கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 21, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

வெளியில் எல்லாம் பேசலாம்

 

 நாட்டு நிலைமை காரணமாக சோபை இழந்து காணப்பட்ட இலக்கிய விழாக்களும், நூல் வெளியீடுகளும் மீண்டும் களைகட்டத் தொடங்கியிருந்தன. இணையத்தளம் ஒன்றில் வெளியாகியிருந்த சிறுகதை ஒன்றில் மூழ்கியிருந்த என்னை மனைவியின் குரல் உலுக்கியது. ‘என்னப்பா இருக்குறீங்க. நூல் வெளியீட்டுக்கு போகவேணும் என்டனீங்கள்….. என்ன வெளிக்கிட இல்லையோ?’ ‘மறந்தே போயிட்டனப்பா. நல்ல காலம் ஞாபகப்படுத்தினீர்’ என்றபடி சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தேன். ‘இன்னும் அரை மணித்தியாலம்தான் இருக்கு……’ என்னுள் நினைவுகள் ஓட அவசரமானேன். ‘சரி நான் போயிற்றுவாரன் சுதா’ என்று


பிலிப்பு

 

 குடிசைக்குள் மயான அமைதி. கட்டிலில் வதங்கிய செடியாகப் படுத்திருக்கும் பிலிப்புவின் வெறிச்சோடிய பார்வை. படுக்கைக்கு முன் நான் மட்டும் தனியாக நாற்காலியில். பக்கவாதக் கணவனை விட்டுவிட்டு எங்குதான் போயிருப்பாள் வேதம்? மணி ஐந்து. வேதத்தை இரண்டாந்தாரமாக பிலிப்பு கல்யாணம் செய்துகொண்டபோதுதான் நான் கடைசியாக இந்தக் குடிசைக்கு வந்தது. ‘பிலிப்பண்ணே..’ ஐந்தாவது முறையாகக் கூப்பிடுகிறேன். பார்வையில் உணர்ச்சியற்ற லேசான அசைவு. அவ்வளவுதான். பளிச்சென்ற சுத்தமான தரை. பினாயிலின் மெலிதான நெடி. பக்கவாத நோயாளியின் வீடு என்று நம்புவதற்கு கடினமாக


பாலிடிக்ஸ் ப்ளஸ் டூ!

 

 ஆந்திர குருட்சேத்திரத்தில் தெலுங்குதேச மன்னர் கலியுகக் கிருஷ்ண பரமாத்மா என்.டி.ராமா ராவ் அவர்கள் தெலுங்குதேச ஊழியர்களுக்காக அரசியல் கல்லூரி ஒன்று ஆரம்பிக்கவேண்டும்’ என்று திருவாய் மலர்ந்தருளியிருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. ராமராவ்காருவின் மேற்கூறிய ஆசை அகில இந்திய ரீதியில் செயலாக்கப்படவேண்டிய விஷயம் என்று தோன்றுகிறது. இதைக் கல்லூரியோடு மட்டும் நிறுத்தக் கூடாது. அரசியல் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் ஆரம்பித்து அரசியல் ‘கிண்டர் – கார்டன்கள்’ அரசியல் ‘ப்ளஸ்-டூக்கள்’, அரசியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் என்று தோன்ற வேண்டும். அட ராமாராவே! (அட


M.D மார்த்தாண்டி

 

 எனக்கு கொடுத்த அசைன்மென்ட்… பின்னால் அலைந்து ஓரளவுக்கு கண்டு பிடித்து விட்டேன். யார் இந்த M. D மார்த்தாண்டி. My Dear மார்த்தாண்டி தான் காலப்போக்கில் அவராகவே மாற்றிக் கொண்டு M. D மார்த்தாண்டி ஆகி விட்டார். பொதுவாகவே எந்த இலக்கிய நிகழ்வுக்கும் பார்வையாளராகவே சென்றாலும் மேடையில் ஒரு மூலையில் சேர் கேட்கும் அஷ்டாவதானி. மூன்று இஞ்ச்க்கு ஒப்பனை குறைந்து விட்டால் அன்று அவரின் அத்தனை களேபரங்களும் ரத்து செய்யப்படும். நான் யாரு… இவுங்கல்லாம் ஏன் இப்டி


கல்பனாவின் மேல் ஏன் இந்த வெறுப்பு?

 

 எப்பொழுதுமே என்னை தலைக்கனம் பிடித்தவன், பிடிவாதக்காரன், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று விவாதிப்பவன், இப்படியாக என்னென்னமோ என்கிறார்கள். சொல்லட்டுமே, விருதுகளை வெறுத்தவன், ஆரவாரமான வரவேற்புகளை நிராகரித்தவன், இது போதாதா என் தலைக்கனத்துக்கும், பிடிவாதத்திற்கும். இவன் எழுதும் இலக்கியம் புரியவில்லை, இப்படி கூப்பாடு போட்டு புலம்புவர்களும் உண்டு, அவர்கள் எல்லாம் என்னை போன்ற எழுத்தாளர்கள் தான். அவர்களுக்கு என் மீது கிலேசம், அதனால் அப்படி சொல்கிறார்கள், நான் அதற்கெல்லாம் கவலைப்பட்டு கொண்டிருப்பதில்லை. பார்த்தீர்களா நான் எதையோ


ஒரு எலெக்ஷன் கதை

 

 (1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கோட்டூர் ஜில்லாவுக்குத் தலைநகரமாகிய கோட்டூரில் முன்பு காட்டாஞ்சேரி என்று சொல்லி வந்து இப் போது சில வருஷமாய் ஜேம்ஸ்பேட்டை என்று புதுப் பெயர் கொண்ட ஆதித்திராவிடத் தெருவில், ஸபளையர் சீரங்கன் என்பவன் அங்கே குடியிருந்த முப்பது ஹரி ஜனக் குடும்பங்களுக்குள் கொஞ்சம் நல்ல ஸ்திதியி லிருந்தான். அனேகமாய் ஜேம்ஸ் பேட்டையில் குடி யிருந்தோர் அனைவருமே சோனைமலையில் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி


மானுஷ்யம்

 

 (1995 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கருக்கலைப் புணரும் காலைப் பொழுது. இரவு கவிந்த பனி, மொட்டை மாடியை நனைத்திருந்தது. மாடியில் நின்று சூழலை வெறித்ததில் நேரம் கரைந்தது. நெடிதுயர்ந்த பனைக ளும், சவுக்கும் எட்டி நின்று காற்றில் அசைந்தன. உயரத்தில் நின்று பார்த்ததால், ஊரின் நடுப்பகுதி தெளிவாய் தெரிந்தது. வயோதிபர் சிலரது பதுங்கிய நடமாட்டத்தை அதிகாலைத் தெரு அசிரத்தையுடன் ஏற்றது. இயற்கை உபத்திரத் தீர்வுக்காய் இந்த விடியலில், இவர்கள்


தெருவிளக்கு

 

 (1994 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கடைத் தெருவுக்கு வந்த செல்வராசன் சந்தியில் அப்படியே நிலை குத்தி நின்றுவிட்டான். அவன் விழிகள் இரண்டும் வியப்பால் விரிய, தாங்கமுடியாத அதிசயத்தால் அவன் வாயும் சற்று அகலத் திறந்துகொண்டது. “சந்தியில் நிண்டு கொண்டு என்ன விடுப்பே பாக்கிறாய்? பாரத்தோட சயிக்கிலில வாறன், விலகாமல் மாடுமாதிரி நடுச் சந்தியில. அங்கால போடா” என்று சத்தமிட்டு ஏசியவாறு ஒரு சயிக்கில்காரன் விறகுச் சுமையோடு வேனைக் கடந்து


ராசாக்கிளி

 

 (1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு நாட்ல – ஒரு ராசா இருந்தாரு. அந்த ராசாவுக்கு ஒரு மந்திரி இருந்தாரு. காடாரு மாசம் – வீடாறு மாசம் ஆண்டுகிட்டு இருக்காரு. காட்ல ஆறுமாசம் வாழணும். நாட்ல ஆறு மாசம் வாழணுங்றது முனிவரோட சாபம். ராசா காட்ல இருக்கயில, மந்திரி நாட்ல எல்லாத்தயும் பாத்துக்கிருவாரு. ராசா காட்ல இருக்கபோது, ராசாவுக்கு தொணக்கி, ஒரு ஆசாரிய போகச் சொல்வாரு. எப்பயுமே; அந்த


ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 5 | அத்தியாயம் 6 மறு நாள் காலை சென்னையிலிருந்து புறப்பட்ட காஞ்சீபுரம் ரயிலில் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் அமர்ந்து பிரயாணம் செய்து கொண்டிருந்தார் துளசிங்கம். அந்தப் பெட்டியில் அவர் ஒருவர் தான் இருந்தார். நிம்மதியாய் பிரயாணம் செய்வதற்கு வேண்டிய சௌகர்யங்கள் அனைத்தும் இருந்தன. ஆனால் அவர் அப்பொழுது அமைதியிழந்து காணப்பட்டார். தில்லைநாயகத் தின் மரண வழக்குதான் அப்பொழுது அவருடைய மூளையை