ரமேஷ் தேடிய ராகமாலிகா

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 28, 2014
பார்வையிட்டோர்: 14,559 
 

உள்ளம் உணர்ந்து உணர்வுகளும் உறைந்து விட்டன.அந்த நினைவுகளுக்கு எதிர் தோற்றங்கள் அளிக்க அவனால் முடிய வில்லை

அவனும் மனிதன்தானே என்று சொல்லிவிட முடியும் .

நினைவுகளின் பரிமாணங்கள் அளந்து சொல்ல முடியாத ஒன்று !

எழுதலாம் .

கடலுக்குள் ஆழமிருக்கிறது! ஆகாயத்தில் தூரமிருக்கிறது !

ஆனால் அவன் மனத்தின் அடியில் அவள் இருக்கிறாளே ! அது ஏன்

அப்படியே இருக்கிறது !

அவனால் ஏன் முடியவில்லை! அவள் அப்படி என்ன செய்தாள்!

சும்மா சிரித்தாள்! அதுவல்லாமல் கண்களால் படபடத்து எங்கோ பார்த்த அவனை அவளிடமிருந்து நீங்காமல் நிலைத்து நிற்க வைத்தாள்!.

எல்லோரையும் போல அவளும் ஒரு பெண் தானே! இவன் ஏன் இப்படி ஆகிவிட்டான் !.

கல்லூரியில் வரிசையில் நின்று ,படிவம் வாங்கி பதிவு செய்து,

நேரங்களில் வகுப்பு அறையிலும் ,நீளமான வெளிப்புறத்திலும் ,

எத்தனையோ சிரிப்பொலிகள் ,குயிலிசைக்குரல்கள்,இசையோடு கலந்த இனிய பேச்சொலிகள் !

மல்லிகை தான் மணக்கும் என்பதில்லை ! இவர்களின் மணங்களும் மல்லிகையையே மறக்கச் செய்யும் என்பதன் இயல்பான எடுத்துக் காட்டுக்களின் அடையாளமாக இத்தனை பெண்கள் இருந்தும் இவளிடம் மட்டும் ஏன் இப்படி ஏங்கி விழுந்து எதையோ பறி கொடுத்தான் !.

நிகழ்ச்சிகள் நெருடுவதாக இருந்தாலும் துயரம் தாங்க முடியாது என்று எழுதலாம்! சொல்லலாம் !.

ஆனால் அந்தத் துயரமே அளவு மீறி நெஞ்சைக் குடைந்து அழுத்தும்போது ,நேரங்கள் மிகவும் துன்பமானவை .அடைத்த நெஞ்சம் நெகிழ்வதற்கும் கண்ணீர்தான் ஒரு தீர்வு என்று சொல்லவும் முடியாது !.ஓரளவு அந்த நேரத்திற்கு நிறைவு தரும்!.தீராத துயர் நீங்கவேண்டும் என்றால் அவன் நிலைமைதான் மாற வேண்டும்.

எப்பொழுது!

வேண்டிய எண்ணங்கள் ,படிக்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது.

ஏன் இந்த எண்ணங்களில் தாங்கொணா வேகம் ! ஏன் இதனிலிருந்து அவன் வெளியே வரவில்லை !.முடியவில்லையா !அல்லது முடிக்கும் நினைப்பு அவனுள்ளே எழ வில்லையா !

வகுப்பு முடிந்தாலும் அவள் வருகைக்காகக் காத்திருந்தான்!

அவள் கேட்டாள் ‘என்றாகிலும் ஒரு நாள் ,ஒரு நேரம் நீ இயல்பான நடைமுறையில் செயல் பட்டிருக்கிறாயா !’

அவன் சொன்னான்.’எவ்வளவோ நேரங்கள் ,நாட்கள் என் பணியை நான் செய்து இருக்கிறேன் .ஆனாலும் ஏதோ ஒரு ஓரத்தில் உன்னுடைய அசைவுகள் எனக்குள் ஒளிந்து ,நின்று ஒளி கொடுக்கும் , ஒலி கொடுக்கும் .நான் என்ன செய்வது!.

என்னுடைய எல்லா நேரங்களிலும் நீ இருக்கிறாய் !.அது என்னுடன் பழகி ஒன்றி விட்டது!

நிழற்ப் படமாக என்னுள் ஓடும் உன் நினைவு உயிர் கொடுத்து உலவ வேண்டும் என்றால் உன்னால் தான் முடியும்!.

அது வரை அது நிழற்ப்படமாக நில்லாது ஓடிக் கொண்டுதான் இருக்கும் .

அவள் சிரித்தாள்! சிந்தனை செய்தாள் !

என்னதான் இந்த வனப்பும் வசீகரமும் !அன்றிலிருந்து இன்று வரை ஏன் எப்போதுமே இயற்கையின் ஈர்ப்பு இவர்களிடம்தானா!

அன்றொரு நாள் !

கல்லூரி உணவு விடுதியின் வாசலில் அவனுக்காக அவள் காத்திருந்தாள்!

எங்கேயோ பார்த்து நிற்கவில்லை !இவனுக்காக நின்றாள்!.

‘நேற்று எனக்காகக் கார் கதவை திறந்து நின்றாய் ! இந்தக் கல்லூரி வழி ஓரம் ,ககமவென்று மணம் செய்த கார் சீட்டுகள் ,கைபேசியின் கண்கொட்டாத படங்கள் இதிலெல்லாம் எனக்கு ஈடுபாடு இல்லை!

ஆனாலும் உன்னோடு பேச வேண்டும் என்று சில சமயம்கள் நினைப்பதுண்டு !

கற்பனைகளில் நேரம் சிலவு பண்ண எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை ! பார்க்கலாம் !

வானிலை அறிவுப்பு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று சொல்லும் பொழுதே பெரிய மழை கொட்டினால் எப்படி இருக்கும் !

அவளின் வார்த்தைகள் ! “ஆனாலும் உன்னுடன் பேச வேண்டும் .சில சமயங்கள் ”

அதற்காக இவன் காத்திருந்தான் .

கல்லூரியில் மவுண்ட் அபு ராஜஸ்தான் டூர் போனார்கள் .

நெடிய பள்ளத்தாக்கில் அந்தி வான சூரியன் சிவப்புக் கிரணங்களுடன் விடை பெரும் காட்சி ! பள்ளத்தாக்கு முழுதும் சிவப்பு நிறம் !

அருகில் இருந்த அவனிடம் அவள் பேசினாள்!

‘இத்தனை பேர் இருந்தாலும் இந்த அருமையான தோற்றத்தையும் இயற்க்கை மாறாத அழகையும் உன்னோடு ரசித்துப் பார்க்கும்போது எனக்கு என்னவெல்லாமோ நினைக்கத் தோன்றுகிறது !கொஞ்சம் கொஞ்சமாக உன்னைப் பார்த்து உன்னோடு இன்னும் சற்று நேரம் இருக்க ஒரு ஆசை வருகிறது !.’

அவனுக்குப் புரிய வில்லை! இவளாகப் பேசுகிறாளா ! அல்லது இயற்கைச் சூழ்நிலை இவளைப் பேச வைக்கிறதா !

அவள் சொன்னாள்.’நானேதான் பேசு கிறேன் .நான் ஒன்றும் உணர்வில்லாத ஜடம் இல்லை !எனக்கும் உன்னை நினைக்கத் தெரியும் !ஆனால் நம் காதல் கடற்கரையில் காற்று வாங்கும் காதல் அல்ல !உன்னால் முடிந்தால் அந்த நாட்டுக்கு படிக்க வா !பார்க்கலாம்.

மாலை நேரம் மங்க ஆரம்பித்தது!அவனிடம் இன்னும் நெருங்கி பிணைந்து நடக்க ஆசை தானாக வந்தது அவளுக்கு !

அவள் பெண்ணல்லவா !

சுற்றம் ,உடன்பிறப்புகள்,வளர்த்தவர்கள் நினைவு கொஞ்சம் வருகிறது . ஆனால் அவைகள் நினைவில் நிறுத்த முடியவில்லை !

அருகில் நடப்பவனின் அமைப்பும் அழகும் அவளை அவனிடம் ஈர்க்கிறது !

கலைந்த ஒட்டிய சட்டையுடன் உடலின் இறுக அணிந்த ஜீன்ஸில் நிமிர்ந்த நடையும் அவனின் அழகானவன் என்ற வசீகரத் தோற்றம்!

‘மெள்ள நடக்க மாட்டாயா ‘

அவளின் ஆசை அடித்தள வார்த்தைகள் !

இருக்கும் இடைவெளியைக் குறைத்து திரும்பிய அவன் தானாகவே தன் கரங்களை அவளிடம் நீட்டுகிறான்.!

பற்றிய கரங்களை அவள் இறுகப் பிடித்துக் கொண்டாள்.கூறிய நீண்ட அவள் நகங்கள் அவன் புறங்கையை அழுத்தினாலும் அது அவனுக்கு வலி இல்லை .இனம் தெரியாத சுகம்!

இணையும் இக்கரங்கள்தான் இவர்கள் காதல் ஆரம்பம்!.

அவள் பெயர் ராகமாலிகா!கல்லூரிப் பெயர் ராகா !அவன் பெயர் ரமேஷ் .

ரமேஷ் ! ஒரு டீ சாபிட்டுட்டு பஸ்க்கு போலாமா !

அவளின் உரிமைக்குரலின் குழைவு ,அவன் இருக்கிய கரங்கள் அவள் இடுப்பில் அணைத்து தன்னுடன் தாங்கிச் சென்றான் .

தேநீர் அருந்தும் போது சூட்டில் அவள் உதடுகள் இன்னும் சிவந்த போது இவன் பதறுகிறான் !

நேற்று வரை இல்லாத பரிவு இன்று அவனுக்கு!

ரமேஷ்! நாளை ஊருக்குப் போனதும் நம்முடைய அடுத்த படிப்பு பற்றிப் பேசணும்.என்னால் இப்படியே வாழ்க்கைப் பாதைக்கு போக விருப்பமில்லை!

அவனுக்கும் விருப்பமில்லை!

எழுதினார்கள் !அமெரிக்க செல்லும் வரிசையில் அண்ணா சாலையில் நின்றார்கள் .அனுமதியும் பெற்றார்கள் .நல்ல பல்கலைக் கழகங்களில் இடமும் கிடைத்தது

ஆனால் ரமேஷ் வீட்டில் அவனை இந்தியாவிலேயே வேலைக்குப் போகச் சொன்னார்கள் .அதை அவளிடம் சொல்லவில்லை!

அவள் சூழ்நிலை வேறு! அவன் சூழ்நிலை வேறு!

அவளுக்கு நிறைய உறவினர்கள் யு எஸ் ல் இருக்கிறார்கள் .இவள் போனால் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

அவனுக்கும் இருக்கிறார்கள் .இங்கே கொஞ்சம் பொறுப்பு !அப்பாவின் பிசினெஸ் .தங்கையின் படிப்பு !அப்பா அம்மாவின் இந்திய மண்ணின் ஆசைகள்.

தயங்கினான் !

அன்றொரு நாள் !

ரமேஷ்! இந்த ஆகஸ்ட் அட்மிஷனில் நாம் அங்கிருக்க வேண்டும் .

தற்சமயம் சியாட்டில் பல்கலைக் கழகம் எனக்குப் பிடித்திருக்கிறது !

உறவினர் நிறையப் பேர் இருக்கிறார்கள் .ஆனாலும் நீ இல்லாமல் எனக்குப் போக தயக்கமாக இருக்கிறது .ஏன் என்றே தெரியவில்லை !

தனிமை உறுத்துகிறது !

ரமேஷுக்கு அதற்க்கு மேல் சொல்லாமல் இருக்க முடிய வில்லை .

மாலு!

அவள் திகைத்து திரும்பிப் பார்த்தாள்.’யாரைக் கூப்பிடுகிறாய் !ரமேஷ் !

ரமேஷ் சிரித்தான் !

எல்லோருக்கும் நீ ராகா !ஆனால் எனக்கு நீ மாலு! என் செல்லக்குட்டி மாலு எனக்குதான்!

ஐயோ !ரமேஷ் !நானா !

கண்கள் படபடக்க பேசும் மொழி தெரியாமல் அப்படியே ஓடி வந்து இறுக்கக் கட்டிக் கொண்டாள்.

அது கண்ணீரா ! விம்மின நெஞ்சத்தின் விழி நீரா !தெரியாது !

அவனுடைய அகண்ட மார்பு அவன் சட்டையை மீறி நனைந்து

இருந்தது ! அவ்வளவு கண்ணீர் !

ஒரு பெண் தன மனதைக் கொடுப்பது எளிதல்ல !ஆனால் தன் உள்ளத்தை கொடுத்துவிட்டால் மாறுவது மிகக் கடினம் !என்றுமே மாறமாட்டாள் !

இது பெண்ணின் ஈடில்லாப் பெருமை கலந்த தன்மை !

அவளால் ஒரு சிறு தொய்வு !சிறு மாற்றம் கூட ஏற்க முடியாது !

மாலு!உனக்கு நினைவு இருக்கா !நீ தானே நாம் படித்து முடித்த பிறகு வாழ்க்கையைப் பற்றிப் பேசலாம் என்று சொன்னாய்!

‘ஆமாம்!சொன்னேன் !இப்பவும் சொல்லுகிறேன் .அது என் லட்சியம் .

ஆனால் நீ இல்லாமல் என்னால் எந்த வெளி நாட்டிலும் போய்ப் படிக்க முடியாது !.

அன்று இரவு அவன் தூங்காமல் யோசனை செய்தான்.இவளின் காதல் இவ்வளவு தீவிரமாக ஆனது அவனை மெய் மறக்கச் செய்து விட்டது.

நேற்று மாலு ! என்று சொன்னதும் அவள் ஓடி வந்து இறுக்க அணைத்துக் கொண்டதும் அந்த சுகம் அவனை விட்டு அகலவே இல்லை

அம்மாவை எப்படியாகிலும் சம்மதிக்க வைக்க வேண்டும் .

இவளைப் பற்றி அம்மாவுக்கு அப்பாவுக்குத் தெரியாது .

தவிர இவனுக்கு அட்மிஷனும் கொடுத்து உதவித் தொகையும் யுனி வெர்சிட்டியில் கொடுத்திருக்கிறார்கள் .காலையில் அம்மாவிடம் பேசியே தீர வேண்டும் .இன்னும் அவன் தூங்கவே இல்லை .

மாலு தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தாள் .

காலை வந்தது. அம்மா எழுப்பினாள்.

என்னடா! இப்படி தூங்கிண்டு இருக்கே ! இன்னிக்கு சுனிதா வுக்கு நிச்சய தார்த்தம் .காலையிலேயே போக வேண்டும் .அப்பா ரெடி ஆயாச்சு!. நீ என்னடான்னா இன்னும் தூங்கிண்டு இருக்கே !’

என்னம்மா! மொள்ள சொல்றே

டேய் !இரண்டு நாள் முன்னாலேயே நீ சாப்பிடும்போது சொன்னேன் .

நீ எங்கேயோ மோட்டப் பார்த்துண்டு செல்போனைக் காதில் வைச்சுண்டு சரி சரி ன்னு சொன்னாயே !’

சொன்னேனா! மறந்து போச்சு அம்மா!நீங்க போங்க .நான் பின்னாலேயே வந்திடறேன் .

‘இந்த பாரு!சுனிதா உன் தங்கை !உன் பெரியப்பா பொண்ணு !அண்ணன் உறவுக்கு கூட இருந்து பார்த்துக்கணும் .சீக்கரம் வந்து சேரு.

மாலு பற்றிச் சொல்லலாம் என்றால் காலையிலேயே கிளம்பிட்டா !

எப்படியாகிலும் சொல்ல வேண்டும் .

நிச்சயதார்த்தம் நடந்து கொண்டு இருந்தது.

‘சித்தி! எங்கே ரமேஷ்? காணோமே ! இது சுனிதாவின் குரல் .

‘என்னம்மா செய்வது! காலையிலேயே சொல்லியாச்சு !இன்னும் வரலே,எங்க சுத்தரானோ!

அதற்குள் சாப்பாடு தயார் ஆகிவிட்டது.பெண்கள் வரிசையில் ரமேஷ்

அம்மா பக்கத்தில் இடம் காலி இருந்தது .அதில் ராகா வந்து உட்கார்ந்தாள்.அவளின் அம்மா எதிர் வரிசையில் இருந்தாள்.

அவரவர் கையில் செல்போன் பேசிய வண்ணம் இருந்தது.

மாலு! எங்கே இருக்கே!போன் மெசேஜ் அவளுக்கு .

‘இங்கே .சுனிதா என்ககேஜ்மென்ட் ஹாலில் ‘

போனை வைத்துவிட்டு தண்ணீர் சாப்பிடப் போனாள்.மணி அடித்தது .

இவள் எடுப்பதற்குள் போனில் ரமேஷ் முகம் தெரிந்தது.

நல்ல வேளை!அவன் அம்மா பார்க்க வில்லை!.

ஆனால் ‘ரமேஷ் !சீக்கிரம் வா !சாப்பாடு நடக்கிறது.’

அப்பொழுதுதான் ரமேஷ் அம்மா அவளை ஏற இறங்கப் பார்த்தாள்.

அதற்குள் ‘மாலு!போனைக் கட் பண்ணு.உன் பக்கத்தில் என் அம்மா!

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அதற்குள் சுனிதாவும் மாபிள்ளையும் ‘சித்தி!அவ்சரமில்லாமச் சாப்பிடுங்க !

அட!உங்க பக்கத்திலேயே மருமகளை உட்கார்த்திக் கொண்டு விட்டீர்களே !என்று சுனிதா கேட்க

அப்போதுதான் ரமேஷின் அம்மா அவளை நன்றாகப் பார்த்தாள் .

‘உன் பேர் என்னம்மா!

‘ராகமாலிகா’!

என்ன பண்றே !

கம்ப்யுட்டர் சயன்ஸ் முடிச்சிருக்கேன் .ஆகஸ்ட்லே யுஎஸ் போறேன் ‘

நீங்க ரமேஷ் அம்மாவா !அந்தோ எதிர் வரிசையிலே என் அம்மா ‘

தன அம்மாவை அறிமுகப் படுத்தினாள்.

ஓ! நம்ப லஷ்மி மேடம்!கிளப்லே நிறைய சந்திச்சிருக்கோம் .சௌக்கியமா !

இருவரும் பேசிக்கொண்டார்கள் .

அதற்குள் இன்னொரு கால் !

‘சாப்பிட்டது போரும் !வெளியே வா !காத்திண்டிருக்கேன் !.

அதற்குள் ரமேஷ் அம்மா அவளைப் பார்த்து ‘மெதுவா சாப்பிட்டுப் போ .அவன் எங்கேயும் போக மாட்டான்.என்னைப் பார்த்துட்டு வெளியே

இருக்கான்னு நினைக்கிறேன் ‘என்று சொல்லிச் சிரித்தாள்.

ராகாவுக்கு வெட்கமாகப் பொய் விட்டது .

இந்த மாதிரி சூழ்நிலைகளில் ஒரு பெண்ணின் வெட்கம் என்பது மிகவும் ரசித்துப் பார்க்க வேண்டிய ஒன்று !அதன் அழகே வேறு!

அதை இங்கே காண முடிந்தது .

சாப்பாடு முடிந்து மெயின் ஹாலுக்கு வந்து விட்டார்கள் .அடுத்த பந்தி .அதில் ரமேஷ் இருந்தான் .

‘ரமேஷ் !கொஞ்சம் பொறுத்துக்கோ !நீ சாப்பிடு .அதற்குள் வருகிறேன் ‘

என்று சொல்லிவிட்டு ரமேஷ் அம்மாவை நோக்கி ராகா போனாள்.

மாமி!உங்களிடம் பேசலாமா !

‘சொல்லும்மா ராகமாலிகா!நீ நம்ப ஆடிட்டர் சந்துரு சாருடைய பொண்ணு தானே ! சொல்லு!

‘மாமி !என்னை ராகான்னு கூப்பிடுவாங்க !உங்க பையனுக்கு நான் மாலு!

ஓ!அவ்வளவு நெருங்கின பிரண்டா அவன் உனக்கு ‘

பதில் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினாள்.கண்களில் நீர் பெருக ஆரம்பித்து விட்டது !

‘என்ன அசட்டுப் பொண்ணும்மா நீ !இதுக்குப் போய் அழலாமா ! கண்ணைத் தொடைச்சுக்கோ . சொல்லு !என்ன சமாசாரம் !

மாமி !எனக்கு யுஎஸ் லே படிக்க ஆசை !ஆனா தனியா போக ஒரு மாதிரியாக ஒருக்கு.’

என்னம்மா இது !இந்தக் காலத்திலே வீட்டுக்கு வீடு உன்னைப் போல சின்னப் பொண் நிறையப் பேர் ஜோராப் படிச்சுட்டு வராங்க !உனக்கென்ன தயக்கம் ?

மாமி!ரமேஷ் இல்லாம போகப் பிடிக்கலே !தயவு செய்து அனுப்ப மாட்டிர்களா !

பெரியதாக அழ ஆரம்பித்து விட்டாள்.

ரமேஷ் அம்மா அசந்து விட்டார்கள் .

‘முதல்லே கண்ணை தொடைச்சுக்கோ ராகா! சாரி மாலு!என்று அவளை அணைத்துக் கண்ணை துடைத்து விட்டாள் .

இன்னமே அழக் கூடாது .கவலைப்படக்கூடாது மாலு! என்று சிரித்துக்கொண்டே ‘இப்படித்தானே என் பிள்ளை உன்னைக் கூப்பிடுவான் என்று சொல்ல

அத்தனை கண்ணீரிலும் ஒரு வெட்கம் கலந்த சிரிப்பு அந்தப் பெண் முகத்தில் படர்ந்த போது ஒரு பெண்ணின் உண்மை அழகு அங்கே ஒளி வீசியது !.

மாமி!என்னை மன்னிச்சுடுங்க ! என்று அவள் ரமேஷ் அம்மாவைப் பார்க்க இதுக்குப்போய் அழுவையா! என்று ராகாவை மறுபடியும் இறுகக் கட்டிக் கொண்டாள்.

இந்த அணைப்பின் சுகம் தன எதிர் காலத்தின் அச்சாரம் என்பதை அவள் உணர்ந்தாள்

எல்லோரும் விடை பெற்றுக்கொண்டு கிளம்பி போய் விட்டார்கள் .

ரமேஷ் பெரியாப்பவுடன் உட்கார்ந்திருந்தான் .

நீங்களே பாருங்கோ !இப்பதான் இவனை பார்க்கிறேன் .ஒரு அண்ணன் என்ற முறையில் என்ன செய்தான்? இது ரமேஷின் அம்மா .

அவனை ஏன் கொவீச்சுக்கிரே !ஏற்கெனெவே ஏன் கிட்டே பெர்மிஷன் வாங்கிண்டுதான் வெளியே போனான் .காலையிலே இவன்தான் மாப்பிளை வீட்டுக்காரர்களை ஏர்போர்ட் போய் கூட்டிண்டு வந்தான் .

இது பெரியப்பாவின் பரிவு!

வீட்டுக்குப் போகும் போது ரமேஷ்தான் கார் ஓட்டிச் சென்றான் யாரும் பேசவில்லை .அவன் தங்கை மட்டும் நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டு வந்தாள்.

இரவு வந்தது.

ரமேஷ் ரூமுக்கு அம்மா வந்தாள் .

‘என்னடா லவ் பண்றயா!

இல்லேம்மா !சும்மா நல்ல பிரண்டு !என்று இழுத்தான் .

நல்ல பிரண்டு ! அதுதான் நீ இல்லாம யுஎஸ் போகமாட்டேன்னு சொல்லரா !

எத்தனை நாளா இது !பார்த்தா ரொம்ப நாள் சீரியல் மாதிரி இருக்கு !

பொறுப்புன்னா என்ன தெரியுமா ?இங்கே எங்களை விட்டுவிட்டு போய்டு !அங்கே போனா எப்போ வருவேன்னு தெரியாது .

தவிர அந்தப் பொண்ணோடு உட்கார்ந்து பாடம் படிப்பியா அல்லது ஊர் சுத்துவையா!

‘அம்மா !எனக்கும் பொறுப்பு இருக்கு.அப்படி போனாலும் மாஸ்டர்ஸ் முடிச்சிட்டு வந்துடுவேன் .

ராகா அப்படிப் பட்ட பொண் இல்லை !படிப்பிலே ரொம்ப சீரியஸ் ஆன பொண்ணு !

தெரிகிறது! அவ ராகா இல்லை .’மாலு’

ரமேஷ் பதில் பேசவில்லை

அடுத்த நாள் .

ராகாவைச் சந்தித்தான் .’எனக்கு வேலை வைக்கலே நீ ‘

அவள் சொன்னாள்’அம்மா கிட்டே எல்லாம் பேசியாச்சு .உங்க அம்மா ரொம்ப நல்லவங்க !நிச்சயம் உன்னை அனுப்புவார்கள் .’

அன்றிரவு .

மறுபடியும் அம்மா ரமேஷிடம் பேசினார்கள் .

‘அம்மா! இப்படி விசாவும் படிக்க பணமும் கொடுத்து எந்தப் பையனும் போகாமே இருக்க மாட்டான் .’

அம்மா சொன்னாள்.

‘படிப்பு அங்கு மட்டும் அல்ல !நம்ப ஊரிலேயும் அதற்க்கு மேல் படிக்கலாம் .அங்கே போய் தனியாக எல்லாவற்றையும் ஏற்று செய்து கொண்டு சொந்த பந்தமில்லாமே என்ன வாழ்க்கை அது !

சரி!பரவாயில்லை !நான் உன் அப்பாவிடம் பேசறேன் .உன்னை நம்பி மும்பையில் கம்பனி ஆரம்பிக்கிறார் .நீ என்னடான்னா ஊரை விட்டே கிளம்பரே !

மறு நாள் .

ஆடிட்டர் சந்துருவும் அவர் மனைவியும் இவன் அப்பா ராமச்சந்திரனுக்கு போன் செய்து விட்டு வந்தார்கள் .எல்லாக் கதைகளும் பேசினார்கள் .

ரமேஷ் அப்பா சொன்னார் .’சுனிதா கல்யாணம் வருகிறது.இவனை நம்பி கம்பனியை டெவலப் பண்ணியிருக்கேன் .இப்போதைக்கு அவளை அனுப்புங்கள் .கொஞ்சம் எல்லாவற்றையும் சரி செய்து விட்டு இவனை அனுப்புகிறேன் .எனக்கும் இவன் அங்கே படிக்கணும்னு ஆசைதான் .ஆனால் ஒன்று .அடுத்து கல்யாணம் என்ற வார்த்தைகள் எல்லாம் இப்போ வேண்டாம் .எல்லாம் நல்லபடியா பின்னாலே பார்த்துக்கலாம் .’

சந்துரு சொனார்.’மாஸ்டர்ஸ் முடியும் வரை எந்தப் பேச்சும் கிடையாது.ராகா அப்படிப் பட்ட பொண்ணு இல்லை .கவலை வேண்டாம் .கூடுமானவரை பையனை அனுப்ப முயற்சி செய்யுங்கள் .’

ரமேஷ் அப்பா அவர்கள் போன பிறகு தன மனைவியைப் பார்த்து

‘என்ன இந்தப் பையன் எப்போ பரிட்ஷை எழுதினான் .இப்படி இக்கட்டான நிலையிலே கொண்டு விட்டுட்டானே! ஆடிட்டர் ரொம்ப

நல்லவர் .என்ன பண்றதுன்னே தெரியல்லே!

அடுத்த நாள்

மைலாப்பூர் சாய்பாபா கோவிலின் வாசலில் ரமேஷ் அம்மா உள்ளே போகிற வழியில் பார்த்தால் ராகா கண்ணை மூடிக்கொண்டு பாபா வின் முன்னால் நின்று கொண்டிருந்தாள் .மாமிக்கு ஆச்சர்யம் மிகுந்த அன்பு அவள் மீது .ராகா பின்னாலேயே போய் நின்று கொண்டிருந்தாள் .

ராகா பிரார்த்தனை முடிந்து திரும்பினால் ரமேஷ் அம்மா !

மாமி என்று ஆரம்பித்ததும் மாமி சைகை மூலமாக நான் முடித்து வெளியில் வருகிறேன் ,என்று சொன்ன பிறகு ராகா வாசலுக்கு வந்து விட்டாள்.

என்ன மாலு! இந்தப் பக்கம் !

மாமி நான் அடிக்கடி வரும் கோவில் இது .மனசு சரியில்லேன்னா இங்குதான் வருவேன் .

மாமிக்கு ஒரே ஆச்சர்யம் ! எப்படி வந்தே !எங்கே போறே !

டிரைவர் என்னை விட்டுட்டு ஆபிஸ் போய்ட்டான் .நேர வீட்டுக்குப் போகணும் .

வீட்டுக்கு அப்புறம் போகலாம் .வா என்னோடு .

மாமியுடன் காரில் ஏறிக்கொண்டாள்.

மாணிக்கம் !நேர வீட்டுக்கு விடு !

கார் போய்க்கொண்டு இருந்தது .

மாமி !நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன் .நான் யுஎஸ் போகலை ! இங்கேயே எம்பியே பண்ணலாம் என்று முடிவு பண்ணிட்டேன். உங்களே,ரமேஷ் விட்டுப் போக பிடிக்கலே !

ரமேஷ் அம்மா அப்படியே அசந்து போய் அவளையே பார்த்தாள்.

அட பெண்ணே !எங்களுக்காக நீ இப்படிப் பேசறே .நான் ரமேஷை நாளைக்கே உன்னோடு அனுப்புகிறேன் .சந்தோஷமாக படிச்சுட்டு வாங்க !

இல்லை மாமி! நாங்க போனாக் கூட இங்கே நீங்க ,எங்க அப்பா அம்மா எல்லோரையும் மிஸ் பண்ணுவேன் .

சாய்பாபா விடம் உத்தரவு கேட்க வந்தேன் .கண்ணை மூடிக்கொண்டு உத்தரவுக்காக நின்றேன் .

ஆச்சர்யம் பாருங்க !பாபா உங்களை வர வழைத்து ஏன் பின்னால் நிக்க வைச்சார் .நம்ம ரெண்டு பேருக்குமே அங்கே பார்ப்போம்னு தெரியாது .இதை விட அருள் வாக்கு வேறு என்ன வேண்டும் .!

மாமி !ஒரு சின்ன வேண்டுகோள் !

என்னை உங்களோடு ஏத்துப்பீர்களா !எனக்கு ரமேஷை விட நீங்கள்தான் வேணும் .

ரமேஷ் அம்மா விற்கு ஒரே அதிர்ச்சி மேல ஆச்சர்யம் !

மாலு!இந்தக்காலத்திலே அதுவும் உன்னைப்போல ஒரு பொண்ணு. இவ்வளவு பெரிய முடிவு எடுப்பது !யாராலும் முடியாது !

நான் ரொம்பக்கொடுத்து வைத்தவள் .அந்த பாபா தான் உன்னை எனக்குக் கொடுத்திருக்கார் .என்னைப்போல் அதிர்ஷ்ட சாலி யாரும் இல்லை !

அப்படியே அவளை இறுக்கக் கட்டிக் கொண்டாள் .

இப்பவே நான் இல்லை நம் வீட்டிற்கு உன்னைக் கூட்டிண்டு போறேன் .சந்துரு சாரிடமும் லக்ஷ்மி மேடத்துக்கும் சொல்லிவிடுகிறேன் .

எவ்வளவு பெரிய முடிவு !எவ்வளவு பெரிய தியாகம் !

ராகாவை நெஞ்சோடு அணைத்து மாமி குலுங்க குலுங்க அழுதார்கள்

மாலு !என் செல்ல மாலு! மாமியின் அழுகை நிற்கவேயி ல்லை ஒரூ பெண்ணின் தூய்மை யான அன்பு மழையில் இன்னொரு பெண்

நனைந்து கொண்டிருந்தாள் .

டிரைவர் மாணிக்கம் கார் ஒட்டுவதால் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைக்க முடியாமல் அவர் கைகளில் தெரித்துக் கொண்டிருந்தது .

Print Friendly, PDF & Email

3 thoughts on “ரமேஷ் தேடிய ராகமாலிகா

    1. தங்கள் பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி .

  1. இது ரமேஷ் தேடிய ராகமாலிக அல்ல ராகா தேடிய ரமேஷ் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *