கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 9, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

சுடலை

 

 அவன் உக்கிரமான சுடலை மாடன். ஆலமரம் கவிந்திருந்த அந்த சுடுகாட்டு முகப்பில் தெற்குப் பார்த்து நின்ற கோபக்காரச் சுடலை. கல்லில் வடித்த சிலைதான். மீசையின் முறுக்கு, வலது கையில் பிடித்து நெற்றிக்கு மட்டமாய் உயர்த்திய வெட்டரிவாளின் எடுப்பு, மேல் வரிசைப் பற்களில் இருந்து நீண்டு – வறுத்து உடைத்த கொல்லாங் கொட்டைப் பருப்பின் பிளவாய் – வீரப்பற்கள்; கோபத்தில் கனிந்து சிவந்து தெறிக்கும் பாவமாய் கண்கள்…. நல்லொரு வேலைக்காரன் போல் முறுகித் தெரிந்த கைகால்கள், வரிகள் ஓடும்


பட்சி

 

 பிறர் எழுதுவதை எட்டிப் பார்ப்பது அநாகரீகம். என்றாலும் ரயில் பயணத்தின்போது அருகில் இருக்கும் ஒருவர் சுற்றுப்புறத்தை மறந்து எதையோ எழுதும்போது, அதுவும் ‘பட்சி’ என்ற தலைப்பிட்டு அதை எழுதும்போது – ஒரு சிறு ஆர்வம் ஏற்படத்தான் செய்தது. ஒரு வழியாக அவர் எழுதுவதை நிறுத்திவிட்டுத் தலைநிமிர்ந்தபோது என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ‘‘‘ஒரு மணி நேரமா எதையோ மிகுந்த ஈடுபாடோடு எழுதறீங்க. கதையா? கட்டுரையா?’’ என்றபோது அவர் முகத்தில் ஒரு சிறு மலர்ச்சி உண்டானது. ‘‘கதைதான்…’’ என்றார். தொடர்ந்து


பிழைப்பு

 

 ஆடி மாசம் பொறந்திடிச்சி பூசாரிக்கு அம்மன் கோயில் திருவிழாவை முடிக்கிற வரைக்கும் பிரசவவலிதான். தனிக்கட்டைதான் கோயில் காரியமே கதின்னு கிடக்கிறவரு. ஆடித் திருவிழாவுல இந்த வருஷம் எப்பவும் போல ராமு பிரஸ் தான் நோட்டீஸ் உபயம். அத வாங்கத்தான் இந்த உச்சிவெயில்ல நடையா நடந்து அச்சகத்துக்கு வந்திருக்கிறாரு. செருப்பை வெளியில கழட்டிப் போடுறப்பவே உள்ளே தரகரும், ஜோசியரும் பேசிகிட்டு இருந்தது அவர் காதில் விழுந்தது. வாய்கயா என்ற ஜோசியர் திருவிசா முடியிற வரைக்கும் உங்க கால் தரையில


நியாயம்

 

 தேவ இறக்கம் நாடார் – அவருக்கு வல்லின இடையினங்களைப் பற்றி அபேத வாதக் கொள்கையோ, தனது பெயரை அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என்ற ஆசையோ, எதுவானாலும் அவர் எப்பொழுதாவது ஒரு தடவை இந்த ‘டமிலில்’ எழுதுவது போலவே எழுதி விடுவோம். நல்ல கிறிஸ்தவர். புரோட்டஸ்டாண்ட், ஸர்கில் சேர்மனாக இருந்து, மிஷனில் உபகாரச் சம்பளம் பெற்று வருபவர். இந்த உலகத்திலே கர்த்தருடைய நீதி வழங்கப் பெறுவதற்காகப் பாடு பட்டதனால் ஏற்படப்போக இருக்கும், இந்த உலகத்தின் பென்ஷனை எதிர்பார்த்திருக்கிறார். ராஜ


காலம்

 

 குளிரூட்டப்பட்டிருந்த அந்த பிரமாண்டமான அரங்கத்தில் வசீகரமாய்,அங்குள்ள ஒரு சில பெண்களின் மனதை கொள்ளை கொள்ளக்கூடிய தோற்றத்துடன் சுகேஷ். பிரிட்டிஷ் காரர்களை தோற்கடிக்கக்கூடிய விதத்தில் ஆங்கிலத்தில் சொற் பொழிவாற்றிக்கொண்டிருந்தான். நீங்கள் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். தெரியும் கண்டிப்பாய் உங்கள் கைபேசியில் கலர் கலராய் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். தவறாக நினைக்க வேண்டாம். கைபேசியில் ஏதோ ஒரு புத்தகத்தை பிரித்து ஏதோ ஒரு கதையை படித்து விட்டு அதற்கு ஒரு கமெண்ட்ஸ், இல்லை, ஒரு லைக் என்று போட்டு விட்டு அடுத்த


சிறை

 

 நாவரசு வரிசையில் தட்டுடன் நின்றான்,அவன் அந்த சிறைக்கு வந்து சில நாட்களே ஆகின்றது,அவர்கள் போடும் பழுப்பு நிறமான சாதமும்,ஊத்தும் குழம்பின் மணமும் அடிவயிற்றை பிரட்டும் அவனுக்கு,ஏதும் சொன்னால் பிறகு இந்த சாப்பாடும் கிடைக்காது என்பது அவனுக்கு தெரியும்,சத்தம் இல்லாமல் தட்டில் சாப்பாட்டை வாங்கிகொண்டு,வரிசையை தாண்டி வரும் போது,ஒரு சிலரின் குத்தலாக பேச்சி காதில் விழுந்தது,ஏய் மச்சான் அவன் ஒரு மாதிரியானஆளு,ஏதோ ரேப்பிங் கேஸாம் கவனம் என்று நக்கலாக சிரித்தார்கள்.நாவரசு அமைதியாக போய் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து சாதத்தை


நண்பன்

 

 காலையிளங்காற்று உடம்பில் பட்டதால் எற்பட்ட புத்துணர்வு சுகமாக இருக்கிறது. வெளியில் உலகம் விடிந்து விட்டதற்கான சந்தடிகள் கேட்கின்றன.படுக்கை அறைக்குள் இருளும் ஒளியுமான ஒரு கலப்பு வெளிச்சம். திறந்திதிருந்த ஜன்னல் ஊடாக குளிர்மையான தென்றல் தவழ்ந்து கொண்டிருக்கிறது.ஆனால் என் உடம்பின் எரிவு அதன் குளிர்மையை மிகப் படுத்துவதால் ஏற்படும் விறைப்பினால் போர்வையைத் திரும்பவும் இறுக்கிக் கொள்கிறேன்.காயம்பட்டு புண்ணாகி வலி தரும் எனது காலை மெல்லமாக உயர்த்த முயல்கிறேன்.தாங்க முடியாவில்லை,அவ்வளவு வலி. மெல்லமாகத் திரும்புகிறேன்.திரும்பியதும் பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியின் மெல்லிய-ஒரே


டைரி

 

 அவனுக்கு அடுத்தபடியாக இருந்தவன் பச்சை பெயிண்ட் அடித்த மாதிரி டை கட்டியிருந்தான். உள்ளே போகும் வரை டையை தடவிக்கொண்டே இருந்தான்.. முன்னாடி அந்த கதவுக்கு மேலே சின்ன கண்ணாடியில் வெள்ளெழுத்தில் கோ.நமச்சிவாயம்.., எம்.டி..ஓட்டிக்கொண்டிருந்தது.. இரண்டு பக்கமும் வெள்ளை சோபாக்கள்.. மேலே தொங்கிக்கொண்டிருக்கும் கூம்பு பல்புகள்.. இடதுபுறம் வெள்ளை நிற விரிப்புடன் ஒரு மேசை.. முன்புறம் அதே வெள்ளை நிற சொகுசு இருக்கையில் அந்த சிவப்பு பெயிண்ட் அடித்த உதடுகளுடன் உட்கார்ந்திருந்தவள் “ஆர்.பிரபு..” என்று சொற்களை வழியவிட்டாள்.. இவன்


மறதி

 

 கோலாலம்பூர் வீதிகளில் அலைய வேண்டியிருக்கும் என்று சவுமியா நினைத்துப் பார்த்ததில்லை பத்து வருடங்களுக்கு முன்பு. மலேசியக்காரர் ஒருத்தர் பொண்ணு கேட்கிறார் என்று அவளின் காதுகளில் விழுந்த போது பரவசமாய் இருந்தது. சிங்கப்பூருக்கு உள்ளூரில் இருந்து இரண்டு பெண்கள் வாழ்க்கைப் பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களும் தூரத்து வீதியைச் சார்ந்தவர்கள். நேரிடையாகப் பழக்கமில்லை. மலேசியா அதற்குப் பக்கம் என்று சொல்லிக் கொண்டார்கள். பூமிப்பந்தின் சிறு பகுதிக்கு அவள் அரசகுமாரி ஆவது போல் கனவுக்குள் மிதந்தாள். மலேசியக்காரர் இரண்டு மூன்று இடங்களில்


எமன்

 

 அன்று திங்கட்கிழமை. மயிலாப்பூர். அன்று மாலை தான் இறக்கப்போவது பாவம் மூர்த்திக்குத் தெரியாது. மூர்த்தி காலையிலேயே எப்போதும்போல் சுறுசுறுப்பாக எழுந்து, ஒன்பது மணி அலுவலகத்திற்கு கிளம்பத் தயாரானான். மனைவி மற்றும் ஒரே மகளை நேற்றுதான் ஒரு திருமணத்திற்காக ஸ்ரீரங்கம் அனுப்பி வைத்திருந்தான். பாத்ரூமில் கண்ணாடி முன் நின்று ஷேவ் பண்ணிக் கொண்டிருந்தபோது, அவனுக்குப் பின்னால் புஷ்டி மீசையுடன் திடீரென ஒரு புராணகால உருவம் காணப்பட்டது. அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தான்… “பயப்படாதே… நான்தான் எமன் மிஸ்டர் மூர்த்தி… இன்றுடன்