கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 9, 2022

9 கதைகள் கிடைத்துள்ளன.

ஜாதின்னா என்ன?

 

 ராமநாத கனபாடிகளின் பேரன் மகேஷ்க்கு தீராத குழப்பம். மகேஷின் அப்பா சோஷாத்ரி அரசு மருத்துவ மனையில் ‘டி எம் ஓ’. அம்மா லெக்ஷ்மி மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர். மகேஷுக்கு இரண்டு மூத்த சகோதரிகள். பெரிய சகோதரி ஊர்மிளா. இளைய அக்காள் மிருதுளா. ஊர்மிளாவும் மிருதுளாவும் கூட எம் பி பி எஸ் படித்த டாக்டர்கள் தான். மொத்தத்தில் அது ஒரு டாக்டர் குடும்பம். ஊர்மிளா, மிருதுளாவுக்குப் பிறகு பதினைந்து வருடங்கள் கழித்துப் பிறந்தவன் மகேஷ். வீட்டில் அனைவருக்கும்


பாதுகை

 

 (2010ல் வெளியான சீர்திருத்த நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உள்ளங்காலைத் தகித்த உஷ்ணம் உச்சம் தலையில் போய் உறைந்த போது, பதைபதைப்புடன் தட்டுத் தடுமாறி இடது கால் பாதத்தை தூக்கித் திருக்கூத்தாடிய பாவத்துடன் துள்ளிக் குதித் தான், முத்து முகம்மது. வைரித்த கெட்டியான உதடுகளும், பிடிவாதம் தேங்கிய முகமும் அப்போதைக்கு வலிப்புவாதை கொண்ட நோயாளியைப் போல, அவனைக் காட்டிக் கொண்டான். ‘- சே!’ காலிலை ஒரு செருப்புக் கிடைத்தால்? திரும்பித் தார்ரோட்டைப்


எதிர்காலம்

 

 முரளி கண்ணில் கறுப்பு கண்ணாடி,கையில் வெள்ளை பிரம்பு மூன்று மாதங்களுக்குப் பிறகு யாரின் துணையும் இல்லாமல் முதல் தடவையாக வெளியில் அடியெடுத்து வைக்கும் முரளி மனதில் ஆயிரம் குழப்பங்கள் மெதுவாக வெள்ளை பிரம்பை ஊன்றியப் படி பாதையோரம் நடக்கத் தொடங்கினான் அவன்,பின்னாடி வரும் மிதி வண்டிகாரர்களின் மணியோசை கொஞ்சம் அதிகமாகவே கேட்டது,யார் மீதும் மோதி விடுவோமோ என்ற பயம் மனதில் எழுந்தது,அவசரமாக வரும் மிதிவண்டியில் மறுப்படியும் அடிப் பட்டு விட்டால் என்ன செய்வது அதை நினைக்கும் போது


மண வாழ்க்கை

 

 (1946 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஸாகரபுரத்தில் அன்று ஏக தடபுடல். மேளச் சத்தம் ஊரை இரண்டாக்கியது. இரண்டு வாரமாக இங்கே நடக்கும் ஆர்ப்பாட்டங்களை இந்தக் கிராமத்தார் மாத்திரம் அல்ல, அக்கம் பக்கத்தில் பத்துமைல் தூரத்திலுள்ள கிராம வாசிகளும் அறிந்தனர். இந்த மாதிரியான தடபுடலை இதற்கு முன் இந்தக் கிராமம் கண்டதே இல்லை. விதவிதமான வாத்தியங்களைக்கேட்டு எல்லோரும் சந்தோஷமடைந்தார்கள், ஆனால் இந்த வாத்தியச் சப்தத்தினால் கிராமத்திலுள்ள மாடு கன்றுகளுக்குத்தான் அதிகக்


திடீர் பாசம்

 

 நீ பாக்கறதுக்கு கொழு கொழுன்னு இருக்கே! கூட இருக்கறவங்க சொல்லும்போது சந்தோசமாய் இருந்தாலும் இந்த ஒரு வாரமாய் மனசு அடிச்சுக்குது, எதுக்குன்னு தெரியவில்லை. முதலாளியும், முதலாளியம்மாவும், அதிகமாக என் மீது பாசத்தை பொழியறதாலாயா? ஒரு வேளை ரொம்ப நாள் கழிச்சு வரும் அவர்கள் மகனுக்கு என்னை?… முதலாளி இப்பவெல்லாம் என்னைய பாக்கற பார்வையே சரியில்லை, தேவையில்லாம என் இடத்துக்கு வர்றதும், என் தலையை தடவறதும், அணைச்சு பேசறதும், எனக்கு ஈரல் குலை எல்லாம் நடுங்குது, பக்கத்துல இருக்கறவங்க


மலைக்கண்ணன்…

 

 எங்கு நோக்கினும் மலைகள்.மலைகள்…மலைகள்.! நீலம், இள நீலம், கருநீலம், பச்சை, கருப்பு..! அச்சுதனுக்கு அந்த மலைகளெல்லாம் கண்ணனாகவே தெரிந்தது…! எந்தக் கண்ணன்? சாட்சாத் கிருஷ்ண பரமாத்மாதான்..! கண்ணன் நீலவண்ணன்..! “கண்ணா! கருமை நிறக் கண்ணா..!”..பாடிவைத்தான் ஒரு கவிஞன். “காக்கைச் சிறகினிலே நந்தலாலா..நின்றன் கரிய நிறம் தோன்றுதய்யே!” என்று பாரதியாரால் பாடப்பெற்றவன். ‘பச்சைமாமலைபோல் மேனியனாக’ காட்சி தருகிறான் தொண்டரடிப்பொடியாழ்வாருக்கு. அச்சுதனுக்கோ அவன் எல்லா வண்ணத்திலும் சுற்றிலும் காட்சி தருகிறான்.. அவன்தான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான். கண்ணனை தெய்வமாக ஒரு


உறவுகள்

 

 “டேய் கோவாலூ! ஜல்தி ஆடுங்கள கெளப்புடா. கூழு குடிச்சிட்டியா?.” “ஆச்சிப்போவ்.” “எந்தப் பக்கம் மேச்சலுக்கு ஆட்ட மடக்கிற?.” “சுமங்கலி ஏரியில. எல்லாந்தான் தண்ணியில்லாம மொட்டுன்னு கெடக்குதே.” “சரி..சரி..ஓட்டு. இன்னிக்கு கழனியில பொன்னி நடவு கீது. அத பார்த்துப்புட்டு மதியம் உனுக்கு கஞ்சி கொண்டார்றேன்.” – பையன் அம்மாக்காரி கிட்ட சொல்லிட்டு படலையை திறந்து ஆடுகளை கிளப்பினான். அம்மாக்காரி ஆம்பள பொறப்பு மாதிரி. எல்லா நுணுக்கங்களும் தெரியும். அடுப்பு வேலையையும் பார்த்துக்கிட்டே தயிரை கடைந்துக் கொண்டிருந்தாள். வீட்டில் மூணு


குடியிருக்க ஓர் இடம் – ஒரு பக்க கதை

 

 நான் குடியிருந்த வீட்டைக் காலி செய்யும்படி வீட்டுக்காரன் வெகு கண்டிப்பாகச் சொல்லி மூன்று மாதங்களுக்கு மேலாகியும், நான் வீட்டைக் காலி செய்யக்கூடவில்லை. வேறு வீடு கிடைத்தால் அல்லவா காலி செய்வதற்கு? நானும் எங்கெல்லாமோ தேடிப் பார்த்துவிட்டேன்; எங்கேயும் வீடு காலியாவதாகத் தெரியவில்லை. எனவே, “கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்களேன், தயவுபண்ணி” என்று தினம் பத்துத் தடவை வீட்டுக்காரன் காலில் விழுந்து கேட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. இந்தச் சமயத்தில் ஊரிலிருந்து வந்த என் நண்பர் ஒருவர் எனக்கு ஒரு அபூர்வமான யோசனை


ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 2 | அத்தியாயம் 3 | அத்தியாயம் 4 காலை நேரம். ஓட்டலில் மும்முரமாக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அந்த ஓட்டலின் முதலாளி ரகுராமன் துப்பறி யும் துளசிங்கத்தை அறிந்திருந்தபடியால் அவர் ஓட்டலுள் நுழைந்தவுடன், அருகில் சென்று அவரை உபசரித்தார். துப்பறி யும் துளசிங்கம் ஆரஞ்சுக் கிரஷைக் கொண்டு வரச்சொல்லி அதை உறிஞ்சிய வண்ணம் தான் வந்த விஷயத்தை ஆரம்பித்தார். முதல்