கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 4, 2013

27 கதைகள் கிடைத்துள்ளன.

யானையும் சுண்டெலியும்…

 

 காட்டில் ஒரு குளத்தின் உள்ளே இறங்கி யானை ஒன்று குளித்துக் கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த சுண்டெலி ஒன்று, யானையைப் பார்த்து, “நீங்க குளித்தது போதும்! மேலே வாருங்கள். எனக்கு சாமி தரிசனம் செய்ய நேரமாகிவிட்டது’ என்று அதட்டலாகச் சத்தம் போட்டது. யானைக்குக் கோபம் வந்தது. “டேய், பொடியா, நீயா என்ன விரட்டுகிறாய்? என் முன்னே வா… உன்னை மிதித்துப் போட்டு விடுகிறேன்…’ என்று கூறியது. “என்னை மிதிப்பது இருக்கட்டும்…. என் கடவுள் வழிபாட்டுக்குக் குறுக்கே நிற்காதீர்.


புதிய நீதி…

 

 காட்டுக்குள்ளே திருவிழா! மிருகங்களுக்கெல்லாம் அன்று ஒரே கொண்டாட்டம். ஆடல், பாடல்,விருந்து என எங்கும் ஒரே அமர்க்களம். பரம எதிரிகளான புலி, மான் போன்ற விலங்குகள்கூட அன்று தங்கள் பகையை மறந்து ஒற்றுமையோடு விழாவினைச் சிறப்பாக்கிக் கொண்டிருந்தன. திருவிழாவென்றால் போட்டி இல்லாமலா? ஆம். ஓட்டப் பந்தயம் ஒன்று ஏற்பாடாகியிருந்தது. இன்னும் சில நிமிடங்களில் பந்தயம் ஆரம்பமாகும் என்று விழாவின் ஒருங்கிணைப்பாளர் நரியார் அறிவித்தார். மைதா னம் பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தது. போட்டியாளர்கள் இரண்டே பேர்தான்! வெண்பஞ்சு முயலும் சிறிய,


அவசரத்தின் விளைவு!

 

 புங்க நாட்டுத் தலைநகரில் புங்கதத்தின் என்ற சோம்பேறி இருந்தான். நல்ல வாலிபன். ஆனால் எந்த வேலையும் செய்யாமல் எப்படி எத்திப் பிழைக்கலாம் என்பதிலேயே குறியாய் இருப்பான். என்ன செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என்ற யோசனையுடன் ஒருநாள் அந்த நாட்டின் காட்டுப் பகுதி ஓரம் உள்ள புளிய மரத்தின் அடியில் அமர்ந்து யோசிக்கலானான். தலையில் திடீரென்று ஒரு புளியங்கொட்டை விழுந்தது. திடுக்கிட்டு எழுந்தவன், மேலே அண்ணாந்து பார்த்தான்… அங்கு ஒரு பச்சைக்கிளி புளியம்பழத்தை ருசித்துத் தின்று கொண்டிருந்தது. அதைப்


இரண்டு கால் எலி

 

 வெளியே போய்விட்டு வீடு திரும்பிய அம்மா, சாப்பாட்டு மேஜையின் அருகே கண்ணாடித் துண்டுகள் கிடப்பதைக் கண்டாள். மேஜையின் அருகே எட்டு வயதான சுந்தரி புத்தகத்திலேயே பார்வை வைத்தபடி இருப்பதையும் பார்த்தாள். “சுந்தரி, மேஜையில் இருந்த கண்ணாடித் தட்டு உடைந்துபோய்க் கிடக்கிறதே! அந்த எலிதான் தட்டைத் தட்டி உடைத்திருக்க வேண்டும்’ என்றாள் அம்மா. சுந்தரி உடனேயே பதில் சொன்னாள்- “ஆமாம், அம்மா, அந்த எலிதான் தட்டைத் தட்டி உடைத்திருக்கிறது…’ அம்மா புன்னகையோடு சுந்தரியைப் பார்த்தாள். u “இவ்வளவு பெரிய


ஓணான் கோட்டை

 

 தான் இருப்பது எந்த இடம் என்று சசிக்குப் புரியவில்லை. உள்ளே ஒரே இருட்டு. கொஞ்ச நேரத்தில் அவனைச் சுற்றி ஜோடி ஜோடியாய் விளக்குகள் முளைத்தன. சுற்றிலும் பார்த்த அவன் பயத்தில் கத்தியே விட்டான். அவனைச் சுற்றி ஓணான்களின் கூட்டம்! எல்லாம் கண்களை உருட்டிச் சுழற்றி அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. பார்த்துவிட்டுத் தலையை ஆட்டிக் கொண்டு மெல்லச் சிரித்தன. சசி எழுந்து ஓடிவிடலாம் என்று நினைத்தான். ஆனால் அவன் ஓணான்களை விடச் சின்னதாக, குட்டியூண்டாக மாறிவிட்டானே! அவனுக்கு