கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 18, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

பாதை

 

 (2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “இப்பதானே வாறாய் மோனை?” பஸ்சிலிருந்து இறங்கிய வேலுப்பிள்ளையை வாஞ்சையுடன் கேட்கின்றார் அம்மான் கந்தையா. “ஓம் அம்மான்” புதிய றோட்டை ஆவலுடன் பார்த்தபடியே கூறுகின்றான் வேலுப்பிள்ளை. “எப்பிடிச் சுகம்?” “ஏதோ, கந்தசாமியாற்றை தயவாலை சுவமாயிருக்கிறன்.” “சாடையாக் கறுத்துப் போனாய் போலை கிடக்கு”. “மாறை வெய்யிலெண்டால் கேக்க வேணுமே?” “அட அநியாயமே!” அம்மானுடைய குரலில் அனுதாபம். “அது மாத்திரமே? கருங்கல்லு உடைக்கிற வேலை…” “இதெல்லாம் அந்தப்


சோதிடம் பொய்யாகுமா?

 

 (1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருவிடைமருதூர்ச் சாமிநாதையர் தொண்டை மண்டலம் உயர்தரப் பள்ளிக்கூடத்தில் பன்னிரண்டு வருஷங்களாகத் தலைமை உபாத்தியாயர் . அவர் மனைவி அகிலாண்டம்மாளும் அவரும் மிகவும் சந்தோஷமாகக் குடும்ப வாழ்வு நடத்தி வந்தார்கள். ஆனால் மனைவிக்கு ஒரு பெருங்குறை. குழந்தையில்லாதது! “அதனாலென்ன, அகிலம் ! (இப்படித்தான் சாமி நாதையர் தன் மனைவியை அழைப்பது) பள்ளிக்கூடத் தில் இருநூறு குழந்தைகள் இருக்கிறார்கள். அத்தனைப் பேரும் எனக்குக் குழந்தைகள் தான்”


திருட்டுப்போன நகை – ஒரு பக்க கதை

 

 “ஏண்டி மங்களம், பக்கத்து வீட்டிலே ஒரே குதூகலமா இருக்காப்போலே இருக்கே! திருட்டுப் போன நகைகள் எல்லாம் ஒரு வேளை அகப்பட்டிருக்குமோ?” என்று என் சம்சாரத்தைக் கேட்டேன். அதற்கு அவள், “அப்படித்தான் தோண்றது. எதுக்கும், போய் விசாரிச்சுட்டு வாருங்களேன்!” என்று சொல்லவே, நான் உடனேயே பக்கத்து வீட்டுக்குச் சென்று நண்பர் ஐயாசாமியை விசாரித்தேன். அவர் என்னைத் தனியே மாடி அறைக்கு அழைத்துச் சென்று தாழ்ந்த குரலில், “திருட்டுப் போன நகைகள் ஒண்ணும் அகப்படவே இல்லை, சார்! போனது போனதுதான்!”


அண்ணனும் தம்பியும்

 

 (1946 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மஜும்தார் வம்சம் பழமையானது. கிராமத்தில் அதற்கு மிகுந்த மதிப்பு உண்டு. மூத்தவரான குருசரணர் தான் வீட்டில் சகல காரியங்களுக்கும் அதிகாரி. வீட்டுக்கு மாத்திரமல்ல, கிராமம் பூராவுக்குமே அவர் தான் அதிகாரி என்றால் இதில் மிகை ஒன்றும் இல்லை. ஸ்ரீகுஞ்சபுரத்தில் பெரிய மனிதர் இன்னும் பலர் இருந்தனர். ஆயினும், இவரிடம் ஜனங்களுக்கு இருந்த பக்தி சிரத்தை மற்ற வரிடம் கிடையாது. வாழ்நாளில் இவர் பெரிய


மதி நுட்பம் – ஒரு பக்க கதை

 

 “மகேஷ்… தாத்தா உன்கிட்டே பேசணுமாம்…” – செல் போனை ஊஞ்சலில் வைத்துவிட்டு மீண்டும் சுந்தரகாண்டம் பாராயணத்தைத் தொடர்ந்தாள் பாட்டி. “சொல்லுங்க தாத்தா…” என்றான் மகேஷ். அடுத்த நொடி “ சரி தாத்தா…” என்றான். வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஜெனரல் மெர்ச்சன்ட்டில் தாத்தாவுக்கு ‘அதை’யும், கடை வாசலில் இருந்த பூக்காரியிடம் பூஜைக்காக பாட்டி வாங்கும் பூவையும் வாங்கி வந்தான் மகேஷ். “பாட்டி…பூ…” பூவை ஊஞ்சலில் வைத்துவிட்டு வேகமாக மாடிக்கு ஓடினான் மகேஷ். மாடியில் இருந்த தாத்தா ரூமைத் திறந்தான்.


மணக்க மணக்க ஒரு கொலை..!

 

 மீண்டும் ஒரு முறை அந்த மூன்று மாடி அழகுநிலையத்தை அண்ணாந்து பார்த்தார் இன்ஸ்பெக்டர் சாரங்கன்… ‘அம்புலி ‘ என்று மின்னி மின்னி அணைந்து கொண்டிருந்தது… ‘ம்ம்ம்.!!! இரண்டு வருஷத்துக்கு முந்தி குப்பனும் சுப்பனும் இருந்த எடத்தையெல்லாம் வளச்சு போட்டு குளுகுளு ஏசியில உக்காந்து மாதுளம் பழச்சாறு குடிச்சிட்டிருக்க..!!! இப்ப உன்ன களிதிங்கணும்னு சொன்னா….??? காலத்தோட கொடுமையப் பாரு….!!!’ தனக்குள் முனகிக் கொண்டார் சாரங்கன்.. வாசலில் இருந்த செக்யூரிட்டி போலீஸ் ஜீப்பைப்பார்த்து அலறி அடித்துக் கொண்டு சலாம் வைத்தான்…


சஜினி

 

 அர்த்தமுள்ளவை எல்லாம் அர்த்தமுள்ளவை தானா என்ன. தலைவன் கிம் கி டுக் – க்கு சமர்ப்பணம். *** கிம் கி டுக் சொன்னது போலவே… இந்த உலகம் என்பது நிஜமா கற்பனையா என்ற புள்ளியில் தான் சஜினிக்கு இந்த மலை உச்சியில்…. பனி தேசத்தில் திருமணம். நீண்ட நெடிய போராட்டத்துக்கு பின் அவள் ஒப்புக் கொண்ட திருமணம் இது. அவளை அடிக்கவும் முடியாது. அடக்கவும் முடியாது. அவள் போக்கில் சில மேகங்கள் மழை தூவி விடும். அவள்


கலியாணம்..!

 

 “அந்த சின்னப் பையன் கடிதம் கொண்டு வரும்போது வீட்டுல அண்ணா, அண்ணி, சந்துரு இருந்தான். பொடியன் எசகுபிசகா யார்கிட்டேயாவது கொடுத்துடப் போறானோன்னு எனக்கு உள்ளுக்குள் திக் திக் பயம். இப்படியாப் பண்றது…?” அனுஷா சொல்ல…. கேட்ட கலியுகனுக்குள் ,முகத்தில் கலவரம் படர்ந்தது. பயத்துடன் சொன்னவளை நோக்க… பயத்துடன் சொன்னவளை நோக்க… “பையன் சமத்து!. யாருக்கும் தெரியாம நைசா என் கையில கொண்டு வந்து சேர்த்துட்டு நல்ல புள்ள மாதிரி வெளியே போயிட்டான்.” ‘அப்பாடா !!…’ பயம் விலகி


மலரத்துடிக்கும் மொட்டு

 

 (2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருக்கோணமலை பிரதேச செயலக (பட்டணமும் சூழலும்) சாகித்ய விழா 2002 மற்றும் திருக்கோணமலை மாவட்ட இலக்கிய விழா 2002 ஆகியவற்றிற்கான திறந்த சிறுகதைப் போட்டிகள் இரண்டிலும் முதலாவது பரிசு பெற்ற சிறுகதை வானத்தை ஓவிய சுவராகக் கொண்டு செங்குத் தாக வரையப்பட்ட நெடுங்கோடுகள் என நெடிதுயர்ந்த பனைமரங்கள் செறிந்து நிற்கின்றன.காலைக் கதிரவனின் செம்மஞ்சள் நிற ஒளிக்கற்றைகள், தலை சிலுப்பி நிற்கும் பனை மரங்களின்


ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 4 | அத்தியாயம் 5 | அத்தியாயம் 6 அடையாறில் இருந்த தில்லைநாயகத்தின் வீட்டிற்கு துப்பறியும் துளசிங்கம் சென்றது அதுதான் முதல் தடவை. ஆகவே சுற்றுமுற்றும் கண்ணோட்டம் செலுத்திய வண்ணம் வீட்டின் வாசலில் வந்து நின்றார் அவர். ஒருமுறை லேசாகக் கதவைத் தட்டினார். மறுகணம் கதவு திறந்துகொண்டது. கலவரமடைந்த முகத் தோற்றத்துடன் கதவினருகில் நின்று கொண்டிருந்தாள் காந்திமதி. அவளுடைய முகம் வெகுவாக