ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 21, 2021
பார்வையிட்டோர்: 3,717 
 
 

அத்தியாயம்-29 | அத்தியாயம்-30

அவள் பதைபதைப்பு அதிகமாகியது.கடவுளை வேண்டிக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தாள்.

சுரே.ஷூடன் கூட வந்த கிரண் ரமாவை பார்த்து விட்டான்.

உடனே கிரண் ”அப்பா,அப்பா,எனக்கு நேத்து ஒரு ஆண்டி ஸ்கூல்லே ரெண்டு ‘பைவ் ஸ்டார்’ சாக்லெட் குடுத்தான்னு சொன்னேனே,அந்த ஆண்டி, இந்த ஆண்டி தான்” என்று சொல்லி விட்டு “ஆண்டி,நீங்க எனக்கு சாக்லெட் கொண்டு வந்து இருக்கேளா” என்று கேட்டு விட்டு ரமாவிடம் ஓடி வந்தான்.

தன் கணவனைப் பார்க்க ¨தா¢யம் இல்லாதவளாய் குனிந்த படியே தன் ‘ஹாண்ட் பாக்கில்’ இருந்த சாக்லெட்டை எடுத்து ”இந்தா ரெண்டு சாக்லெட்” என்று சொல்லி ‘ஹாண்ட் பேக்கில்’ தான் கொண்டு வந்து இருந்த சாக்லெட்டுகளை எடுத்து கிரணிடம் கொடுத்தாள் ரமா.அதை வாங்கிக் கொண்ட கிரண் ரமாவைப் பார்த்து ‘தாங்கஸ்’ஆண்டி.நீங்கோ எனக்கு ‘பெஸ்ட் விஷஸ்’ சொன்னேள் ஆண்டி.நான் என் ‘க்லாஸ்’லே ‘பஸ்ட் மார்க்’ வாங்கி,முதல் மாணவனாக ‘பாஸ்’ பண்ணி இருக்கேன்” என்று சொன்னான்.

உடனே ரமா “அப்படியா கிரண்.எனக்குக் கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று சொ ல்லி விட்டு அவன் தலையை வருடி விட்டாள்.

சுரேஷ் ரமாவைப் பார்த்தான்.

உடனே சுரேஷ் “என்ன ரமா,நீயா ஆச்சரியமா இருக்கே.என் கண்ணே என்னாலே நம்பவே முடி யவில்லே.நீ என் ரமா வா” என்று எந்த வித கவடும் சூது இல்லாதமல் வெகுளியானப் பேசினான்.

அதே சிரிப்பு இருந்தது சுரேஷ் முகத்தில்.

‘எங்கே பூகம்பம் வெடிக்குமோ’ என்று நினைத்துக் கொண்டு இருந்த, ரமாவுக்கு சுரேஷ் பேசி னது பாலை வனத்தில் தாகத்தில் தவித்துக் கொண்டிருப்பவனுக்கு இனிய தண்ணீர் கிடைத்தது போ ல சந்தோஷம் அளித்தது.சுரேஷ் பேச்சு ரமாவுக்கு இனித்தது.அவள் சந்தோஷப் பட்டாள்.

‘நாம இவ்வளவு தப்பு பண்ணி இருந்தும்,நம்ம ஆத்துக்காரர் இவ்வளவு சாந்தமா நம்ம கிட்டே பேசி இருக்காறே.இவருக்கு என் பேர்லே கொஞ்சம் கூட கோவமே இல்லையே.எங்கே பாத்ததும் என் னேப் பாத்து பூகம்பம் வெடிச்சா மாதிரி கத்து வாரோன்னு தானே நான் பயந்துண்டு இருந்தேன்’ என் று நினைத்த ரமாவுக்கு அளவுக்கு மீறிய துக்கத்தைத் தந்தது.

கோவில் என்று கூட பார்க்கமல் ரமா சுரேஷ் காலில் விழுந்து ‘ஓ’ வென்று அழ ஆரம்பித்தாள்.

சுரேஷ் அவள் தோள் பட்டையை மெல்லத் தொட்டு ”எழுந்திரு ரமா அழாதே.இது ஒரு கோவி ல்.நீ அழறதே யாராவது இங்கே பாக்கப் போறா” சொல்லி எழுப்பினான்.
சுரேஷ் கண்களில் நீர் துளித்தது.

கொஞ்ச நேரம் ஆனதும் சுரேஷ் “ரமா வா.நாம எல்லாரும் எதிரே இருக்கும் பூங்காவிலே உக் காந்துண்டு நிதானமா எல்லா சமாசாரத்தையும் பேசலாம்” என்று சொல்லி விட்டு கிரணையும்,ரமாவை யும் அழைத்துக் கொண்டு ‘இஸ்கான்’ ‘காம்பவுண்டிலேயே’ இருந்த ஒரு பூங்காவுக்குப் போய் அங்கே காலியாக இருந்த ஒரு ‘பென்ச்சில்’ உட்கார்ந்துக் கொண்டான்.

ஒன்றும் புரியாமல் கிரண் எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பூங்காவுக்குள் வந்து உட்கார்வதற்குள் ரமா தன்னை சமாளித்து கொண்டாள்.

”நீங்களும் கிரணும் எப்படி இருக்கேள்.அம்மா, அப்பா ரெண்டும் பேரும் தவறிப் போய் விட்டா ன்னு கிரண் எனக்குச் சொன்னப்ப நான் ரொம்ப வருத்தப் பட்டேன்.நான் உங்களை எல்லாம் விட்டு ட்டு,என் சுய நலத்துக்காக ஆத்தே விட்டு ஓடிப் போனதுக்காக என்னை நீங்க மன்னிச்சுடுங்கோ. நான் அப்படி ஓடிப் போய் இருக்கக் கூடாது” என்று சொல்லி அவன் கையைப் பிடித்து அழுதுக் கொ ண்டு கெஞ்சினாள் ரமா.

சுரேஷ் கண்களில் நீர் துளித்ததைப் பார்த்த ரமா கண்கள் குளம் ஆயிற்று.

ஒன்றும் புரியாமல் கிரண் எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“இதில் மன்னிக்க ஒன்னும் இல்லை ரமா.நீதான் ‘உன் வாழக்கையின் லட்சியத்தை,ஆசையை பூர்த்தி பண்ணி கொள்ளப் போறேன்’ன்னு லெட்டர் எழுதி வச்சுட்டு தானே போனே.போகட்டும் விடு. அது பழைய கதை.இப்போ நீ எங்கே இருக்கே,என்ன பண்றே சொல்லு ரமா” என்று மிக பொறுமை யாக கேட்டான் சுரேஷ்.

ரமா அழுது கொண்டே தான் டெல்லியை விட்டுப் போனதில் இருந்து,இன்று வரை தன் கதை பூராவையும் சொல்லி முடித்தாள்.

ரமா சொன்னதை பொறுமையாகக் கேட்டு விட்டு,சுரே.ஷூம் தன் பங்குக்கு அவள் கிளம்பிப் போனதில் இருந்து இன்று வரை நடந்தை எல்லாம் விவரமாகச் சொன்னான்.
“நடந்தது எல்லாம் நடந்து முடிஞ்சுப் போச்சு.நான் இப்போ ‘ஹெல்த் மினிஸ்ட்ரிலே’ஒரு செக ரட்டரி’யா வேலே பண்ணிண்டு வறேன்.எனக்கு டிரைவரோட ஒரு கார்,,ஒரு பெரிய பங்களா,சமையல் காரன்,ரெண்டு வேலைக்காரா,ஒரு தோட்டக்காரன் இப்படி எல்லா வசதியும் இருக்கு.நாம ரெண்டு பே ரும் பழசை எல்லாம் மறந்துட்டு,ஒரு புது வாழ்க்கையே தொடங்கி அந்த பங்களாலே சந்தோஷமா வா ழ்ந்துண்டு வரலாமா” என்று மூச்சு விடாமல் கேட்டாள் ரமா.

சுரேஷ் ஒன்னும் பதில் சொல்லாமல் ரமா சொல்வதைக் கேட்டுக் கொண்டு இருந்தான்.

கொஞ்ச நேரமானதும் “ரமா,நீ கிளம்பிப் போனதும் என் அம்மா தன் தவறை எண்ணி மிகவும் வருந்தினாள்.அந்த வேதனையில் என் அம்மா வெந்து,வெந்து செத்துண்டு இருந்தா.ஒரு நாள் அவள் கோவிலுக்குப் போய் விட்டு வந்துக் கொண்டு இருக்கும் போது, ‘ஸ்கூட்டர்லே’ போயிண்டு இருந்த ஒருவன்,அவளே கீழே தள்ளிட்டுப் போயிட்டான்.அவ தலைலே பலமா அடிப்பட்டு,அவ உடம்ப்லே இருந்து நிறைய ரத்தம் போயிடுத்து.டாக்டர் அம்மாவுக்கு புது ரத்தம் ஏத்தியும்,அந்த ரத்தம் அவ உட ம்ப்லே ஏறவே இல்லே.அப்புறமா அவ பரிதாபமா செத்து போயிட்டா” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

உடனே ரமா “அப்படியா கேக்கவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு”என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

சுரேஷ் தொடர்ந்தான் “அன்னைக்கு என் சித்தப்பா,சித்தி,சின்ன அத்தே மூனு பேரும் வந்து எங்காத்துக்கு வந்து இருந்தா.என் அப்பா என்னுடைய சின்ன அத்தையைப் பாத்து ரொம்ப கெஞ்சிக் கேட்டுண்டா.நல்ல வேளையா என்னுடைய சின்ன அத்தே எங்க அப்பாவுக்கும்,எனக்கும் கிரணுக்கும் சமைச்சுப் போட ஒத்துண்டு எங்க கூட இருந்துண்டு வற சம்மதிச்சா.அவ அவ மட்டும் அன்னைக்கு ஒத்துக்காம இருந்தா,நாங்க மூனு பேரும் சாப்பாட்டுக்கு தீண்டாடிண்டு வந்து இருப்போம்” என்று சொல்லி விட்டு மறுபடியும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

கண்களைத் துடைத்துக் கொண்டு சுரேஷ்”அம்மா ‘போய்’ ரெண்டு வருஷத்துக்கு எல்லாம் என் அப்பா BP ஜாஸ்தி ஆகி ஒரு நாள் ஆஸ்பத்திரிலே செத்துப் போயிட்டா.இவா ரெண்டு பேரும் என் னே விட்டுட்டுப் போன பிற்பாடு,எனக்கு வாழவே பிடிக்கலே.நான் ரொம்ப நாளா ஆபீஸ்க்குக் கூட போகாம ஆத்லேயே இருந்து வந்தேன்.என் சின்ன அத்தே தான் என்னேப் பாத்து ‘சுரேஷ்,நீ பராக்கா ‘ஆபீஸ்’ போயிண்டு வந்து நாலு பேர் கூட பழகி வா.அப்போ தான் உனக்கு மனசிலே கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்.நீ இனிமே கிரணுக்காக வாழ்ந்துண்டு தான் வரணும்’ன்னு சொன்னா” என்று சொ ல்லி விட்டு கொஞ்சம் இருமினான்.

ரமா சுரேஷ் இருமுவதைப் பார்த்ததும் பயந்துப் போய் “என்ன இருமறேள்.உங்க உடம்பு சரி இல்லையா என்ன” என்று தன் கண்களில் கண்ணீர் முட்ட கேட்டாள்.

“என் உடம்பு ஒன்னும் இல்லே ரமா.நீ வீணா கவலைப் படாதே.நான் கொஞ்சம் ‘எமோஷனல்’ ஆயிட்டேன்.அதான் எனக்கு கொஞ்ச இருமல் வந்தது” என்று நிதானமாகச் சொன்னான்.

இருமி விட்டு சுரேஷ் “ரமா,ஒரு நாள் எனக்கு ‘திடீர்’ன்னு காலேஜ்லே என் கூட படிச்ச சுதீர் என்கிற ‘ப்ரெண்ட்’ ஞாபகத்துக்கு வந்தது.அவன் காலேஜ் படிச்சுண்டு இருந்தப்ப ஒரு நாள் என் கீட்டே ‘சுரேஷ்,நான் இந்த காலேஜ் படிப்பு முடிஞ்சதும்,’இஸ்கான்’லே சேந்து முழு நேர ‘ஷோஷியல் சர்விஸ்’ பண்ணீட்டு,அங்கேயே தியானமும் பண்ணிட்டு,அங்கே கிடைக்கற பிரசாதத்தை சாப்பீட்டு விட்டு,அங்கேயே தங்கி விடப் போறேன்’ என்று சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

இந்த நேரம் பார்த்து சுரே.ஷூக்கு ஒரு ‘செல் போன்’ கால் வரவே, அவன் செல் ‘போனை’ ‘ஆன்’ பண்ணீ பேசினான்.

பேசி முடிந்ததும் சுரேஷ் ‘செல் போனை’ ‘ஆப்’ பண்ணி விட்டு “ரமா ‘இஸ்கானு’க்குப் போய் சுதீரை சந்திச்சுப் பேசினேன்.அவன் பண்ணீண்டு வந்த ‘ஷோஷியல் சர்வீஸ்’ எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.நான் அவன் கிட்டே’ சுதீர் எனக்கும் இந்த மாதிரி ‘ஷோஷியல் சர்வீஸ்’ பண்றது ரொம்ப பிடிச்சு இருக்கு.நீ என்னையும் கொஞ்ச ‘இஸ்கான்’லே சேத்து விட முடியுமா.எனக்கும் நீ பண்ணீ வற மாதிரி ‘ஷோஷியல் சர்வீஸ்’ பண்ணீண்டு வர ஆசையா ரொம்ப இருக்கு’ன்னு கேட்டேன்” என்று சொ ல்லி விட்டு கொஞ்ச நேரம் போனதும் “சுதீர் என்னே இந்த ‘இஸ்கான்லே’ சேப்பானோ, மாட்டானோ” என்று கவலைப் பட்டுண்டு இருந்தேன்.

சுதீர் என்னைப்ப் பாத்து “கலவலைப் படாதே சுரேஷ்.நான் உன்னே நிச்சியமா சேக்க ஏற்பாடு பண்றேன்ன்னு சொல்லிட்டு,‘இஸ்கான்’ மானேஜர் கிட்டே என்னே அறிமுகப் படுத்தி விட்டு, அவா¢ டம் ‘சார்,இவன் பேர் சுரேஷ்.என் காலேஜ் ‘ப்ரண்ட்’.இவனுக்கும் நான் பண்ணி வறா மாதிரி ‘ஷோ ஷியல் சர்வீஸ்’ பண்ணீ வர ரொம்ப ஆசையா இருக்குன்னு சொல்றான்.நீங்க கொஞ்சம் இவனையும் ‘இஸ்கான்’லே சேத்துக்க முடியுமா’ன்னு கேட்டதும்,அந்த மானேஜர் ரொம்ப சந்தோஷப் பட்டு என்னி டம் இருந்து என் ‘டீடெல்ஸ்’ எல்லாம் வாங்கிண்டு,ஒரு ‘பாரத்தே’ என் கையிலே குடுத்து அந்த ‘பார த்தை’ நன்னா படிச்சுப் பாத்துட்டு.அந்த ‘பாரத்லே சொல்லி இருக்கிறா மாதிரி இருந்து வர சம்மதம் இருந்தா ‘பாரத்லே’கை எழுத்துப் போடச் சொன்னார்” என்று சொன்னான் சுரேஷ்,

சுரேஷ் சொன்னதை கவனமாகக் கேட்டுக் கொண்டு இருந்தாள் ரமா.சுரேஷ் தொடர்ந்தான். “நான் அந்த பாரத்தே நன்னா படிச்சுட்டு என் கை எழுத்தேப் போட்டுக் குடுத்தேன்.அந்த மானேஜர் உடனே எனக்கு மூனு செட் காவி ‘ட்ரஸ்’ குடுத்தார்” என்று சொன்னான் சுரேஷ்.

அந்த நேரம் பார்த்து சுரேஷ் மாதிரியே காவி ‘ட்ரஸ்’ அணிந்த ஒருவர் சுரேஷைப் பார்த்து ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ என்று சொல்லி வணக்கம் சொன்னதும்,சுரேஷ் பதிலுக்கு அவரைப் பார்த்து ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ என்று சொல்லி விட்டு வணக்கம் சொன்னான்.

“ரமா,அன்னிலே இருந்து நான் ‘ஆபீஸ்’ விட்டு ஆத்துக்கு வந்து குளிச்சுட்டு,என் அத்தே குடுக்கற ‘டிபனை’ சாப்பிட்டு விட்டு, ‘டீ’யையும் குடிச்சி விட்டு,ஒரு ஆறு மணிக்கா கிரணை என் னோடு ‘ஸ்கூட்டர்லே’ அழைச்சுண்டு ‘இஸ்கானு’க்கு வந்து கொஞ்ச நேரம் ‘ஷோஷியல் சர்வீஸ்’ பண்ணிட்டு,அப்புறமா கொஞ்ச நேரம் தியானம் பண்ணீண்டு இருப்பேன்.கிரண் அவன் ‘ஹோம் வர்க் கை’ எல்லாம் போட்டு விட்டு,அவன் பாடங்களை எல்லாம் படிச்சுண்டு வருவான்.ரெண்டு பேரும் ஒன்பது மணிக்கு ’இஸ்கான்’லே குடுக்கற பிரசாதத்தை சாப்பிட்டுட்டு ஆத்துக்கு வந்து படுத்துக்கப் போவோம்” என்று சொல்லி நிறுத்தினான்.

சுரேஷ் சொன்னதைக் கேட்டு மிகவும் வருத்தப் பட்டாள் ரமா.அவள் கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது.தன் கை குட்டையால் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

உடனே அவள் “நான் ஒத்தி உங்க கூட இல்லாம போனதாலே தானே,நீங்க இப்படி ஒரு சாமி யாரேப் போல வாழ்ந்துண்டு வறேள்.நான் ஆத்தே விட்டு ஓடிப் போய் இருக்கவே கூடாது.நான் பண் ணது ரொம்ப தப்பு.என்னே மன்னிச்சிடுங்கோ.என்னே மன்னிச்சிடுங்கோ” என்று மறுபடியும் சொல்லி சுரேஷின் கைகளை பிடித்துக் கொண்டு அழுதாள் ரமா.

அப்பா சொன்னதையும்,அதற்கு அம்மா பதில் சொன்னதையும் கேட்டு ஓரளவுக்கு எல்லா சமா சாரத்தையும் புரிந்துக் கொண்டான் கிரண்.அவன் பேசாமல் சும்மா இருந்தான்.
சுரேஷ் ரமாவைப் பார்த்து “அழாதே ரமா.எது எது நடக்கணுமோ அது எல்லாம் அந்த பகவான் கையிலே தான் இருக்கு.உன் கையிலோ என் கையிலோ இல்லே.நாம் ரெண்டு பேரும் கொஞ்ச காலம் சேந்து வாழ்ந்ததுக்கு அடையாளச் சின்னமாக பொறந்த ‘கிரண்’ தான் என் முதல் கடமைன்னு நான் நினைச்சேன்.அவனுக்காக நான் வாழணும்ன்னு முடிவு செஞ்சேன்.ஒரு சாமியாரா நான் வாழ்ந்தாலும் அவனை வளத்து நல்ல படிப்பு படிக்க வச்சு,அவனை வாழ்க்கைலே ஒரு நல்ல குடிமகனாக வாழ வக் கணும்ன்னு கங்கணம் கட்டிண்டேன்.அதுக்காக தான் நான் வேலைக்குப் போய் பண்ணி பணம் சம் பாதிச்சு,அவனை படிக்க வச்சுண்டு வறேன்” என்று சொல்லி நிறுத்தினான் சுரேஷ்.
பிறகு தன் தொண்டையை கனைத்துக் கொண்டு மீண்டும் பேசினான் சுரேஷ்.

“ரமா பகவான் தான் மறுபடியும் உன்னை என்னிடம் வரவழைச்சு இருக்கார்.கிரண் எட்டாவதி லே அவன் ‘க்லாஸ் பஸ்ட்டா’ வந்து இருக்கானு உனக்கு நன்னா தொ¢யும்”என்று சொன்னவுடன் ரமா “நான் கிரணே ஸ்கூல்லே பாத்தப்ப,அவன் என்னே பாத்து ‘ஆண்டி,இன்னைக்கு என ஸ்கூல்லே ‘ரிஸ ல்ட்’ தறா.நீங்கோ எனக்கு கொஞ்சம் ‘பெஸ்ட் விஷஸ்’ சொல்லுங்கோன்னு கேட்டான்.நான் உடனே அவனுக்கு ‘பெஸ்ட் விஷஸ்’ சொன்னேன்” என்று சொன்னாள்.

“ரமா,நான் கிரணை நன்னா படிக்க வச்சு உன்னேப் போல ரெண்டு ‘டிகி¡£ கோர்ஸிலும்’’ ஸ்டேட் பஸ்ட்டா’ ‘பாஸ்’ பண்ன வக்கணும்ன்னு கனவு கண்டுண்டு வந்தேன்.என் கனவு வீண் போகலே.நான் கிரணை இப்போ உன் கிட்டே ஒப்படைக்கறேன்.உனக்கு கல்யாணம் ஆகி,ஒரு குழந்தே பொறந்த பிற்பாடும்,உன் விடா முயற்சியாலே,ஒரே ஒரு ‘அடெம்ப்ட்’ தான் பாக்கி இருந்தும்,எப்படி நீ கஷ்டப் பட்டு ரா,பகலா படிச்சு அந்த ’சிவில் சர்விஸஸ்’ பரி¨க்ஷயே எழுதி ‘பாஸ்’ பண்ணி,ஒரு IAS ஆயி, இன்னேக்கு ஒரு அரசாங்க உத்தியோகத்லே ஒரு ‘செகரட்டரியா’ இருந்து வறயோ,அதேப் போல கிர ணையும் ஒரு நல்ல பணக்காரா படிச்சு வர ‘கான்வெண்ட்’ பள்ளிக் கூடத்லே சேத்து,படிக்க வச்சு உன்னேப் போல ஒரு IAS ஆக்கி, ஒரு நல்ல உத்தியோகத்லே சேத்துடு.இதே நீ கொஞ்சம் எனக்காக செய்ய முடியுமா.இது தான் என்னுடைய நீண்ட நாள் கனவும்,ஆசையும் கூட” என்று சொல்லி விட்டு ரமாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஒரு நீண்ட பெரு மூச்சு விட்டான் சுரேஷ்.

சுரேஷ் சொன்னதைக் கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது ரமாவுக்கு.

‘இது என்னடா.’கிணறு வெட்ட பூதம் கிளம்பினா மாதிரி இருக்கே’.நான் என்னடான்னா இவ ரையும் கிரணையும் என் கூட வச்சுண்டு சந்தோஷமா இருந்து வரலாம்ன்னு,நினைச்சிண்டு இருந் தா,இவர் என்னடான்னா ‘ரமா நீ கிரணை இப்போ உன் கிட்டே ஒப்படைக்கறேன்.நீ கிரணை ஒரு நல்ல பணக்காரா படிச்சு வர ‘கான்வெண்ட்’ பள்ளி கூடத்லே சேத்து,படிக்க வச்சு,உன்னேப் போல ஒரு IAS ஆக்கி ஒரு நல்ல உத்தியோகத்லே சேத்துடு.இது தான் என்னுடைய நீண்ட நாள் கனவும், ஆசையும் கூடன்னு சொல்றாரே.நாம வெறுமனே கிரணை மட்டும் நம்மோடு அழைச்சுண்டு போற தாலே என்ன லாபம்.’அவரு’ம் எனக்கு வேணுமே.’அவர்’ என் கண் முன்னாலே இருந்தும்,இத்தனை வருஷங்களுக்கு அப்புறமா கூட ‘அவர்’ என்னோட இருந்து வறாம நான் ஒரு தனி மரமா வாழ்ந்து ண்டு வரணுமா.பகவானே,இது என்ன சோதனை’என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள்.

ரமா கொஞ்ச நேரம் ஒன்னும் பேசாமல் சும்மா இருந்தாள்.

அவள் கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது.

அவருக்கு ’நாம இப்போ என்ன சொல்லி,நீங்களும் எங்க கூட இருந்து வரணும்.அப்போ தான் நான் சந்தோஷமா இருந்துண்டு வர முடியும்.உங்களே இந்த ‘இஸ்கான்’லே விட்டுட்டு கிரணை மட்டும் என் கூட அழைச்சிண்டு போறதாலே எனக்கு என்ன சந்தோஷம் கிடைக்கும் சொல்லுங்கோ. நீங்கோ எனக்குக் கிடைச்சுமா நான் இத்தனை வருஷங்களா ஒரு தனி மரமா இருந்தது போல இன் னும் ஒரு தனி மரமா இருந்துண்டு வரணுமா’ என்று கேட்க வேண்டும் என்று ஆசைப் பட்டாள்.

ஆனால் ரமாவுக்கு இதை எப்படி தன் ஆத்துக்காரர் கிட்டே கேட்பது என்று புரியாமல் தவித்துக் கொண்டு இருந்தாள்.

சுரேஷ் சற்று நேரம் ஆனதும் “ரமா நீ இப்போவே கிரணை அழைச்சுண்டு போய்,உன்னோடு வச்சுண்டு, நன்னா படிக்க வச்சுண்டு வந்தேன்னா,நான் கிரணைப் பத்தி கவலைப் படாம் என் வாழ் நாளை ‘இஸ்கான்’லே முழு நேர ‘ஷோஷியல்’ சர்விஸ்’ பண்ணீண்டும்,நேரம் கிடைக்கும் போது தியா னமும் பண்ணீண்டு வருவேன்.அப்புறமா நான் இருக்கும் வீடடை காலி பண்ணி விட்டு என் அத்தை யை என் சித்தப்பா,சித்தி கிட்டே கொண்டு போய் விட்டுட்டு,அடுத்த நாள்ளே என் ஆபீஸ் வேலை யிலே இருந்து ‘ரிடையர்’ஆயிட்டு,எனக்கு வரும் மொத்த பணத்தை ‘இஸ்கானு’க்கு ‘டொனேஷனா’க் குடுத்துட்டு,அப்புறமா இந்த ‘இஸ்கானில்’ முழு நேர சன்யாசியாக வாழ்ந்து வருவேன்.நமக்குப் பொற ந்த குழந்தே கிரணுக்காக, இந்த பெரிய பொறுப்பை நீ எனக்காக கொஞ்சம் பண்ணுவயா ரமா” என்று மறுபடியும் ரமாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கேட்டான் சுரேஷ்.

ரமாவின் கை மேல் சுரேஷ் கண்ணில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் விழுந்தது.

தன் கை மேல் சுரேஷ் கண்ணில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் விழுந்ததையும்,சுரேஷ் சொன்னதையும் கேட்டு திடுக்கிட்டுப் போனாள் ரமா.அவளுக்கு கொஞ்ச நேரம் என்ன சொல்லுவதே என்று புரியவில்லை.

பிறகு ¨தா¢யத்தை வரவழைத்துக் கொண்டு “என்ன நீங்கோ இப்படி ஒரு குண்டை தூக்கிப் போடறேள்.நான் உங்களையும்,குழந்தையையும் பிரிஞ்சி,இவ்வளவு கஷ்டப் பட்டு IAS பாஸ் பண்ணி இந்த உத்தியோகத்தே, இந்த வாழ்க்கையே அடைஞ்சு இருப்பது எனக்காக மட்டும் இல்லையே. நாம எல்லோரும் மறுபடியும் ஓன்னு சேந்து சந்தோஷமாக இருக்கறதுக்குத் தானே.அம்மா,அப்பா, நீங்கோ, கிரண்,நான் எல்லாம் ஒன்னா சந்தோஷமா இருந்துண்டு வரணுன்னு தானே நான்ஆசைப்பட்டேன்” என்று சொல்லி விட்டு அழ ஆரம்பித்தாள்.

ரமா தன் கண்களைத் துடைத்துக் கொண்டு “ஆனா என் துரதிர்ஷ்டம் அப்பா,அம்மா ரெண்டு பேரும் நம்மே விட்டுப் போய் விட்டு இருக்கா.இப்ப என்னடான்னா நீங்களும் என்னே விட்டுட்டு, ’இஸ்கான்’லே ஒரு முழு நேரம் ‘ஷோஷியல் சர்விஸ்’ பண்ணிண்டு வரப் போறேன்னு சொல்றேள். உங்க வாய்லே இருந்து இந்தப் பேச்சேக் கேக்கவா,நான் இத்தனை வருஷமா கஷ்டப் பட்டுண்டு வந்தேன்.வேணாம்ன்னா.தயவு செஞ்சி உங்க முடிவே எனக்காக கொஞ்சம் மாத்திண்டு,என்னோடவு ம்,குழந்தையோடவும் கொஞ்ச வருஷத்துகாவது, இருந்துண்டு வாங்கோ.நான் உங்க கால் ரெண்டை யும் பிடிச்சி கெஞ்சிக் கேட்டுக்கறேன்.உங்க முடிவே எனக்காக கொஞ்சம் மாத்திக்கோங்கோ” என்று கெஞ்சி விட்டு,அழுதுக் கொண்டே அவன் காலை பிடிக்கப் போனாள் ரோஜா..

சுரேஷ் தன் கால்களை கொஞ்சம் பின்னுக்கு இழுத்துக் கொண்டான்.

கொஞ்ச நேரம் இருவரும் மௌனமாக இருந்தார்கள்.

பிறகு சுரேஷ் அவளை மெல்ல ரமாவை எழுப்பி “நான் எடுத்து இருக்கும் இந்த முடிவு நம்ம ரெண்டு பேருக்கும் நல்லதா அமையும்ன்னு தான் நினைக்கிறேன் ரமா.கிரண் மட்டும் என் வாழ்க் கைலே வராம இருந்து இருந்தா,நான் எப்போவோ ஒரு சன்யாசி ஆயிட்டு இருப்பேன்.இப்போ உன் ‘ஸ்டேடஸ்க்கு’ நான் எவ்விதத்திலும் பொருத்தமானவனா இருக்கவே முடியாது.இனிமே உன் உலகம் வேறே.என் உலகம் வேறே ரமா” என்று தன் கண்களை மூடிக் கொண்டு ஒரு சன்யாசியைப் போல் பேசினான்.

சுரேஷ் பேசினதைக் கேட்ட ரமாவுக்கு உலகமே இருட்டிக் கொண்டு வந்தது போல இருந்தது.

அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது.

ரமா அழுதுக் கொண்டே”நீங்கோ இப்படி சொன்னா,நான் என்ன பண்ண முடியும் சொல்லுங் கோ.நானும் திங்கக் கிழமைக் காத்தாலே என் ‘ஆபீஸ்’க்குப் போய் என் வேலேயே ‘ரிஸைன்’ பண்ணி ட்டு,உங்க கூடவே ‘இஸ்கான்’லே இருந்துண்டு வறப்போறேன்.அப்படி பண்ணாலாவது கொஞ்ச வரு ஷத்துக்காவது எனக்கு உங்க கூட இருக்கற பாக்கியம் கிடைக்கும்”என்று சொல்லி விட்டு மறுபடியும் அழுதுக் கொண்டு இருந்தாள்.

“ரமா,உன் துக்கமும் அழுகையும் எனக்கு நன்னா புரியறது.நீ அப்படி எல்லாம் பண்ணவே கூடாது.நாம ரெண்டு பேரும் கிரணுக்காக வாழ்ந்துண்டு வரணும்.கிரண் நமக்கு பொறந்த குழந்தே. இத்தனை வருஷமா நான் கிரணை வளத்து வந்தேன்.இனிமே நீ கிரணை நன்னா படிக்க வச்சி, அவ னை முன்னுக்குக் கொண்டு வந்து உன்னேப் போல ஒரு பெரிய வேலே பண்ணீண்டு வரப் பண்ண ணும்.இது உன் கடமையும் கூட.உனக்கு அந்தப் பொறுப்பு இருக்கு ரமா” என்று சொல்லி விட்டு ரமா வைப் பார்த்து “ரமா,நீ அழவே கூடாது.வாழ்க்கையிலே எப்பவும் சந்தோஷமா இருந்துண்டு வரணும். நீ இனிமே நம்ம குழந்தே கிரணை உன் கூட வச்சுண்டு சந்தோஷமா வாழ்ந்துண்டு வரணும்” என்று சொல்லி விட்டு சுவாதீனமாக ரமாவின் கண்களைத் துடைத்து விட்டான்.

ரமா ‘தன் ஆத்துக்காரர் தன் கண்களைத் துடைத்து விட்டதை நினைத்து மிகவும்சந்தோஷப் பட்டாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் கிரணை பார்த்து “கிரண்,இனிமே ரமாவை நீ ‘ஆன்டி’ன்னு கூப்பிடக் கூடாது.ரமா தான் உன் அம்மா.உன்னை பெத்த அம்மா.நீ ரமாவோடு போய்,ரமா மாதிரி நன்னா படி ச்சு முன்னுக்கு வரணும்”என்று சொன்னான்.

சுரேஷ் சொன்னதைக் கேட்டுக் கொண்டு இருந்த கிரண் “இந்த ஆண்டி என் அம்மாவா. நீங்க தான் என் அம்மாவா.ஏம்மா நீங்க எங்களே எல்லாம் விட்டுட்டு,இத்தனை வருஷமா எங்கோ போயி ட்டேள்.என்னையும்,அப்பாவையும் உங்களுக்குப் பிடிக்கலையா” என்று ரமாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கேட்டான் கிரண்.

உடனே ரமா ”நான் இனிமே எங்கேயும் போக மாட்டேன்டா கண்ணா.உன்னோடும் அப்பாவோ டவும் தான் இருப்பேன்.இது சத்தியம் கிரண்.சத்தியம் கிரண்”என்று சொல்லி கிரணைத் தூக்கி முத் தம் கொடுத்தாள்.

இருவர் கண்களிலும் கண்ணீர் வந்துக் கொண்டு இருந்தது.

இதைப் பார்த்த சுரேஷ் மிகவும் சந்தோஷப் பட்டான்.

“ரமா,நான் ‘இஸ்கான்’லே’ தான் முழு நேர ‘சன்யாசி’யா இருப்பேன்.உனக்கோ கிரணுக்கோ என் னேப் பார்க்கணும்ன்னு தோணித்துன்னா,என்னே இங்கே வந்து தாராளமா பாக்கலாம்.நான் எப்பவும் இங்கேயே தான் இருப்பேன்.நான் போய் வறேன் ரமா,கிரண்.எனக்கு ரொம்ப நேரம் ஆயிடுத்து.கிரண் நீ இனிமே அம்மாவோட இருந்துண்டு,நன்னா படிச்சு,அம்மாவேப் போல ஒரு IAS ஆயி,நல்ல வேலே லே சேந்து,கை நிறைய சம்பாதிச்சுண்டு வறணும்”என்று சொல்லி விட்டு விறு விறுவென்று புறப்ப ட்டுப் போகும் போது வழக்கமாக ஏழு மணிக்கு ஒரு கிழவர் தன் காரில் கீழே இறங்கி தன் ‘வாக்கரை’ வைத்துக் கொண்டு நடந்து வருவதைப் பார்த்த சுரேஷ் வேகமாக அவர் கிட்டே போய் அவர் கைகளை ப் பிடித்துக் கொண்டு ‘இஸ்கானு’க்கு அழைத்துப் போனான்.

இதை ரமாவும் கிரணும் கவனித்துக் கொண்டு இருந்தார்கள்.

சுரேஷின் உருவமும்,அந்த பெரியவா¢ன் உருவமும் கொஞ்ச நேரம் வெளிச்சத்தில் தொ¢ந்தது. முதலில் பெரியவா¢ன் உருவம் இருளில் மறைந்தது.அரை நிமிஷத்துக்கு எல்லாம் சுரேஷின் உருவமும் இருளில் மறைந்து விட்டது.

இடிந்து போய் விட்டாள் ரமா.

’இது தானா அவர் ஆசை படும் ‘இஸ்கான்’ சன்னியாசி வாழ்க்கை.இதை அவர் சந்தோஷமாக செஞ்சு வறாரே.நாம தான் அவருக்கு வாழ்க்கையிலே எந்த சந்தோஷத்தேயும் தறலே.பகவானே இந்த ’இஸ்கான்’ சன்னியாசி வாழ்க்கையாவது அவருக்கு கடைசி வரைக்கும் நல்ல சந்தோஷத்தே குடுத்து ண்டு வரட்டும்.அதுக்கு நீ எனக்கு அனுகிரஹம் பண்ணு” என்று தன் கண்களை மூடிக் கொண்டு கட வுளை வேண்டிக் கொண்டாள் ரமா.பிறகு கிரணை கையிலே பிடித்துக் கொண்டு ரமா சிலையாய் நின் றுக் கொண்டு இருந்தாள்.

எதிரே உட்கார்ந்துக் கொண்டு இருந்த் ஒரு கிழவர் ‘ட்ரான்ஸ்ஸிஸ்டரில்’ இருந்து 1972 வருஷ த்லே வெளி வந்த ‘ஷோர்’ என்னும் படத்தில் இருந்து லதா மங்கேஷ்கரும், முகே.ஷூம் பாடின பாட்டு ஒலித்துக் கொண்டு இருந்தது.

“குச்.. பாகர்..கோனா…ஹை, குச்…. கோகர்…பானா..ஹை….

ஜீவன்னுக்கா…மத்தல்ப்பு.. தோ. ஆனார்.. அவௌர் ..ஜா..நா….ஹை”

இந்த நான்கு வா¢களின் அர்த்தம்:

“ஒன்னே பெற்றால்.. ஒன்னே இழக்கணும்.‘ஒன்னே.. இழந்தா..ஒன்னே… பெறலாம்.

வாழ்க்கையின் அர்த்தமே இது தானே… வருவதும்… போவதும்…. தானே”.

இந்த பாட்டு வா¢கள் பாடிக் கொண்டு இருக்கும் போது,அந்த கிழவா¢ன் ‘ட்ரான்ஸ்சிஸ்டர்’ கீழே விழுத்து பாட்டு நின்று வட்டது.பாடாத அந்த ‘ட்ரான்ஸ்ஸிஸ்டரை’ அவர் எடுத்து தட்டி தட்டிப் பார்த்தார்.

அந்த ‘ட்ரான்ஸிஸ்ட்டர்’ அப்புறம் பாடவே இல்லை.அந்த ‘ட்ரான்ஸ்சிஸ்டர்’ பழுது அடைந்து விட்டது.அந்தக் கிழவர் பாடாத அந்த ‘ட்ரான்ஸிஸ்டரை’ தன் கையிலே எடுத்துக் கொண்டு, பூங்கா வை விட்டு கிளம்பிப் போய் விட்டார்.

அந்த ஹிந்திப் பாட்டைக் கேட்ட ரமா இந்த உலக நினைவுக்கு வந்தாள்

‘இந்த பாட்டு எனக்காகவே பாடினதா’.என் வாழ்க்கைக்கும் இந்த பாட்டுக்கும் எவ்வளவு பொ ருத்தம்’.நான் என் வாழ்கையில் எதைப் பெற்றேன்.எதை இழந்தேன்.‘பகவானே,வாழ்க்கைலே ஒன் னை இழந்தாத் தான்,மத்தொன்னு கிடைக்குமா?.

‘பகவானே இது தான் நீ விதித்த வழி முறையா’.

இதை தான் உன் படைப்பின் ஒவ்வொறு ஜீவ ராசியும் அனுபவிக்க வேண்டுமா?

இந்த விதிக்கு நான் விலக்கு இல்லையே.

நானும் உன் படைப்பின் ஒரு ஜீவ ராசி தானே.

‘நான் ரொம்ப ஆசைப் பட்ட ஒரு கலெக்டர் ஆனேன்.ஆனா இன்னிக்கு என் ஆத்துக்காரர் என் னை விட்டு விலகிப் போயிட்டார்.எனக்கு கிரண் இருக்கான்.ஆனா என் ஆத்துக்காரர் இல்லை’. என்று மனதில் எண்ணமிட்டவாறே, கிரணை அழைத்துக் கொண்டு,தன் ஆத்துக்காரர் தனக்கு இட்ட கட்டளையை நிறை வேற்ற தன் காரில் ஏறி பங்களாவுக்குப் போய் கொண்டு இருந்தாள் ரமா.

அதேக் குடும்பத்திலே ‘மெஸ்’ வேண்டும்,’மெஸ்’ வேண்டும் பிடிவாதம் பிடிச்சா ரகுராமனுக்கு ‘மெஸ்’ கிடைத்தது, ஆனால் அவன் அப்பாவை இழந்தான்.

‘பீட்டர் வேண்டும்’,‘பீட்டர் வேண்டும்’ என்று பிடிவாதம் பிடிச்சு வந்த சுதாவுக்கு பீட்டர் கிடைத்தான்,ஆனால் அவள் குடும்பத்தை இழந்தாள்.

தெரியாமலா பெரியவங்க “கூழுக்கும் ஆசை …மீசைக்கும் ஆசை” என்கிற பழ மொழியை எழுதி வைத்தார்கள்.பெரியங்க வாழ்ந்து அனுபவிச்சவங்க. அவங்க “”பழமொழி தப்பே”” ஆகாது!!!.

– முற்றும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *