கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 19, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

அனிமல்ஸ் ஒன்லி

 

 ‘ஆதிபராசக்தி’ படம் பார்க்கப் போவதாக வீட்டில் அண்டப்புளுகு புளுகிவிட்டு ‘அனிமல்ஸ் அண்ட் செக்ஸ் லைஃப்’ – விலங்குகளின் விரகதாப வாழ்க்கையை விவரிக்கும் சினிமாவை நைட் ஷோ பார்த்து விட்டு நண்பர்களுடன் ராஜகுமாரி தியேட்டரைவிட்டு வெளியே வந்தேன். தங்களது அந்தரங்க வாழ்க்கையை அம்பலமாக்கிய சினிமாவை ரசித்துவிட்டு வந்த எங்களைப் பார்த்து தியேட்டர் வாசலில் இருந்த ஓரிரு நாய்கள் நாணத்தால் முகம் சிவந்து நாலாபுறமும் ஓடின. அந்த வாரம் முழுவதும் ஆடு, மாடு, நாய் போன்ற நாலு கால் பிராணிகளைப்


முத்துமணிமாலை!

 

 இமய மலையில் இருந்து சாமியார் திரும்பி வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக ஒரு பெரிய கூட்டம் அங்கே காத்துக் கொண்டிருந்தது. ஒரு நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கொண்டிருந்தனர். அவள் அதை பார்த்து மலைத்துப் போனதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை! இன்னும் வரிசையில் யாரும் வரும் முன், போய் நின்று விட வேண்டும் என எண்ணி, வரிசையில், கடைசியில் போய் நின்றாள். அந்த வரிசையில் நின்ற எல்லோரும், கையில் பழங்களும், பரிசுப்பொருட்களும் வைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த தேவி, கொஞ்சம் பணத்தை


வினையால் ஒரு வெள்ளைப்புறா

 

 லெப்… ரைட்…லெப்… ரைட்…அந்தப் பயிற்சி முகாமின் எண்திசைகளிலும் எதிரொலித்த வண்ணம் இருந்தது. அது பயிற்சி முடித்து வெளியேறும் பொருட்டு ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்ச்சி. மேடையிலே முப்படைத் தளபதிகளுடன் பிரிகேடியர் கபில ரட்னாயக்கவும் கம்பீரமாக நிற்கிறார். அவர் நாட்டின் வடபகுதியான யாழ்ப்பாணத்திலுள்ள அரியாலைப் பகுதியில் பிரிகேடியராகப் பணிபுரிகிறார். நாட்டில் ஏற்பட்ட இனப் பிரச்சினையால் அவசர கால சட்டத்தின் கீழ் சிவில் நிர்வாகப் பொறுப்புக்களையும் அவ்வப் பிரதேசங்களுக்குரிய பிரிகேடியர்களே கவனிக்க வேண்டியிருந்தது. “சமன்! எங்கட ஏரியாவில் இருக்கிற குடும்ப விபரம்


காதல் கத்தரிக்காய் – ஒரு பக்க கதை

 

 “ஹலோ…” “சொல்லுங்க.., நான் எழுத்தாளர் நவீனன் பேசுறேன்…” “கதிர்’ஸ் நிருபர் தேன்மொழி பேசுறேன். காதலர் தின ஸ்பெஷலுக்கு ஒரு பேட்டி எடுக்கணும்…” “ஓ… தாராளமா…!” “எப்ப கூப்பிடலாம்…?” “இப்பவே நான் ஃப்ரீ தான்… காரை ஓரம் கட்டி நிறுத்திக்கறேன். நீங்க கேள்விகளைக் கேளுங்க…” “காதலர் தினத்தைப் பற்றி உங்கள் கருத்து?” “காதல் என்கிற உன்னதமான கான்ஸப்ட்டுக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரம்..!” ஒரு மணி நேரப் பேட்டியில் காதல் குறித்து நவீனன் பேசிய ஒவ்வொன்றும் தேன்மொழிக்கு பிரமிப்பைத்


மறக்க முடியாதவன்

 

 “குட்மார்னிங் சார்” மலையாளம் கலந்த குரல் கொடுத்தபடியே காம்பவுண்ட் கேட்டை திறந்து உள்ளே வந்தான் “குட்மார்னிங் பாபு” அப்பொழுதுதான் தூக்கத்தில் இருந்து விழித்திருந்தாலும் பதிலுக்கு குரல் கொடுத்தேன். நேரம் காலை ஆறு மணியாக இருக்கலாம், என் அனுமானம். ஏனென்றால் சரியாக ஆறு மணிக்கு இவன் ஆஜராகி விடுவான். ஆரம்ப காலத்தில் எனக்கு இவன் வருகை எரிச்சலூட்டினாலும் போக போக இவன் வருகை என்னையும் விடியலில் நேரத்தில் எழுப்பி விட்டுவிட்டது. ஒரு மாதமாகத்தான் வந்து கொண்டிருக்கிறான். வீட்டின் பின்புறம்


வெற்றிப்படம்!

 

 “குஞ்சரம்மா..! உங்களுக்கு ஒரு கடுதாசி… சென்னையிலிருந்து..உங்க பேரன் வெற்றிதான் எழுதியிருக்கப்ல..” “என்ன கொமரு..கடுதாசிய குடுத்துப்புட்டு உம்பாக்குல போனா..? யாரு படிச்சு சொல்லுவாக…?” “ஆச்சி.. ஊருக்கே தெரிஞ்ச ரகசியம் எனக்கு தெரியாதா.? நீ கைநாட்டுன்னு…! இன்னும் மூணு கடிதாசு இருக்குது.பக்கத்தாப்லதான். குடுத்துபுட்டு ஓடியாரமாட்டேன்…? இங்கனக்குள்ள குந்தி இருங்க ஆச்சி.!” குஞ்சரம்மாவால் சும்மா இருக்க முடியுமா..? ‘ பேரன் என்ன எழுதியிருக்கும்..? ஒருவேள அப்பத்தாளப் பாக்க கெளம்பி வருதோ…? எம்பேரனுக்கு எம்மேல எம்புட்டு பிரியம்.? இந்தகாலத்தில அப்பச்சிய மதிச்சு கடுதாசி


ஓப்பனைக்காரர்

 

 நான் தினமும் பூங்காவில் உலாவும்போது பல மனிதர்களை சந்திப்பேன் . இளம் யுவதிகள், மத்திய வயது உடைய பெண்கள், மூதாட்டிகள் அதோடு ஆண்களில் இளைஞர்கள் சுமார் 40 வயது உடையவர்கள். அவர்களில் அரவிந்தன் ஆகிய நான் ஒரு ஐம்பது வயது மனிதன். திருமணமானவன். பத்து வயது சந்திரனுக்கு தந்தை. எனக்கு முகத்தில் பவுடர் பூசுவது கண்ணுக்கு மை பூசுவது மற்றும் நகதை பளப்பளப்பாக்குவது போன்ற செயல்கள் பிடிப்பதில்லை. ஏன் காலுக்கு போடும் காலணியை கூட நான் பளப்பளப்பாக்குவது


பெண்டாட்டிக்குப் பயந்தவன்

 

 தன்னுடைய வீட்டிற்கு நேர் எதிர்வீட்டில் நான்கு நாட்களுக்கு முன்பு அந்த அழகான தம்பதிகள் குடி வந்ததிலிருந்தே தன் மனைவி சுஜாதாவிடம் ஒரு மௌனமான மாற்றம் மறைவாக இருப்பதை கண்டான் கல்யாணம். அது மட்டுமல்லாமல் அவர்கள் வரும் வரை இந்த வீட்டைப் பற்றியும், குளியலறை, கழிவறை தண்ணீர் வசதிப் பற்றியும் வானளாவ புகழ்ந்தவள் இப்போது வேறு வீடு பார்க்கும்படி நச்சரிக்கிறாள்.!! வேறு வீடு பார்க்க வேண்டுமென்றால் உடனடியாகவாக் கிடைத்துவிடும் சட்டென்று குடிபோய்விட..?! எந்தவித தொந்தரவும் இல்லாமல் தான் கொடுக்கும்


நதியின் ஓட்டம்

 

 கோமதி அம்மன் உடனுறை மகாலிங்க சுவாமி கோயிலில் வைத்து சௌந்திரம் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டான் கோதண்டம். உறவினர்கள் அனைவரும் வாழ்த்தினர். கோதண்டத்தின் மதினி அழகம்மாள் உறவினர்கள் மத்தியில் மிகவும் ஜபர்தஸ்தாக இருந்தாள். அண்ணன் அருணாசலம் எப்போதும் போல அமைதியாக சிரித்தபடி இருந்தான். கோயிலில் திருமணம் முடிந்து அவர்கள் வீட்டிற்கு சென்றனர். மதிய விருந்து முடிந்ததும் சில உறவினர்கள் கிளம்பி விட்டார்கள். சௌந்தரத்தின் சித்தி சுப்புவும் அப்பா சுந்தரமும் தம்பி பிரபுவும் மற்றும் சில உறவினர்கள் மட்டுமே


கானகத்திலே காதல்!

 

 (1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முதல் பாகம் | இரண்டாம் பாகம் 1. சதிகாரர்கள் உல்லாசவனத்திலே ஜமீந்தார் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் அருகே அடியார் சிவப்பழமும் அமர்ந்திருந்தார். ஜமீந்தார் முகத்தில் கோபம் கொதித்துக்கொண்டிருந்தது. சிவப்பழம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். ஜமீந்தாரின் அந்தரங்க ஆலோசனை யாளர்கள் சிலர் நின்றுகொண்டிருந்தனர். அடர்ந்து வளர்ந்த செடிகளின் பசுமையும், அவற்றின் இளம் இலைகளின் தலையை வருடி, மலர்ந்த மலர்களை அணிந்து, குறு குறுவென்று வந்து வீசும்