Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதையாசிரியர் தொகுப்பு: சு.சமுத்திரம்

51 கதைகள் கிடைத்துள்ளன.

நான்காவது குற்றச்சாட்டு

 

 பர்வின், மாணிக்கத்திடம் சிறிது கடிந்துதான் பேசப்போனாள். ‘இங்கே வரப்படாதுன்னு சொன்னேனே’ என்று சொல்வதற்காக குவிந்த உதடுகள், செவ்வரளி பூ மொட்டாய் தோன்றின. ஆனாலும் அவரை, – முகம் தொலைத்த மனிதராய், கண்களை மட்டுமே கொண்டவராய் பார்த்ததில், அந்த மொட்டுப் பூ மலர்ந்தது. அவரிடம், வீட்டில் அல்லாவின் பேரில் சொன்ன ஆறுதலை, இப்போது, தான் வைத்திருக்கும் கோப்பின் ஆணையாக ஆறுதலாக்கினாள். ‘கவலப்படாதீங்க… எல்லாம் நல்லபடியாவே முடியும்… அதுவும் இன்றைக்கே முடிந்துவிடும்’. மாணிக்கத்தின் பார்வை, அவள் வழியாய் தாவி அந்தக்


வெள்ளித் திரையும் ⁠வீதித் திரையும்

 

 அந்த ரயில் வண்டியின் குளிர்சாதனப் பெட்டியின் வாசலில், அக்னிநாத், உடலைக் காட்டாமல், தலையை மட்டுந்தான் காட்டியிருப்பான். அதற்குள், கூட்டம் அலை அலையாய் மோதியது. ரயில் இரைச்சலை தவிடுபொடியாக்கும் மனித இரைச்சல், கோஷக் கூச்சல்கள். தூங்கி எழுந்ததும் வெளிப்படுமே மிருகச் சத்தங்கள் – அப்படிப்பட்ட பெருஞ் சத்தம். அந்த மாவட்டத் தலைநகரில் சந்து பொந்துகளையும் சாக்கடை மூடிகளையும் கூட விட்டுவைக்காமல், ஒட்டப்பட்ட கட்டப்பட்ட போஸ்டர்களில் காணப்பட்ட நாடு போற்றும் நாயகனே! நாளைய முதலமைச்சரே! இன்றைய இளவரசே! கனவின் நனவே!


வாழ்க்கைப் பாக்கி

 

 ‘என் மக்கா!… நான் இன்னும் முழுசா சாகல… டாக்டர் காந்தராசு சொல்லுறதக் நல்லா கேளுங்க’… கனகம்மா பாட்டி, இப்படிச் சொல்லத்தான் நினைத்தாள். ஆனாலும், அந்தக் கருத்து சொல்லாக வில்லை. சொல்லின் ஏவுகணையான நாக்கு எங்கே உள்ளது என்று கூட கண்டறிய முடியவில்லை. அபிநயமாய் சொல்வதற்கோ, காலோ கையோ தன்னோடு இருப்பது போன்ற உணர்வும் இல்லை. அதோடு அந்த டாக்டர் எங்கேயிருந்து சொல்லுகிறார் என்பதும் துல்லியமாகத் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால், அவளுக்கு தான் எங்கே இருக்கிறோம், எப்படி இருக்கிறோம்


அரைமணி நேர அறுவை

 

 கல்வி, விவசாயம், கோழி விஸ்தரிப்பு அதிகாரிகள் உட்பட எண்ணக்கூடிய அதிகாரிகளும், எண்ணில்லா இதர ஊழியர்களும், ஃபீல்ட் ஒர்க்கர்களும், அந்தப் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மார்ச் பண்ணிக் கொண்டிருந்தார்கள். காரணம், நடப்பு நிதியாண்டு முடியும் ‘மார்ச்’ மாதத்திற்குள், வேலை நடக்கிறதோ இல்லையோ, ஒதுக்கீடு என்ற பணத்தை எப்படியாவது செலவு செய்தாக வேண்டும். எப்படிச் செலவு செய்தாலும், ‘இப்படித்தான் செலவு செய்தோம்’ என்று காட்டியாக வேண்டும். இல்லையென்றால், கலெக்டர் அவர்களை இந்த வசதியான இடத்திலிருந்து துரத்தி, வசதியற்ற


சாமந்தி ⁠சம்பங்கி ⁠ஓணான் இலை

 

 அந்தப் பிள்ளையார் கோவிலுக்கும் – அதற்கு எதிரே இருந்த பூக்கடைகளுக்கும், காய்கறிக் கடைகளுக்கம் இடையே ஏதோ ஒரு பொருத்தம் இருக்க வேண்டும். மாலை பிறந்த நேரம், அந்த கோவிலில் அர்ச்சகர் பூக்களை வைத்துக் கொண்டு ‘ஓம் வக்ர துண்டாயா’ பன்றபோது, கீரைக்காரி மாரியம்மாள் தண்டங்கீரை தண்டு ஒன்றை ஒடித்துக் கொண்டிருந்தாள். அவர் ‘ஓம் விகடாயநம’ என்று சொல்லி, ஒரு பூவைப் போட்டபோது, பூக்காரர் ஒருவர், சும்மா ‘கும்’முன்னு ஆடினார். இன்னும் சொல்லப்போனால், அவர் ஆடவில்லை. அவர் ரத்த


ஒருவழிப் பாதை

 

 அலுவலகமே அல்லோல கல்லோலப் பட்டது. கொடியவன் என்று கொடிகட்டிப் பறந்த பழைய சேல்ஸ் மானேஜர் கழிவதாலும், புதிய சேல்ஸ் மேனேஜர் புகுவதாலும் அலுவலகத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். பழையவரைவிட எவரும், மோசமானவராக இருக்க முடியாது என்ற அனுமானமே, புதியவருக்கு, ஒரு தகுதியாக வாய்ந்தது. மானேஜிங் டைரக்டர், “திஸ் இஸ் யுவர் பிராஞ்ச். ஹி ஈஸ். ஹெட் கிளார்க் சோணாசலம்…” என்று சொல்லி விட்டு, புதியவரை அங்கே புகுத்திவிட்ட திருப்தியில் போய்விட்டார். செக்‌ஷன் ஆட்கள் அனைவருமே எழுந்து நின்றார்கள்:


காவலாளி

 

 கொள்ளை இருட்டு கொள்ளையர்களே வேட்டைக்கு வரத்தயங்கும் இருள் மயம்… அந்த கட்டிடத்திற்கு பின்னணியாக உள்ள பாறைப் பொந்துகளும், அவைகளின் பின்புலமான மலைக் குவியல்களும், மரம், செடி, கொடிகளும், மங்கிப் போகாமலே மறைந்து போய் விட்டன. சாலையில் ஒளி உருளைகளாய் செல்லும் வாகனங்களைக்கூட காண முடியவில்லை. ஒப்புக்குக்கூட ஒரு மின்மினிப் பூச்சி இல்லை… கதிர்வேலுக்கு லேசாய் பயம் பிடித்தது. உடலை சல்லடை செய்வதுபோல் அரித்தத கொசுக்களைக்கூட ‘ஆள் துணையாக,’ அவன் விட்டு வைத்தான். அவை அவன் காதுகளில் ஏறி


இந்நாட்டு மன்னர்கள்

 

 திரிசூலம்போல், மூன்று சாலைகள் சந்திக்கும் கூட்டுரோடு. கிழக்கு-மேற்காகச் சென்ற தேசிய சாலையில் இருந்து கிளைவிட்டு, தெற்கு நோக்கிச் செல்லும் சாலை பிரிவதால் ஏற்பட்ட அரைக்கோணம் போன்ற பகுதியில் நான்கைந்து டீக்கடைகள், ஒவ்வொரு கடையிலும், உரிமையாளருக்கு இஷ்டப்பட்ட அரசியல் கட்சியின் தேர்தல் சின்னம், சின்னா பின்னமாக காட்சியளித்தன. வாசல்களுக்கு இருபுறமும் தேர்தல் தட்டிகள். சுவர்களில் போஸ்டர்கள். கடைகளுக்குள்ளே, கூரைப்பகுதியில் கட்சிக் கொடிகளின் தோரணங்கள். அந்த கூட்டு ரோட்டின் கிழக்குப் பகுதியிலும், வடக்குப் பகுதியிலும் இரண்டு சின்னஞ்சிறு கிராமங்கள். அவற்றை


உப்பைச் தின்னாதவன்

 

 அந்த அலுவலகம், ‘கோரப்பட்ட’ நேரம் – அதாவது காலை பதினோரு மணி ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினர், வேலையைத் துவக்கவில்லையானாலும், வேலைக்காக கூடிவிட்ட வேளை… இவர்களுக்காக, ‘காபி’ வாங்கிக் கொண்டு திரும்பிய வேதமுத்து, அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தவுடனேயே, என்னமோ – ஏதோவென்று எக்கி எக்கி ஓடினான். யூனிபார பழுப்பு சட்டைக்கு மேல், பூணுல் போட்டது மாதிரியான வெள்ளை பிளாஸ்டிக் பட்டையின் அடிவாரத்தில் தொங்கிய ‘இரண்டு லிட்டர்’ பிளாஸ்க். கிட்டத்தட்ட அறுந்து விழப்போனபோது, அவன் வாசற்படிக்கு வந்துவிட்டான். அங்கே


பால் பயணம்

 

 அந்த நகரத்தின் பிரதான வீதியில் கலக்கும் குறுக்குச் சந்து மூலையில், காய்கறிகளைப் பேரம் பேசியபடியே தராசில் அள்ளிப் போட்டவளை, சம்பந்தம் சற்றுத் தொலைவில் நின்றபடி நோட்டம் போட்டார். அவர் போட்ட கணக்கில் ‘தேறுகிறவள்’ போல் தெரிந்தாள்; ஆகையால் – சம்பந்தமும் அந்தக் கடைக்குப் போனார். “உருளைக் கிழங்கு கிலோ என்னப்பா…? அவங்களுக்குக் கொடுக்கிற மாதிரியே எனக்கும் கிழங்கு இருக்கணும். அவங்க கொடுக்கிற காசுதான் நானும் கொடுப்பேன்…” காய்கறிக்காரர் மட்டும் அவளைப் பார்க்கவில்லை. அவளும் பார்த்தாள். சிறிது அழுத்தமாகவே