கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 24, 2013

7 கதைகள் கிடைத்துள்ளன.

யாரோ சொன்ன கதை

 

 Рассказ Hеизвестного человека : யாரோ சொன்ன கதை மூலம் : அன்டன் செக்ஹோவ் தமிழில் : மா. புகழேந்தி ஐந்தாம் நூற்றாண்டில், இப்போதைப்போலவே, சூரியன் ஒவ்வொரு காலையிலும் உதித்தது ஒவ்வொரு மாலையிலும் ஓய்வெடுக்கச் சென்றது. விடியலில் கதிரொளி பனித்துளியை முத்தமிட்ட போது, பூமி புத்துணர்ச்சி பெற்றது, காற்று உற்சாகமான நம்பிக்கை ஒலிகளால் நிறைந்தது. மாலையில் அதே பூமி இருளுக்குள் மூழ்கி அமைதியானது. ஒரு நாள் இன்னொரு நாளைப் போல இருந்தது, ஓர் இரவு இன்னோர் இரவைப்


நானும் அவனும்

 

 நான் வந்து சொன்ன பிறகுதான் அவனுடைய மரணம் வேளியே தெரிய ஆரம்பித்தது. எங்கள் அப்பார்ட்மெண்ட்டில்வசிப்பவர்கள் ஒவ்வொருத்தராய் எரிச்சலுடன் வந்து கூட ஆரம்பித்தார்கள்.அனுபவித்துக் கொண்டிருக்கும் ஞாயிறு தின சுகத்துக்கு இடையூறு இது. ”என்ன சார்!. எல்லாரும் பொணத்தை போட்டு வெச்சிட்டு இப்படியே பேசிக்கிட்டு காலத்த ஓட்டினால் .என்ன அர்த்தம்?. நேரமாகுதில்ல? .. ராமநாதன் சார்! கார்பரேஷனுக்கு போன் அடியுங்க. . சீக்கிரமா வந்து பாடியை கிளியர் பண்ணச் சொல்லிடுங்க.நொந்த உடம்பு., லேட்டானால் ஏரியாவே நாறிடும்.” ”ஆமாம்பா! மிஸ்டர். கதிரேசன்!


உதவிக்கரங்கள்

 

 இரண்டு நாட்களாய் எப்படியெப்படியெல்லாமோ கேட்டுப் பார்த்து விட்டாள் ரங்கம்மா. நயமாகவும் பயமாகவும் விசாரித்துப் பார்த்தாலும் பயல் பிடி கொடுத்துப் பேசவில்லை. சரி,.. அவன் போக்கிலேயே விட்டுப்பிடிக்கலாம் என்று அவன் ஓரளவு நல்ல மன நிலையில் இருக்கும்போது, “உனக்கு எந்தூருப்பா.. சொல்லு மக்கா.” என்று கொஞ்சலாகக் கேட்டாள். கீழுதட்டைப் பற்களால் அழுந்தக் கடித்தபடி தலை குனிந்து நின்றான். சட்டென்று கண்ணீர் திரையிட்டு எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடுவேன் என்று பயமுறுத்தியது. அவன் மோவாயை விரலால் பற்றி நிமிர்த்தியபடி, “சொல்லுடா


பிறகு

 

 Après : பிறகு மூலம் : கய் தே மாப்பசான் தமிழில் : மா. புகழேந்தி “கண்ணுகளா இனி நீங்க தூங்கப் போகலாம்.”, பாட்டியம்மா சொன்னார்கள். மூன்று குழந்தைகளும், இரு சிறுமிகள் ஒரு சிறுவன், எழுந்து தங்களது பாட்டியை முத்தமிட்டனர். பிறகு அவர்கள் பாதிரியாருக்கு இரவு வணக்கம் செய்தனர் , அவர் ஒவ்வொரு வியாழக் கிழமையும் போல அன்றும் இரவு உணவினை அங்கு தான் முடித்திருந்தார். அவர் இரு குழந்தைகளை தனது முழங்காலில் மேலே தூக்கினார், தனது


ஒரு சூளுரை

 

 Une Vendetta : ஒரு சூளுரை மூலம் : கய் தே மாப்பசான் தமிழில் : மா. புகழேந்தி போனிபாசியோ நகரத்தின் ஒதுக்குப் புரத்தில் ஓர் ஏழ்மையான வீட்டில் பவலோ சவேரினி-யின் விதவை மனைவி தனது ஒரே மகனுடன் வாழ்ந்து வந்தாள். அந் நகரம் மலைச் சரிவின் வெளிப்புறத்தில் அமைந்திருந்தது, சில இடங்களில் அது கடலுக்கும் மேலே தொங்கிக் கொண்டிருப்பதைப் போல இருந்தது, நீர் இணைப்பின் மேலாக பார்க்கும் போது, மணல் திட்டுக்கள் சார்தினியாவின் தென் கோடி


பச்சோந்தி

 

 Хамелеон : பச்சோந்தி மூலம் : அன்டன் செக்ஹோவ் தமிழில் : மா. புகழேந்தி காவல்துறையில் கண்காணிப்பாளரான ஒட்சும்யேலோவ் புதிய ஓவர்கோட் அணிந்து தன் கைகளுக்கிடையில் பொட்டலம் ஒன்றை வைத்துக் கொண்டு சந்தைச் சதுக்கத்தின் வழியே சென்று கொண்டு இருந்தார். அவருடன் சிவப்புத் தலை கொண்ட காவலன் ஒரு வலைப்பை நிறைய கைப்பற்றப் பட்ட நெல்லிக் காய்களுடன் வேகமாக எட்டு வைத்து நடந்து வந்து கொண்டிருந்தான். சுற்றிலும் அமைதி நிலவியது. சதுக்கத்தில் ஈ காக்கை இல்லை…கதவுகள் திறந்திருந்த


கோர்சிப் போராளி

 

 Un Bandit Corse : கோர்சிப் போராளி மூலம் : கய் தே மாப்பசான் தமிழில் : மா. புகழேந்தி ஐத்தோன் காடு வழியாக சாலை மெல்ல முன்னேறியது. எங்களது தலைக்கும் மேல் பைன் மரங்கள் கூடாரமிட்டு இருந்தன. வீசிய காற்று எதோ ஓர் இசைக் கருவியை இசைப்பது போல் வித்தியாசமான ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தது. மூன்று மணி நேர நடைக்குப் பின் ஒரு வெட்ட வெளி தென்பட்டது, சிறிது இடைவெளிக்குப் பிறகு ஒரு பெரும் பைன்