Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைத்தொகுப்பு: கிரைம்

276 கதைகள் கிடைத்துள்ளன.

பாஸ்கோம் பள்ளத்தாக்கு மர்மம்

 

 முன்னுரை நீண்ட நாட்களாகவே எழுத்துத் துறையில் அடி எடுத்து வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். தமிழாக்கம் செய்வதுதான் என் நிலைக்குச் சரியான வேலை என்பதால் என் கன்னி முயற்சியாக ஷெர்லாக் ஹோல்ம்ஸ் சாகசங்களில் இருந்து ஆரம்பிக்கிறேன். இந்த நூலின் மூலத்தின் ஆசிரியரான சர் ஆர்தர் கானன் டாயில் பற்றித் தெரியாதவர் இருக்கலாம். ஆனால் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பற்றித் தெரியாதவர் இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது. அவரது சாகசங்கள் பற்றி இன்னும் புதுப் புதுக் கதைகள்


பிரான்செஸ் தொலைந்த மர்மம்

 

 முன்னுரை ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். ஆங்கில எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் தனது கதைகளுக்காக உருவாக்கிய கற்பனைப் பாத்திரம். அவர் ஒரு தனியார் உளவாளியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். அவரது உடன் வேலை செய்பவர் வாட்சன். அவர் ஒரு மருத்துவர். இவர்கள் இருவரும் உண்மையான மனிதர்கள் என்று எண்ணுபவர்கள் கூட இருக்கிறார்கள். ஷெர்லாக் ஹோல்ம்ஸ் தன் கூர்மையான ஆராய்ச்சி அறிவால் ஒரு விஷயத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து விடுவார்.


பூச்செண்டு போல ஒரு மனிதன்

 

 ஆறு வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு கொலையை விவரிக்கப் போவதாகச் சொன்ன யேயோ இந்தக் கேள்வியோடு ஆரம்பித்தான். ‘ஆறு வருடங்களுக்கு முன்னர் இறந்துபோன ஷிமி கிலாடன் என்பவள் உங்கள் மேலாளர் டெர்ரி கில்போர்ட் என்பவரின் மனைவியா?’ ‘ஏன், எதற்காகக் கேட்கிறீர்கள்?’ ‘உங்களுக்கு சங்கதி தெரியாதா? ஷிமி கிலாடன் சாதாரணமாக இறக்கவில்லை. செதுக்கிய நல்ல மனிதர் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கும் உங்கள் மேலாளர், தன்னுடைய மனைவியைக் கொன்றுவிட்டு இப்போது அப்பாவி போன்று நடித்துக் கொண்டிருக்கிறார்’ என்றான் யேயோ.


யாரைத் தான் நம்புவதோ?!

 

 பாகம் 1| பாகம் 2 ஞாயிற்றுக்கிழமை, காலை ஆறு மணி. மாமனார் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் ராஜேஷ். இரண்டு நாட்களாக சரியாக தூங்காததாலும் முந்தின நாள் இரவு மாமனாருடன் வெகு நேரம் பேசிக் கொண்டே இருந்ததாலும், அண்ணாநகர் சோமுவின் வீட்டில் செய்த வேலை களைப்பினாலும் நேரம் கழித்துத்தான் உறங்கினார். அந்தக் கடத்தல் ஆசாமி ஏதாவது ஃபோன் பண்ணி சொல்லுவான், அவனை மடக்கலாம் என்று மிக ஆவலுடன் சோமுவின் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்து பின்னர் ஏமாந்து போனதில்


யாரைத் தான் நம்புவதோ?!

 

 பாகம் 1| பாகம் 2 மூன்றாவது கியருக்கு மாற்றி மாருதி காரின் வேகத்தை அதிகப்படுத்தி மகேந்திரன் “பயணங்கள் முடிவதில்லை” சினிமா பாடல்களில் தனக்கு மிகப்பிடித்த “இளைய நிலா” பாடல் கேட்டு…. அவனும் சேர்ந்து பாடியவாறே காரை ஓட்டினான். கார் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சமீபத்தில் திண்டிவனத்தை கடந்திருந்தது. திண்டிவனத்திற்கு முன் ஒரு ஹோட்டலில் சாப்பிட்ட வடை ஏப்பம் வர…. கொஞ்சம் தண்ணீர் அருந்தினான். பொழுது முழுதாக சாயவில்லை என்றாலும் பொளர்ணமி இளைய நிலா வலதுபுறம் தூரத்தில் பிரகாசமாக


சாம தான பேத தண்டம்

 

 கடவுள் நம் குற்றங்களை மன்னிக்கலாம் – ஆனால், மனிதர்கள் உருவாக்கிய சில நியதிகள் அவ்வாறு மன்னிப்பதில்லை -வில்லியம் ஜேம்ஸ் (1842 – 1910) சாவதற்கு அஞ்சேல் ‘குணா எங்கேடா இருக்க. அண்ணன போட்டுட்டாங்கடா’ மறுமுனையிலிருந்து பதட்டத்துடன் வந்தது கோபியின் குரல். ‘நீ வீட்டுக்குப் போகாத. வேற எங்காவது போயி தங்கிக்க. உன்னத்தா தேடிக்கிட்டு இருக்கானுங்க. அண்ணன என்யூஎச்ல சேத்திருக்கோம். அண்ணிக்கு தகவல் சொல்லிட்டோம். நீ இங்கயும் வந்துடாத. பாத்து இருடா’ கோபி சொன்னது நினைவில் நின்றது. அவனின்


ஒரு கொலைகாரனின் வாக்குமூலம்

 

 ஹலோ…! உங்களைத் தாங்க.. உங்க கிட்ட நான் ஒரு ரகசியத்தை சொல்லப் போறேன்…உங்ககிட்ட மட்டும்தான்…ஆனா நான் சொல்றதக் கேக்க முன்னாடி உங்களைக் கொஞ்சம் தைரியப் படுத்திக்குங்க ..நீங்க ஒரு ‘ஹாட்’ வீக்கான ஆளா இருந்து அப்புறம் நான் சொல்றதக் கேட்டு அதிர்ச்சியில நீங்க ‘ பொட்’டின்னு போயிட்டா என்னைத் தான் எல்லாரும் குறை சொல்லுவாங்க…… மத்தவங்க Feelings க்கும் நாம மதிப்புக் கொடுக்கணும் இல்லியா ..? நான் அப்படித் தாங்க. முதலில என்னைப்பத்தி ஒரு சின்ன அறிமுகம்


நெஞ்சை தொட்டு கொல்!

 

 அலுவலகத்தில் நுழைந்த நிமிடத்திலிருந்து மேசை மீது இருந்த இரு தொலைபேசியும் மாறி மாறி மாணிக்கத்தை வதைத்து ஓலமிட்டுக் கொண்டே இருந்தது…. எதையும் எடுத்துப் பேச பயமாக இருந்தது அவருக்கு. காரணம், தினசரி பத்திரிக்கைகளில் அவரைப் பற்றி சில நாட்களாகவே வந்து கொண்டிருந்த அவர் மேல் தொடரப்பட்ட அலுவலகம் சம்பந்தமான மோசடி வழக்கு….. பொது ஜனங்களின் சீற்றத்தை விலைக்கு வாங்கி இருந்தது. மனம் எடுத்ததற்கெல்லாம் கன்னாபின்னாவென்று திட்ட விஞ்ஞானி ‘பெல்’ ஏன் தான் இந்த தொலைபேசியை கண்டுபிடித்து தொலைத்தாரோ


காத்திருக்கும் தூக்குமேடை

 

 முட்டாள்தனமாக காதலித்து, அந்தக் காதலனுடன் சேர்ந்து தன் குடும்பத்தில் ஒரே இரவில் ஏழு கொலைகளைச் செய்துவிட்டு, தற்போது காதலனுடன் தூக்குக் கயிறுக்காக காத்திருக்கும் ஒரு பெண்ணின் உண்மைக் கதை இது… சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக தூக்கில் இடப்படப் போகும் பெண்மணி என்பதால் பரபரப்புடன் நாடே உற்று நோக்குகிறது. ஏற்கனவே இருந்த பெண்களுக்கான பிரத்தியேக தூக்குமேடை மதுரா நகரில் புதுப்பிக்கப்பட்டு விட்டது. தூக்கை நிறைவேற்றப் போகும் பவன் குமார் என்பவன் தற்போது அரசின் இறுதி உத்திரவிற்காகக் காத்திருக்கிறான்.


கடத்தப்பட்ட குழந்தை

 

 ஏதோ யோசனையில் பேருந்தில் உட்கார்ந்து சென்று கொண்டிருந்த சாக்க்ஷிக்கு எதிர் சீட்டில் உட்கார்ந்து தன் மழலை குரலால் பக்கத்தில் இருக்கும் பெண்ணிடம் ஏதேதோ கேட்டுக்கொண்டு வந்தது கவனத்தை கவருவதாக இருந்தது. இருந்தால் அந்த குழந்தைக்கு நான்கு அல்லது ஐந்து வயதுக்குள் இருக்கலாம், மென்மையான நீல கலரில் சட்டையும், அழுத்தமான நீலத்தில் ஸ்கர்ட்டும் உடைகள் விலையுயர்ந்ததாக இருக்க வேண்டும். ஆனால் அருகில் உட்கார்ந்திருந்த பெண்ணுக்கு இவள் கண்டிப்பாய் உறவாய் இருக்க வாய்ப்பு இல்லை, அந்த பெண்ணும் மாநிறமாய் இருந்தாலும்