கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 8, 2012

18 கதைகள் கிடைத்துள்ளன.

வைட்டமின் ந

 

 வண்ணாரப்பேட்டையில், ஒரு குறுகலான சந்தில் கிளினிக் வைத்திருந்த டாக்டரைப் பார்க்கச் சொன்னான் என் நண்பன் சிவா. எனக்குச் சிரிப்புதான் வந்தது. பெரிய பெரிய டாக்டரையெல்லாம் பார்த்துவிட்டேன். அவர்களால் சொல்ல முடியாத தீர்வையா இந்த முட்டுச் சந்து டாக்டர் சொல்லிவிடப் போகிறார்? அவர்கள் கொடுக்காத மருந்தையா இவர் கொடுத்துவிடப் போகிறார்? எனக்குப் புரியாத புதிராக இருந்தது, என் வயிற்றுப் பிரச்னை. இரண்டு வருடங்களுக்கு முன்னால் திடீரென்று காய்ச்சல் அதிகமாகி, உட்காரக்கூட முடியாமல் அவதிப்பட்டபோது ஆரம்பித்த பிரச்னை அது. எதிரில்


தக தக தக… தங்கப் பானை!

 

 கேட்டை, மூட்டை, செவ்வாய் ஆகிய மூன்றின் கலவையான என் அருமை மனைவி கமலாவின் அருமைத் தம்பி தொச்சு & ஒரு நிமிஷம்… இந்த கே.மூ.செ அடைமொழி என் அருமை மனைவியைக் குறிக்காது; அவளின் தம்பி தொச்சுவைக் குறிக்கும்! & என் வீட்டுக்கு வந்தபோது என் இடது கண், இடது தோள், இடது காது, இடது கை, இடது பக்கம் இருக்கும் இதயம் என எல்லாமே ஆயிரம் வாலா சரவெடியாய் படபடத்தன! கமலாவை நான் கல்யாணம் பண்ணிக்கொண்டபோது, சீதனமாக


அந்த இரண்டெழுத்து நடிகை…

 

 வேலட் பார்க்கிங்கில் காரை நிறுத்தினாள் நடிகை ஸ்ரீஜா. ஓரமாக நின்றிருந்த யூனிஃபார்ம் டிரைவர் பாய்ந்து வந்து கார் சாவியை வாங்கிக்கொண்டு காரை நோக்கி நகர்ந்தான். லாபி நோக்கி நடந்த ஸ்ரீஜா இறுக்கமாக ஜீன்ஸ§ம் டி&ஷர்ட்டும் அணிந்திருந்தாள். அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலின் ரிசப்ஷனிலும் லாபியிலும் இருந்த அனைவரின் கண்களும் ஸ்ரீஜாவின் மேல் படர்ந்தன. தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியை அருகில் பார்த்து தரிசித்த திருப்தி அவர்கள் முகத்தில். ஸ்ரீஜாவைப் பார்த்துப் புன்முறுவலித்தாள் ரிசப்ஷனிஸ்ட். ‘‘குட் ஈவினிங்


மாறாதவர்கள்!

 

 காசியை எப்படி நான் வெறுப்பேன்? அவனது முழுப் பெயர் தெரிந்த பின்னும்கூட நான் விரும்பவே செய்தேன். என் சர்க்கரைக்கட்டி, என்னைக் கடைத்தேற்ற வந்த கடவுள் என்றுகூட நினைத்துக் கொண்டேன். கம்ப்யூட்டரில் ஹோம் பேஜ் எதனாலோ சுருங்கித் தொலைத்து நாலு பக்கமும் வெள்ளை வெளேர் என்றாகி, நடுவில் சின்ன கித்தான் டாப் மாதிரி தொங்கிக்கொண்டு இருக்கிறதே என்று நெடு நாளாக கவலைப்பட்டுக்கொண்டு இருந்தபோது, அவனல்லவா வந்து ‘அறு நூறுக்கு எட்டு நூறுதானே’என்று அநாயாசமாக அம்பை அங்கும் இங்கும் செலுத்திப்


அப்பாவின் சைக்கிள்

 

 அப்பாவின் சைக்கிளை இந்த ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக விற்றுவிடுவது எனத் தீர்மானித்துவிட்டேன். ‘விற்றுவிடுவது’ என்று சொல்வதைவிட, ‘தள்ளிவிடுவது’ என்ற வார்த்தையே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இடப் பிரச்னை முக்கியக் காரணம். நான் பைக் வாங்கியதிலிருந்தே அந்தப் பிரச்னை ஆரம்பித்துவிட்டது. வீட்டுச் சொந்தக்காரர் மிகவும் கண்டிப்பானவர். பைக்கோ, சைக்கிளோ… ஒரு குடித்தனக்காரர் ஒரு வண்டிக்கு மேல் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது அவரது சட்டம். ‘‘பைக்கை கேட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு, சைக்கிளை உள்ளே நிறுத்திக்குங்க. இல்லேன்னா, சைக்கிளை உங்க வீட்டுக்கு