கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2014

100 கதைகள் கிடைத்துள்ளன.

வானம் வசப்படும்

 

 வேணு தன் இனிய தங்கை பத்மாவுக்கு, மிகவும் சந்தோஷம் தரக்கூடிய ஒரு நிறைவான திருமண வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு, அப்பாவையும் கூட்டிக் கொண்டு சிவானந்தம் வீட்டிற்கு வந்திருந்தான். அவர்கள் புறப்படும் போது அதிகளவு எதிர்பார்ப்புடன் அவர்களை வழியனுப்புவதற்காக அம்மா மங்களகரமாக வாசலில் வந்து நின்றிருந்தாள். அதற்கப்பால் அறையை ஒட்டினாற் போலிருக்கும் திறந்து கிடந்த ஜன்னல் கம்பிகள் நடுவே கண்களும் முகமும் திருமணக் களையேறிச் சிவந்து கிடக்கப் பத்மா தன்னை மறந்து கனவு காணும் பிரமையோடு, உயிர்


முள்

 

 கணேசன் அண்ணன் வீட்டுக்குப் போவது என்றாலே எப்போதும் பிரியம்தான் இவனுக்கு. கணேசன் ஒன்றும் கூடப்பிறந்த அண்ணனோ உறவு ஜனமோ இல்லை அவனுக்கு. எக்ஸ்சேஞ்சில் கூட வேலை செய்பவர். சீனியர். திருவண்ணாமலையிலிருந்து வந்து தங்கிய புதுசில் அண்ணன் அண்ணன் என்று கூப்பிட்டுப் பழக்கம். அதே உறவு முறையில்தான் கணேசன் மனைவி லீலா இவனுக்கு அண்ணியானதும்; குழந்தைகளுக்கு இவன் சித்தப்பாவானதும். வாசலில் இறங்கும்போதே இவனைத் தேன்மொழிதான் முதலில் அடையாளம் கண்டு கொள்ளும். ‘அய்…சித்தப்பா வந்தாச்சி ‘ என்று சந்தோஷம் புரள


சாதிகள் இல்லையடி பாப்பா

 

 “சாதிகள் இல்லையடி பாப்பா….குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் இரண்டாம் வகுப்புக்குத் தமிழ் பாடம் படிப்பித்துக் கொண்டிருந்த தர்மலிங்கம் மாஸ்டர் இரண்டாம் வகுப்புத் தமிழ் புத்தகத்திலிருந்த இப்பாடலை இராகத்தோடு பாடினார்.இராகமாகப் பாடினாலும் குரலில் உணர்ச்சியோ சுருதியோ இல்லை கேலித்தனம் தொனித்தது.. அவர் பாடி முடித்ததும் மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து அதனைப் பாடினார்கள் இரு கைகளையும் தட்டி, ஒரு காலால் நிலத்தில் தாளம் போட்டு உற்சாகமாகப் பாடிக் கொண்டிருந்த மாணவர்களின் குரலில் பாட்டின் பொருளைப் புரிந்து கொண்ட உணர்ச்சி தெரிந்தது.


தங்கச்சி மடம்

 

 சென்னையில் நான் பரோட்டா சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் இந்த பரோட்டா வித்தியாசமாக இருந்தது. இதைச் சப்பாத்திக் கட்டையால் தேய்த்து, தோசைக்கல்லில் சுடுவதில்லை. மாறாக, தேய்க்காமலேயே உருண்டை வடிவத்தில் எண்ணெய்ச் சட்டிக்குள் போட்டு வடை சுடுவதுபோல் சுட்டு எடுக்கிறார்கள். நல்ல சுவை. நான் இந்த ஊருக்கு மூன்றாவது முறையாக வந்திருக்கிறேன். தங்கச்சி மடம். இராமேஸ்வரத்தில் உள்ள ஒரு பகுதி. புதிதாக யார் வந்தாலும் அந்த ஊரில் கால்சட்டை போடாத குழந்தைக்குக் கூட தெரிந்துவிடும். முதல் முறை வந்தபோது எல்லோரும் ஒரு


பாரின் சரக்கு பாலிசி

 

 கூரியரில் மோதிரம் வந்தது. அருணகிரிக்குக் கத்த வேண்டும் போலிருந்தது. கண்டேன் சீதையை என்று அனுமன் கத்தியது சம்பந்தமில்லாமல் ஞாபகம் வந்தது. “ அடப்பாவி கிளம்பீட்டியா “ என்றுதான் கத்தினான்.உடனே அவளைப் பார்க்கவேண்டும் போல் இருந்தது. கைபேசியை முடுக்கினான். மஞ்சள் சுரிதாரில் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் தேவி..முப்பது வய்தில் அவள் முகத்தில் இல்லாத அழகையெல்லாம் அவன் கண்டிருக்கிறான் தினம் நூறு குறுஞ்செய்திகள் அனுப்பிய காலம் உண்டு. பிரியலாம் என்று கூட ஒரு குறுஞ் செய்தியில் சொல்லித்தான் பிரிந்தார்கள்.