கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 26, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஐவேசு

 

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இத்துடன் மூன்றாவது தடவையாக நான் என் சாமான் களைத் தொலைத்துவிட்டேன். சிலகாலமாகத் தொலைப் பதில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தேன். இதுவே இப்ப நல்ல பழக்கத்தில் வந்துவிட்டது. பயிற்சி பலன் தரும். ஒரு சுற்றுலா பயணிக்கான தகுதிகள் எனக்கு இல்லை. அடிக்கடி சாமான்களைத் தொலைத்தபடி இருப்பேன். இதன் காரணமாக என்னைச் சுற்றி இருப்பவர்கள் மிக சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நான் மறந்துபோய் வைக்கும் அல்லது எடுத்துவிடும்


ஜீவன்‌

 

 கிராமத்திலுள்ள குமரிப்பெண்டுகளுக்கு அங்குப்பிள்ளையைக்‌ கண்டுவிட்டாலே ஒருவித குஷி வந்துவிடும்‌. ஜாடை செய்து – ஒவ்வொரு வார்த்தைக்குமே ஜாடை செய்து – ‘னைக்கு (அங்குப்பிள்ளையைக்‌ காட்டி) கலியாணம்‌ (தாலி கட்டுவதைப்போல கழுத்துப்பக்கம்‌ கைகளைக்‌ கொண்டுபோய்‌) எப்போ? (விரல்களை முஷ்டி மடக்கிக்‌ குலுக்கவேண்டும்‌.) இந்த ‘அபிநய முத்திரை’களோடு முகபாவமும்‌ சேர்ந்துகொள்ளும்‌. ஊமைகளோடு ‘பேசுவது’ என்பது எல்லோருக்கும்‌ அவ்வளவு லேசு இல்லை. வேத்துமொழி தெரிந்தவன்தான்‌ அதைப்‌ பேசமுடியும்‌ என்பதுபோல ‘ஊமை பாஷை’ தெரிந்தவன்தான்‌ அவர்களோடு சரளமாசப்‌ பேசமுடியும்‌. ‘பெண்‌’ என்று சொல்லவேண்டுமானால்‌


மழை

 

 மழையின் வருகையை அறிவிக்கவே இல்லை இந்த வெயில். பல ஊர்களைச் சுற்றியவன்; பல வெயில்களைப் பார்த்தவன். ஆனால் தாகம் புரட்டியது. ஒருநாளும் இல்லாத விசேசமாய் அவன் செவ்விளநீர் சீவச்சொல்லி அருந்தினான். தொண்டையின் கீழே உடம்பு முழுவதும் நனைந்து குளிர்ச்சி கொண்டது போல் இருந்தது. பத்து ரூபாய் விலை அதிகமெனத் தோன்றவில்லை அவனுக்கு. தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு வெயிலில் இருந்து தப்பித்துக் கொண்டிருந்தான் நஜீம். அவனுக்குரிய உரிமை இன்னும் நீடிப்பதான நினைப்பிற்குள் இருந்தபடியே தஸ்லீமாவின் வீட்டிற்குள் தடதடவென


அது மட்டுமா?

 

 (1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி, கந்தசாமியின் அகக்கண் முன் வந்தது. அதே வாத்தியார் சுப்பராயர் தாம் தம்முடைய ஒரு சாண் பிரம்புடனும் கயிறு கட்டிய பழைய மூக்குக்கண்ணாடியுடனும் காட்சியளித்தார். இவ்வளவு வருஷங்களில் வீசைக்கணக்கான நாசிகா சூரணத்தை ஏற்றுமதி செய்த அவர் திருமூக்கு முன்னைக்கு இப்போது பெரிதாகி இருந்தது. தாலூகா போர்டு எடுபடுவதற்கு முன் தர்மபுரி தாலூகாவைச் சார்ந்த காவாப்பட்டியில் அவர் தலைமை


அதிர்ஷ்டசாலி! – ஒரு பக்க கதை

 

 “அத்திம்பேரே!” என்று உரக்கக் கூப்பிட்டுக்கொண்டே மிகுந்த குதூகலத்துடன் ஓடி வந்தான், என் மைத்துனன் வைத்தி. “போன காரியம் என்னடா ஆயிற்று? காயா, பழமா?” என்று நான் ஆவலோடு கேட்டேன். “பழம்தான், அத்திம்பேரே! ராமாமிர்தம் கொடுத்த சிபாரிசுக் கடிதத்தைப் பார்த்ததும் செட்டியாருக்கு ரொம்பத் திருப்தி! நாளைக்கே வேலைக்கு வந்து விடும்படி சொல்லிவிட்டார்!” “நிஜமாகவா..?” “பின்னே பொய்யா சொல்லுவேன்? இதோ பாருங்கள், அவர் கொடுத்த ‘வேலை உத்தரவு’. சம்பளம் மாதம் 100 ரூபாய் என்றும் தெரிவித்திருக்கிறார்.” அதைக் கேட்டதும் எனக்கு


கப்பல் தலைவன் காதலி

 

 (1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பயங்கரமான பெரிய சப்தத்துடன் சுழற் காற்று வீச ஆரம்பித்தது. அன்று கடலுக்குக் கொம்மாளந்தான். அலைகள் மலைபோல் உயர்ந்து கரையில் திட்டுத் திட்டாக இருந்த பாறைகளின் மேல் மோத ஆரம்பித்தன. கண்ணைப் பறிக்கும் மின்னலும் காதைத் துளைக்கும் இடி முழக்கமும் மனத்திற்கு நடுக்கத்தைத் தந்தன. இப்படிப்பட்ட இரவில் அச்சத்தைக் கொடுக்கும் இந்தக் கடற்கரைக்கு அருகிலுள்ள கற்பாறைகளுள் ஒன்றின்மேல் நின்று கடலைப் பார்த்துக்கொண்டிருக்கும் பெண்மணிக்கு என்ன


பொறுமை கடலிலும் பெரிது

 

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) [முத்துப்பாக்கம் பெரிய எஜமான் ஓர் சுய காரியப் புலி. அவர் தம் காரியத்தில் அதிக அக்கரையும், சுறு சுறுப்பும் உள்ளவர். பிறர் காரியத்தில் மகா மந்தம். முத்துப் பாக்கம் 50 வீடுகள் உடைய கிராமம். நமது பெரிய எஜமான் ஊருக்கே பெரிய எஜ மான். மிகப் பெரிய மிராசுதார். அவருக்கு 15 வயதுள்ள பிள்ளையாண்டான் உண்டு. அவரை ஊராரும், வீட்டுக் கணக்கர். ஆட்கள்


மனோகரி

 

 (1997 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவளை எனது அறை பெருக்கவும் துணிகள் துவைக்கவும் என என் வீட்டுச் சொந்தக்காரர் தான் ஒழுங்கு செய்திருந்தார். அந்த வீட்டின் பின்புறத்தில் தனி அறையாக, குளியலறையுடன் சேர்ந்திருந்த இடத்தை எனக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. அறையின் எதிரிலேயே ஆரோக்கியமாகச் செழித்திருந்த வேப்பமரமும் அதன் இளம்பச்சை இலைகளும் கண்களையும் மனதையும் நிறைத்து மனதை இதப்படுத்த… சந்தோஷம் பரவிடச் செய்தன. உடலைத் தொட்ட இளங்காற்றை ஆனந்தமாகவே


பெப்பரவரி- 4

 

 (2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நமக்குச் சுதந்திர தினமாமே! சுதந்திரமோ இல்லையோ ஆனால் விரிவுரை வகுப்பு எதுவுமில்லாமல் எமக்கு விடுமுறை என்பது மட்டும் உண்மை – இனிப்பான உண்மை. முதல் நாள் இரவே அடுத்தநாளை எப்படிக் கழிப்பது என்ற கேள்வி நம்மிடையே எழுந்து விட்டது. “நான் கறுத்தக் கொடி கட்டப் போகிறேன்” என்றான் நண்பன் தில்லைநாதன் “போடா மடையா! இது யாழ்ப்பாணமல்ல பேராதனைச் சர்வகலாசாலை! தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம


O, பூஜ்யமல்ல!

 

 (1998 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “கிலைட்டி ஸியாமினி சோமநாதர்!” வழக்காளியச் சத்தம் போட்டுக் கூப்பிடுறாங்க. வாய்க்குள்ள நுழயாட்டிலும் என்ன வடிவான பேர்? என்னப் பாக்கியமண்டு தான் கூப்பிடுறாங்க. சிவபாக்கியம், தவபாக்கியம், தங்கப்பாக்கியம் எண்டு வடிவாக் கூப்பிட்டா நல்லா இருக்குமே எண்டு சிலவேள நான் யோசிப்பன். எனக்கு வடிவான பேர் புடிக்கும். அதுக்கென்ன செய்யிற? மாங்காட்டுப் பள்ளிக்குடத்தில் ரெண்டு எழுத்துப் படிக்க அப்பன் அனுப்பேக்குள்ள, வெத்திலத் தோட்டத்துக்குள்ள கள்ளமொளிச்ச எனக்கு