கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2013

309 கதைகள் கிடைத்துள்ளன.

ஈகோ…

 

 மைதிலி ஸ்கூட்டியை மர நிழலில் நிறுத்தினாள். கைகடிகாரத்தைப் பார்த்துக் கொண்டாள். நேரமிருக்கிறது! அமைதியாக நின்றாள். அவளைச் சுற்றிலும் எல்லா திசைகளிலும் கறுப்பு கோட் அணிந்த, கைகளில் கட்டுகள் சுமந்த வக்கீல்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். செல் சிணுங்கியது. “ஆமாம்மா… கோர்ட்லதான் இருக்கேன். அரை நாள் லீவு போட்ருக்கேன். இன்னியோட முடிஞ்சுட்டா பரவாயில்ல.” அம்மா, மிகவும் தயங்கிப் பேசினார்… “அப்பா, ஜோசியரை பாத்துட்டு வந்தாரு. விவாகரத்துக்கெல்லாம் வாய்ப்பே இல்லனு அவர் அடிச்சு சொல்றாராம்.” அலட்சியமாகச் சிரித்தாள் மைதிலி. “அவர் ஜோசியம்


தொட்டி மீன்

 

 பத்மினி, ஹாலில் உட்கார்ந்திருந்தாள். கூடவே மணிகண்டன் கொடுக்கு மாதிரி ஒட்டிக்கொண்டு திமிறிக்கொண்டிருந்தான். பச்சை டவுசரும் சட்டையும் மாட்டி சபரிமலைக்கு மாலை போட்டிருந்தான். அந்த ஹால் ரொம்ப அகலமாக பத்மினி வீட்டுக்கு பின்னால் இருந்த கதிரடிக்கும் களம் அளவுக்கு இருந்தது. பளபளக்கிற பீங்கான் மாதிரி தரை. ஓரத்தில் பெரிய தொட்டிக்குள் கலர் கலராக மீனை விட்டு, அதற்குத் தனியாக ஒரு லைட்டைப் போட்டு அது வேற ரொம்ப ஜோடனையாக இருந்தது. ‘இந்த மீனெல்லாம் நேரங்காலமில்லாம, தூங்காமல் நீந்திக்கிட்டே இருக்கும்


கணவனின் குழந்தை!

 

 ”கலா டீச்சர்! உங்களுக்கு போன் வந்திருக்கு..!” என்று ஆயாம்மா வந்து சொன்னதும் திருத்திக் கொண்டிருந்த நோட்டுகளை மூடி வைத்துவிட்டு அலுவலக அறைக்கு விரைந்தாள் கலா. புருவங்கள் முடிச்சிட, யோசனையுடன் திரும்பி வந்தவளை… ஏறிட்டாள் தோழியான சக ஆசிரியை பரமேஸ்வரி. ”யாரு கலா போன்ல..?” ”அப்பா…” என்றவள், கொஞ்சம் தயங்கி, ”வீட்டுக்கு விஷ்வா வந்திருக்காராம். கை, காலெல்லாம் கட்டோட… குழந்தையையும் தூக்கிக்கிட்டு வந்து… என்னோட பேசணும்னு சொன்னாரம்.” ”யாரு… விஷ்வாவா? அப்பா ஏண்டி அவனையெல்லம் படியேற விடறார்? எந்த


தாம்பூலம்!

 

 ”மம்மி… சீக்கிரம் வாயேன்… டி.வி-யில டாடியக் காட்டறாங்க!” வெள்ளையில் நீலப்பூக்கள் சிதறிய மார்பிள் ஷிபான் சேலையைக் கட்டி ‘பின்’ பண்ணிக் கொண்டு இருந்த அருந்ததி.. அப்படியே ஓடி வந்தாள். டி.வி-யில் விநாயக்கின் முகத்தை க்ளோசப்பில் காட்ட ”ஹை.. டாடி!” என்று குதித்தாள் ஆறு வயது தீபிகா. விநாயக்கை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சினிமாவில் ஹீரோவின் அருகிலேயே ஆடும் அழகான டான்ஸர். பிரபலமான டான்ஸ் ட்ரூப்பில் எப்போதும் பிஸியாக இருப்பவன். இப்போது இரண்டு புதுப் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக


அவன்.. அவள்.. காதல்..!

 

 இன்னும் எத்தனை யுகங்களானாலும் காத்திருப்பேன் – கனத்த மௌனத்தைச் சுமந்தபடி… அதுவொன்றும் வலி தராது… மௌனத்துக்கு முந்தைய உன் வார்த்தைகளை விட! அவனையும் தண்டவாளத்தையும் தவிர யாருமில்லை அந்த ரயில் நிலையத்தில்! ஒரு மூலையில் கிடந்த சிமென்ட் பெஞ்ச்சில் தலைகவிழ்ந்து உட்கார்ந்திருந்தான் காற்றின் கண்களில்கூடப் பட்டு விட விருப்பமின்றி! மனதுக்குள் மீண்டும் ஒருமுறை கவிதை வரிகள் வந்து போயின. ‘நான்தான் கடைசி.. ஏறணும்னா ஏறிக்கோ..’ என்பது போல அவனுக்குப் பக்கத்தில் வந்து நின்ற மின்சார ரயில் சில


பாலை மனம்!

 

 அம்மாவிடம் சொல்லக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. மூன்று நாட்களாக அம்மா ஐ.சி.யு. வாசலிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். இயற்கை உபாதைகள் மறந்து போனவளாக இருக்கிறாள். காபியைக்கூட வற்புறுத்தித்தான் குடிக்க வைக்க வேண்டியிருந்தது. ”வேணாம் சகுந்தலா.. விட்டுடு..” நானும் வற்புறுத்தவில்லை. ஐ.சி.யு-வுக்குள்ளேயிருந்து வெள்ளை கோட்டும் ஸ்டெதஸ்கோப்புமாக அண்ணா வெளியே வந்தால் சடாரென்று எழுந்திருப்பாள். விரைந்து அண்ணன் அருகில் போய்க் கேட்பாள்.. ”சங்கரா, அப்பாவுக்கு எப்படிடா இருக்கு..?” ”உஷ்.. அம்மா.. கொஞ்சம் தள்ளி வா..” என்றழைத்துப் போய் சின்னண்ணன் மெதுவாகச்


பெரியநாயகி எம்.பி.பி.எஸ்

 

 பெரியநாயகி பெரியம்மா பெரிய ஸ்பெஷலிஸ்ட். ஒரு வாக்கியத்தி-லேயே இத்தனை ‘பெரிய’ இருப்பதைப் பார்த்து விட்டு அவர் எதில் ஸ்பெஷலிஸ்ட் என்று யோசிக்கிறீர்களா? தலைவலி, ஜலதோஷம், தசைப்பிடிப்பு, எலும்புமுறிவு என்று ஒரு ‘லிஸ்ட்’டுக்கே அவர் ஸ்பெஷலிஸ்ட்! படிப்பு என்னவோ அந்தக் காலத்து எட்டாப்புதான். ஆனால், தமிழிலும் ஆங்கிலத்திலும் வருகிற எல்லா மருத்துவப் பத்திரிகைகளையும் ஒரு நாளைக்கு மூன்று வேளை கரைத்துக் குடித்து, கரை கண்டவர். போலி டாக்டராக போர்டு வைத்து.. போலீஸில் மாட்டி.. பேப்பரி போட்டோ வந்து.. என்று


சொல்லாமலே..

 

 அம்மா பரிமாறிய இட்லி குட்டி நிலவுகளைப் போன்றிருக்க, ரசனையுடன் ருசித்துச் சாப்பிட்டான் ராகேஷ். மங்களம் எதை சமைத்தாலும் அதில் அபரிமிதமான சுவை இருக்கும். காரணம், சமையலில் அன்பை சற்று தூக்கலாகவே கலப்பாள். ”சேர்ந்து சாப்பிடலாம்னு நினைச்சேன்.. அதுக்குள்ளே சாப்பிட்டே முடிச்சிட்டியாண்ணா!” என்றவாறே வீட்டுக்குள் நுழைந்த தங்கையைப் பார்த்து ராகேஷ் முகம் சுளித்தான். ”தீப்தி.. இங்கே வா!” ”என்னண்ணா?” ”என்ன இது?” ”துவரம் பருப்பும் சீரகமும் தீர்ந்து போச்சுனு அம்மாதான் வாங்கிட்டு வரச் சொன்னாங்க.. அதைத்தான் வாங்கிட்டு வந்தேன்!”


மேற்கில் தோன்றிய உதயம்!

 

 கௌசல்யாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. உள்ளுக்கும் வாசலுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். இன்று ஞாயிற்றுக்கிழமை. அவள் கணவர் வீட்டுக்கு வரும் நாள்! சமையல்காரப் பெண்மணி எடுபிடி வேலை செய்ய.. சமையலில் மும்முரமாக இருந்த சைலஜா இவளைப் பார்த்துவிட்டு கேலியாக சிரித்தாள். ”பார்த்தியா அங்கே? மேடம், ஐயாவுக்காக பரபரன்னு இருக்கறதை? இந்த வயசிலேயும் அலையுதே!” ”ஆனா, அந்த ஐயா, இந்தம்மாவை கண்டுக்கறதே இல்லையே!” சின்னம்மாவே கேலி செய்வதால் தைரியமாக தன் கருத்தைச் சொன்னாள் சமையல்காரப் பெண் ருக்மணி. ”அவ்ளோ நல்லவங்க போலிருக்கு


ஒரு ரூபாய் தொலைப்பேசி!

 

 ராமாயி எழுந்தாள். லேசாக தலை சுற்றியது. எழுந்து தூணைப் பிடித்து நின்றவள் மறுபடியும் அமர்ந்தாள். ஓரிரு விநாடிகள் கழித்து தலைசுற்றல், தலைக்குள்ளேயே எங்கோ ஒளிந்து கொண்டது போல் உணர்ந்தாள். இப்போது தெம்பாய் இருந்தது.. ரெண்டு மூணு மாசமாகவே இதுமாதிரி அவ்வப்போது ‘ரொய்ங்’ என்று ரெண்டு சுற்று சுற்றி விட்டு அதுக்கப்புறம் காணாமல் போய் விடுகிறது. இப்போதெல்லாம் சாப்பாட்டை விட இதற்கான கஷாயமும் லேகியமும்தான் ஜாஸ்தியாக இருக்கிறது. மெதுவாக தெருவில் நடந்து போஸ்ட் ஆபீஸ் அருகே வந்தாள். கையில்