேண்டும் என்கிற சம்பிரதாயத்தைக் கேட்டவுடனே, முகிலனின் மனம் சுருங்கி இறுகிப் போனது.

அன்றிரவு, மிருணா தன் துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது உள்ளே வந்தவன், “ம்… யாரோ ஒருத்தர் ரொம்ப ஜாலியா அம்மா வீட்டுக்குக் கிளம்பியாச்சு போலிருக்கு!” வறண்ட குரவில் கூறினான்.

“ம்… பெண்களுக்கு இதெல்லாம் தற்காலிகம்தானே? ஆண்களை மாதிரி, அம்மா வீட்டிலேயே கடைசி வரைக்கும் இருக்கற சுதந்திரம்தான் எங்களுக்குக் கிடையாதே! என்ன… ஒரு மாசம் போகலாம், அவ்வளவுதான்” என்றாள் அதே குரலில்.

“ஏன்… இங்கே வரதும், என்னைப் பாக்கறதும், உனக்கு அவ்வளவு கசப்பா இருக்கா…?”

“சாரி! நான் அந்த அர்த்தத்துல சொல்லலை…” உதட்டைக் கடித்தபடி கூறினாள் மிருணா.

பார்வை ஒரு கணம் அதிகமாகவே அவளுடைய இதழ்களின் மீது பதிந்து விலக, வேகமாக வெளியே சென்று விட்டான் அவன்.


மிருணாவிற்குத் தான் ஏதோ தவறு செய்ததைப் போல் மனம் உறுத்தி, அவன் நினைவுகள் விசுவ ரூபமெடுத்து வியாபித்தன,

அன்றிரவு, நல்ல இடியுடன் கூடிய மழை பெய்ததில், பூமி நன்றாகக் குளிர்ந்திருந்தது.

ஜன்னல் வழியே வீசிய சாரல் காற்று தேகத்தைக் குளிரச் செய்ய, தன்னை சுருக்கிக் கொண்டு படுத்திருந்தாள் அவள்.

விடியல் தன் முகவரியை பூமியில் பதிக்க, மழை வந்து முத்துக் குளித்திருந்த மரங்களில், பறவைகள் தம் பாதம் பதித்து பல்லவி பாட ஆரம்பித்திருந்தன.

ஆழ்ந்த உறக்கத்திலிருந்து கண் விழித்த மிருணாளினி. தன் முகம் வலிமையான ஒரு பரந்த மார்பில் குளிருக்கு இதமாய் புதைந்திருப்பதைக் கண்டதும், ஒருவித பதைப்புடன் விலக ஆரம்பித்தாள்.

அவளைச் சுற்றித் தழுவியிருந்த முகிலனின் கரங்கள், அவளை வலிமையுடன் அணைத்திருந்தன.

நான் எப்படி அவனருகில் வந்தோம் என்ற படபடப்புடன், அவன் விழிப்பதற்குள் எழுந்து சென்று விட வேண்டும் என்ற அவசரமும் சேர்ந்து கொள்ள, தன்னை வேகமாக விடுவித்துக் கொள்ள முயன்றாள்.

அவனுடைய கரங்கள்: இரும்புப் பிடியாய் மேலும் இறுகின. தூக்கக் கலக்கத்தில் நடப்பது என்னவென்று அவள் உணரும் முன்பே வேகமாக இழுத்து அணைத்தவன், தன் உதடுகளை அவளுடைய பட்டுக் கன்னத்தில் அழுத்தமாகப் பதித்தான்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *