கதையாசிரியர்:
தின/வார இதழ்: அம்புலிமாமா
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 20, 2021
பார்வையிட்டோர்: 10,247 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தன்முயற்சியில் சற்றும் மனம் தள ராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அவன் அதைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதா ளம் எள்ளி நகைத்து “மன்னனே! நீ இந்த பயங்கர இரவில் இப்படிச் சிரமப்படுகிறாயே. இந்த முயற்சி யின் பயனாக ஏற்படும் முடிவு கண்டு நீ சோர்வு அடைந்தும் போக லாம். இதை விளக்க உனக்குத் தெரிந்த ஒரு பழைய கதையை நான் புதிய திருப்பத்தோடு கூறு கிறேன். கவனமாகக் கேள்” என்று கூறிக் கதையை ஆரம்பித்தது.

Ambulimama_Tamil_1991_04_0025-picவிந்திய மலைச் சாரலில் வித்தியா நாதர் என்ற முனிவர் ஒரு குரு குலத்தை நடத்தி வந்தார். அந்த குருகுலம் ஒரு ஆற்றின் கரை மீது அமைந்திருந்தது. ஆசிரமத்தின் ஒரு புறம் மலைத் தொடரும் மறுபக்கம் அடர்ந்த காடும் இருந்தன. அந்த ஆசிரமத்தில் சீடர்கள் தங்கிக் கல்வி கற்க வசதிகள் செய்யப்பட்டும் இருந்தன. வித்தியாநாதரின் புகழ் பரவி இருந்ததால் பல நாடுகளி லிருந்தும் மாணவர்கள் அங்கு வந்து அவரிடம் கல்வி பயின்று வந்தார்கள்.

அந்நாட்டு மன்னன் தன் மூன்று புதல்வர்களையும் அந்தக் குருகுலத் தில் கல்வி பயில அனுப்பினான். அந்த அரச குமாரர்கள் மந்த அறிவு கொண்டவர்கள். ஆயினும் வித்தியா நாதர் அவர்களைத்தான் குருகுலத் தில் சேர்த்துக் கொண்டார். அரச குமாரர்கள் ஆயிற்றே என எண்ணி அவர் அவர்களுக்கு விளக்கமாக எல்லாவற்றையும் கூறி போதித்துப் பார்த்தார். ஆனால் அவர்களது மர மண்டையில் அதெல்லாம் ஏறினால் தானே!

அதே குருகுலத்தில் ஞானமணி என்ற சீடன் இருந்தான். அவன் மகா புத்திசாலி. எதையும் ஒருமுறை சொன்னால் போதும் கிரகித்துக் கொண்டுவிடுவான். அவன் மீது குருவுக்கு அலாதி பிரியம். தனக் குப் பின் அந்த ஆசிரமத்தை அவ னிடம் ஒப்படைத்து விட எண்ணி னார். அதற்காக ஞானமணி இன்னும் சற்றுப் பக்குவம் அடைய வேண்டும் எனவும் எண்ணினார். ஏனெனில் ஞானமணி பேருக்கும் அதிகாரத் திற்கும் ஆசைப்படுவது அவருக்குத் தெரிந்தது.

மூன்று அரச குமாரர்கள் படிப் பில் அதிக கவனம் செலுத்தாமல் மந்திர தந்திரங்களைக் கற்பதில் நாட் டம் கொண்டார்கள். அவர்கள் குருகுலத்திலுள்ள பல ஓலைச் சுவடி களை எடுத்துப் படித்துச் சில மந்தி ரங்களையும் கற்றுக் கொண்டார்கள். அவர்களது படிப்பு முடிய ஒரு மாதம் இருக்கும் போது அவர்களது தந்தை மிகவும் அபாயகரமான நிலையில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.

Ambulimama_Tamil_1991_04_0026-picஅரச குமாரர்கள் உடனேயே தலைநகருக்குப் போக விரும்பினார் கள். குருவோ “உங்கள் படிப்பும் முடிந்து விட்டது. அரண்மனையிலி ருந்து அழைத்துப் போக யாராவது வருவார்கள். இன்றைக்குள் யாரும் வராவிட்டால் நம் ஞானமணியை உங்களுக்குத் துணையாக அனுப்பு கிறேன். அவன் உங்களை பத்திரமாக அரண்மனைக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பான். வேண்டுமானால் அவனை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். சமயத்திற்கு – ஏற்ப தக்க ஆலோசனைகளையும் கூறி வருவான்” என்றான்.

அரச குமாரர்களில் மூத்தவனும் “ஞானமணியா? ரொம்ப நல்லதாய் போயிற்று. அவன் இங்கும் எங் களோடு நன்றாகப் பழகினான். நான் அவனை என்னுடன் வைத்துக் கொள்கிறேன். நான் அரசனானதும் அவனை முதலமைச்சராகவும் நியமித்துக் கொள்கிறேன்” என்றான்.

வித்தியாநாதரும் ஞானமணியை அழைத்து “நீ அரச குமாரர்களோடு போய் அவர்களுக்கு எவ்வித ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள். உனக் கும் அரண்மனை வாசம் பிடிக்கும் என்றே நினைக்கிறேன்” என்றார்.

ஞானமணியோ “குருவே! நான் இதே ஆசிரமத்தில் தங்கி என் வாழ் நாள் முழுவதையும் கழிக்க விரும்பு கிறேன்” என்றான். வித்தியாநாத ரும் “நீ ஆசிரமத்திலேயே நிரந்தர மாக தங்கி விடும் அளவிற்கு உன் மனம் இன்னமும் பக்குவப்பட வில்லை. எனவே நீ இப்போது அரச குமாரர்களுடன் போய் நான் சொன்னபடி செய். உன் மனம் பக்குவப்பட்டதும் உடனே நீ இந்த ஆசிரமத்திற்குத் திரும்பி வந்து விடலாம். நீ அரண்மனையில் தங்கத் தேவை இல்லை” என்று கூறினார்.

ஞானமணியும் குருவின் கட்டளைப் படி மறுநாள் காலை அரச குமாரர் களுக்குத் துணையாகக் கிளம்பி விட்டான். எதிர்பார்த்தபடி அரண் மனையிலிருந்து யாரும் வரவில்லை. நால்வரும் பயணம் செய்தவாறே உச்சி வேளைக்கு ஒரு சிற்றாற்றின் கரையில் தங்கி தாம் கொண்டு வந்த உணவை உண்டனர்.

Ambulimama_Tamil_1991_04_0027-picஉண்ட பின் அவர்கள் அங்கேயே தங்கிச் சற்று இளைப்பாறத் தீர்மானித்தனர். எனவே அவர்கள் குளிர் நிழல் தரும் இடத்தைத் தேடிச் சென்றார்கள். சற்று தூரத்தில் அவ்வித மரம் கிடைக்கவே நால்வரும் அங்கு சென்று இளைப்பாறலானார்கள்.

அப்போது கடைக்குட்டி அரச குமாரன் சற்று தூரத்தில் சில எலும்புகள் கிடப்பதைப் பார்த் தான், உடனே அவன் “இவை ஏதோ ஒரு சிங்கத்தின் எலும்புகள் என்று தெரிகிறது. என் மந்திர சக்தியால் இவற்றை ஒன்று சேர்த்து சிங்கத்தின் எலும்புக் கூட்டை உருவாக்குகிறேன்” என்றான்.

அப்போது இரண்டாவது அரச குமாரன் “நீ சிங்க உடல் எலும்புக் கூட்டை உருவாக்கினால் நான் என் மந் திர சக்தியால் அதற்கு நரம்புகளும் தசைகளும் வரச் செய்கிறேன்” என்றான்.

மூத்த அரச குமாரனோ “நீங்கள் இருவரும் அவ்வாறு செய்து விட்டால் நான் என் மந்திர சக்தியால் அதற்கு உயிர் வரும்படிச் செய்கிறேன். நாம் அனைவரும் அதன் மீது அமர்ந்து கம்பீரமாகத் தலைநகருக்குள் போய் எல்லோரையும் திகைக்க வைக்கலாம்” என்றான்.

அவர்கள் கூறியதைக் கேட்ட ஞானமணி “இதென்ன விபரீத விளையாட்டு? சிங்கத்திற்கு உயிர் வந்து விட்டால் அது நம்மைச் சும்மா விட்டு விடுமா? எல்லோரையும் கொன்று விடுமே. அதனால் இம்மாதிரிச் செய்ய வேண்டாம். நாம் பேசாமல் நம் வழியே செல்வோம்” என்றான்.

மூத்த அரச குமாரனோ “முடியாது. நான் சிங்கத்திற்கு உயிர் கொடுத்தால் அது நம்மை ஒன்றும் செய்யாது. நமக்கு நன்றி செலுத்து வதோடு நாம் சொல்கிறபடி எல்லாம் அது செய்யும். நமக்கு அடங்கி விடும். ஞானமணி! உனக்கு பயமாய் இருந்தால் இந்த மரத் தின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்” என்றான். ஞான மணியும் அவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புத்தியில் ஏறாது என நினைத்து அருகிலிருந்த ஒரு மரத்தின் மீது ஏறி ஒரு வலுவான கிளை மீது அமர்ந்து கொண்டான்.

Ambulimama_Tamil_1991_04_0028-picமுதலில் கடைசி அரச குமாரன் தனக்குத் தெரிந்த மந்திரத்தை உச்சரித்து சிங்க உடல் எலும்புக் கூட்டை உருவாக்கினான். இரண்டாவது அரச குமாரன் தனக்குத் தெரிந்த மந்திரத்தால் அதற்கு நரம்புகளும், தசைகளும் வரும்படிச் செய்தான். மூத்த அரசகுமாரன் தன் மந்திர சக்தியால் அதற்கு உயிர் வரும்படிச் செய்தான். அவ்வளவுதான்! சிங்கம் உயிர் பெற்றதும் பயங்கரமா கக் கர்ஜித்துக் கொண்டு அந்த மூவர் மீதும் பாயத் தயாரானது.

அப்போது ஞானமணி கிளை மீதி ருந்தவாறே சிங்கம் பேசும் மொழி யில் “சிங்கமே! கொஞ்சம் நில். நான் சொல்வதைச் சற்று கேள்” என்று உரக்கக் கூவினான்.

சிங்கமும் குரல் வந்த திசை யைப் பார்த்தது. அப்போது ஞான மணி “சிங்கமே! எனக்கு மிருகங்கள் பேசும் மொழிகள் தெரியும். உனக்கு உருக் கொடுத்து உயிர் கொடுத்தவர்களையா நீ கொல்லப் போகிறாய்? இது நியாயமா?” என்று கேட்டான்.

அதைக் கேட்ட சிங்கம் தன் சீற்றத்தை மட்டுப்படுத்திக் கொண்டு “என்னை மன்னித்து விடு. இவர் கள் தாம் எனக்கு உருக் கொடுத்து உயிர் கொடுத்தவர்கள் என்பது எனக்குத் தெரியாது. எனக்கு அவர் கள் உயிரைக் கொடுத்ததும் அல் லாமல் என் நீண்ட காலப் பசியையும் கிளப்பி விட்டிருக்கிறார்கள். அந்தப் பசி ஒரு சில ஆண்டுகளது அல்ல, பல நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பசி” என்றது.

ஞானமணியும் சிங்கமும் இவ் வாறு பேசிக் கொண்டிருக்கும் சமயம் பார்த்து மூன்று அரச குமாரர்களும் அங்கிருந்து ஓடிப் போய் விட்டார்கள். ஆனால் சிங்கமும் ஞானமணியும் நல்வினை, தீவினை, நியாயம், அநியாயம் பற்றி நீண்ட வாக்குவாதத்தில் இறங்கி விட்டார்கள்.

முடிவில் சிங்கம் “ஒருபுறம் பார்த் தால் என்னை உயிர்ப்பித்த அரச குமாரர்களை நான் கொன்று தின் பது சரி இல்லைதான். உயிர் விலை மதிப்பற்றது. நான் என் பசியைப் போக்கிக் கொள்ளாவிட்டால் என் உயிரே போய் விடும். இப்போது நான் அலைந்து திரிந்து வேறு மிரு கங்களை வேட்டையாடும் நிலையிலும் இல்லை. அதனால் என் கண்ணெதிரே கண்ட உயிரினத்தைக் கொல்ல வேண்டும். எனவே அரசகுமாரர்களே என் உணவு” என்றது.

Ambulimama_Tamil_1991_04_0029-picஅப்போது ஞானமணி “உன் கண் எதிரே நான் இருக்கிறேன். என்னைக் கொன்று சாப்பிடு. ஆனால் அரச குமாரர்களை ஒன்றும் செய்யாதே. ஏனெனில் அவர்களைக் காக்கும் பொறுப்பை ஏற்று நான் வந்திருக்கிறேன். அதனால் என் உடலைக் கொடுத்து உன்னைக் காப்பாற்றுகிறேன்” என்றான்.

அப்போது சிங்கம் “சரி! உயிரினங்கள் உயிரோடு இருப்பதால் என்ன பயன்?” என்று கேட்டது. அதற்கு ஞானமணி “உயிரினங்கள் முன்னேற்றம் அடைய வேண்டும். அதாவது இருளாகிய அஞ்ஞானத்தை விட்டு விட்டு ஒளியாகிய மெய் ஞானத்தை அடைய வேண்டும். இது தான் உயிர் வாழ்வதன் பயன்” என்றான்.

சிங்கம் “ஓ! அப்படியானால் எது வேண்டும், எது வேண்டாம் என் பதை நீ நன்கு உணர்ந்தவன். அரச குமாரர்கள் தாம் எனக்கு உருக் கொடுத்து உயிர் அளித்தவர்கள் என்பதை மட்டும் நீ கூறாது இருந் திருந்தால் நான் அவர்களை அப் போதே கொன்றிருப்பேன். நீ தர்ம நியாயங்களை எடுத்துக் கூறி என் கண்களைத் திறந்து விட்டாய். அதனால் நீ என் குரு. எனவே உன்னை நான் கொல்வது அதர்மம். எனவே நான் இந்தக் கணத்திலேயே வேட்டையாடி உணவு பெற ஒரு வழியைச் சொல்” என்றது.

அப்போது ஞானமணி “இதோ பார். அரச குமாரர்களை நான் உனக்கு உணவாகக் கொடுக்க முடியாது. விரைவில் உன் பசி அடங்க வேண்டும் என்றால் நீ என்னைக் கொன்று சாப்பிடுவதுதான் ஒரே வழி” என்றான்.

இதற்குள் ஓடிப் போன அரச குமாரர்கள் இரண்டு வேடர்களைத் தம்மோடு அழைத்துக் கொண்டு சிங்கம் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அவர்கள் சிங்கத்தைப் பார்த்த தும் அம்புகளை எய்து அதனைக் கொன்று விட்டார்கள். ஞானமணி அவர்களைத் தடுப்பதற்குள் அது நொடிப் பொழுதில் நடந்து முடிந்து விட்டது.

Ambulimama_Tamil_1991_04_0030-picஞானமணி இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. தான் சிங்கத்தோடு பேசிக் கொண்டிருக் கும் போது அது கொல்லப்பட்டது கண்டு மிகவும் மனம் வருந்தினான். அவனால் அரசகுமார்களைக் கடிந்து கொள்ளவும் முடியவில்லை. ‘நடந்தது நடந்தது தானே! அதை அவனால் மாற்ற முடியாதே.

சிங்கம் இறந்தது கண்டு அரசகுமாரர்கள் ஆனந்தம் அடைந்தார் கள். ஞானமணி மரத்திலிருந்து இறங்கி வந்ததும் மூத்த அரச குமாரன் “நாங்கள் உனக்கு நன்றி யைச் செலுத்துகிறோம். நம்பினவர் களை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்பதை நீ நன்கு அறிந்திருக்கிறாய்” என்றான்.

அப்போது ஞானமணி ” இல்லை. இல்லை. எனக்கு ஒன்றும் தெரியாது” என்றான். அப்போது அந்த அரச குமாரன் “ஆகா! என்ன தன்னடக் கம்! என்ன பணிவு! நீ செய்த உத வியை எவ்வளவு வேண்டுமானா லும் பாராட்டலாமே. உன்னை முதலமைச்சராக அல்ல. என் நாட்டின் ஒரு பகுதியின் சிற்றரசனாக்குகிறேன். என் நாட்டில் உனக்கு இணையாக எந்த சிற்றரச னும் இருக்க மாட்டான். நீ மூன்று அரச குமாரர்களைக் காப்பாற்றி யது என்பது ஒரு சாதாரணப்பட்ட விஷயமா என்ன?” என்றான்.

ஞானமணி ஒரு கணம் யோசித்து விட்டு “நீ எனக்குக் கொடுக்கும் இந்த செல்வம் என்னை பரம ஏழை யாக ஆக்குகிறது. நீ உங்களைக் காப் பாற்றி அரண்மனைக்குச் சேர்க்க இந்த இரு வேட்டைக்காரர்களை யும் கூடவே அழைத்துச் செல். நான் என் குருநாதரின் ஆசிரமத் திற்கே திரும்பிச் செல்கிறேன்” எனக் கூறி அவர்களை அனுப்பி விட்டு ஆசிரமத்திற்கே திரும்பிச் சென்றான்.

வேதாளம் இந்தக் கதையைக் கூறி “ஞானமணி அரச குமாரர்களைச் சிங்கத்திடமிருந்து காப்பாற்றியது உண்மைதானே. தன்னை நம்பிய வர்களைக் காப்பாற்றவில்லை என அவன் கூறியது பொய்தானே. மேலும் புகழும் அதிகாரமும் செல்வ மும் பெற அவன் ஆசைப்பட்டவன் தானே. அரச குமாரன் அவனுக் குப் பணமும் பதவியும் அந்தஸ் தும் அளிப்பதாக கூறியும் அதனை அவன் ஏற்காதது அவனது இயல் பிற்கு நேர்மாறாகத்தானே இருக் கிறது? அது தன்னை ஏழையாக்கி விடும் என அவன் கூறியதும் சரியா? இந்தக் கேள்விகளுக்கு நீ சரியான விடைகளைத் தெரிந்து கொண்டிருந்தும் நீ அவற்றை கூறா விட்டால் உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகி விடும்” என்றது.

Ambulimama_Tamil_1991_04_0031-picஅப்போது விக்கிரமனும் “பசி யோடு இருந்த சிங்கத்திடமிருந்து ஞானமணி அரச குமாரர்களைக் காப் பாற்றியது உண்மையே. ஆனால் வாதம் புரிந்து தன்னை நம்பும்படிச் செய்த அவன் சிங்கத்தைக் காப் பாற்ற முடியாது போனோனே. அத னால் தான் நம்பினவர்களைக் காப் பாற்றியது பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என அவன் கூறினான். உயிரினங்கள் ஏன் உயிர் வாழ வேண்டும் என்ற கேள்வியைச் சிங் கம் அவனிடம் கேட்டபோது அஞ் ஞான இருளிலிருந்து வெளிவந்து மெய்ஞான ஒளியில் பிரவேசிப்பது தான் என்று அவன் பதில் கூறி னான். இது அவனுக்குத் தன் வாழ் வின் குறிக்கோள் என்ன என்பதை உணர்த்தி விட்டது. அவன் ஆசிர மத்திற்குத் திரும்பிச் சென்றான். அவனது குருநாதர் விரும்பியபடி அவன் பக்குவ நிலையை அடைந்து விட்டான்” என்றான்.

விக்கிரமனின் சரியான பதிலால் அவனது மௌனம் கலையவே அவன் சுமந்து வந்த உடலோடு உயரக் கிளம்பிப் போய் மீண்டும் முருங்க மரத்தில் ஏறிக் கொண்டது.

– ஏப்ரல் 1991

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *