கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 5, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

அகதி

 

 அவசரமாக நிலக்கீழ் தொடரூந்திலிருந்து இறங்கி படைகளில் ஏறினேன். ‘பின்னேரம் வேலைக்கும் போகவேணும்’ ‘அதுக்குள்ள எத்தனை அலைபேசி வந்திருக்குமோ தெரியாது’. சனக்கூட்டம் அதிகமாக இருந்தது. எல்லோரின் முகத்திலும் அதே அவசரம்… சிலர் கைகளில் அன்றைய தினசரி…புத்தகம்,சிறிய அல்லது பெரிய கைப்பை..அதை விட அலைபேசியை நோண்டியபடி வருவதும் போவதுமாய் இருந்தனர். இரண்டு மூன்று எனப் படிகளில் காலை வைத்துவிட்டேன். கடகடவென்று மேலிருந்து வந்தவன் இடித்துவிட்டு ஏதும் நடவாதது போல கீழிறங்கினான். எதுவுமே அவனிடமிருந்து வரவில்லை…இடித்ததற்கான சமாதானம் அவனிடமிருந்து இல்லவே இல்லை.


அன்னப்பறவை வாகனம்

 

 ஆவடி நகராட்சி துவக்கப்பள்ளியில் நாலாம் வகுப்பில் படிக்கும் காத்தமுத்துக்கு பள்ளிக்கூடம் செல்ல விருப்பம் அதிகம். அதற்கு மூன்று முக்கியமான காரணங்கள். முதலாவது மணக்க மணக்கக் கிடைக்கும் மதிய உணவு. அடுத்தது வீட்டிலிருந்து பள்ளிக் கூடம் போகும் வழியில் சாலையோரம் நிறுத்தி வைத்திருக்கும் விதவிதமான அலங்காரங்களுடன் கூடிய வாகனங்கள். கடைசியாக பத்தாம் வகுப்பில் படிக்கும் ஸ்டீபன் அண்ணன். பள்ளிக் கூடத்தில் போன வருடம் மைதானத்தின் ஓரத்தில் இருந்த அந்த கழிப்பறையில் சிறுநீர் கழித்து விட்டு வகுப்புக்கு வரும் போது


இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்…எல்லாம் சௌக்யமே…!!!

 

 இந்த உலகத்திலேயே இலவசமாக கிடைக்கக் கூடிய விஷயம் என்னவென்றால் உபதேசம் மட்டுமே.அது கேட்காமலேயே தாராளமாகக் கிடைக்கும். “ஒரு வாரமாக பசியே எடுக்கல.” இப்படி சொல்லிப் பாருங்கள்.. “ஸார்.இது கண்டிப்பா கேஸ் டிரபிள் ‘ தான்.நீங்க என்ன பண்றீங்க… வெறும் வயத்தில ஒரு கிளாஸ் தண்ணில.. இரண்டு மூணு இஞ்சி துண்டு..கொஞ்சம். ..பட்டை..பொடிச்சு போட்டு…”என்று ஆரம்பித்து.. “ஸார்..இது வெறும் அஜீரணக் கோளாறுதான்… சாப்பிட்டதும் ஒரு வெத்தலைல ஒரு சின்ன பூண்டு பல்லை வச்சு … மென்னு முழுங்கி பாருங்க…மூணேநாள்தான்”


மலைக்காளி

 

 மலைக்காளிக்கோவிலின் முற்றத்துத் திண்ணையில் காளிதேவியும் ஆனந்தனும் சும்மா அமர்ந்திருந்தனர். இங்கிருந்து பார்த்தால், 610 பாறைப் படிக்கட்டுகளுக்குக் கீழே இருக்கும் மலையடிவாரக் கடைகளும் அவற்றுக்கு அருகே அமந்திருக்கும் சிற்றாலயங்களின் கோபுர முகப்புகளும் தெரியும். மலையடிவாரத்தில் மக்கள் நடமாட்டம் குறைவாகத்தான் இருக்கும். விடுமுறைக்காலங்களில் மட்டும் கூட்டமே மிகும். அங்குள் சிற்றாலயங்களில் மக்கள் நுழைவர். ஆனால், மக்களுள் மிகச் சிலர்தான் பாறைப்படிகளில் ஏறி மலைக்காளிக்கோவிலுக்கு வருவார்கள். அவ்வப்போது இளங்காதலர்கள் தங்களின் கைகளைக் கோத்தபடியே மகிழ்ந்து பேசிக்கொண்டே, பாறைப்படிகளில் ஏறி நூறு அல்லது


புதியவர்கள்

 

 இந்திரன்,மட்சூ,கந்தா,விமல்.மூர்த்தி …ஒன்றாய் சேர்ந்தே திரிகிற‌ வகுப்பு. அவர்களுடன் சம வயதிலிருந்த சாரதா ஆளுமை கூடியவளாக இருந்தாள்.’அக்கா’போன்ற நிலை. கந்தா, அவளிடம் நிறைய கேள்விகளை கேட்டு திணறடித்துக் கொண்டிருந்தான்.”நீங்களும் சாதாரணப் பெண் தானே.வெளியில் எங்களைப் பார்த்தால் ,பார்க்கக் கூடாத ஐந்துவைப் பார்ப்பது போல முகத்தை வேற பக்கம் திருப்பிக் கொண்டு பார்காதது போல போவீர்கள்;திரிவீர்கள்”என்றான்.சாரதா உடனடியாக மறுத்து”நான் அப்படி எல்லாம் இருக்க மாட்டேன்”என்றாள்.”இந்த வருசம் படம் வரைஞர் கோஎஸ் முடிந்த பிறகு பார்க்கத் தானே போறோம்.ரிவேர்ட் பாடங்களுக்கு இரவலாக