கதைத்தொகுப்பு: நகைச்சுவை

471 கதைகள் கிடைத்துள்ளன.

பந்தியும் ப·ப்வேயும்

 

 இப்போதெலலாம் கல்யாண வீடுகளுக்குப் போனால் முன் மாதிரி ‘பந்திக்கு முந்திக்கோ’ என்று அநாகரிகமாக விழுந்தடித்தவாறு ஒருத்தர்மேல ஒருத்தர் இடித்துக் கொண்டு, மியூஸிகல் சேரில் இடம் பிடிப்பதுபோல் டைனிங் ஹாலில் காலி நாற்காலியை நோக்கிப் பாயவேண்டிய அவசியமே இல்லை. முதலில் சாப்பிட்ட எச்சில் இலைகளை எடுக்குமுன் நாற்காலியில் உட்காந்து கொண்டு எச்சசொச்சங்களை அருவருப்புடன் பார்க்கும் அபாக்கியங்கள் இல்லை. பிரபல சமையல் காண்ட்ராக்ட் விற்பன்னர்களெல்லாம் இப்போது ப·ப்வே முறைக்குத் தாவிவிட்டார்கள். இது ரொம்ப ஆறுதலான விஷயம்தானென்றாலும் எல்லா ப·ப்வே விருந்துகளிலும்


அப்புசாமியின் ‘வால்’ நாளில்…

 

 அனைத்து சென்னை வாசிகளின் காதுகளிலும் அந்த இரவு நேரத்தில் கொசுக்களின் ரீங்காரம் ‘நொய்ய்ய்ங்’ துன்பமாகச் சத்தமிட்டுக் கொண்டிருக்க அப்புசாமியின் காதில் மட்டும் வேறொரு வகை சத்தம் இன்பமாக ரீங்கரித்துக் கொண்டிருந்தது. ‘காலை எட்டு மணிக்கு நாம் ஓர் இடத்துக்குப் போகிறோம். ‘அன்டில் ஈவினிங்’ அங்கேயே நாம் இருந்துவிட்டுத் திரும்புகிறோம். நாளைக்கு என் பிறந்த நாளில்லையா? முதல்வர்-கவர்னர் உறவு முறையிலிருந்து மனைவி சீதேயும் அவரை மதித்து அவருக்கு ஒரு ‘நாம்’ அந்தஸ்து முதல் முதலாகக் கொடுத்துப் பேசியிருக்கிறாள். அப்புசாமி


அப்புசாமியின் தாலி பாக்யம்

 

 அப்புசாமிக்குக் கை துறுதுறுத்தது – அரசியல் கட்சிக்காரர்களுக்கு ஏதாவது மறியல், பொறியல் செய்ய அவ்வப்போது துடிக்குமே அதுபோல. ஆனால் துடிப்பைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. காரணம் அவர் துடைக்க நினைத்து ஓர் இளம் அழகிய பெண்மணியின் கண்ணீரை அதுவும் சீதாப்பாட்டியின் எதிரில் நடக்கிற காரியமா? (அப்புசாமியின் கணக்குப்படி ‘இளம்’ என்பது நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து அகவைக்குட்பட்ட பருவத்தினர்,) வந்த பெண்மணியின் பெயர் மிஸ் துளசி. நிறமும் நல்ல சி(வப்பு). கட்டவுட்டான சரீரம். பெட்டியிலே வந்து இறங்கிய பெரிய சைஸ்


அதிரடிக் குரலோன் அப்புசாமி

 

 ஆறாத சுடச்சுட பொங்கலை ஆற அமர அமர்ந்து அப்புசாமி ஒரு வாய் எடுத்துச் சுவைத்திருப்பார். “ஸைலேன்ஸ்!” என்ற மாபெரும் கத்தல் அவரைத் தூக்கிவாரிப்போட வைத்தது. அவரை என்பதைவிட அவர் கையிலிருந்த பொங்கலை. அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் பொங்கல் பொட்டலம் துள்ளி மண்ணில் விழுந்து புரண்டது. ஐயோன்னா வருமா, அப்பான்னா வருமா? சுண்டலாக இருந்தாலும் பொறுக்கி எடுத்துத் துடைத்துக் கிடைத்து, குழாய்த் நீரில் அலம்பிக் கிலம்பி, உலகத் தமிழ் மாநாட்டுத் தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் போல் தட்டுத் தடுமாறித்


தேள் அழகர் அப்புசாமி

 

 கீழ் வானில் பெளர்ணமி சந்திரன் சோளா பட்டூரா மாதிரிப் பெரிசாகக் காட்சி தந்தது. நட்சத்திரங்களே சென்னா, நீலவானமே அவைகளை ஏந்தும் பிளேட். அழுக்கு மேகமே லாலா கடை சப்ளையர், ஆனால் அப்புசாமி காளிதாச மனோநிலையில் இல்லாததால் சந்திரனை ரசிக்காமல் மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கி பாத்ரூம் போய் வந்தார். பாத்ரூம் போனாரே தவிர பாத்ரூம் போகவில்லை. அதாவது ஒன்று(ம்) செய்யவில்லை, ஒருகால் போனோமோ என்று குழம்பினார். அங்கே விளக்கை அணைக்காமல் வந்து விட்டோமோ? சீதேக் கிழவி எழுந்து


மாண்புமிகு அப்புசாமி ஒன்லி

 

 அப்புசாமிக்கு உற்சாகம் ‘பொங்கலோ பொங்கல்’ என்று பொங்கியது. ‘இன்பத் தேன் வந்து பாயுது கண்ணினிலே’ என்று பாட வேண்டும் போலிருந்தது. ஹோட்டலில் நெய் தோசை என்ற பெயரில் கொண்டுவந்து தரப்படும் மாபெரும் வறண்ட மாவுப் பரப்பில் அசல் நெய் வாசனையே அடித்தால் என்ன ஆனந்தம் ஏற்படுமோ, அதைப் போல நூறு மடங்கு குதூகலம் ஏற்பட்டது. கையிலிருந்த முகவரியை இடைவிடாது படித்தார். ஒருநாள் விட்டு ஒருநாள் நீர் வருகிற மாதிரி, இடைவெளி விட்டு இடைவெளி விட்டு சொட்டுச் சொட்டாகப்


சதி பதி நிதி

 

 இரண்டு நாளாக சீதாப்பாட்டி கழகத்துக்குப் போகவில்லை. காலை வாக்கிங் கிடையாது. ஈ-மெயில்களை ஓபன் பண்ணவில்லை. சினேகிதக் கிழவிகள்கூட யாரும் வரவில்லை. பகலிலேயே மேஜை விளக்கைப் போட்டுக்கொண்டு ஒய்யாரமாகப் படுத்தபடி அவளுக்குப் பிரியமான  ரீடர்ஸ் டைஜஸ்ட்டைப் படிப்பாளே, ஊஹ¥ம்… தபாலில் வந்த உறை பிரிக்கப்படாமல் டீபாய் மீது கிடந்தது. சமையல் என்ற பெயரில் எதையாவது அலட்சியமாகச் செய்து வைப்பாளே, அதுவும் இல்லை. பா.மு.க. நடத்தும் ‘எமர்ஜென்ஸி மீல்ஸ்’ பிரிவிலிருந்து காரியர் சாப்பாட்டை யாரோ கொண்டு வந்தார்கள். டெங்கு காய்ச்சல்


காலட்சேப பவன்

 

 ஆவியில் மூன்று வகை – கெட்ட  ஆவி, நல்ல ஆவி, கொட்டாவி. மூன்றாவது வகை ஆவி அப்புசாமியிடமிருந்து அடுத்தடுத்துப் பிரிந்துகொண்டிருந்தது. வளசரவாக்கத்தில் உற்சாகமான சில இளைஞர்களும், அவர்களைவிட அதிக உற்சாகமுள்ள சில வயசானவர்களும் சேர்ந்து ‘காலட்சேப பவன்’ என்னும் நவீன சபா ஒன்றை உருவாக்கியிருந்தார்கள். அதனுடைய முதலாவது ஆண்டு விழா பற்றிய விவரம் தினசரிப் பத்திரிகை ஒன்றில் ஓசி காலத்தில் கால் அங்குல இடத்தில் இரண்டு வரி பிரசுரமாகியிருந்தது. சபாக்காரர்களுக்கு எதிலும் புதிய கண்ணோட்டம். ஆகவே விளம்பரத்தைக்


ஜெய் கார்கில்!

 

 இரவு ஒண்ணரை மணிக்கு அப்புசாமியின் படுக்கை காலியாயிருந்தது. அவரது அறையிலிருந்த கொசுக்கள் பின்வருமாறு பேசிக் கொண்டன: எருமைக் கொசு: எங்கே தொலைஞ்சான் ஆசாமி? நான் சரியாவே இன்னும் கடிக்கலை? செரியான சாவு கிராக்கி. குஞ்சுக் கொசு: திட்டாதீங்க பெரீயப்பா. நாங்களெல்லாம் வாய்க்குள்ளே புகுந்து வெளையாடினாக்கூட ஒண்ணும் செய்யமாட்டார். பொளந்த வாய் பொளந்தபடி தூங்குவார். செடிக் கொசு: கொசு மருந்து, கொசு மேட் அது இதுன்னு வெச்சுகிட்டு அவரோட சம்சாரம் நம்மை விரட்டறா. ஆனால் இந்த ஆசாமியின் ரூமுலே


அப்புசாமியும் அழகிப் போட்டியும்

 

 அப்புசாமிக்கு அவசரமாக மூன்று கூடை அழுகல் தக்காளியும், இரண்டு கூடை அழுகல் முட்டையும், ஒரு கூடை காது அறுந்த செருப்புகளும் தேவைப்பட்டன. மாம்பலத்தின் கசகச காய் மார்க்கெட்டில் தக்காளி செல்வரங்கத்தின் ஹோல்ஸேல் தக்காளி மண்டியில் பேரம் செய்து கொண்டிருந்தார். “நல்லா அழுகியிருக்கணும் கூடைக்கு அஞ்சு, பத்து அதிகம் கேளு, குடுத்துடறேன். ஆனால் தக்காளி சும்மா கப்பெடுக்கணும். ஆமாம், “என்றார். “எதுக்கு சாமி அவ்வளவு அழுகின தக்காளி? ஓட்டல் எதுனா வெச்சிருக்கியா?” என்று செல்வரங்கம் விசாரித்தான். “அதையெல்லாம் கேட்காதே.