கதையாசிரியர் தொகுப்பு: வரலொட்டி ரெங்கசாமி

12 கதைகள் கிடைத்துள்ளன.

இதயத்தில் நுழைந்த வைரஸ்!

 

 “”மிஸ்டர் செந்தில்?” “”நான் தான் பேசறேன்.” “” நான் சங்கரி பேசறேன்.” “”சொல்லுங்க மேடம்.” “”என் கம்ப்யூட்டர்ல திடீர் திடீர்ன்னு பைல் காணாமப் போகுது. பாதி வேல பாத்துக்கிட்டிருக்கும் போதே ஆப் ஆயிருது. திடீர் திடீர்ன்னு ஏதோ படம் முன்னால வருது. எனக்கு பயமா இருக்கு செந்தில்.” “”உங்க கம்ப்யூட்டர்ல வைரஸ் வந்திருக்கு மேடம்.” “”ஐயையோ வைரசா? கம்ப்யூட்டரத் தூக்கி போட்டுட்டு புதுசு வாங்கிரட்டுமா?” “”என்ன மேடம்… வைரசுக்கு பயந்து, கம்ப்யூட்டரத் தூக்கிப் போடுவாங்களா? நம்ம உடம்புலயும்


தோழியா, காதலியா?

 

 “”எனக்கு இன்னிக்கு, ராசிபலன்ல அதிர்ச்சின்னு போட்டிருந்தான். ஆனா, அது, இந்த மாதிரி, ஒரு இன்ப அதிர்ச்சியா இருக்கும்ன்னு, நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கல… வா தீபிகா… வெல்கம். இன்னும் பத்து நாள்ல, நான் தாலி கட்டப் போற தேவதை, சொல்லாமக் கொள்ளாம முன்னால வந்து நிற்கும் போது, கையும் ஓடல, காலும் ஓடல… வெல்கம்.” “”சாரி அசோக்… இப்படி திடீர்ன்னு வந்ததுக்கு. வர்றதுக்கு முன்னால, உங்களுக்கு ஒரு போன் செய்திருக்கணும். நீங்க எங்கேயோ வெளிய கிளம்பிட்டு இருக்கீங்க போலிருக்கே?”


பாலியல் தொழிலாளி!

 

 “எப்படி இந்த விஷயத்தைக் கணவனிடம் சொல்லப் போகிறோம்…’ என்று, திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள், சப்-இன்ஸ்பெக்டர் மாலதி. காவல் துறையில், இடமாற்ற உத்தரவு வாங்குவது, அவ்வளவு சுலபம் இல்லை; அதற்கு, பல லட்ச ரூபாய் செலவாகும் என்று அவளுக்கு தெரியும். மதுரையில், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பணிபுரியும் அவள் கணவன், கை நிறைய சம்பளமும், பை நிறைய, “கிம்பளமும்’ வாங்குபவன். எத்தனை லட்ச ரூபாய் ஆனாலும், தானே கொடுத்து விடுவதாகச் சொல்லி இருந்தான். திருமணமாகி, ஓர் ஆண்டு தனி தனியாக


ஒரு விபத்து – ஒரு விசாரணை

 

 அந்த டெம்போ டிராவலர் வேனில் இருந்த எல்லாரும் பதட்டமாக இருந்தனர். டிரைவரின் கைகள் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தன. டிரைவருக்குப் பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த வாசுவின் முகம் வியர்த்திருந்தது. யாரும் எதுவும் பேசவில்லை. பின்னால் உட்கார்ந்திருந்த வாசுவின் மனைவி, மவுனத்தைக் கலைத்தாள். “”ஏங்க… அந்த பையனோட அம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க.” வாசு திரும்பிப் பார்த்தான். “”இனிமேல் பதட்டப்பட்டு என்ன ஆகப் போகிறது? எதெல்லாம் ஆகக்கூடாதோ அதெல்லாம் ஆகிவிட்டது. “”சரி விடு. ஆஸ்பத்திரிக்குத் தானே போறோம். அவர்களையும் கவனிக்கச்


தாயில்லாமல் நானில்லை

 

 “”டேய் நம்ம ஜெயிச்சிட்டோம்டா… மினிஸ்டர் பொண்ணு கல்யாணத்துக்கு பூ அலங்காரம் முழுசும் நமக்குதான். மூணு லட்ச ரூபாய் கான்ட்ராக்ட்… கல்யாணத் தேதிய இப்பத்தான் சொன்னாங்க…” “”கையக் கொடுரா… இதுக்கெல்லாம் காரணம் நீதாண்டா,” எட்வர்டின் கைகளைப் பற்றி முரட்டுத்தனமாக குலுக்கினான் ஜான். “”கல்யாணம் என்னிக்கு?” “”பிப்ரவரி 15.” “”பிப்ரவரி 15ஆ?” “”ஏன்… அதுல என்ன பிரச்னை?” “”அன்னிக்கு அம்மா பர்த்டேடா… மறந்து போய்ட்டியா?” “”அடக் கடவுளே!” தலையில் கை வைத்துக் கொண்டான் எட்வர்ட். ஜானும், எட்வர்டும் இரட்டையர்கள். பெங்களூருவின்