கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2022

130 கதைகள் கிடைத்துள்ளன.

பதவி

 

 நம்பிநாதன் ஆபிஸ் நாற்காலியில் கம்பிரமாக உட்கார்ந்து இருந்தார்,கம்பனி உரிமையாளருக்கான எல்லா தகுதிகளும் அவரிடம் இருக்கு என்று நினைக்க வைக்கும் தோற்றம் அவருடையது,உயரம்,மாநிறம்,உடல் பயிற்சி செய்யாத உடல் எடை,கண்களின் ஊடுருவும் தன்மை,பார்ப்பதற்கு மற்றவர்கள் பயப்படுத்தும் தோற்றம்,எதிரில் நிற்க கூட சிலர் தயங்குவார்கள்,கரடுமுரடான தொண்டையில் பேசும் ஆங்கிலம் கூட கத்துகின்ற மாதிரியே இருக்கும் மற்றவர்களுக்கு,அந்த பயத்தில் நடுங்கி தான் போவார்கள் அனைவரும்,அவருக்கு கீழ் வேலை செய்பவர்கள் அவரை கண்டால் கப்சுப் என்று அடங்கிவிடுவார்கள்,அவர் ஆபிஸில் வந்து உட்கார்ந்தால்,ஒரு சின்ன சத்தம்


கிடா

 

 முட்டன்கிடா. மட்கிய கம்பிளியின் கொச்சைவாடையுடன் தாடிதழைய குறுங்கொம்புடன் நின்று பர்ர் என்று செருக்கடித்தது. முன்காலால் தரையை இருமுறை உதைப்பதுபோல பிறாண்டித் தலையைக் குனித்து வாசனை பிடித்தபோது அதன் மூக்கு நெளிந்தது. அதன் ஒவ்வொரு அசைவிலும் கம்பீரம். சிதம்பரம் அதனருகே நெடுநேரம் நின்றுவிட்டான். பின்பு கொஞ்சம் துணிவுடன் அதை நோக்கிக் கையை நீட்டினான். கனத்த உறுமலுடன் கிடா இரு கால்களையும் தூக்கி ஆக்ரோஷமாக முட்டவந்தது. அவன் சட்டென்று பின்னால் நகர்ந்துகொண்டான். இல்லாவிட்டால் அபப்டியே தூணோடு அவனைச்சேர்த்து நசுக்கியிருக்கும். யாரும்


சூனியம்

 

 (1967 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மந்திரத்தினால் ஒருவனை நீண்டகால நோயாளியாக்கலாம்; சிந்தனையை மாற்றலாம், இழந்த சிந்தனையைப் பெறவைக்கலாம்; பெரிய அற்புதங்களைச் செய்யலாம் என வாதிடப்படுகிறது… நான், ஒரே இறைவன் என்ற மேலான ஏகத்துவக் கொள்கையில் பூரண விசுவாசி. ஆவதும் அவனாலே; அழிவதும் அவனாலே என்ற தத்துவம் எனக்குத் தெரியும், பார்பப்பகம்மன் பான் நான் கூறப்போகும் இச்சம்பவத்தை இப்பொழுது நினைத்தால் ஒரு பக்கம் சிரிப்பும், ஒரு பக்கம் வேதனையும் தான்


அடங்காப் பிடாரி

 

 (1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு ஊர்ல – ஒரு அடங்காப்பிடாரி இருந்தா. ஒருத்தங்கூட, அவளக் கல்யாணம் முடிக்க வரல. வராம இருக்கவும், அவளோட தாயிக்கு ஒரே வருத்தம். இவள எங்குடாச்சும் புடுச்சுக் குடுக்கலாம்ண்டா , ஒருத்தங் கூட வரமாட்டேங்குறானேண்டு வருத்தப்ட்டுக்கிட்டிருக்கா. ஒருநா, தொல தூரத்ல இருந்து ஒருத்த, பொண்ணு கேட்டு வந்தர். இந்தச் சந்தர்ப்பத்த விடக் கூடாதுண்டு, சரி பொண்ணத் தரோம்ண்டு சொல்லிட்டா. சொல்லவும் கலி யாணம்


கதையில வில்லன் இருக்க கூடாது

 

 வாங்க டைரக்டர் சார், நாம ஒரு படம் பண்ணனும், அதை பத்தி பேசறதுக்குத்தான் உங்களை வர சொன்னேன். உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லையே. எனக்கொன்னும் ஆட்சேபணை இல்லை, மூணு மாசம் கழிச்சு ராமய்யன் தயாரிப்புல படம் பண்ணி தர்றேன்னு டயம் கொடுத்திருக்கேன். அதனால அதுக்குள்ள உங்களுக்கு ஒரு படம் பண்ணி தர்றேன். தெரியும் தெரியும், அதான் உங்களை இப்ப புடிச்சேன், கதை ஒண்ணு தயார் பண்ணுங்க, கதை கதை மாதிரியும் இருக்கணும், இல்லாத மாதிரியும் இருக்கணும், எங்கியோ


கைக்கு கை மாறும் பணமே…!

 

 “குடும்மா..! ஏம்மா.? நான் குத்துக்கல்லாட்டம் பக்கத்துல நிக்கயில நீ போயி தண்ணில கைய வச்சு இதெல்லாம் கழுவிகிட்டு..! நவுரு…” சாதாரணமாய் நான் எப்போதாவது இதுபோன்ற வேலைகளை செய்தால் ‘ எனக்கென்ன ‘ என்பது போல் கண்டும் காணாமல் போவாள் பொன்னி.. “அம்மா காயி ஏதாவது அரியணுமா..சொல்லு… நேத்தே தேங்கா துருவணும்னு சொல்லிக்கிட்டிருந்தியே..குடு..துருவிக் குடுத்துட்டு போறேன்…” பிடுங்கி பிடுங்கி வேலை செய்கிறாளே… “ஏம் பொன்னி…! இன்னும் மூணு வீடு போகணும்..வரட்டா..வரட்டா “ன்னு கால்ல வென்னீர கொட்டிட்டு பறப்பியே !


நண்பர்கள் வேண்டும்

 

 தன் முன் வந்து நின்றவனைப் பார்த்தார் குரு. “வாழ்க்கையே வெறுப்பாய் இருக்கிறது, குரு” “ஏன்? என்னாச்சு? நல்லாதானே இருந்த? சாஃப்ட்வேர் கம்பெனில நல்ல வேலை, நிறைய சம்பளம், அமெரிக்கா, இங்கிலாந்துனு பறந்துட்டு இருந்தியே!” “எல்லாம் நல்லா போறா மாதிரிதான் இருந்துச்சு குரு. ஆனா இப்ப பாத்தா யாருமே என் கூட இல்ல. தனியாளா நிக்கிற மாதிரி இருக்கு” குருவுக்கு வந்தவனின் பிரச்சனை புரிந்தது. அவனுக்காக ஒரு கதையை சொல்ல ஆரம்பித்தார். வியாபாரி ஒருத்தன் குடும்பத்துடன் பிக்னிக் போனான்.


எதிர்வீட்டு ஏந்திழை!

 

 ‘அந்த’படம் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து மனசு குறுகுறுத்தது. உடம்பின் சூடு சுரம் அடிப்பதைப் போல கொதித்தது. தட்டினால் தெறித்து விடும் வீணையின் கம்பி போல உடல் அதிகமாய் முறுக்கேறியது. மனைவியைத் தலைப் பிரசவத்திற்காக பிறந்தகத்திற்கு அனுப்பி இருக்கும் இந்த வேளையில், தண்ணி,’பலான’படங்கள் பார்த்தால் இந்த மாதிரியெல்லாம் ஓன்று கிடைக்க ஒன்று செய்து அவஸ்தைப் வேண்டி வரும் என்ற நினைப்பில்தான் மூன்று மாத காலமாக நண்பர்கள் பார்ட்டிக்கு வற்புறுத்தி அழைத்தும் நழுவி நழுவி வந்தேன். அவர்கள் இரண்டு நாட்களாக அடித்த


அடிக்ட் – ஒரு பக்க கதை

 

 “இதென்ன வீடா சினிமா தியேட்டரா..??” நந்தினியின் எதிர்பாராத தாக்குதலில் மூவரும் நடுங்கினார்கள். குற்ற உணர்வோடு தலை குனிந்து கொண்டார்கள். “என்னதான் மனசுல நெனச்சிக்கிட்டிருக்கீங்க.. நீங்க செய்யிறது உங்களுக்கே நல்லாருக்கா..” வால்யூமைக் குறைத்தார்கள். “எதிர்த்த வீட்டு கோபு சார் மாதிரி டிவியே கூடாதுன்னு கண்டிப்பா இருந்திருக்கணும். அவர் அப்பிடி ஸட்ரிக்டா இருக்கறதுனாலதான்..அவங்க வீட்டு குழந்தைங்க ஆன்லைன் வகுப்புகளை நாள்பூரா உருப்படியா அட்டண்ட் பண்ண முடியுது..” உண்மை சுட்டது. ‘எப்படிச் சமாளிப்பது’ என யோசித்தார்கள். இது ஒரு நாள் கோபம்


மனமாற்றம்

 

 (1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “டாக்டர் இன்று வருவதாகச் சொன்னாரே, வந்தாரோ?” “வந்தார், லக்ஷ்மி.” “உம்… லேடி டாக்டரைப் பார்த்தாராமா?” “பார்த்தாராம்.” “அவள் என்ன சொன்னாளாம்?” “ஆப்பரேஷன் பண்ணத்தான் வேணும் என்றாளாம்.” “ம்…..ம்…” “இல்லாவிட்டால் பிரயோசனப்படாது என்றாளாம்.’ “ம்……ம்….” “டாக்டரும் ஆப்பரேஷன் பண்ணிக்கொள்வதுதான் நல்லது என்று அபிப்பிராயப்படுகிறார்.” “ம்………..” “ஒன்றும் பயமில்லை என்றார். ரொம்பச் சின்ன ஆப்பரேஷன் தானாம்.” “பயமில்லேன்னாலும்….. குளோரபாரம் கொடுத்துத்தானே ஆப்பரேஷன் பண்ணுவா?” “ஆமாம். என்றாலும்,