கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 17, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

அஞ்சலி

 

 (1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஸுலைமாவின் தளிர் உடல் ஆடிக்காற்றில் அலைந்தாடும் பசுந்தளிரைப் போல் படபடத்தது. “யா அல்லா! நீங்கள் அங் கெல்லாம் போகவே கூடாது” என்று அலறினாள் அவள். அமீருக்கு மனைவியின் பதற்றம் ஆச்சரியத்தை அளித்தது. அவன் அவளை அருகில் இழுத்து அணைத்துக்கொண்டு, ‘பர்தா’ வுக்கு மேலாக அவளுடைய தலையை அன்புடன் வருடியவாறு, “ஏன் ஸுலே, ஏன் இந்தப் பதற்றம்?” என்று கேட்டாள்! “ஏனா? இந்த நெஞ்சைக்


பொய் மலரும்

 

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வீட்டுக்கு முன்னாலுள்ள முக்கும் கல் லில் முகம் சோம்பி ஒரு பாலகன் உட்கார்ந்திருந்தான், தன் வினையை மிகவும் பத்திரமுடன் தூக்கிப் பிடிப்பது போல், பொக்குக் கட்டியிருந்த சிரங்குள்ள கையை அவன் உயர்த்திப் பிடித்திருந்தான். வெடித்து ஈரம் உலர்ந்து விறுவிறுவென்றிருக்கும் சிரங்கைச் சொறிகையில், திணறிப்போய் ‘ஆ’ ‘ஊ’ என்றான். வாயைக் கோணிக் கொண்டும் முகத்தைச் சுளித்துக் கொண்டும் இன்ப வேதனை சொறிகையில் அனுபவித்தான். முக்குக்


அந்தி

 

 (2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நசநசன்னு மழ பேஞ்சுக்கிட்டு இருந்துச்சு, ரெண்டு வாரமா இப்பிடியே பிசுபிசுத்துக்கிட்டு இருந்தா, சனங்க என்னனு வேல வெட்டிக்குப் போறது? ரவைக்கு ரவ ஆன மோண்டது கணக்கா சோன்னு ஊத்துது. விடுஞ்சா இந்த நசநசப்பு. நல்லா பேஞ்சம்னு இல்ல; காஞ்சம்னு இல்ல. இதென்ன எழவெடுத்த பெய மழயோ! கொளத்தூர்ல ஒத்த சனம் பாக்கி இல்லாமெ அம்புட்டுப் பேரும் பொலம்பிக்கிட்டுக் கெடந்தாக, குண்டுங்குழியுமாக் கெடந்த தெருவுகள்ள


எல்லாம் எனக்கு தெரியும்

 

 குழந்தைகளே, சௌக்கியம் தானே! அம்மா-அப்பா பேச்சைக் கேட்டு நடக்கிறீங்க தானே! நல்லது. அப்படித்தான் இருக்கணும். பெரியவங்க கிட்ட இருந்து நல்ல விஷயங்களைக் கத்துக்கணும். அவற்றை நம்ம வாழ்க்கையில கடைப்பிடிச்சு வாழணும். அதுதான் முக்கியம். ‘எல்லாம் எனக்குத் தெரியும்’னு அலட்சியமா இருந்தா என்ன ஆகும்? இந்தக் கதையைக் கேளுங்க புரியும். அது ஒரு சின்ன கிராமம். அதற்கு ஒரு தலைவர் இருந்தார். அவரோ சரியான சோம்பேறி; முட்டாளும் கூட. எப்போது பார்த்தாலும், சாப்பிடறதும், தூங்குறதுமா காலத்தைக் கழிச்சு வந்தார்.


உனக்கு மட்டும்

 

 பழனிமலையில் கோவிலுக்கு வெளியே தென்புறத்துப் பிராகாரத்தில் உட்கார்ந்து யோசனையில் மூழ்கியிருந்தேன். பின்புறம் கொடைக்கானல் மலைத்தொடர் நீலக் காரிருளின் நடுவே பனியிலும் மேகத்திலும் நெய்த வெண்பட்டுப் போர்வைக்குள் உறங்கிக் கொண்டிருந்தது. கீழே ஊர் விளக்குகள் மினிக்கிக் கொண்டிருந்தன. ஊரின் ஓசைகளும் சந்தடிகளும் எட்டாத உயரத்தில் உட்கார்ந்திருந்தேன். பார்வதி! கதையை மேலே எழுதுவதற்கு முன்னால் உனக்கு ஒரு வார்த்தை. உன்னைப் பற்றித்தான் எழுதப் போகிறேன் என்பதை இதற்குள் நீ புரிந்து கொண்டிருப்பாய். ஆனால் யாருக்காகவோ எதற்காகவோ, எதையோ, எழுதுகிறேன் என்று


கைதிகள்

 

 எட்டாவது குழுவில் முதலில் கண்விழித்தது நான். ஆகவே முதலில் நான்தான் செய்தியைத் தெரிந்துகொண்டேன். கரகரத்த குரலில் எங்கோ யாரிடமோ பேசிக்கொண்டிருப்பதை வயர்லெஸ் ரேடியோ சொல்லிக்கொண்டிருந்தது. குழூக்குறி என் மண்டைக்குள் சென்று தீண்ட ஒரு நிமிடம் ஆகியது. ‘…நரி மாட்டிக்கொண்டு விட்டது’ நான் பரபரப்புடன் ஓடிப்போய் தரையில் கம்பிளிக்குவியலுக்குள் படுத்திருந்த நாராயணனை ஓங்கி உதைத்தேன். ‘ஆ!’ என்று அலறியபடி அவன் கண்விழித்து எழுந்து அமர்ந்து மணல்பையைக் குத்துவது போலக் கைகளை ஆட்டியபடி ‘போ போ போ’ என்று கத்தினான்.


அம்மாவைத் தேடி

 

 ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில், மூன்று நோயாளிகள் மரண அவஸ்தை தாங்காமல் முனங்கிக் கொண்டே புரண்டு கொண்டிருந்தார்கள். டாக்டர்களுக்கு அவர்களின் முடிவின் முடிவு தெரியும். அவர்களுக்கும், தங்கள் அந்திம காலத்தின் அடையாளம் புரியும். ஸ்பெஷல் வார்டில் படுத்துக் கிடந்த மாஜி டெப்டி கலெக்டர் மயில்நாதன், தான் ஏழு வயதுச் சிறுவனாக இருக்கும்போது ஏற்பட்ட அவஸ்தை, இப்போது மீண்டும் வந்திருப்பதை உணர்ந்தார். அப்போது அவர் அம்மா அவரருகே கண்ணிர் சிந்த அமர்ந்து, உடம்பைப் பிடித்துவிட, அவர் அந்தப் பையன், அவள் மடியிலே


தாலாட்டு

 

 சுந்தரமூர்த்திக்கு அன்றிரவுதான் சாந்திக் கல்யாணம். சுந்தர மூர்த்தி வெளிமுற்றத்தில் ஈஸிசேரில் கண்ணை, மூடியவாறே படுத்துக் கிடந்தான்; ஆனால் கண்கள் தான் மூடியிருந்தனவே தவிர, மனசு மூடவில்லை. மனசில் என்னென்னவோ சிந்தனைகள் உருண்டு புரண்டு கொண்டி ருந்தன. எனவே அவனும் உருண்டு புரண்டு கொடுத்துக் கொண்டிருந்தான். உள்வீட்டுக் கடிகாரம் மணி பதிமூென்று அடித்து ஓய்ந்ததும் அவனுக்குத் தெரியும். பெரிய பெருமாள் கோவில் அர்த்தசாம சேவைக்காகச், சங்கு ஊதும் முழக்கமும் அவனுக்குக் கேட்கத்தான் செய்தது. அவன் தூங்கி விடவில்லை. “என்ன


சாந்தி பிறந்த நாள்

 

 (1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நகப் பாலிஷை மெல்லிய ஸில்க் கைக்குட்டையினால் மேலோடு துடைத்துப் பள பளவென்று மெருகேற்றிக்கொண்டாள் சாந்தி. பத்து மடங்குக்குக் கர்வம் அவள் தலைக்கேறியது. இந்த விரல் நுனிகளைப் பிடித்துக்கொண்டு விட்டாரானால், பிரியும் நேரம் வருகிற வரையில், சங்கர் விடுவதே கிடையாது. “உங்களுக்கு என் மீது காதலா, என் விரல்கள் மீதா?” என்று சாந்தியே கேட்பதுண்டு. “விரல்களின் மீது தான்,” என்று தயங்காமல் சொல்வான் சங்கர்.


கானகத்திலே காதல்!

 

 (1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதையைப்பற்றி! திரைக்கதை வரிசையிலே நான்காவது நூலாக கானகத்திலே காதல் வெளிவருகிறது. (அழகு நிலா, செல்வகுமாரி, அந்த இரவு முதலியவை மற்ற நூல்கள்). இவற்றிலே ‘அழகு நிலா’, இரு நண்பர்கள் என்ற பெயரில் படமாகிக்கொண்டிருக்கிறது என்ற நற்செய்தியை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். கலை என்ற பெருங்கடலிலே எத்தனையோ பெரு நதிகள் கலக்கின்றன. அவை இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழின் வழியாக எத்தனையோ சிறு