கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

501 கதைகள் கிடைத்துள்ளன.

அந்த காலத்தில்

 

 ” தண்ணீர்… யூ மீன் வாட்டர்… தினமும் அரை டம்பலர் குடிப்போமே.. அதுவா ஸ்ரீ…” ஜூன் 5, 2077 பொருட் கண்காட்சி தலையில் முடியில்லாமல், மாத்திரை மட்டும் உணவாய் உண்ணும் தலைமுறை. குறைந்தது ஒரு மனிதன் நாற்பது வயது வரை வாழ்ந்தால் அதிசயம். தண்ணீர் என்றால் மிக அதிசயமான ஒன்று. நெல், அரிசி, பயிர் பொன்றவரை யெல்லாம் பொருட்காட்சியில் மட்டும் காணப்பட்டது. கூந்தல் இல்லாத பெண்கள்.அந்த காலத்தில் பெண்களுக்கு இவ்வளவு நிலமான கூந்தல் இருக்குமா? என்று பொருட்காட்சியில்


குண்டுப் பையன் கதை

 

 முதன்முதலாக என்னை ‘குண்டுப் பையா’ என்று அழைத்தவன் யார் என்று எனக்குத் துல்லியமாய் நினைவிருக்கிறது. அப்போது நான் மூன்றாம் வகுப்பிலோ, நான்காம் வகுப்பிலோ காலம் தள்ளிக்கொண்டிருந்தேன். சொற்ப ஆசிரியர்களே கொண்ட எங்கள் அரசுப் பள்ளியில் பெரும்பான்மை நேரங்கள் விளையாட்டுக் கல்விக்குதான் என்பது ஒரு எழுதப்படாத விதிமுறை, அதன்படி நாங்கள் ஒருவரையொருவர் ஓடிப் பிடித்துக்கொண்டும், மரமேறிக் கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டும் வருடங்களை விரட்டியபடியிருந்தோம். நீண்ட வகுப்பறைகளால் நிறைந்த எங்கள் பள்ளியின் தென்மேற்கு மூலையில், ஒரு தனித்த கட்டிடம்


சிலுவையின் எடை

 

 அந்த சாய்வு நாற்காலியில் மெதுவாக உட்கார்ந்தார் ஆரோக்கியதாஸ். வழக்கம்போல் அவரது பார்வை அந்த கண்ணாடி பீரோவின் அருகில், வண்ண விளக்குகளால் சூழப்பட்டிருந்த அந்த படத்தின்மேல் பதிந்தது. யூதர்கள் கையில் சாட்டைகளுடன் நிற்க, சிலுவையை சுமந்துகொண்டு நடக்கும் இயேசுநாதரின் படம் அது. அந்த கருணை ததும்பிய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் அந்த படத்தைப் பார்க்கும்போது, ” நீ சுமந்த அந்த சிலுவையின் எடை என்னப்பா?”, என்று மனதிற்குள்ளேயே கடவுளை கேட்டுக்கொள்வார். உலகத்திற்கே தெரியாத அந்த உண்மை அவருக்குத்


காற்றுக்கென்ன வேலி ?

 

 நிலவொளியோ சூரிய வெளிச்சமோ நாங்க மாளிகக்குள்ள மட்டும்தான் நுழைவோம்னு சொல்றதில்லெ! பாரபட்சமில்லாம குடிசையில இருந்து கோபுரம் வரைக்கும் எல்லா இடத்துலயும் ஒளி வீசுது. சுந்தர் தன்னுடைய வெற்றிகரமான 75-வது இண்டர்வ்யூவிற்கு வந்திருந்தான். வழக்கம் போல ஒரு காலியிடத்திற்கு ஆண்களும் பெண்களுமாக 27பேர் வந்திருந்தனர். அந்தக் கூட்டத்தைப் பார்த்ததுமே அவனுக்கு தலை சுற்றியது. போதாக்குறைக்கு அதில் இருவர் சிபாரிசுக் கடிதத்தோடு வந்திருந்தார்கள். அதனால் அந்த வேலை தங்களில் ஒருவருக்குதான் என்பது போல் அனைவரையும் துச்சமாகப் பார்த்துக் கொண்டு தங்களுக்குள்


எல்லாம் நடந்த பிறகு…

 

 போலீஸ் நிலையத்தில் ஒவ்வொரு காவலாளிகளும் மௌனமாக இருந்தனர். அங்கு நின்று கொண்டு இருந்த ஆண்களும் சரி, அரையாடையில் பெண்களும் சரி காவல் நிலையத்தில் நிற்பதை தங்கள் கௌரவத்திற்கு கேடாக நினைக்கவில்லை. தாங்கள் செய்தது நியாயம் என்ற நினைத்துக் கொண்டு இருந்தார்கள். மனதில் துளிக் கூட குற்ற உணர்வு இல்லை. இன்ஸ்பெக்டர் சுந்தரம் கமிஷ்னர் கார்மேகம் வந்து விசாரிப்பதற்காக காத்துக் கொண்டு இருந்தான். பிடிப்பட்ட எல்லோரும் பெரிய இடத்தில் சேர்ந்தவர்கள். கார்மேகம் உத்தரவுப்படி தான் அந்த ஆண்களையும், பெண்களையும்