கோவில் சாமியார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 9,122 
 

நெடுஞ்சாலையின் ஓரமாய் மலர்ந்திருக்கும் மலரைப் போன்று மலர்ந்த முகங்களுடன் நின்ற மக்கள் கூட்டம். அவர்களின் பார்வை எல்லாம் நெடுஞ்சாலையில் செல்லும் ஊர்தியின் மீதே பட்டுக் கொண்டிருக்க, மக்களின் பார்வை மெல்ல மெல்ல ஓர் ஊர்தியின் மீது திரும்பின. அவ்வூர்தியோ தன் பயண வேகத்தைக் குறைத்து சாலையின் ஓரமாய் நின்றது. ஊர்தியின் கதவுகள் படக் படக் எனத் திறந்ததும் இரு சீடர்களுடன் இறங்கினார் குமரக்குடி சாமியார். சாமியார் மீதே ஊர் மக்களின் பார்வை எல்லாம் ஓர் வியப்புடன்-பட்டது. நீண்ட பெரும் கூந்தலைச் சுழற்றிப் போட்ட சடை, நெற்றியில் நிரம்பிய திருநீற்றுப் பட்டை, பார்ப்போர் வியக்கும் வகையில் தேகத்தில் பூசிய சந்தன விபூதிக் கலவை என காவி உடையும் கனகனத்த கண்களும் ஊர் மக்களை மெய் சிலர்க்க வைத்தன.

unmai - Mar 16-31 - 2010

சாமியாரோ தன் இமைகளை மெல்லத் திறந்து மக்களை நோக்கிப் பார்த்தார். ஒரே அதிர்ச்சி, என்ன இது? இரு ஊராரும் தாம் இருக்கையில் இவ்வளவு ஒற்றுமையாகவா? என்ற மனக்குமுறலுடன் தன் சூழ்ச்சிப் பயணத்தை மக்களை நோக்கித் தொடர்ந்தார். மக்களோ சாமியாரின் வருகையை ஒட்டி, வரவேற்பு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தனர். தொலைவில் உள்ள அக்குக்கிராமத்திற்குக் கரடு முரடான பாதையில் கால்நடையாகவே சென்றார். இரு ஊர்களின் தர்மகர்த்தாக்களும், மக்களைப் பஞ்சாயத்துத் திண்ணைக்கு வருமாறு கட்டளை இட்டனர். சாமியாரின் அழைப்பை ஏற்று அனைவரும் திண்ணையின்முன் கூடி நின்றனர். சாமியாருக்கோ கண் உறுத்தல் அதிகமானது; இருப்பினும் சுதாரித்துக்-கொண்டார்.

உங்களின் பிரச்சினைகள் யாவும் நான் அறிவேன். அதை எல்லாம் தீர்த்து இக்கிராமத்தை முன்னோடி கிராமமாக மாற்றவே, என்னை எல்லாம் எல்ல இறைவனான சிவனே அனுப்பி வைத்துள்ளார். நான் சொல்லும்படிச் செய்தால் உமது அத்தனை பிரச்சினைகளும் தீரும் என்று ஆசை வார்த்தை கூறினார். என்னை நம்புங்கள்: நம்பியோருக்கு நான் நடராஜா நம்பாதோருக்கு நான் எமராஜா என்று அச்சத்தின் பிடிப்புச் சொல்லையும் கூறினார். மக்கள் யோசிக்கத் தொடங்கினர். மக்கள் யோசித்தால் நம்மை மடமையாக்கி விடுவார்கள் என்று கருதிய சாமியார், உங்களின் இரு ஊர்களுக்கும் பொதுவாக ஒரு கோவில் கட்டிவிட்டால்_ அதுவும் சிவன் கோவில் கட்டிவிட்டால் பெய்யா மழையும் பொழியும் சிந்தாப் பண்டமும் சிதறும்.

unmai - Mar 16-31 - 2010உங்களின் பிரச்சினைகள் யாவும் தீர்ந்துவிடும் என்று சாமியார் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருக்க, நடுவில் ஒரு முதியவர் எழுந்து நின்று அய்யா நீங்க சிவன் கோவிலைக் கட்டினா மழை வரும்னு சொல்றீங்க, அதை நாங்க எப்படி நம்புவது? ஒரு வேளை, செலவு செய்து கோயில் கட்டி மழை வராமப் போயிடுச்சின்னா என்றார். அதற்குச் சாமியார், அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நம்பிக்கையுடன் கோவிலைக் கட்டுவோம்; மழை பொழியவில்லை எனில் என்னைக் கேளுங்கள் என்றார். அப்போது கிருதா மீசைக்காரர் ஒருவர், அய்யா நீங்க என்ன செய்யச் சொல்றீங்களோ அதனை நாங்கள் முழுப் பொறுப்பேற்றுச் செய்கிறோம். நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அதை மட்டும் சொல்லுங்கள் என்றார்.

பொறுத்திருந்து பார் பக்தனே உண்மை புரியும். நான் முதலில் இடத்தைத் தேர்வு செய்கிறேன். பின்பு, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறுகிறேன். ஊர்களின் பல பகுதிகளைச் சுற்றிப் பார்த்த அவர், சாமியாருக்கு ஏற்ற வசதியுடன் கூடிய ஒர் அமைவிடம் கிடைக்காததால், சரி நாளைக்குப் பார்ப்போம் என்று திரும்பினார். புலிப்-பட்டிக்குச் சொந்தமான ஓர் குளத்திற்குப் பக்கத்தில் சிவன் கோவிலைக் கட்டினால் நமக்கு நன்மையாக இருக்குமே என்று எண்ணியவாறே ஊர்மக்களை ஒன்று திரட்டினார் சாமியார்.

நான் இடத்தைத் தேர்வு செய்து விட்டேன். இனி உங்களுக்கான வேலை வந்து விட்டது. நீங்க என்ன செய்ய வேண்டும் என்கிறதையும் இப்போதே கூறுகிறேன். கோவில் கட்டுவதற்கு ஊரில் உள்ள அனைவரிடமும் ரூபாய் பத்தாயிரம் பெற வேண்டும் என்று சாமியார் தெளிவாகக் கூறிவிட்டதால், ஊர் முழுவதும் இருப்பவர் இல்லாதவர் என்ற வேறுபாடுகள் ஏதும் (இதில் மட்டும் கெட்டிக்காரர்கள்) பார்க்காமல் வசூல் வேட்டையைத் தொடங்கினர்.

ஆறு ஆண்டுக்காலமாக மழை இல்லை. உணவு உண்பதற்கே வழியில்லா நிலையிலும் வசூல் வேட்டை ஓயவில்லை. தர முடியாமல் தவிக்கும் மக்களிடம், கொடுத்தால் கொடுங்கள் இல்லையெனில் சக்தியுள்ள சிவனே பார்த்துக் கொள்ளட்டும் என்று முழங்கும் புத்தியற்றவரின் வார்த்தைகளைக் கேட்டு, பக்தி மயக்கத்தில் ஏழை மக்கள் பசி அறுத்தும் மற்றவர்களிடம் கடன் வாங்கியும் கொடுத்தனர். எப்படியோ ஒரு வழியாக நிதியும் திரட்டி ஆகிவிட்டது. திரட்டிய அனைத்தையும் இரு ஊர்களின் தர்மகர்த்தாக்கள் முன்னிலையில் சாமியாரிடம் ஒப்படைத்தனர். சாமியார் கோவில் கட்டுவதற்குப் பூமி பூசை போட வேண்டும் என்பதற்காக நல்ல நாள் ஒன்றைத் தேர்வு செய்யச் சொல்லிச் சீடர்களிடம் கூறினார்.

கட்டிய கண்களில் இருளை நீக்க கதிரவன் உதித்தான் கிழக்கே. ஆனால், மக்களின் அறிவோ மங்கியதாகவே இருந்தது. பூமி பூசைக்குத் தேவையான பொருள்கள் அனைத்தும் தயார் நிலையில் இருந்தன. குமரக்குடி சாமியாரும் பூசையின் முன் அமர்ந்தார்.

அப்போது, என்ன இது இந்த இடத்தில் ஒரே கூட்டம் என்றவாறே பொறியாளர் குமார் கூட்டத்தின் அருகாமையில் சென்று அக்கும்-பலைச் சற்று விலக்கிப் பார்த்தார். அங்குதான் அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைய அடிக்கல் நாட்டிய இவ்விடத்தில் இப்படியோர் மூடத்தனமா என்னும் உள்ளக் குமுறல் அறிவைத் தட்டியது.

அய்யா என்ன நடக்குது இங்கே? இங்கென்ன ஒரே கூட்டம் என்று கண்கள் மூடியிருந்த சாமியாரை நோக்கி வார்த்தைகள் பாய்ந்தன. சாமியார் தன் இமைகளை மெல்லத் திறந்து பார்த்தார். கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெரியவர் யார் தம்பி நீங்க? உங்களுக்கு என்ன வேண்டும்? ஷூ காலோட இங்க வந்திருக்கிறதப் பார்த்தா நீங்க சாமி கும்பிடாதவன் போலத் தோணுது. தேவை-யில்லாம எங்க விசயத்தில தலையிடாதீங்க என்றார்.

அய்யா இந்த இடம் அரசுக்குச் சொந்த-மானது. இங்க நீங்கதான் அரசாங்க இடத்த அபகரிச்சிருக்கீங்க. இந்த இடத்தில் அரசு மருத்துவமனை வரப்போகுது. அதற்கான பொறுப்பாளரும் பொறியாளருமா என்னை அரசாங்கம் நியமித்திருக்கிறது. இந்த இடத்துல மருத்துவமனை கட்டி முடிக்கும்வரை நான் இங்கதான் இருப்பேன் என்றார் குமார்.

நீங்க கட்ற மருத்துவமனை எங்களுக்கு என்ன செய்யும்? இந்தக் கோவிலைக் கட்டினா எங்களுக்கு மழை பெய்யும். உன்னால மழை பொழிய வைக்க முடியுமா என்றார் பெரியவர்.

மடையர்களை எப்படித் திருத்துவது என யோசித்த குமார், என்னய்யா சொல்றீங்க, உங்களுக்கு ஒடம்புக்குச் சரியில்லன்னா எட்டு மைல் தூரம் நடந்து போறீங்க இல்ல. இந்த இடத்துல ஒரு மருத்துவமனை இருந்தா இந்தத் துன்பத்திற்கு ஆளாகாம இருக்கலாம் இல்ல. இன்றைக்கு மருத்துவ வசதி, நாளைக்கு சாலை, பேருந்து வசதின்னு உங்க கிராமமே முன்னோடி கிராமமாத் திகழாதா? இந்த ஆறு வருடங்-களுக்குள்ள மட்டும், உங்களுடைய கிராமங்-கள்ல அறுபது பேருக்கு மேல நோய்வாய்ப்பட்டு இறந்து போயிருக்காங்க. இந்த மாதிரி அசம்பாவிதம் எதுவும் இனிமேலும் நிகழக்-கூடாதுன்னு ஒரு தனி மனிதன் தடுத்தால் அவன் குற்றவாளியா? எவனோ, ஓர் ஏமாற்றுப் பேர்வழிச் சாமியார் சொன்னா மட்டும் உங்களுக்கு எப்படியா நம்பிக்கை வருது (சாமியாரின் விழிகள் பிதுங்கின) என்றார்.

எதையும் சுலபமா நம்பாதீங்க, எந்த விஷயமா இருந்தாலும் அதன் ஆரம்ப நிலையில் இருந்து நடுநிலையில் பரிசோதிக்க வேண்டும் என்கிற பெரியாரின் பொன்மொழியைக் கேட்டிருந்தா இவன் சொன்னப்பவே நீங்க கல்லால் அடிச்சி விரட்டி இருப்பீங்க. இங்க கோவில் கட்டினா பாதி ஏக்கர் நிலம் வீணாகுமே ஒழிய விவசாயம் செழிக்காது. இந்த மாதிரி முட்டாள் தனத்தாலதான் நம்ம நாட்டுல அறிவு வளர்ச்சி என்கிறதே எட்டாக் கனியா இருக்கு. இனிமே நீங்கதான் யோசிக்கணும் என்று சொல்லி விடை பெற்றார் குமார்.

மக்கள் யோசித்தால் ஆபத்து நமக்குத்தான் என்று கருதி, மீண்டும் சதியைக் கிளப்பினார் சாமியார். ச்சே இன்னிக்கு யாகமே கெட்டுப்போச்சி. இனிமே இந்த ஊர் எல்லாம் என்ன ஆகுதுன்னு பாருங்க என்று ஆவேச முகத்துடன் எழுந்தார். குமார் சொன்னதை யோசித்துக் கொண்டிருந்த மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கி, சாமியாரைச் சமாதானம் செய்ய முற்பட்டு சம்மதத்தைப் பெற்றனர். மற்றொரு-நாள் நல்ல நாளாகத் தேர்ந்தெடுக்கலாம் என்று கூறிய சாமியாருக்குத் தன்னை திட்டிய குமாரைப்பற்றிய நினைவு வந்தது. இருள் சூழச்சூழ சாமியாரின் நித்திரை கண்களைச் சிவக்க வைத்தது.

அதிகாலையில் அய்யா அய்யா நேற்று நாம பூசை நடத்திட்டு இருந்தப்ப குமாருன்னு ஒருத்தர் வந்து தடுத்தாரே அவர் நாம கோவில் கட்டப் பூசை போட்டோமே அதே இடத்துல இறந்து கிடக்காரு அய்யா… என்று சாமியாரிடம் ஓடி வந்தான் கருணன்.

குமாரின் சடலத்தை ஊர் மக்கள் அனை-வரும் வந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, பயங்கர ஓசையுடன் குமரக்குடி சாமியாருக்குச் சாமிவந்தது. டாய் இனிமே யாராச்சும் தடுத்தீங்க இதவிடக் கொடூரமாத்தான் அடிபட்டுச் சாவிங்க என்று கூறியவாறு கீழே விழுந்தார். விழுந்த சாமியாரை மக்கள் தூக்கி நிறுத்தினர்.

மக்களுக்குப் பய பக்தி முத்திப் போனது. திட்டமிட்டபடியே பூமி பூசை செய்து கோவிலும் கட்டி முடிக்கப்பட்டது. கும்பா-பிஷேக ஏற்பாடுகள் எல்லாம் பலமாக நடந்து கொண்டிருக்க, மழை கொட்டித் தீர்த்தது. (ஆனால் விவசாயம் செழிக்கவில்லை. பெய்த மழை அமில மழை)

ஒரு நாள் சிலையின் கழுத்தில் போடப்பட்ட நகை ஒன்று காணாமல் போனது. புலிப்பட்டி மக்களுக்கு அச்ச உணர்வு அதிகரிக்க இனிமேல் புளியாஞ்சேரி மக்களைக் கோவிலுக்குள் நுழையக்-கூடாது என்று கட்டளை இட்டனர். பதறிப்போன அவ்வூரின் மக்கள், அது எப்படி முடியும்? எங்களுக்கும் இதில் சம உரிமை உண்டு; நாங்களும் சரிசமமான வரிப்பணம் கொடுத்திருக்-கிறோம்.

அதைத் திருப்பிக் கொடுங்கள் என்று உரிமையுடன் கேட்டனர். தர முடியாது என்று மறுத்-துரைத்தனர் புலிப்பட்டியைச் சார்ந்த-வர்கள். இரு ஊராரின் இடைவெளிகள் அதிகரித்துக்-கொண்டே இருக்க, பல இடத்தில் மோதல் முட்டிக்கொண்டது. மோதல்கள் கலவரமாக உருமாறியது. கலவரத்தின் வேகத்தைக் கட்டுப்-படுத்த முடியாமல் காவல் துறை தத்தளித்தது. ஏனெனில், போக்குவரத்து சாலை வசதிகள் அவ்வாறு அமைந்துவிட்டன. மருத்துவ வசதி இல்லாததால் வெட்டுக் காயம்பட்டு வீழ்ந்தோ-ரையும் காப்பாற்ற முடியவில்லை. ஒற்றுமை உணர்ச்சியும் சமத்துவமும் பெருகி நின்ற அந்த இரு ஊர்களின் நாய்களையும், பூனைகளையும் மட்டுமே விட்டுச் சென்றது ஓணாய்க் கூட்டம்.

– செப்டம்பர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *