நிலைமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 30, 2020
பார்வையிட்டோர்: 8,711 
 

(சங்க இலக்கிய பாடலில் சிறுகதை)

கொராணா வைரஸ் சமீக காலத்தில் அதிகம் பரவி வருகிறது. அதனால் அதிக மக்கள் உயிரிழந்தனர். ஆகையால் அரசு உள்ளிருப்பு சட்டம் கொண்டு வந்தது. இதனால் மக்கள் அனைவரும் வெளியே வராமல் வீட்டிற்குள் அடைந்து கிடந்தனர்.

கல்லூரி விடுமுறை ஏப்ரல் 15 வரை உள்ளது. விடுதி மாணவர்கள் அனைவரும் அவர்களின் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

அபிஷேக்யும் தன் சொந்த ஊரான மதுரைக்கு சென்று விட்டான்.

அவன் ஊரிலும் அனைவரும் வீட்டிற்குள் இருந்தனர்.

என்ன தான் போன், டிவி, என அனைத்தும் இருந்தாலும், ஆண்களால் வீட்டிற்குள் அடைந்து இருக்க முடியாது. ஏதாவது ஒரு இடத்தில் யாது நண்பர்கள் கூட்டம், போலிஸ்க்கு தெரியாமல் மறைவாக தான் மீட்டிங்க் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

பைக்கில் வெளியே சென்று, ஆள் இல்லா ரோட்டில் செல்ஃபி எடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

குருப்பில் ஹாய்ன்னு மெஜேஜ் போட்டால்,

“அடேய் நீ இன்னும் உயிரோடவ இருக்கன்னு” கேட்டு கலாயிப்பதும், மீம்ஸ் போடுவதும், அப்ப அப்ப தவறான செய்திகளால் வதந்தியை கலப்பதும், இது ஒரு புறம் சந்தோஷமாக இருக்க,

லீவு விட்டால், ஜாலின்னு ஸ்டேட்டஸ் வச்சது போய், இப்போ ஆள் ஆளுக்கு மிஸ் யூ, லவ் யூ ன்னு நண்பர்கள், காதலர்கள் பார்க்க முடியாத வருத்தம் ஒரு புறமாக இருக்கிறது.

இப்படியே நாள்கள் சென்று கொண்டு இருக்கிறது.

அபிஷேக் தன் நண்பன், விஷ்ணுவைப் பார்க்க சென்றான்.

அபிஷேக் “ஹாய் டா மச்சா! என்று கை கொடுக்க செல்கிறான்.

“அய்யோ கொராணா டா பரவிரும், வேண்டா டா மச்சி” என்று சிரித்துக் கொண்டே விஷ்ணு கிண்டல் அடிக்கிறான்.

“டேய் ஏண்டா முடியல டா” என்று சிரிக்கமால் வருத்ததுடன் கூறிகிறான்.

விஷ்ணு, “டேய் ஏண்டா என்ன ஆச்சு உன் ஆளு உன் கூட பேசலையா? முஞ்சிய தொங்க போட்டு வச்சு இருக்க? என்று கேட்கிறான்.

அபிஷேக், “ஏன்டா நீ வேற. அவங்க வீட்டுல சும்மாவே அத்த, மாமா, சித்தி ன்னு நெரையா பேரு இருப்பாங்க, இப்போ இந்த கொராணா நால எல்லாரும் வீட்டுக்குள்ளே இருக்காங்க இதுல எங்க பேசறது, மெஜேஜ் பண்ணாலும் அவங்க வீட்டு சுட்டிப் புள்ளைங்க கேம் விளையாட எடுத்துட்டு ஓடிராங்க, நைட்டல அப்பா கூடவே இருக்காரு, இதுல எங்க பேச, போட ரொம்ப கஷ்டமா இருக்கு டா” என்று புலம்புகிறான்.

விஷ்ணு, “ஹா ஹா, இதுக்கு தா என்ன மாறி மொரட்டு சிங்கிளா இருக்கன்னும், இப்ப புலம்புற பாரு” என்று சொல்லிச் சிரிக்கிறான்.

அபிஷேக்கு கோவம் வருகிறது. உங்கிட்ட சொல்ல வந்த பாரு,

விஷ்ணு, “சரி டா, விடு, நா சும்மா தாமாஸ் பன்ன” என்று சமாதானப் படுத்துகிறான்.

அபிஷேக், அவளுக்கு பர்த் டே வருது டா, நா அவள பாக்க முடியாதுன்னு செம கடுப்புல இருக்க, அவ ஊரு கோயம்புத்தூர், நா இங்க மதுரையில இருக்க, பஸ்யும் ஓடாது, வண்டியும் போகது, எப்படி அவள பாக்கறதுன்னு ஒரே டென்சன்ல இருக்க, என்று கவலையாக சொல்கிறான்.

விஷ்ணு, “நீ அங்க போன மட்டும், ரேமோ படம் சிவகார்த்தி மாறியா, பன்ன போற, பணசெலவு மிச்சம் ன்னு நென டா”

அபிஷேக், நா பணசெலவுக்காக பாக்கல, அவ மொகத்த நேருல பாக்கணும் டா, அவ கூட ரெண்டு வார்த்த பேசணும் டா, உனக்கு என் நெலம்ம புரியாது விடு” என்று வருத்ததுடன் கூறிகிறான்.

(இங்கு தலைவனின் காதல் நோயை தன் நண்பன் கிண்டலாகப் பேசுகிறான். “சூரியன் வெயிலினால், பாறையில் உருகிக் கொண்டு இருக்கும் வெண்ணையைப் கையில்லாத ஊமை ஒருவன் தன் கண்ணினால் பாதுகாப்பது போல, இந்த காதல் நோய் அவனுக்கு ஏதும் செய்ய முடியாமல், உருகி கொண்டு இருக்கிறது.

இது அவன் நண்பன் விஷ்ணுக்கு புரியவில்லை.)

விஷ்ணு,” நா சும்மா சென்ன டா, சாரி டா என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.

அபிஷேக், “சரி நா வீட்டுக்கு போறே, அப்போறப் பாக்கலாம்” என்று சொல்லிக் கொண்டு வண்டி எடுத்துக் கொண்டு கிளம்பிகிறான்.

குறுந்தொகை 58, வெள்ளிவீதியார்,

இடிக்கும் கேளிர்! நுங்குறை ஆக

நிறுக்கல் ஆற்றினோ நன்று, மற்றில்

ஞாயிறு காயும் வெல்வறை

மருங்கில்,

கை இல் ஊமன் கண்ணின் காக்கும்

வெண்ணெய் உணங்கள் போலப்

பரந்தன்று இந்நோய், நோன்று

கொளற்கு அரிதே.

கரு: எண்ண தான் கொராணா நோயினால், மக்கள் பாதிக்கப்பட்டாலும், நமக்கு வேண்டியவர்களை நேருக்கு நேர் பார்க்க முடியாத தவிப்பு மிக கொடுமையானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *