எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 24, 2024
பார்வையிட்டோர்: 4,828 
 

(1993ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

10ஆம் அத்தியாயம் 

சில நிமிட நேரத்துக்குள் தன்னிலையிழந்து விட்ட அவன் தன் செயலுக்காக வெட்கிப்போனான். இவ்வளவு சீக்கிரத்தில் ஒரு பெண்ணினது அழகு தன்னை நிலை குலையச் செய்யுமென அவன் எதிர்பார்க்கவேயில்லை. 

ஒருபடியாகத் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு, இல்லை தங்கச்சி தங்கச்சிலை போன்ற உன்னை விட்டுப் பிரிய அந்தக் கயவனுக்கு எப்படி மனம் வந்தது என்று என்னை மறந்த நிலையில் யோசித்துவிட்டேன். அது தான் அப்படி உன்னை இமைக்காமல் பார்க்கவேண்டி ஏற்பட்டது. என்று பேசிக்கொண்டே தன் கையிலிருந்த பணத்தை எண்ணிப் பார்த்தான். இரண்டு பத்து ரூபா நோட்டுக்களும் மூன்று இரண்டு ரூபா நோட்டுக்களுமாக அவ னிடம் எல்லாமாக இருபத்து ஆறு ரூபாய்தான் இருந்தது. பயணத்திற்குப் போதுமான பணம் இருக்கிறது என்ற திருப்தி ஏற்பட்ட போதும் தன் தங்கைக்கு ஒரு மாற்றுப் புடவை வாங்கிக் கொடுக்கப் பணம் போதாது என்பதை எண்ண அவனுக்குத் துக்கமாக இருந்தது. அவன் கவலையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்தப் புற்றரை யில் கிடந்த இரண்டு கூழாங்கற்களை எடுத்து, நீரில் நனைந்து ஊறிப்போயிருந்த ரூபாய் நோட்டுக்களை அந்த, நகரமண்டபத் திண்ணையில் விரித்து அதன் மேல் அந்தக் கற்களைப் பாரமாக வைத்துவிட்டு அதன் பக்கத்தில் தான் அமர்ந்து கொண்டு பவானி என்று கூறப்பட்ட தன் தங்கையைச் சுவரோரமாகப் படுக்கும்படி பணித்தான். அவளும் சுவரோரமாகத் திரும்பிப் படுத்துக்கொண்டாள். அவர்களைப் போல இன்னும் சில பரதேசிகள் அங்கே. படுத்துறங்கியது அவனுக்குப் பக்கத்துணையாக இருந்தது. 

கற்றூண் ஒன்றுடன் சாய்ந்திருந்த அவன் மெதுவாகத். தன் பார்வையைப் பவானி மீது திருப்பினான். பாவம்… வாயும் வயிறுமாக இப்படிக் கட்டாந்தரையில் ஈரப்புடவை’ யுடன் ஆடிக்காற்றில் நடுநடுங்கப் படுக்கவேண்டிய விதி எதற்காக அவளுக்கு இந்த வயதில் ஏற்பட்டது என்று சிந்திக்கத் தொடங்கினான். கூதலில் நடுங்கிய அவள் உடலை அவன் நன்றாகப் பார்க்கக் கூடியதாக இருந்தது. 

அந்த நிலையில் உமா அவன் கண்முன்னால் நின்றாள். மழைத்தூற்றல் சாடையாக உடலில் பட்டுவிட்டால்கூட துவாலையால் துவட்டி உடைமாற்றி சாம்பராணிப் புகையில் கூந்தலைக் காயவைத்துத்தான் மறுவேலை பார்க்கக்கூடிய வசதி படைத்தவள் அவள். ஒரு நாள் கொட்டும் மழையில் நனைந்து நனைந்து வளவுக்குள் நிறைம்பி நின்ற மழை நீரை வாய்க்கால் வெட்டி அப்புறப்படுத்தியதை தன் படுக்கையறை யன்னல் அறையில் நின்று பார்த்துவிட்டு அடுத்த நாள் மழைவிட்டதும் அவன் வளவுக்குள் வரும் வரை காத்திருந்து அப்பப்பா நேற்று என்னமா மழையில் நனைந்தீர்கள். எனக்கென்றால் ஜன்னி பிடித் திருக்கும். உங்களுக்குத் தடிமல் கூடப் பிடிக்க வில்லையா.. ? இரவு முழுவதும் உங்களைப்பற்றி நான் எவ்வளவு பயந்திருந்தேன் தெரியுமா..? இனிமட்டும் என் கண்முன்னால் நீங்கள் நனையக் கூடாது…. ஆமாம்! அதைப் பார்த்துக்கொண்டு என்னால் கவலைப்படாமல் இருக்கவும் முடியாது. தெரிஞ்சுதா….? என்று குழந்தை போலச் சிணுங்கிக்கொண்டு அன்புக் கட்டளையிட்டபோது அவன் வாய்விட்டுச் சிரித்தான். 

அந்தச் சிரிப்பு அவளுக்கு ஆத்திரத்தை உண்டுபண்ணி யிருக்க வேண்டும். உங்க உடல் கல்லால் செய்யப்பட்டது என்ற எண்ணமாக்கும்?’ என்று அவள் குமுற ‘இல்லை உமா என் உடல் இரும்பாலாக்கப்பட்டுள்ளது’ என்று மறுத்துக் கூற அவள் அவனுடன் கோபித்துக்கொண்டு திரும்பிப் போக ஓரடி எடுத்துவைக்க ‘எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு’ என்ற பாட்டை அவளுக்குக் கேட்கும் படி அவன் பாடியதும் அவள் தன் கோபமெல்லாம் மறந்து மலர்ந்த முகத்துடன் அவன் அருகில் வந்து ‘ரகு உங்கள் உடல் எப்போதும் இரும்பாகவே இருக்கட்டும்.. ஆனால் அதற்குள் இருக்கும் உங்கள் இதயம் மட்டும் இரத் தமும் தசையும் சேர்ந்த மனித இதயமாகவே இருந்து விடட்டும். அதை மட்டும் இரும்பாக்கி விடாதீர்கள் என்று அவள் கெஞ்ச அவன் சரி’ எனத் தலையசைத் ததும் அவனால் என்றும் மறக்க முடியாத நிகழ்ச்சிகள். 

அவளுக்கு அவன் கொடுத்த வாக்குறுதி கயிறறுந்த காற்றாடி போல எங்கோ எந்த மூலையிலோ போய்ச் சிக்கிக்கொண்டு விட்டது. இன்று அவன் தன் உடலுடன் சேர்த்து இதயத்தையும் இரும்பாக்கிவிட்டான். அல்லது வாழ வழி…? 

என்னை மன்னித்துவிடு என்று அவன் உள்ளம் அழுதபடியே கூறியது. சிந்தனையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்த அவன் அதற்கு மேலும் தனிமையில் அமர்ந்திருக்க முடியாதவனாய்க் காயவைத்த ரூபா நோட்டுக்களைத் திரும்பவுந் தன் மடிக்குள் சொருகிக் கொண்டு காலை நீட்டித் தலையைத் தூணுக்கு முட்டு கொடுத்தபடி கண்ணயரத் தொடங்கினான். 

மீண்டும் அவன் கண்விழித்தபோது கிழக்கு வானம் வெளுத்துக்கொண்டிருந்தது. கதிரவன் உதயமாவதற்குரிய அறிகுறிகள் தோன்றிக் கொண்டிருந்தன. பறவை இனங்கள் இன்னிசை எழுப்பியபடி ஆகாயத்தில் பறந்து செல்ல எங் கிருந்தோ வந்த கோயில் மணியோசை ‘டாங் டாங் ‘ என விடியப் போவதை அவனுக்குக் கட்டியங் கூறியது. இரவு இருளில் மங்கிக் கிடந்த சுற்றுப்புறம் இப்போது தெளிவடைந்து கண்ணுக்குப் புலப்படத் தொடங்கியிருந் தன. தூரத்தே தண்ணீர் ‘சலசல’ என ஒழுகுஞ் சத்தம் கேட்டு அவன் படுத்திருந்த திண்ணையில் இருந்து இறங்கி அந்தப் புற்றரையில் நடந்து தண்ணீர் சத்தங்கேட்ட திசையை நோக்கி நடந்தான். 

இப்போது அவன் ஆடை உடற்சூட்டில் உலர்ந்து விட்டிருந்ததால் குளிர் சற்றுக் குறைவாக இருந்தது. நகர மண்டபத்தின் முன்புறமாக நடு முற்றவெளியில் அமைக்கப் பட்டிருந்த நீர்க்குழாயில் ஒருவர் முகம் கழுவிக்கொண்டிருந் தார். ரகுவும் அந்தக் குழாயடிக்குச் சென்று முகம் கை கால் அலம்பிக்கொண்டு அங்கு நின்றபடியே காளி தேவியை யும், பிள்ளையாரையும், கோணேசரையும் வணங்கி விட்டு மீண்டும் தான் படுத்திருந்த இடத்திற்குச் சென்று ‘தங்கச்சி தங்கச்சி ‘ என்று பவானியை எழுப்பினான். 

அவன் குரல் கேட்காத நிலையில் அவள் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தாள். அவளிருக்கும் நிலையில் அவளை எழுப்புவது பாவமாகப்பட்டது அவனுக்கு. ஆயி னும் தங்கச்சி தங்கச்சி என்றழைத்தான். இம்முறை அவன் குரல் சற்றுப் பலமாக ஒலித்ததால் அவள் திடீர் எனக் கண்விழித்தாள். அதன் பின்புதான் அவளுக்கு இரவு நடந்ததும் தான் முன்பின் தெரியாத ஓரிடத்தில் தூங்கிக் கொண்டிருப்பதும் நினைவிற்கு வந்திருக்கவேண்டும். 

அவள் அவசர அவசரமாக வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் அன்புகலந்த சகோதர பாசத்துடன் பார்த்துக் கொண்டனர். அனேக மாக நன்றாகப் பொழுது புலர்ந்துவிட்டிருந்ததால் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் பார்த்துக்கொண்டனர். ‘தங்கச்சி நேரமாகிவிட்டது வா. குழாயடியில் முகம் கழுவிக்கொண்டு பஸ்ஸுக்குப் புறப்படலாம் ‘ என்று அவன் கூறிக்கொண்டே முன் செல்ல அவள் அவனைப் பின் தொடர்ந்து சென்றாள். 

குழாயடி வெறுமையாக இருந்ததால் பவானிக்கு முகம் கழுவுவது சுலபமாக இருந்தது. அவள் முகங்கழுவிக் கொண்டு முந்தானையால் துடைத்துவிட்டு அவன் காட்டிய வழியில் அவனுடன் நடந்து சென்றாள். அஞ்சலகத்திற்கு முன் இருந்த பஸ்நிறுத்தத்தில் இருவரும் சென்று நின்றனர். பஸ் வருவதற்கு இன்னுங் கால்மணி நேரம் இருந்தது. ரகு பக்கத்துக் கடையிற் சென்று ஒரு பாத்திரத்தில் தேனீர் வாங்கி வந்து அவளுக்குக் கொடுத்தான். பாத்திரத்தைத் திருப்பிக் கடையில் கொடுத்துவிட்டு அவன் திரும்பியபோது பஸ் அவ்விடத்திற்கு வந்தது. இருவரும் ஏறிக் கொண்டனர். அன்று பஸ்வண்டியில் தாராளமாக இடம் இருந்ததால் ஒரு பகுதி ஆசனத்தில் இருவரும் வசதியாக அமர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. 

பஸ் புறப்பட்டது. கூடவே ரகுவின் சிந்தனையும் விரைந்து வேலை செய்யத் தொடங்கியது. கொழும்பு அவனுக்குப் புதிய இடமில்லை. இதற்குமுன் அவன் ஓரிரு முறை கொழும்புக்குச் சென்றிருக்கிறான். ஏதாவது அலு வலாகச் செல்வதால் ஹோட்டலில் தங்கிக் காரியம் முடிந். ததும் திரும்பி விடுவான். இம்முறை அவன் ஹோட்டலை நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது. தனியாளாக இருந்தால்- புகையிராத ஸ்தான தங்குமறையில் காலத்தைக் கடத்தி விடலாம். ஆனால் இப்போதுதான் அவனுக்குப் பெருத்த பொறுப்பொன்றுள்ளதே. பருவப்பெண் அழகி அத்துடன் கர்ப்பமானவள் அவளையும் அழைத்துக்கொண்டு அவன் எங்குச் செல்லமுடியும்…? நாலுபேர் கேட்டால் அவளை அவன் எப்படி அறிமுகப்படுத்துவது. கேட்பவர்கள் அவன் சொல்வதை நம்பவா போகிறார்கள்…? அவனால் இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணவே முடியவில்லை. 

எங்காவது ஒரு ஒதுக்குப்புறமாக ஏழைகளோடு ஏழை யாகத் தங்கிக்கொண்டு எங்காவது வேலை தேடி நாலுகாசு சம்பாதிக்கத் தொடங்கிய பின்புதான் ஒரு அறை எடுத்துக் கொண்டு பவானிக்கு நல்வாழ்வு அளிக்கமுடியுமென்று மனதுக்குள் எண்ணிக்கொண்டான். அதற்கு அவள் சம்மதிப் பாளா என்பது அவன் அடுத்த பிரச்சனையாக இருக்கவே தங்கச்சி நாங்கள் போனதும் எங்காவது ஓட்டைக் குடிசை யில்தான் சில நாட்களைக் கழிக்கவேண்டிவரும். அதற்கப் புறம் அண்ணாவுக்கு ஒரு வேலை கிடைத்ததும் ஒரு நல்ல அறை பார்த்து தங்கச்சியை வசதியாக அண்ணா வாழ வைப் பான். தங்கச்சிக்கு இது சம்மதமா….?” என்று கேட்டு விட்டு அவள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்தான். 

“என்னண்ணா இது…. ஊர் பெயர் தெரியாத ஒரு அநாதைப் பெண்ணுக்கு அன்புகாட்டி அவளை வாழவைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் இவ்வளவு கஸ்டப்பட்டு அழைத்துச்செல்லும் நீங்கள் எங்கே இருக்கச் சொல்கிறீர்களோ அதுதான் எனக்கும் சுவர்க்கம். இராமர் இருக்கும் இடம் தானே சீதைக்கு அயோத்தி” என்று அவள் கூறியபோது அவளை அன்பொழுகப் பார்த் தான் அவன். அந்தப் பார்வையில் நன்றியுணர்ச்சி பெருக். கெடுத்தோடியது. 

அதற்கு மேல் அவன் அவளிடம் எதுவுமே கேட்க: வில்லை. அவள்மேல் அவனுக்கு இருந்த அனுதாபம் இரட். டித்து அன்பாகப் பெருக்கெடுத்தோடியது. என்ன கஷ்டப் பட்டாவது அவளை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டுவருவது இனித் தன்கடமை என்று சங்கற்பம் பண்ணிக் கொண்- டான். மத்தியானம் இரண்டு மணியளவில் பஸ் கொழும் பில் வந்து நின்றதும் பிரயாணிகள் எல்லோரும் இறங்கத். தொடங்கினர். அவர்களோடு சேர்ந்து ரகுவும், பவானியும் இறங்கிக்கொண்டனர். பவானியிடம் ரகு தன் பெயரை ராமு என்றே அறிமுகப்படுத்தியிருந்தான். பக்கத்துக் கடை ஒன்றுக்குள் நுழைந்து மதிய உணவு சாப்பிட்டபின் ரகு தன்னிடமிருந்த பணத்தை எண்ணிப்பார்த்தான். இன்னும் பன்னிரண்டு ரூபாய் இருந்தது. இது இரண்டு நாட்களுக்கு, வயிற்றுப்பாட்டைப் போக்கக் காணும் என்ற எண்ணத்தில் இருப்பிடம் தேடத் தொடங்கினான். 

நடைபாதையால் கால் போனபாட்டிற்கு நடந்து கொண்டிருந்தபோது எதிரே கீரைக்கடகத்துடன் திருநீறு பூசிய நெற்றியோடு ஒரு பெண் வந்துகொண்டு இருந்தாள்.. ரகுவிற்கு அவள் முகம் பிடித்திருந்ததால் அவளை நிறுத்தி” ஒருவாரத்திற்குத் தாங்கள் தங்குவதற்கு வேண்டிய ஒழுங்கு. செய்துதர வேண்டுமென உருக்கமாகக் கேட்டான். அந்தப் பெண் சேரிவாசியாக இருந்திருக்கவேண்டும். அதனால் ரகு தன்னிடம் இருக்க இடம் கேட்டபோது அவள் திகைப் படைந்தாள். ஆயினும் அவர்கள் நிலையைப் பார்க்கும் போது அவர்களுக்கு எப்படியாவது இந்த உதவியைச் செய்யா வேண்டும் என்ற எண்ணம் அவள் மனத்தில் உதித்ததால் “தம்பி உங்களைப் பார்க்கப் பெரிய இடத்துப் பிள்ளை மாதிரியிருக்கு என்னிடம் நீங்கள் இருக்க இடங்கேட்பது எனக்கு விசித்திரமாக இருக்கிறது. உங்கள் இருவர் நிலை யையும் பார்க்க எனக்குப் பரிதாபமாகவும் இருக்கிறது. என்னால் செய்யக்கூடியது ஒரேயொரு உதவிதான். நான் இருப்பது ஒரு சேரி தம்பி. இரண்டு சிறிய அறைகளை யுடைய மண் குடிசை.. பிள்ளைகள் இருவரும் கல்யாண மாகிப் போய்விட்டார்கள். நானும் என் புருஷனுந்தான் இருக்கிறோம். நீங்க விரும்பினால் ஒரு அறையை உங்களுக்கு ஒதுக்கித் தரலாம். அதைவிட மேலாக என்னால் எதுவும் செய்யமுடியாது. என்று அந்தப் பெண் கூறியதும் ரகுவுக்கு அப்பாடா என்ற நிம்மதிப் பெருமூச்சு வெளி வந்தது. ஒட்டுத்திண்ணையாவது கிடைத்தால் போதும் என்றிருந்தவனுக்கு ஓரறையே கிடைப்பதாக இருந்தால்..? 

அந்தப்பெண் அவர்களுக்காக அன்று அந்தக் கீரை முழுவதையும் யாருக்கோ பேரம் பேசிக் கொடுத்துவிட்டு. அவர்களை அழைத்துக் கொண்டு தன் இருப்பிடம் நடக்கத் தொடங்கினாள். மருதானைப் புகையிரத ஸ்தானத்தின் அண்மையில் காணப்பட்ட சேரிகளில் ஒன்றில்தான் அவள் குடியிருந்தாள். அது சேரியாக இருந்த போதும் மிகவுந் துப்புரவாகக் கூட்டிப் பெருக்கப்பட்டுக் குப்பை கூளங்கள் இன்றி வேண்டாத நாற்றங்கள் அற்றுக் குடியிருக்கத்தக்க புனிதத் தன்மையுடன் காட்சி அளித்ததைப் பார்த்த போது ரகுவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்தப் பெண் தன் பெயர் புனிதம் என்று கூறியிருந்தாள். ஆகவே இடமும் அவள் பெயருக்கேற்பப் புனிதமாக இருப்பதாக ரகு நினைத்துக்கொண்டான். 

அந்த மண்குடிசையை அடைந்ததும் வெளிமுற்றத்தில் கையால் இழைக்கப்பட்ட ஒரு ஒற்றை ஓலைப் பாயை விரித்து அதில் ரகுவையும் பவானியையும் அமரும்படி பணித்துவிட்டு அந்தக் குடிசைக்குட் சென்ற சில நிமிடங் களுக்கெல்லாம் அதற்குள் இருந்து வெளிப்பட்ட ஓர் வயோதிபர் அவர்கள் பக்கத்தில் வந்து வணக்கம் தம்பி ! புனிதம் என்கிட்ட எல்லாம் சொல்லிச்சு, நாங்கள் ஏழைகள்; சேரி வாசிகள். எங்களால் ஆன உதவியைச் செய்யறம். நீங்கள் விரும்பும்வரை இங்குத் தங்கியிருக்கலாம் அப்பா ‘ என்று கூறிக்கொண்டே அவர்கள் பக்கத்தில் அமர்ந்து கொண்டார். 

சுற்றிவர வெயில் அனலாகக் கொளுத்திக் கொண் டிருந்தது. அவர்கள் இருந்த இடத்தில் தாவாரம் இறக்கப் பட்டிருந்ததால் வெயில் அவர்கள் மீது ‘படவில்லை. ஆயி னும் உஷ்ணத்தைத் தாங்க முடியாமல் இருந்தது. மாரிக் காலத்திலும் இங்கு வெயில் அதிகமாக்கும்… ரகுவே பேச்சை ஆரம்பித்தான். ஆமாம் தம்பி ! இங்கு நினைத்த நேரம் மழை பெய்யும் ‘ திடீர்’ என வெயில் எறிக்கும். எங்களுக்குப் பழக்கமாகிப் போய்விட்டது. காலையில் மட்டும் சரியான குளிரடிக்கும். அதுதான் எனக்கு ஒத்துக் கொள்ளாது. இன்று காலையில் கூட எனக்கு ரொம்ப இழுக்கத் தொடங்கிவிட்டது. அதனால்தான் புனிதங்கூட இன்று இவ்வளவு சுணங்கிக் கீரை விக்க வந்திடுச்சு அல்லது விடியக்காலைக்கே போயிட்டு இந்நேரம் எல்லாம் வந்திடும். சமைக்கணும் அல்லவா….? பாவம்.. அதுக்கு என்னைக் கட்டிய நாளில் இருந்து சதா கஷ்டந்தான். நல்ல பிள்ளைங்க சிறுவயசா இருக்கிறப்போ நான் கண்டபாட்டுக் குக் குடிச்சிட்டுத் திரிந்தேன். அப்பவும் இந்தத் தொழிலைப் ‘பார்த்து அதுதான் வீட்டைக் காப்பாற்றிச்சுது. பிள்ளைங்க பெரியதாகியதும் நம்பளைக் காப்பற்றுங்கள் என்று மனப் பால் குடிச்சம். இரண்டும் ஆண் குழந்தைகள் அதுகள் வளர்ந்தாப்பல தங்க விருப்பத்துக்கு இரண்டு மனைவி மாரைப் பிடிச்சுக்கிட்டுத் தங்கப்பாட்டுக்குக் களந்திட்டாங்க. இப்ப திரும்பவும் புனிதந்தான் நம்ம குடும்ப விளக்கு அணையாம காப்பாற்றிக்கிட்டிருக்கு ” என்று கூறி முடித்ததும் லொக்கு லொக்கு என்று இருமத் தொடங்கினார் அவர். 

அவர் பேச்சில் இருந்து அவர்தான் புனிதத்தின் கணவர் என்று அறிந்து கொண்டான் ரகு. அதற்குள் அவர் இருமும் “என்னவாந் சத்தங் கேட்டு வெளியே வந்த புனிதம் “தம்பி…. பேசினதெல்லாம் நான் கேட்டுக்கிட்டுத்தான் இருந் தன். இந்த வேதாந்தம் எல்லாம் இப்போ பேசி என்னா செய்ய முடியும்….? இரத்தத் திமிரில் இராப்பகலா குடிச் சுக்கிட்டிருக்கிறப்ப யோசித்திருக்கவேண்டும் இல்லையா தம்பி . . . . ? இப்படித்தான் ஏதாவது அதிகமா பேசி இந்த இருமல் அவரைப் பாடாய்ப்படுத்தி விடும் ‘உம்’ எழுந் திருங்க உள்ளே படுக்கை விரித்திருக்கன் போய்ப்படுத்துத் தூங்குங்க… தம்பி நீயும் தங்கச்சியைக் கூட்டிகிட்டு உள்ள போய்க் கொஞ்சம் படுத்து ஆறு … என்று கூறியபோது பணம் படைத்த பங்களா வாசிகளுக்கு ஏன் இந்தப் பரந்த மனப்பான்மை வரமாட்டேன் என்கிறது என்று ஏகாம் பரத்தை எண்ணிக்கொண்டே ரகு எழுந்திருக்கக் கூடவே பவானியும் எழுந்து சென்றாள். 

ரகு புனிதத்திடம் பவானி தன் சொந்தத் தங்கை என்றும் திருமணம் ஆகிய ஆறாம் மாதம் அவள் கணவன் அவளைக் கைவிட்டுச் சென்று விட்டதால் ஊரில் தலை காட்ட முடியாமல் மானம் ஒன்றே பெரிதென மதித்துத் தாங் கள் கொழும்புப் பட்டணம் பிழைக்க வந்ததாகவும் கூறி யிருந்தான். ஆகவேதான் அவர்கள் இருவரும் எதிர்வார்த்தை பேசவில்லை. இரத்தத்தால் ஒன்றுபடாவிட்டாலும்கூட உள்ளத்தாலும் ஒன்றுபட்ட அவர்களிடையே எந்தவித வேற்றுமைக்கும் இடம் இருக்கவில்லை. அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் இரண்டு பாய்கள் விரிக்கப்பட்டு இருந்தன. அவற்றிற்குத்தான் அந்த இடம் போதுமான தாக இருந்தது. சிறிய கோழிக்கூடு போன்ற அறையாக இருந்த போதும் அதன் புனிதம் ரகுவை மிகவும் கவர்ந்தது. சுவரில் ஒரு முருகன் காலண்டரும் பக்கத்தில் பத்திரிகையில் வெட்டப்பட்ட சத்தியசாயிபாபாவின் படம் ஒன்றும் ஒட்டப்பட்டிருந்தது. தரையில் ஒரு மூலையில் ஒரு விளக்கு மாறும், கைவிளக்கொன்றும் இருந்தன. 

பவானியைச் சிறிது நேரம் படுத்து ஓய்வெடுத்துக் கொள்ளும்படி கூறிய ரகு வெளியே சென்று உலாவப் புறப்பட்டபோது ராமுத் தம்பி எங்கே போகிறீர்கள் ? என்று எதிரே வந்துகொண்டிருந்த புனிதம் கேட்க ரகு அப்படியே நின்றான். தன் பெயரை அவன் அவர்களுக்கும் ராமு என்று அறிமுகப் படுத்தியிருந்தான். ரகு புனிதத்தை ஆச்சரியத்துடன் பார்த்த போது அவள் கையில் இருந்த சீமேந்துப் பைக்கட்டையும் ஒரு சட்டிப் பசையையும் கொடுத்து ‘வாங்க தம்பி இதை வெட்டிச் சிறிய பைகள் சரிக்கட்டிக் கொடுத்தா ஒன்றுக்கு மூன்று சதம் கூலி கிடைக் கும். ஓய்வு நேரத்தில் மட்டும் நான் இத்தொழிலைச் செய் வதுண்டு. இனி உங்களுக்கு ஒரு வேலை கிடைக்கும் வரை இதைத் தொழிலாக்கிக் கொள்ளுங்க என்று கூறியபோது ரகு வாயடைத்து நின்றான். 

11ஆம் அத்தியாயம் 

திக்கற்றவர்களுக்குத் தெய்வம் துணை என்று கேள்விப் பட்டிருந்தான் ரகு. ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் அந்தத் தெய்வம் தனக்கு உதவும் என்று அவன் நினைத்துப் பார்க்கவே இல்லை. புனிதத்திற்கு எந்த வகையில் நன்றி கூறுவது என்று தெரியாமல் அவன் தயங்கி நின்ற போது பரவாயில்லை தம்பி களவு எடுக்காமல் பொய் சொல்லா மல் எந்தத் தொழிலையும் செய்யலாம். வயிற்றுப் பிழைப் புக்காகத் தொழில் செய்வது ஒன்றும் அவமானம் இல்லை. உனக்கு ஒரு வேலை கிடைக்கும்வரை இதைச் செய். அப்புறம் உன் விருப்பம் போல எதையாவது செய்து கொள்’ என்று கூறியபோது ரகுவின் நிலை தர்மசங்கடமாகி விட்டது. முன் பின் அறிமுகமில்லாத தனக்கு அவள் இவ்வளவு செய்கிறாளே என்று தயங்கி நின்றதை அவள் தவறாக விளங்கிவிட்டாளே என்று வருத்தப்பட்ட வனாய் அப்படியெல்லாம் இல்லை. ஒரு நாளும் கண்டிராத எங்களை நம்பி இவ்வளவும் செய்கிறீர்களே…. இதற் கெல்லாம் நாம் எப்படிக் கைமாறு செய்வது என்றுதான் யோசித்தேன். பரவாயில்லை இப்போது பாருங்களேன். உங்கள் கையில் இருக்கும் அத்தனை சீமேந்து பைகளையும் ஒரு கை பார்த்த பின்புதான் இரவு தூங்கப்போவது. பவானிகூட எனக்கு உதவப் போகிறாள் இருந்து பாருங்களேன்…’ என்று கூறிக்கொண்டே அவன் அவள் கையில் உள்ள அத்தனை பொருட்களையும் பெற்றுக்கொண்டு காலையில் அமர்ந்த இடத்தில் மணல்மேல் உட்கார்ந்து கொண்டான். ‘பொறு தம்பி பாய் கொண்டு வாறன்” என்று புனிதம் கூறியதை அவன் கவனித்ததாகத் தெரிய வில்லை. ஐந்து மணிக்குள் அவன் எண்பது பைகளுக்கு மேல் செய்து முடித்துவிட்டான். கை தன்பாட்டுக்கு வேலை செய்துகொண்டேயிருக்க மனம் மட்டும் ஏதோ சிந்தித்துக் கொண்டே இருந்தது. 

புனிதத்திடம் அவன் ஏதோ பொய் கூறித் தப்பிவிட்ட போது மனம் மட்டும் அவனைச் சித்திரவதை செய்து கொ ண்டே இருந்தது. அவனைப்பொறுத்த வரையில் அவனுக்கு அது கேவலமான தொழில்தான். திடகாத்திர மான கைகளையும் கால்களையும் வைத்துக்கொண்டு இப் படியான சோம்பேறித் தொழில் செய்வதை அவன் சிறிதும் விரும்பவில்லை. இருந்தும் புனிதத்தின் புஷ்பம் போன்ற உள்ளத்தைப் புண்படுத்தக்கூடாது என்ற ஒரு காரணந்தான் அவனை இவ்வளவு உற்சாகமாக இயங்க வைத்தது. 

வலிய வந்த சீதேவியைக் காலால் எட்டி உதைத்துத் தள்ளுவதுபோல எவ்வளவோ கஸ்டப்பட்டு அவன் பெற்ற அரசாங்க உத்தியோகமும் பறிபோன நிலையில் அவன் வேறு என்னதான் செய்யமுடியும்….? புயல் காரணமாக இது வரை அவன் தனது உத்தியோகஸ்தானத்தைக் காலி செய்து விட்டதாகக் கருதிக் கொள்வார்கள் என்று மனநிம்மதி பெற்றான். அல்லது வேலையைக் காலி செய்வதற்கு அவன் வேறு விளக்கங் கொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக் கும். அல்லது அவனைத் திடீர் எனக் காணவில்லை என்ற செய்தி பத்திரிகையில்’ கொட்டை எழுத்தில் வெளியாகி அவன் மானம் முழுவதும் போய்விட்டிருக்கும். இறைவன் எதையும் நன்மைக்கே செய்கிறான் என்று மனதைத் தேற்றிக்கொண்டு அவன் வேலையில் ஈடுபட்டிருந்த சமயம்’ என்னண்ணா இது என்ன வேலை செய்து கொண்டு இருக்கிறீங்க… அடடே இந்தப் புதிய தொழில் எப்போ திருந்து ஆரம்பமோ…என்று கேட்டுக்கொண்டே எழுந்து வந்தாள் பவானி. 

ஒ…ஒ. எழுந்து விட்டாயா தங்கச்சி….வா… வா உன்னை எழுப்பிக் குழப்பக்கூடாது என்று தான் விட்டேன். இப்ப நல்லாத் தூங்கிவிட்டாயல்லவா… இனி இந்தத் தொழிலைத் தொடர்ந்து செய்வது உன்ர வேலைதான். நமக்கும் இதுக்கும் சரிப்பட்டு வராது. இது உன்னைப்போன்ற பெண்களுக்குத் தான் ஏற்ற வேலை யம்மா. எனக்கு ஏதாவது இழுக்க வேண்டும். அல்லது கொத்த வேண்டும். அந்த அம்மாவிற்காகப் பொறுமையாக இருந்து இவ்வளவும் செய்து முடிச்சன். இரண்டரை ரூபா இருந்த இடத்தில் உழைத்து விட்டன். ஆமாம் தங்கச்சி ஒரு பை செய்து கொடுத்தா மூன்று சதம் கூலியாம். சரி.. உனக்கும் தேத்தண்ணி விடாய்க்குமாக்கும் ! உனக்கில் லாட்டியும் என், மருமகனுக்கு வேண்டும் அல்லவா ? பாவம் இதற்கெல்லாம் அவர்களைத் தொந்தரவு படுத்தக்கூடாது. நீ சத்தம் காட்டாம இருந்துகொள் நான் இந்த முன் கடைக்குச் சென்று எல்லோருக்குமாக ஒரு போத்தல்ல வாங்கியாறன்…உம்…’ அவன் தன் பாட்டுக்குச் செல்ல மாகப் பேசிக் கொண்டே போக பவானி வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டு தன் வேலையில் ஈடுபடத் தொடங்கினாள். 

அவளுக்கு ரகு ஒரு மனிதப் பிறவியாகவே தோன்ற வில்லை. தெய்வந்தான் மனித உருவில் வந்து தனக்கு உதவுவதாக அவள் நினைத்துக்கொண்டாள். உடன் பிறந்த சகோதரன் கூட இவ்வளவு தூரம் முன் வர மாட்டான். என்பது அனுபவத்தில் இருந்து அவள் அறிந்து கொண்ட உண்மை. ரகுவை மட்டும் அவள் அன்று சந்தித்திருக்கா விட்டால் அவள் இறந்த இடத்தில் இன்று புல் கூட முளைத் திருக்கும் இனி என்னதான் வந்தாலும் அவனுக்காகத் தான் உயிர்வாழ்ந்தே ஆவது என்ற திடமான முடிவுக்கு வந்து விட்டாள். தன் காதலனைக் கண்டுபிடித்து அவனிடம் ரகு தன்னை எப்படியாவது ஒப்புவித்துவிடுவான் என்ற நம்பிக்கை அவளுக்கு நிறைய இருந்தது. அதனால் Sன் வயிற்றில் இருந்த சிசு அவளுக்கு இப்போது பார மாகவோ அவமானச் சின்னமாகவோ தோன்றவில்லை. அந்தச் சிசுதான் தன்னையும் பிரிந்துபோன தன் காதலனையும் ஒன்று சேர்க்கப்போகும் வரப்பிரசாதமாக எண்ணி மகிழ்ந்தாள். அந்த நேரத்தில் அவள் கைகள் அவளையும் அறியாமல் அவள் வயிற்றைத் தடவிக்கொடுத் ஒரு தாயின் பூரிப்பை அவள் அன்றுதான் அடைந்தாள். 

“என்ன தங்கச்சி பலமான யோசனை. .. பிறக்கப் போவது பெண்ணா ஆணா என்ற சிந்தனையாக்கும் பயப்படாதே உனக்குப் பையன்தான் பிறப்பான் ‘ என்று கேலியாகச் சிரித்துக் கொண்டே ரகு தேநீர் நிறைந்த ஒரு ‘போத்தலை அவள் பக்கத்தில் வைத்தபோது சிந்தனை கலைய அடக்கமாகச் சிரித்துக்கொண்டாள் அவள். ‘ உம் ‘ குடி தங்கச்சி ! நீ குடிச்சுப் போட்டு அந்த அம்மாளுக்குக் கொடு. நான் கடையில் குடித்திட்டன்…” என்று கூறிக்கொண்டே அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டான் அவன். அதற்குள் புனிதமே அங்கு வந்துவிட்டாள். 

பவானி, மடக்மடக் என்று நான்கு மிடற்றைக் குடித்து விட்டு மிகுதியைப் புனிதத்திடம் நீட்ட ‘இதென்ன தங்கச்சி தேநீர்க் கடையிலா வாங்கினீங்க அடுப்பு பற்ற வைக்கத் தான் வந்தன். அதற்குள் தம்பி வாங்கி வந்திடிச்சா… இனிமே மட்டும் நீங்க எதுவும் கடையில் வாங்கக்கூடாது. இது உங்க வீடு…. உரிமையோடு என்னிடம் கேட்கலாம் அப்படிக் கேட்கப் பிடிக்காட்டிப்போனால் குசினியில் எல்லாம் இருக்கு. விரும்பியதைச் செய்து சாப்பிடலாம்.. அநியாயமா பணத்தையெல்லாம் எதற்குக் கடையில் கொண்டே கொட்டுவான்….? என்று சற்று உரிமை யுடன் அவள் கண்டித்த போது அவள் கூறுவதை ஆமோ திப்பதுபோல் இருவரும் தலையைச் சாய்த்துக் கொண் டனர். இப்படியே ஹாயாக இரண்டு நாட்கள் கழிந்தன. இப்போது புனிதம் வேறு அவர்கள் வேறு என்ற வித்தியாச மின்றி இரண்டு குடும்பங்களும் மிகவும் அந்யோன்யமாகப் பழகத் தொடங்கியிருந்தார்கள். ஆயினும் ரகுவுக்குப் பவானியை நீண்ட நாட்கள் அங்குவிட்டு வைப்பதில் துளி கூட விருப்பமில்லாமல் இருந்தது. அதற்குக் காரணம் அங்கு நிலவிய சூழலும் சுற்றாடலுந்தான், 

சாயந்தரங்களில் ஆணும் பெண்ணுமாகக் குடித்து விட்டு அங்கு அடித்த கொட்டத்தையும் கும்மாளத்தையும் பார்க்கப் பார்க்க ரகுவுக்கு அருவருப்பாக இருந்தது.. அவ அவர்கள் பரிமாறிக்கொண்ட பேச்சும் சண்டையும் அவனைப் பொறுமை இழக்கச் செய்தன. எப்படித்தான் புனிதம் இவற்றைச் சகித்துக்கொண்டிருக்கிறாளோ என்று கூடச் சிந்திக்கத் தோன்றியது. இரண்டு நாட்கள் இவற்றை எல்லாங் கவனித்த பின்பு எப்படியாவது ஒரு சிறு வேலை தேடிக்கொண்டு பவானியை வேறிடத்திற்கு அழைத்துப் போய்விட வேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்டான். ஒரு வாரத்தில் அவன் பவானியிடம் கூறிவிட்டு வெளியே சென்றான். ஒவ்வொரு கடையாக அவன் ஏறி இறங்காத படியில்லை. ஆனால் வேலை மட்டும் கிடைத்தபாடில்லை. 

கடைசியாக சில நாட்கள் அலைந்ததன் பயனாக ஒரு டாக்டர் வீட்டில் அவனுக்கு வேலை கிடைத்தது. அந்த டாக்டரின் பிரத்தியேக டிஸ்பென்சரியில் காவல்புரியும் வேலைக்கு மாதம் நூறு ரூபா சம்பளத்தில் அமர்த்தப்பட்டான். 

வேலை நேரம் பிற்பகல் ஆறு மணியில் இருந்து அடுத்த நாள் விடிய ஆறு மணிவரையாக இருந்தபோதும் அவன் மட்டும் எப்போதும் ஐந்து மணிக்கே சென்றுவிடு வான். டிஸ்பென்சரி கூட்டிப் பெருக்கிப் பூமரங்களுக்குத் தண்ணீர்வார்த்து டாக்டரின் காரைக் கழுவி இன்னும் பல வேலைகளைத் தன் விருப்பத்திற்கே செய்வான். இவற்றை எல்லாம் டாக்டர் அவதானித்த போதும் அவனிடம் செய் என்றும் சொல்லவில்லை செய்யாதே என்றும் சொல்ல வில்லை. அவர் ஏதாவது சொல்வார் என்று காத்திராமல் ரகுவும் தன்பாட்டுக்கு அந்த வேலைகளையும் நாள்தவறா மல் செய்து வந்தான். இப்படியே இரண்டு மாதங் கழித்தும் இரண்டாம் மாதக் கடைசியில் டாக்டர் அவனிடம் சம்பள மாக இருநூற்றி ஐம்பது ரூபாவைக் கொடுத்த போது அவன் திடுக்கிட்டு மேல்மிச்சமாக இருந்த ஐம்பது ரூபாயை யும் அவரிடம் திருப்பி நீட்டினான். 

அவனை அந்த நிலையில் பார்த்த டாக்டர் சிரித்தார். என்னப்பா பணம் போதாதென்று பார்க்கிறாயா என்று அவர் தன் பேச்சை ஆரம்பிக்குமுன்பே இல்லை ஸார்.. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என் சம்பளப் பணத் திற்கு மேலாக ஐம்பது ரூபா உள்ளது. அதுதான்சிந்திக்கிறேன் என்றான் பணிவோடு. அவன் முதுகில் தட்டிக் கொடுத்த டாக்டர் அது உனக்குத்தானப்பா…. உன்னைப் போன்ற உத்தம ஊழியனுக்கு மாதம் முந்நூறு ரூபா கொடுத்தாலும் போதாது. ஆனால் உன்னைப் பேராசைக் காரனாக்கக் கூட வேலை செய்யவில்லை. அவர்கள் நோக்கம் எல்லாம் சம்பளத்தைப் பெற்றுக்கொள்வதில்தான்- இருந்தது. எனது ஆயுள் காலத்தில் சம்பளத்தைப்பற்றி” அக்கறைப்படாமல் தன் வேலையே கண்ணுங் கருத்து’ மென்று நினைத்து உழைத்த நபர் நீ தான். உன்னை எனக்கு மிகவும் பிடித்து விட்டது ராமு. ஆமாம்! உனக்குக் கலியாணம் ஆகிவிட்டதா….? என்று கேட்டு விட்டு அவனைச் சந்தேகத்துடன் பார்த்தார். 

அவர் எதற்காக இப்படியொரு குதர்க்கமான வினா வைக் கேட்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டே “இல்லை ஸார்” என்றான். அப்படியா ரொம்ப நல்லதாய்ப் போச்சு…. இனி மேல் நீ என்னுடனேயே தங்கிக்கொள்ளலாம். ஓய்வு நேரங்களில் உனக்கு நான் றைவிங் பழக்கப் போகிறேன் ராமு. அதன் பின் எனக்குக் கவலையே இருக்காது. என் குடும்பத்திற்கு நீ தான் சிறந்த ட்றைவராக. இருப்பாய்! என்றவர் முடித்ததும்…”ஸார்…என்னை மன்னிக்கவேண்டும்…நீங்க நினைக்கிறாப் போல இல்லை…எனக்குத் திருமணமாகிய ஒரு தங்கச்சி உண்டு. அவள் கர்ப்பிணி ஸார். அவள் கணவன் கோபித்துக்கொண்டு அவளைத் தனியாகத் தவிக்கவிட்டுப் போனதில் இருந்து நான் தான் அதுக்கு எல்லாமா இருக்கிறன். இந்த நிலையில் நான் தனியாக எப்படி ஸார் உங்களுடன் இருக்கமுடியும் என்று கூறிய போது சகோதர பாசம் அவன் குரலில் மிளிர்ந்தது. 

“ஓ அப்படியா…. பரவாயில்லை தம்பி. அது தான் உன் முக்கிய கடமையாக இருக்கவேண்டும். உன்னைச் சகோதரனாகப் பெற்ற உன் தங்கை ரொம்பப் பாக்கியசாலியாக இருக்கவேண்டும். இந்தக் காலத்துப் பசங்? களில் யார் தம்பி உன்னைப் போல இவ்வளவு, கரிசனை யாகச் சகோதரங்களைக் கவனிக்கப் போகிறார்கள்.. 

கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார். உன் தங்கையின் பிரசவம் பற்றி நீ சிறிதுங் கவலைப்படக் கூடாது. எல்லாம் என் ஆஸ்பத்திரியில் இலவசமாக நடக்கும்….’ என்று கூறி விட்டு அவர் உள்ளே சென்ற போது அவனுக்கு இப்படியான தெய்வப் பிறவிகள் கூட உலகத்தில் இருக்கிறார்களா என்று நினைக்கத் தோற்றியது. வல்வையில் இருந்து புறப்பட்ட பின் தன் வாழ்க்கையில் இப்படியான தெய்வப் பிறவிகளைச் சந்திக்கப் போகிறோம் என்பது முன்கூட்டியே தெரிந்திருந் தால் நிச்சயமாக அன்று அவன் தற்கொலை செய்ய எத்தனித்திருக்கமாட்டான். 

நாட்கள் விரைவாக நகர்ந்து கொண்டேயிருந்தன. பவானி வயிற்றுக் குழந்தையும் ஆறுமாத வளர்ச்சியைப் பூர்த்தியாக்கிவிட்டிருந்தது. இன்னும் நான்கு மாதங்களில் குழந்தை பிறந்துவிடும், பிரசவம் பற்றிக் கவலையில்லை. காரணம் டாக்டர் ராஜன் இருக்கும்வரை அவனைக் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை அவனுக்கு நிறைய இருந்தது. ஆனால் பிள்ளைப் பதிவு வைத்தாக வேண்டுமே. தகப்பன் பெயர் தெரியாத குழந்தையாகப் பவானி பெறப்பொகும் குழந்தை இருக்கக்கூடாது என்பது அவன் கருத்து. எப்படி யும் பவானியிடம் இருந்து அவள் காதலன் பெயரையறிந்து அந்தப் பெயரையே பதிவு செய்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். 

அவனது அடுத்த பிரச்சனை வீடு மாறும் பிரச்சனை யாக இருந்தது. வெள்ளவத்தையில் அறுபது ரூபாவுக்கு வீடு பார்த்துவிட்டான். ஆனால் சொந்த மனிதரைவிடப் பந்த மும் பாசமும் காட்டிய உள்ளன்புடன் பழகும் புனிதத் தையும் அவள் கணவனையும் விட்டுப்பிரிய அவனுக்கு மனம் வேதனைப்பட்டது. என்ன சாட்டுச்சொல்லி அவளை வேறு வீட்டிற்கு அழைத்துப் போகலாம் என்று மூளையைக் குழப்பிக் கொண்டிருந்தபோது டாக்டர் கூறிய செய்தி அவன் நாக்கில் தேன் வார்த்தது போன்றிருந்தது. டாக்டருக்கு வேண்டிய ஒரு பிரபல வர்த்தகரின் குழந்தைகளை மேற் பார்வை செய்யப் படித்த பெண்ணொருத்தி தேவை என்றும் டாக்டர் அந்த இடத்திற்கு ரகுவின் சகோதரியைச் சிபார்சு செய்திருப்பதாகவும் ரகு விரும்பினால் அடுத்த நாளே அந்த உத்தியோகத்தைப் பெற்றுத்தரமுடியும் என்றும் அவர் கூறியிருந்தார். 

பவானி இதை விரும்புவாளோ என்று பயந்த ரகுவுக்கு அவள் அளித்த பதில் மிகவும் சாதகமாக இருந்தது. உத்தி யோகம் பார்ப்பதில் அவனைவிட அவளே அதிகம் கரிசனை காட்டினாள். அந்த நிலையில் வீட்டுப் பிரச்சனை சுலப மாகத் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்தது அவனுக்கு. புனிதத்திடம் ஒருபடியாகத் தான் வீடு பார்த்திருப்பதை எடுத்துக் கூறி விடையும் பெற்றுவிட்டான். ஒன்றுபட்ட இதயங்கள் பிரிய வேதனைப் பட்டபோதும் பிரிந்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் நீர் மல்கும் கண்களுடன் பிரிந்தனர். ரகுவும் பவானியும் புதிய இருப் பிடத்திற்குச் சென்று நான்கு நாட்கள் முடிந்துவிட்டன. 

பவானி உத்தியோகம் ஏற்றுக் கொண்ட பின் காலை யில் ஏழுமணிக்குப் போய் மாலை ஐந்து மணிக்கு வருவாள். அவளுக்கு அந்த வேலை ரொம்பவும் பிடித்துக்கொண்டது. இரண்டு குழந்தைகளுக்குப் படிப்புச்சொல்லிக் கொடுப்பது, அவர்கள் உணவு, விளையாட்டு முதலியவற்றை மேற் பார்வை செய்தல், ஓய்வு நேரங்களில் அவர்களுக்கு அறிவு வளர்க்குங் கதைகளைக் கூறுதல் இவைதான் அவளுடைய நாளாந்த வேலை. அவளைவிட அந்த வீட்டில் சமையலுக்கு இரண்டு பேர். பிள்ளைகளைக் கவனிக்க ஒரு ஆயா. பூந்தோட்டம் பார்க்க ஒரு ஆள். ட்றைவர் இப்படித் தொட்டதற்கெல்லாம் ஏவல் செய்ய அங்கு ஒரு தொழி லாளர் வர்க்கம் நிறைந்திருந்தது. பணத்தில் புரளும் குடும்பமாக இருந்தது அவர்கள் வாழ்ந்த விதம். 

பவானியைப் பொறுத்தவரை ஒரு குறையும் இருக்க வில்லை. மூன்று நேர உணவுடன் மாதம் எழுபத்தைந்து ரூபா சம்பளமும் கிடைத்ததான் அவர்கள் வாழ்க்கை திருப்திகரமாக அமைந்திருந்தது. அந்த வகையில் இருவரும் கடவுளுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருந்தனர், ரகுவும் காலை ஐந்து மணிக்கு எழுந்து போனால் மாலை ஆறு மணியளவில்தான் வீடு திரும்புவான். சில வேளை களில் பவானியும் அவனும் இடையில் சந்தித்து ஒன்றாகவே வீடு திரும்புவார்கள். பகல் முழுவதும் இருவரும் வெளியே செல்வதால் போயா தினங்கள் தவிர ஏனைய நாட்களில் அவர்கள் அறை அநேகமாகப் பூட்டப்பட்டேயிருக்கும். அந்த வீட்டுக்காரருக்கு அது எவ்வளவோ ஒத்தாசையாக இருந்தது. 

ரகுவுக்கு வேண்டிய போதெல்லாம் உதவ டாக்டர் இருந்ததால் அவனுக்கு இப்போது எந்தக் கவலையுந் தோன்றவில்லை. இடையிடையே சின்னையாவைப் பற்றிய எண்ணம் வரும்போது அவன் மனம் குழம்பத்தான் செய் யும். இருந்தும் அவன் அதையும் ஒரு பக்கமாக்கிக் கொண்டு விட்டதால் கவலை அவ்வளவு தெரிவதில்லை. பவானியின் பிரசவத்திற்காகப் பணம் சேர்ப்பதே தற்போதைய அவன் குறிக்கோளாக இருந்தது. கடந்த இரண்டு மாதங்களில் அவன் மிச்சம் பிடித்துச் சேர்த்த பணத்தை எண்ணிப் பார்த்த போது அவன் முகம் மலர்ந்தது, ஆமாம் ! அவனிடம் இருநூறு ரூபா பணம் சேர்ந்திருந்தது. 

12ஆம் அத்தியாயம் 

கையில் அரைக் காசுக்குக்கூட வழியில்லாமல் வெளிக் கிட்ட தன்னிடம் இன்று கையிருப்பாக ரூபா இருநூறு இருப்பதை எண்ணி எண்ணி மகிழ்ந்தான் ரகு. கடவுள் கருணையுள்ளவர் என்ற திடமான முடிவுக்குத்தான் அவ னால் வரமுடிந்தது. அவன் நாஸ்திகன் அல்ல ஆயினும் தன் வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்பட்ட சஞ்சலங்களைத் தாங்கமுடியாத சமயங்களில் கடவுள் ஒருவர் இல்லை என்ற முடிவுக்கு ஒரு முறையல்ல பலமுறை அவன் வந்திருக் கிறான். ஆனால் அவன் இன்று தனது முடிவை முற்றாக மாற்றிக்கொண்டுவிட்டான். பவானி சுகப்பிரசவமாகித் தாயாகிவிட்டால் போதும் என்றிருந்தது அவனுக்கு. தான் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் பவானி தரப்போகும் அந்த ஒரு பரிசு விலைமதிப்பற்ற பொக்கிஷமாக இருக்கும் என்று அவன் நம்பினான். 

வழக்கம்போலக் காலமும் நேரமும் யாருக்காகவும் காத் திராமல் தன் கடமையைச் செய்துகொண்டிருந்தன. ஒரு நாள் பவானி வேலை பார்க்கப் போகும் வீட்டில் அந்தக் குழந்தைகளின் பெற்றோர் அவளை இரண்டு நாட்களுக்கு இரவில் தங்கிக்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டதன் பேரில் ரகுவின் அனுமதியுடன் அவள் தங்கிக் கொண்டாள். அந்தக் குழந்தைகள் ஒன்றின் பிறந்த நாளுக்கு ஏதோ பொருட்கள் தயாரிப்பதற்காகத்தான் அவள் நிற்கும்படி கேட்டுக்- கொண்டனர். 

பவானியும் அவர்கள் அதைச்செய், இதைச்செய் என்று” கட்டளையிடாமலே ரகுவைப்போலத் தன்பாட்டுக்குக் காரி யங்களைச் செய்து அவர்களின் நன்மதிப்பையும் அன்பையும் சுலபமாகப் பெற்றுக்கொண்டாள். அந்தக் குழந்தைகளும் அவளிடம் · அக்கா அக்கா ‘ என்று அன்பை அள்ளிச் சொரிந்தனர். அவள் அந்த வீட்டில் தங்கத் தொடங்கிய இரண்டாவது நாள் மத்தியானம் ஏதோ வேலையில் ஈடு பட்டுக்கொண்டிருந்த சமயம் வெளியே மோட்டார் ஒன்று “ஹார்ன்” பண்ணும் சத்தம் கேட்டது. நெடுநேரமாக யாரும் சென்று விசாரிக்காததால் ‘ஹார்ன்’ அலறிக் கொண்டேயிருந்தது. சிறிது நேரம் பார்த்துவிட்டுப் பவானியே சென்று பதில் கொடுக்க இருந்த சமயம் அந்த வீட்டுக்கார அம்மாளே வெளியே சென்றாள். அவள் செல்வதைக் கண்ட பவானி மீண்டுந் தன் வேலையில் ஈடுபடத் தொடங்கினாள். அப்போது வெளியே பேச்சுக் குரல் கேட்டது. அவள் அதற்குக் காது கொடுக்காமல் தன் அலுவலில் கண்ணுங் கருத்துமாக இருந்தபோது` அவர்கள் பேச்சு பெரிய சத்தமாகக் கேட்கத் தொடங் கியது. இரண்டு மூன்று வித்தியாசமான குரல்கள் கேட் டன. ஆயினும் அவற்றில் ஒன்று அவளுக்குப் பழக்கமான குரலாக இருந்ததால் இதுவரை இல்லாத ஆர்வத்தோடு அவள் காதுகொடுக்கத் தொடங்கினாள். 

அந்தக்குரல் அவள் உள்ளத்தில் அணைந்து போயிருந்த ஜுவாலையை எரியத் தூண்டவே அவள் தன் பொறுமை இழந்தாள். அங்குப் பேசிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்து? விட வேண்டும் என்று ஆவல் தூண்டியது. ஆனால் கூலிக்கு வேலை செய்யும் அவள் எந்த உரிமையில் அவர்கள். பேசும் இடத்திற்குச் செல்ல முடியும்….? அந்த வீட்டுக் கார அம்மாளே தன்னை எதற்காவது அழைக்கக்கூடாதா என்றுகூட எண்ணமிட்டாள். ஆனால் நேரம் போய்க் கொண்டு இருந்ததே தவிர, அவளை யாரும் அழைக்க வில்லை. பொறுமையிழந்த அவள் தானாகவே ஒரு சந்தர்ப் பத்தை உண்டாக்கிக்கொள்ள வேண்டும் என்ற துடிப்பில் அந்த வீட்டு மாடியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை களை நோக்கிச் சென்றாள். அவளுக்கு அந்த மாடிப்படி களைக் கடப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஆயினும் அவள் அதைப் பொருட்படுத்தாமல் மேல் மூச்சு வாங்க நடந்து மாடியை அடைந்துவிட்டாள். குழந்தைகளோடு திரும்பவும் அவள் கீழே இறங்கி வந்தபோது வெளியே கேட்ட பேச்சரவம் அடங்கிப்போயிருந்தது. அவள் அவசர மாகக் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வெளியே ஓடிச் சென்று பார்த்தபோது அங்கு வந்திருந்தவர்கள் மோட்டாரில் புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ‘ட்றை விங்’ சீற்றில் இருந்தவரைத்தான் அவளால் பார்க்கக்கூடிய தாக இருந்தது. அவள் கேட்ட பேச்சுக் குரலுக்கும் அந்த மோட்டாரில் அவள் கண்ட நபருக்கும் ஏதோ ஒற்றுமை யிருப்பதாக அவளுக்குப் புலப்பட்டது. ஆனால் அவள் தன் சந்தேகத்தை யாரிடங் கேட்டாக முடியும். அது நிவர்த்தி செய்ய முடியாத சந்தேகமாகவே இருந்துவிடுமோ என்ற பயமும் ஏற்படவே செய்தது. 

அவள் கண்ட காட்சி உள்ளத்தில் ஓர் உணர்ச்சியைத் தூண்ட அவளுக்கு ஒருவித பயமும் குழப்பமும் ஏற்பட்டன. அவள் முகம் வெளிறியிருந்தது. ‘ என்ன பவானி குழந்தை களையும் அழைத்துக்கொண்டு எதற்காக இங்கு வந்தாய்? என்று அந்த வீட்டுக்கார அம்மாள் கேட்ட பின்தான் அவள் தன்நிலை உணர்ந்திருக்க வேண்டும். அவள் வாய் திறந்து பதிலளிக்கு முன்பே அம்மா வந்திருந்தவங்களுக். குக் குடிக்க ஏதாவது கொடுக்க வேண்டுமா என்று கேட்கத். தான் பவானி அக்கா எங்களைக் கூப்பிட மாடிக்கு வந்திச்சு.. நாங்கள் இறங்கிக் கீழே வருவதற்குள் அவர்கள் எல்லாம் போய்விட்டார்கள். ஆமாம்! யாரம்மா வந்திருந்தாங்க. என்று மூத்த குழந்தை அவளை முந்திக் கேட்டது. 

‘சரி சரி…. பெரியவங்க விடயம் எல்லாம் சின்ன வங்க கேட்கக் கூடாது. … யாராவது வருவாங்க போவாங்க. அதைப்பற்றிக் குழந்தைகள் ஏன் கவலைப்படவேண்டும்.. நீங்கள் பவானி அக்காவைக் கூட்டிப்போய் ஏதாவது படி யுங்கோ.. என்று குழந்தைகளைக் கண்டித்துவிட்டு வீட்டுக் கார அம்மா உள்ளே சென்றபோது பவானி எதுவும் பேச முடியாதவளாய்க் கைக்கெட்டியது எதுவும் வாய்க்கெட்டாத நிலையில் குழந்தைகளைப் பின்தொடர்ந்து சென்றாள்.. அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. குழந்தைகள் அவளை வழக்கம் போல வினாக்களால் துளைத்துக்கொண் டிருந்தனர். அவர்களின் வினாக்களையெல்லாம் பொறுமை யுடன் கேட்டு ஆணித்தரமாகப் பதில் கொடுக்கும் அவளுக்கு அன்று அவர்கள் கேட்டவை தலையிடியையும், ஆத்திரத்தையும் உண்டுபண்ணின. 

அவள் அவர்கள் கேட்டவற்றிற்குப் பட்டும்படாமலும் பதிலளித்துவிட்டுத் தலையிடிப்பதாகக் கூறிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள். அதன் பின் அவளுக்கு ஒரு வேலையும் ஓடவில்லை. அவளுக்கு உண்மையாகவே தலை யிடிக்கத் தொடங்கியது. உடலெல்லாம் பதற அவள் அந்த வீட்டுக்கார அம்மாளிடஞ் சென்று தனக்கு மயக்கம் வருவதாகக் கூறியபோது அந்த அம்மாள் அவளைச் சிறிது படுத்துறங்கும்படி கூறிக் குடிப்பதற்குக் கொஞ்சம் கோப்பி’ யும் போட்டுக் கொடுத்தாள். பவானிக்கு உனடியாக வீட்டுக்குப்போய் ஒரு கண் அழுதோய்ந்தால்தான் நிம்மதியேற் படும்போல் இருந்தது. அதற்கு மேலும் அங்கு அவள் தங்க விரும்பவில்லை. அவளை அந்த வீட்டுக்கார அம்மாள் எவ்வளவோ தடுத்தும் அவள் கேட்காமல் தன் வீட்டுக்குப் போய்விட்டாள். திடீர் என ஏதாவது ஏற்பட்டால் தனக்கு அறிவிக்கும்படி ரகு கொடுத்த டாக்டரின் போன் நம்பர் அவளிடம் பத்திரமாக இருந்தது. வீட்டையடைந்ததும் படுக்கையில் சிலநிமிடம் சரிந்து மனம் பொனபாட்டுக்கு அழுது தீர்த்தாள். அழுத வேகத்தில் அவளுக்கு அடி வயிற் றில் நோவெடுத்தது. வரவர அந்நோ கூடி வந்ததால் அடுத்த பக்கத்தில் குடியிருந்த வீட்டுச் சொந்தக்காரியாகிய இலட்சுமியிடம் அவள் தன் நிலையை எடுத்துச் சொல்லி ரகுவின் ‘ போன் ‘ நம்பரையும் கொடுத்து அவனுக்கு உட னடியாக அறிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டாள். 

சில மணி நேரத்தில் ரகு அவசர அவசரமாக ஓடிவந்து அவள் நிலையைப் பார்த்து எதுவும் புரியாமல் இலட்சுமியின் உதவியை நாட அவள் பவானியை உடனடியாக வைத்திய சாலைக்குக் கொண்டு செல்வதுதான் புத்திசாலித்தனம் என்று கூறிவிட்டாள். ரகு மனங்குழம்பியவனாய் “தங்கச்சி உனக்கு என்னம்மா செய்யுது ” என்று கண் மூடிப்படுத்திருந்த அவள் அருகிற் சென்று கேட்டதும் பவானி மூடியிருந்த தன் விழிகளைத் திறந்து தன் வயிற் றைச் சுட்டிக்காட்டி நோகுது என்று கூறிவிட்டு மீண்டும் கண்களை இறுக மூடிக் கொண்டாள். 

அவள் முகம் அதைத்துக் கண்கள் சிவந்திருந்ததனால் அவள் அழுதிருக்க வேண்டும் என்று ரகு யூகித்துக் கொண் டானாயினும் அவள் எதற்காக அழுதிருப்பாள் என்றறிய அவனால் முடியவில்லை. வலி தாங்க முடியாமல்தான் அழுதிருக்க வேண்டும் பாவம் ! என்னபாடு பட்டாளோ என்று நினைத்து ஏங்கியவனாய்த் தெருவுக்குச் சென்று ஒரு வாடகை மோட்டார் அமர்த்தி இலட்சுமியின் உதவியோடு பவானியை ஒருபடியாக டாக்சியில் ஏற்றிக்கொண்டு டாக்டர் ராஜனிடம் வைத்திய சாலை நோக்கி விரைந்தான். 

அவன் அதிஷ்டமாக இருக்கவேண்டும். அங்குச் சென்ற போது டாக்டர் ராஜனே நேஸிங் ஹோமின் வாயிலில் நின்று கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் அவன் தான் மட்டும் காரை விட்டிறங்கி ஓடிச்சென்று டாக்டரிடம் நிலைமையை விளக்க அவர் இரண்டு தாதிமார்களை அனுப்பி அவளை வார்டில் அனுமதித்தார். அதன் பின் அவளைப் பரீட்சித்துவிட்டு வெளியே வந்த டாக்டரை அதுவரை வெளிவாயிலில் துடிக்கும் உள்ளத்துடன் காவல் நின்ற ரகு ஆவலோடு பார்த்தான். டாக்டர் எதுவித பதிலுங் கூறாதது அவன் பொறுமையை மேலுஞ் சோதிப்பது போலிருக்கவே அவனாகவே வலிந்து வாய்திறந்து ‘ஸார் தங்கச்சிக்கு எப்படி இருக்கு . . . ஒன்றும் பயமில்லையே.. ஸார் . . .. ஸார்.. என்னை உங்கள் மௌனம் கொல் கிறது. தயவு செய்து கூறுங்கள்… தங்கச்சிக்கு எப்படி யிருக்கு அவளை நான் சென்று பார்க்கலாமா அவன் அழாக்குறையாகக் கேட்டபோது டாக்டரின் உள் ளமே உருகியது. 

அவர் அவனைத் தட்டிக் கொடுத்துப் ‘பயப்பட வேண் டிய கேஸ்தான் ராமு…ஆனால் கொஞ்சம் முந்திவிட் டாய் அல்லது இறந்த குழந்தையைத்தான் நீ கண்டிருக்க முடியும். பிரசவங்கூட மிகவும் கஷ்டமாக இருந்திருக்கும். அபாயம் முற்றாக நீங்கிவிட்டது என்று கூறுவதற்கு இட மில்லை. உன் தங்கச்சிக்கு வேண்டியது பூரண ஓய்வு. அவள் இங்கு இரண்டு வாரங்களாவது இருக்க. வேண்டி வரும். அதன் பிறகு பிரசவம்வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உன் தங்கச்சிக்கு ஏதோ அதிர்ச்சி ஏற்பட்டிருக்கப்பா. இனிமேல் அவள் எந்தப் பலமான வேலையுஞ் செய்யக் கூடாது. அத்துடன் எந்தவித சிந் தனைக்கும் இடங்கொடுக்கக்கூடாது. முடிந்தவரை உன் தங்கச்சியைக் காப்பாற்றுவது என் பொறுப்பு. அவ்வளவு தான் என்னால் கூறமுடியும். அதற்கு மேல் உங்கள் அதிஷ் டத்தையும் கடவுளையும் பொறுத்தது….என்று கூறி முடித்தபோது ரகுவின் உடல் நடுங்கியது. 

தான் அடைந்த இன்பம் மகிழ்ச்சி எல்லாமே ஒரு நொடிப் பொழுதில் மறைந்துவிடுமோ என்ற அச்சம். அவனை வாட்டியது. மாய்த்துக்கொள்ள இருந்த பின் உயிரை யாருக்காகப் பத்திரப்படுத்தி வாழ்ந்தானோ அந்த உயிருக்கு ஏதாவது ஆபத்து நடக்கும் பட்சத்தில் அவன் தன் உயிரையும் போக்கிக்கொள்ளத் தயாராகிவிட்டான். அவளைப் பிரிந்து இனிமேல் அவனால் வாழமுடியாது. அப் படியொரு உணர்ச்சி ஒரு பாசம் ஏன் பந்தம் என்றுகூடக் கூறிக்கொள்ளலாம் அவனை அவளிடம் பிணைத்து வைத்திருந்தது. 

ஒருகால் அவளுடைய காதலனைத் தேடி அவளை ஒப்புவிக்க நேர்ந்தால் அப்படியொரு கட்டாயம் ஏற்படுமாக இருந்தால், அவள் நல்வாழ்வுக்காக அவளைப் பிரிந்து போக அவன் தயார். ஆனால் இப்படியான ஒரு பிரிவை அவனால் தாங்கமுடியாது. ஆமாம் ! தாங்கிக் கொள் ளவே முடியாது. அவளுடைய எதிர் காலத்தைப் பற்றி அவன் எவ்வளவு மனக்கோட்டை கட்டி வைத்திருந்தான். எத்தனை திட்டங்கள் வகுத்திருந்தான். அவையெல்லாம் மண்ணோடு மண்ணாகிப் போவதா ..? கடவுள் கருணை யுள்ளவர்…. என்னைக் கைவிடமாட்டார் என்று நினைத் துக்கொண்டவன் ‘ டாக்டர் ஒருமுறை சென்று தங்கச்சியைப் பார்க்கட்டுமா’ என்று பச்சைக் குழந்தையொன்று தன் தாயாரைப் பார்க்க அனுமதி கேட்பது போலப் பவானியைப் பார்க்க டாக்டரிடம் அனுமதி கேட்டான். 

டாக்டர் பிடிவாதம் பிடிக்கும் ஒரு குழந்தையை அன்பு கலந்த கண்டிப்புடன் பார்ப்பது போலப் பார்த்தார். ராமு ….நீ படித்தவன் விடயங்களை விளங்காமலே புரிந்து கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவன் என்றுதான் உன்னைப் பற்றி நான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போதுதான் தெரிகிறது பாசம் எவ்வளவு தூரம் அறிவுக் கண்ணைக்கூட மறைத்து விடுகிறது என்று. உன் தங்கையின் நிலையைப் பற்றி உனக்கு நான் நன்றாக எடுத்துக் கூறிவிட்டேன். என் வாக்கை மீறி நீ அவளைப் பார்க்கவேண்டும் என்று பிடி வாதம் பிடித்தால் எனக்குத் தடை இல்லையப்பா. கதவைத் திறந்து விடுகிறேன். அதற்குப் பின் உன் தங்கைக் கேற்படும் பலாபலன்களுக்கும் நீயே பாத்திரவாளியாக இருப்பாய்…. சம்மதமா. என்று கூறிவிட்டுப் புன் சிரிப்புடன் நின்ற போது ரகு அவரின் காலில் விழுந்தான். 

“டாக்டர் என்னை மன்னித்து விடுங்கள். . நீங்கள் கூறியது போலப் பாசம் என் அறிவுக் கண்களை மறைத்துத் தான் விட்டது. என் தங்கைமேல் நான் என் உயிரையே வைத்திருக்கிறேன் ஸார். என் வாழ்க்கைக் கடலில் தென் படும் ஒரேயொரு கலங்கரைவிளக்கம் அவள்தான். அதனால் தான் நான் என்னை மறந்து ஏதோதோ பேசிவிட்டேன். அவளுடைய சுகம்தான் எனக்கு முக்கியம் ஸார். என்று அவர் கால்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கெஞ்சிய போது டாக்டர் அவனை மெதுவாக எழுப்பிவிட்டு ‘சரி.. நீ எதற்கும் பயப்படவேண்டாம் போய் உன் வேலையைக் கவனி ‘ என்று கூறி அப்பால் நகர்ந்தார். 

அவர் செல்வதையே சிறிது நேரம் பார்த்துக்கொண் டிருந்த ரகு தன் வேலைகளைக் கவனிக்கச் சென்றான். அன்று அவனுக்கு வேலையிற் புலனே செல்லவில்லை. அவன் எண்ணஞ் சிந்தனை முழுவதும் பவானி மீதே லயித் திருந்தது. அவளுக்கு நல்லதைப்போல் ஒரு கெட்டது போதே நினைத்த நடந்தால் என்ன செய்வது என்று அவன் நெஞ்சம் ஏங்கியது. அவன் உறவினர்களில் ஒரு வரைக்கூட அவனுக்குத் தெரியாதே…. தற்செயலாக.. ஏதாவது விசாரணை நடந்தால் அவன் என்ன பதில் கூற முடியும். அப்போது டாக்டர் அவனைப் பற்றி என்ன நினைத்துக்கொள்வார். மதிப்பின் சிகரத்தில் ஏற்றி வைத் திருக்கும் அவர் அவனை நிச்சயமாகக் கடைசிப் படிக்குத் தள்ளிவிடுவார். அதன் பின்பு அவர் அவனை ஒரு துளி கூட நம்பப்போவதில்லை. 

இதுவரை பவானியிடம் இருந்து இந்த உண்மைகளை யெல்லாம் அறிந்து வைக்காமற் போனது எவ்வளவு தவறு என்பதை உணர்ந்துகொண்டான். கடவுள் வழியாக இந்த இக்கட்டில் இருந்து பவானி தப்பி விட்டால் அவன் அவளி டம் சகல உண்மைகளையும் அறிந்து எதற்குந் தயாராக இருப்பான். கடவுளே இதுவரை உன்னிடம் இரந்து கேட் காமல் அவ்வப்போது என்னைக் காப்பாற்றி வந்தாய். இப்போது உன்னை நான் மனமுருக வேண்டிக் கேட்கிறேன். நீ எனக்குக் கொடுத்த என் தங்கச்சியைக் காப்பாற்றி விடு…. என்று கைகூப்பி வேண்டிக் கொண்டபோது உணர்ச்சி மேலீட்டால் அவன் கண்களிலிருந்து நீர் பெருகியது. பவானிக்கு என்ன நடந்திருக்கும்…இப்படி ஒரு அதிர்ச்சி இத்தனை நாளுமில்லாமல் இன்றுமட்டும் ஏன் புதினமாக அவளுக்கு ஏற்படவேண்டும் என்றெல்லாம் அவன் சிந்திக்கத் தொடங்கினான்.

– தொடரும்…

– எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு… (நாவல்), முதற் பதிப்பு: 1993, காந்தளகம், மறவன் புலவு, சாவகச்சேரி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *