விழியே ‘கொலை’ எழுது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: January 26, 2024
பார்வையிட்டோர்: 2,292 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

டைம் பாமை சரியாக பதினொரு மணி இருபது நிமிடத்திற்கு அட்ஜஸ்ட் செய்து தன் படுக்கையறையின் கட்டிலின் கீழே வைத்து விட்டு கீழே இறங்கினாள் மைதிலி. சாப்பிட்டு விட்டு கையைத் துடைத்துக்கொண்டு வந்த ராஜீ, “ஏன் மைதிலி ஒரு மாதிரி இருக்கிறாய்” என்று கேட்டார்.

“ஒன்றுமில்லை நீங்கள் போய் தூங்குங்கள். நான் எதிர் வீட்டில் சித்ராவிற்கு உடம்பு சுகமில்லை என்று சொன்னாள். பார்த்துவிட்டு வருகிறேன்” என்று கிளம்பி வெளியே வந்தாள்.

‘இன்றோடு இந்த இடத்தில் என் வாழ்க்கையை கழற்றிக்கொண்டு போய் என் காதலன் சுரேஷோடு வாழ வேண்டும். இந்தக் கிழவனோடு எத்தனை நாள்தான் மாரடிப்பது. கண்டிப்பாக இவனுக்கு காதல் புரியாது. இவன் தீர்ந்தால் தான் என் வாழ்க்கையில் வசந்தம் வரும்’ என்று எண்ணித் தெருமுனையில் விளக்குக் கம்பத்தின் அடியில் நின்றவாறு தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நேரம் வேகமாகக் கடந்து பன்னிரண்டு மணி தாண்டி. விட்டது. தெரு முழுக்க கும்மிருட்டு. எங்கையோ நாய் குரைக்கும் சப்தம் கேட்டது.

‘இன்னும் குண்டு வெடிக்கவில்லை’ என்ன செய்வதன்று புரியாமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த மைதிலி, இரவு மணி இரண்டு தாண்டியும் தான் வைத்த டைம் பாம் வெடிக்காமல் போனதில் எரிச்சலும் கோபமுமாக வீட்டிற்குள் வந்து கீழேயே படுத்துக் கொண்டாள்.

சூரியனின் கதிர்கள் முகத்தில் சுளீளன்று அடிக்க, “என்ன மைதிலி கீழே தரையில் படுத்துக் கொண்டிருக்கிறாய்? உடம்புக்கு சரியில்லையா?” என்றவாறு மாடியிலிருந்து இறங்கி வந்தார் ராஜீ.

‘சே யாரைக் கொல்ல டைம் பாம் வைத்தேனோ, அந்த மனிதன் கல்லு மாதிரி நடந்து வருகிறான்’ என்ற கோபத்தோடு, “ஒரே வயிற்று வலியாக இருக்கிறது?”என்றாள் போலியாக.

“ஏதாவது மாத்திரை சாப்பிடக் கூடாதா? நான் வேண்டுமானால் லீவு போட்டு விட்டு உன்னோடு இருந்து உதவி செய்கிறேன்” என்றார் ராஜீ.

‘இந்த மனுஷன் வேலைக்குப் போனால் படுக்கையறையில் வைத்திருக்கும் டைம்பாம் என்னாச்சு என்றவாறு பார்க்கலாம்’ என்று நினைத்துக் கொண்டே காலை டிபனை சமைக்க ஆரம்பித்தாள்.

“நீ போய் தூங்கு மைதிலி, நான் சமையல் வேலைகளை செய்கிறேன்.” என்றவாறு ராஜீ டிபன் செய்து அவளுக்கும் கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டு விட்டு ராஜீ, “நான் போய் மார்க்கெட்டில் காய்கறி வாங்கி வருகிறேன், நீ தூங்கு” என்றவாறு கையில் பையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினார்.

வேகமாக படுக்கையறைக்கு வந்து மைதிலி கட்டிலின் கீழ் குனியவும் டைம் பாம் வெடித்து சிதறவும் சரியாக இருந்தது. அவள் உடலின் ஒரு பகுதிகூட முழுசாக கிடைக்கவில்லை. டைம்பாம் வாங்கியவள் இரவு 11:20-க்கு டைம்பாமில் 23:20 என்று வைக்க மறந்து போனதால், அவளே உலகத்தை விட்டு போய்விட்டாள்.

– 2001, தினபூமி – ஞாயிறுபூமி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *