கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 15, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

பனிப்போர்

 

 அன்று இரவு, எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. காரணம், என்னவென்றும் சொல்லத் தெரியவில்லை. இப்போது தூக்கத்திற்கே என்னைப் பிடிக்கிறது. ஆனால் எனக்குத்தான் இந்தத் தூக்கத்தைக் கண்டாலே பிடிக்கவில்லை. தூங்கக்கூடாது என்று ஒரு எண்ணம் தூக்கத்தின் மீது ஒரு எரிச்சல், என்ன வந்தது எனக்கு? இந்தப் பூமியில் விழுந்த அந்த நாளிலிருந்து, இதோ இப்போது எழுந்து நிற்கும் இந்த நாள் வரை நானும் தூக்கமும் கடும் சினேகிதர்கள். கடும் சிநேகிதம் கண்ணைக் கெடுக்கும் என்பது போல் ஆகிவிட்டதா? தூங்குகிற ஒரு


சர்ப்ப வியூகம்

 

 அனல் பறக்கும் வயல் வெளியை உற்று நோக்கியவாறு அமர்ந்திருந்தான் திரவியம். வெறுமையின் தகிப்பில் வயல்வெளி பாலை என நீண்டு கிடந்தது. வெப்பத்தால் இலை கருகியும், புழுதிப் புயலில் அடிபட்ட பசுந்தளிர்கள் கூட மண் பூத்த செந்நிற மரங்கள் வரியமைத்து அடிவானின் விளிம்பாக காட்டெல்லை தெரிந்தது. வயலின் வரம்புகள் மனிதனின் காலடியே படாத கன்னி நிலமென, உடைந்தும், சிதறியும், கரணை கட்டிகளாயும், உருக்குலைந்து கிடக்க…. நெருஞ்சி, தொட்டாற்சிணுங்கி, கிடைச்சி எனப் பரவி, பூக்களாய்ச் சிரித்து முட்களாய்ச் சிலிர்த்திருந்தன. திரவியம்


காவியம் கண்ட மாவிலித் தேவி

 

  ஆசிரியர் குறிப்பு: ஆறு. ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பது பழமொழி. அழகிய ஈழமணித் திருநாட்டின் மத்திய பாகத்திலிருந்து ஆறுகள் நானாபக்கமும் பாய்கின்றன. இந்த ஆறுகளிற் பெரியதும் பெருமை மிக்கதும் மகாவலி நதிதான். மாவலி என்றதும் கிழக்கு மாகாணமும்- குறிப்பாக அந்நதி சங்கமமாகும் கொட்டியாபுரக் குடாவும், நதியின் சங்கமத்தில் ஆற்றிடை மேடாய் அமைந்த, மூதூர்ப் பகுதியும் ஞாபகத்திற்கு வருதல் இயல்பு. மூதூர்ப் பகுதி மக்களின் வாழ்வும் வளமுமே அந்நதியேதான்! மத்திய மலை நாட்டில் உற்பத்தியாகி கீழ்க்கரையை


வாழ்விற்கே ஒரு நாள்

 

 “கா, கா” என்று கரையும் சப்தம் கேட்டது. விடிந்துவிட்டதோ என்று சுப்பையா முதலியார் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தார். வெளியிலோ, ஷவரிலுள்ளிருந்து விழும் நீர்க்கம்பிகளைப் போல, சுக்லபக்ஷத்து நிலவு ‘பொருபொரு’வெனச் சொரிந்து கொண்டிருந்தது. ஏதோ சொர்க்க சொப்பனம் போல், உலகம் அந்த அமைதியினூடே படுத்துக்கிடந்தது. நில வொளியைப் பார்த்து விடிந்துவிட்டது என்று ஏமாந்த அந்தக் காக்கை, அந்த நிர்மலமான வானவெளியில் பீதியுடன் சிறகடித்துச் சென்றது. “சே! நிலவு இன்னும் இறங்கக்கூட இல்லியே. அதற்குள் எப்படி விடிஞ்சிரும்?” என்று மனதை


நடுவீதி நாயகன்

 

 இன்றும் நான் தினந்தோறும் வேலைக்குப் போகும் போதும் பணி முடிந்து திரும்பி வரும்போதும், குறிப்பிட்ட அந்த இடத்திற்கு வரும்போது, என்னை அறியாமலேயே என் கவனம் அந்தப் பக்கம் திரும்பி கண்கள் குத்திட்டு நிற்கும். என் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து நிரந்தரமாகிவிட்ட, ஒரு நினைவுச் சின்னமாகிவிட்ட அந்த இடம். சென்னை, ராயப்பேட்டை மருத்துவமனையை ஒட்டிக் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்துக்கு அடியில் இருக்கிறது அந்த இடம். ஊர் பெயர் தெரியாத அநாதைகள், பகல் முழுதும் வீதியெல்லாம் அலைந்து திரிந்து பிச்சை எடுத்து,


மனம் தளராத முயற்சி…

 

 ”குருவே, எனக்கு சில லட்சியங்கள் இருக்கின்றன. அவற்றை அடைவது எப்படி?” என்று ஆர்வமாய் கேட்ட இளைஞனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “லட்சியங்களை அடைய நீ என்ன செய்திருக்கிறாய்?” என்று கேட்டார். “என்ன செய்வதென்று தெரியவில்லை” என்று சொன்ன இளைஞனுக்கு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார் குரு. ‘ஜப்பானில் ஒரு இளைஞன் இருந்தான். அவனுக்கு மோட்டார் தொழிலில் ஆர்வம். இயந்திரங்களை சரி பார்க்கும் திறமை அவனிடம் இருந்தது. அந்த சமயம் ஜப்பானில் டோயோட்டா கம்பெனி துவக்கப்பட்டு பிரபலமாகிக் கொண்டிருந்தது.


அப்பக்கடை நடக்கிறது

 

 ஹாய்… ஹாய். கோழியளும் விடாதுகளாம். இந்த அப்பத்தைச் சுெட்டு ஒப்பேற்றிப்போட்டு ஒருக்கால் கோயிலடிக்கும் போட்டு வரலாமெண்டால்… வாணை செல்லாச்சி. என்ன அப்பம் வாங்கவோ? கொஞ்சம் இரணை, சுட்டுத்தாறன். இண்டைக்கு எழும்பவும் பிந்திப்போச்சு; கடைசி வென்ளிக்கிழமையாகவும் கிடக் குது; ஒருக்கால் சன்னதி கோயிலுக்கும் போட்டு வர வேணும், பிறகு செல்லாச்சி எப்பிடி உங்கட பாடுகள். ஓ நீ சொன்னது மெய்தான். அப்பம் சுட்டு விக்கிறதிலை இப்ப ஒண்டும் அவ்வளவு ஆதாயமில்லை. எனக்கென்ன வீடுகட்ட, கார் வாங்கவே காசு? அண்டாடம்


சித்திரம்

 

 (1946 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இந்தக் கதை நிகழ்ந்த காலத்தில் பிரும்மதேசம் (பர்மா) ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்படவில்லை. அப்பொழுது அதற்குத் தனியாக ராஜாவும், ராணியும் இருந்தனர். மந்திரி, பிரதானி சதுரங்கசேனை யாவும் இருந்தன. அவர்கள் தங்கள் நாட்டைத் தாங்களே ஆட்சி புரிந்தார்கள். மாண்டலே அதற்குத் தலைநகராக இருந்தது. ஆனால் ராஜவம்சத்தைச் சேர்ந்த பலர் தேசத்தின் வெவ்வேறு நகரங்களில் வசித்துவந்தனர். அவர்களில் ஒருவன் வெகு நாட்களுக்கு முன்பே பெகுவுக்குத் தெற்கே


கூனி சுந்தரி

 

 (1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? இந்த மாதிரியான வேலைகளில் இறங்குவது அபாயம். கமலம். வேண்டாம். நான் சொல்வதைக் கேள்.” “ஒரு அபாயமும் இல்லை. காமு. நம் கையெழுத்து அவருக்குத் தெரியுமா? தெரிந்தாலுமென்ன? பார்க்க லாமே ஒரு வேடிக்கை!’ “சரி, நீயே எழுது கமலம். என் பேனா ஓட வில்லை .” “கொடு இங்கே . நான் எழுதுகிறேன். இதில் என்ன கஷ்டம்”. இவ்வாறு


பாதிக் குழந்தை

 

 (1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “உலகமெல்லாம் தேடினேன் ஒரு மனிதனை கூடக் காண வில்லை!” என்று யாராவது சொன்னால் அவனைப் பைத்தியக் காரன் என்றோ தான் உலகம் முடிவு கட்டும். ஆனால் மனிதனைப் போல் அலங்காரம் செய்து கொண்ட பயங்கர மிருகங்கள் தான் உலகத்தில் அதிகம் என்று சொன்னால் அதை யாவரும் மறுக்க மாட்டார்கள். நல்ல பாம்பு என்று சொல்வதனால் அதனிடம் விஷமில்லை யென்று சொல்ல முடியுமா? அது