வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 

அத்தியாயம்-4 | அத்தியாயம்-5

“நாலு வீதிக்கும் பேர் வச்சிட்டாப் போதுமா? அங்கெல்லாம் தேர் சுத்தி வரவேணாமா? டர்னிங்ல தேரைத் திருப்பி விடணுமே; அதுக்கெல்லாம் என்ன ஐடியா வச்சிருக்கீங்க?” என்று விழா வேந்தன் முத்து கேட்க, “ஜப்பான்ல புல்லட் ரயில்களையே ரிமோட் கண்ட்ரோல்ல ஓட்றாங்க. தேரைத் திருப்பி விடறதுதானா பிரமாதம்!” என்றார் புள்ளி சுப்புடு.

“தேரோட்டத்தை நம் ஊர்ல எப்படி நடத்தறாங்களோ அந்த மாதிரியேதான் இங்கேயும் நடத்தணும். தெரு முனையில் திருப்பறது கூட நம் ஊர் வழக்கப்படிதான் செய்யணும். முட்டுக்கட்டை, ‘ஸ்டீல் ஷீட் ரீப்பர்’ இந்த ரெண்டையும் உபயோகிச்சுதான் தேரை ஓட்டணும். சக்கரத்தின் கீழ் ரீப்பர்களை வெச்சு அந்த ரீப்பர்களுக்கு மேல விளக்கெண்ணெயை டின் டின்னா ஊற்றிவிட்டால் தேர்ச் சக்கரம் அதுல வழுக்கிட்டுத் திரும்பற அழகே தனி! பரதநாட்டியம் ஆடற பெண் மாதிரி அது அழகா ஆடிக்கிட்டே திரும்பறப்போ, அடாடா கண்கொள்ளாக் காட்சியாயிருக்குமே! காணக் கண் கோடி வேணுமே” என்றார் நன்னன்.

“அதுதான் இந்த விழாவுக்கே க்ளைமாக்ஸ்” என்றார் முத்து.

“டோக்கியோவில் எப்பவுமே தேர்த் திருவிழா கூட்டம்தான்! எங்க் பார்த்தாலும் ஜன வெள்ளம்தான். போதாததற்கு வெளிநாட்டிலிருந்து வேற லட்சக்கணக்கான பேர் வரப் போறாங்க. கோடிக் கண்கள் என்ன? கோடானு கோடிக் கண்கள் இருக்கும்!” என்றார் புள்ளி சுப்புடு.

TVA_BOK_0003968_வடம்_பிடிக்க_வாங்க_ஜப்பானுக்கு_0039-pic“முட்டுக்கட்டை போடறதுன்னா அதுக்கு என்ன அர்த்தம்? முட்டுக்கட்டை போட்டா தேர் ப்ரேக் போட்ட மாதிரி நின்னுடாதா?”

“முட்டுக்கட்டை தான் தேர் ஓடறதுக்கே ரொம்ப முக்கியம். அந்தக் கட்டைகளைச் ‘சக்கரத்தின் கீழ் கொடுத்து தேரைக் கொஞ்சம் கொஞ்சமா திருப்பறதே ஒரு கலை. ‘முட்டுக்கட்டை இல்லேன்னா தேரே திரும்பாது” என்றார் முத்து.

“முட்டுக் கட்டை போடறதுக்கு யாராவது ஆள் வந்திருக்காங்களா? இல்லே, ஜப்பான்லயே யாரையாவது போடச் சொல்லலாமா?”

“தேர் திருப்பறது ஒரு தனிக்கலை. அதுல எக்ஸ்பர்ட் ஆளெல்லாம் நம் ஊர்லதான் இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் கலைமா மணி பட்டமே கொடுக்கலாம். நாற்பது பேர் அதுக்குன்னு ஸ்பெஷலா வராங்க.”

“காலையில நீங்க எங்க போயிருந்தீங்கம்மா? உங்களைக் காணமே!” மனோரமாவைப் பார்த்துக் கேட்டார் புள்ளி.

“நானும் கோமோச்சியும் கார்டன் பக்கமா ‘வாக்’ போயிருந்தோம். இந்த இம்பீரியல் பாலஸ் காம்பவுண்டுக்குள் இல்லாதது எதுவமே இல்லை. பாங்க், கடைத்தெரு, தியேட்டர், ரெஸ்டாரண்ட், நீச்சல், குளம், கோயில், ஸலூன்; லாண்ட்ரி, இடுகாடு எல்லாமே இருக்கு” என்றார் மனோரமா.

“நாங்க கின்ஸா பக்கம் நடந்தே போயிருந்தோம். மெட்ராஸுக்கும் டோக்கியோவுக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம். இங்கே எருமை மாடு, சினிமா போஸ்டர். ஹாரன் சத்தம் இந்த மூணும் கிடையாது. ஜனங்க நடுரோட்ல நடக்கறதில்லை. அவ்வளவுதான்” என்றார் நன்னன்.

“நம் ஊரில் ஹாரன் அடிச்சாக்கூட ஒதுங்க மாட்டாங்களே, எருமை மாடு மாதிரி நடுரோட்லயே நிப்பாங்களே!” என்றார் முத்து.

“எருமைப் பால் காப்பிதானே சாப்பிடறாங்க. அவங்க புத்தி வேற எப்படி இருக்கும்?” என்றார் நன்னன்.

***

அரண்மனை கிழக்கு வாசலில் ஷாமியானா போட்டதும் திருவிழாக்களை கட்டி விட்டது. வெளி ஆட்கள் யாரும் உள்ளே வராதபடி மைதானம் – முழுவதையும் பட்டி போல் அடைத்து கயிறு வேலி போட்டுவிட்டார்கள். ஜப்பான் போலீஸார் அங்கங்கே ஒலிபெருக்கிக் குழாய்களைக் கையில் வைத்துக்கொண்டு வண்டிகள் போக்குவரத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

“I speak English” என்ற எழுத்துக்களைச் சட்டையில் அணிந்திருந்த பெண் கய்டுகளைச் சுற்றி டூரிஸ்ட்டுகள் மொய்த்துக் கொண்டிருந்தனர்.

தண்ணீTVA_BOK_0003968_வடம்_பிடிக்க_வாங்க_ஜப்பானுக்கு_0040-picர் இறைக்கும் மோட்டார் வண்டிகள் தெருவெங்கும் கழுவி ஏற்கெனவே சுத்தமாயிருந்த வீதிகளை மேலும் சுத்தப் படுத்திவிட்டுப் போயின.

ரங்கோலி சாந்தா நாராயணன் குமுவினர் இரவெல்லாம் கண் விழித்து கிழக்கு வாசல் முழுதும் திருவாரூர்த் தேர், பூம்புகார், வள்ளுவர் கோட்டம், மாமல்லபுரம் கற்கோயில், நடராஜர், விநாயகர் உருவங்களைக் கோலச் சித்திரங்களாக வரைந்தபோது, டெலிவிஷன் காமிராக்களும் போட்டோகிராபர்களும் அந்தக் காட்சியைப் படமாக்கி ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர்.

“தேருக்கு நாலு பக்கங்களிலும் நாலு குறள்கள் எழுதி வைத்தால் ரொம்ப நன்னாயிருக்கும்” என்றார் முத்து.

“அந்த நாலு குறளையும் நன்னன் எழுதிக் கொடுத்தால், அது ‘நன்னனா!’யிருக்கும்” என்று ஜோக் அடித்தார் மனோரமா.

“உங்களுக்கு சிரமம் வைக்காமல் அந்த நாலு குறளையும் நான் கலைஞரிடமே எழுதி வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன்” என்று ஒரு ஆச்சரியத்தை உதிர்த்தார் கோபாலகிருஷ்ணன்.

“அப்படியா! பலே, பலே! அதைக் கொடுங்க இப்படி. இப்பவே அந்த. நாலையும் பெரிய எழுத்துக்களில் பானர் எழுதி தேரின் நாலு பக்கமும் கட்டிடுவோம்” என்றார் முத்து.

முதல்வர் கலைஞர் எழுதிக் கொடுத்த குறளை நன்னன் உரக்கப் படிக்க மற்றவர்கள் ஆவலோடு அவரைச் சூழ்ந்து நின்று கேட்டார்கள்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

எமுத்துக்கள் எல்லாம் அகரமாகிய அ எழுத்தைத் தமக்கு முதலாக உடையன. அதுபோல் உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக உடைத்து.

உருவகண்டு எள்ளாமை வேண்டும்; உருள்பெருந்
தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து.

உருளுகின்ற பெரிய தேருக்கு அச்சில் அமைந்து தாங்கும் சிறு ஆணி போன்ற வினைத் திட்பம் உடையாரும் உலகத்தில் உள்ளனர். அதனால் அச்சாணி போன்ற அவர்களின் உருவச் சிறுமையைக் கண்டு இகழாதிருக்கக் கடவர்.

கடலோடா கால்வல் நெடுந்தேர்; கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.

நிலத்தில் ஓடும் வலிமை பொருத்திய உருளைகளை உடைய பெரிய தேர்கள் கடலில் ஓடமாட்டா. அக்கடலில் ஓடும் மரக்கலங்களும் நிலத்தில் ஓடமாட்டா.

தேரான் தெளிவும், தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

ஆராயாமல் ஒருவனைத் தெளிதலும், ஆராய்ந்து தெளிந்தவனிடம் ஐயங்கொள்ளுதலும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.

“அருமை, அருமை நாலும் நாலு மணியான குறள்கள். இதில் வேடிக்கை என்ன வென்றால் அவற்றில் இரண்டு குறள்கள் தேர் சம்பந்தப்பட்டதாகவே அமைந்துவிட்டதுதான் ஓய்வின்றி உழைக்கும் கலைஞருக்கு எங்கதான் நேரம் கிடைக்கிறதேர், இதெல்லாம் எழுதித்தர?” என்று வியப்பிலாழ்ந்தார் நன்னன்.

“கலைஞர் எப்போது வருகிறாராம்?” முத்து கேட்டார்.

“டிசம்பரில் மலேசியாவில் உலகத் தமிழர் மாநாடு நடக்கிறது. ஒருவேளை அங்கே போய்விட்டு அப்படியே ஜப்பான் வரக்கூடும்” என்றார் கோபாலகிருஷ்ணன்.

“வள்ளுவருக்கு அவரைப் போல பெருமை சேர்த்தவங்க வேற யாரும் இல்லை. குறளோவியம், வள்ளுவர் கோட்டம் இந்த ரெண்டு போதுமே!” என்றார் நன்னன்.

“இந்த விழாவுக்கு வள்ளுவர் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் கலைஞரும். நான் நேரிலேயே போய் அழைத்துவிட்டு வந்திருக்கிறேன். இதற்குள் ஜப்பான் அரசிடமிருந்தும் அழைப்பு போயிருக்கும்” என்றார் கோபாலகிருஷ்ணன்.

“பாரதப் பிரதமர் யாருங்கறதுதான் முடிவாயிட்டுதே. சந்திரசேகர் வருவாரா?” நன்னன் கேட்டார்.

“ராஜீவ் காந்தியைத்தான் கேட்கணும். இந்த ஆட்சிக்கு அவர் தானே ரிமோட் கண்ட்ரோல்!” என்றார் புள்ளி சுப்புடு.

“நல்ல தமிழ்ப் பேச்சு கேட்டு ரொம்ப நாளாச்சு. தேரோட்டத்தைத் தொடங்கி வைத்து கலைஞர் பேசப்போவதைக் கேட்க எல்லோரும் ஆவலாயிருக்காங்க.”

“பேஷ், பேஷ்! கலைஞரின் தமிழ் முழக்கம் கின்ஸா தெருவெல்லாம் கேட்கப் போகுதுன்னு சொல்லுங்க” என்றார் கணபதி ஸ்தபதி.

“கின்ஸா தெருக்களெல்லாம்னு சொல்லுங்க. கின்ஸா என்கிற பெயரில் மொத்தம் 236 தெருக்கள் இருக்கின்றன” என்று புள்ளி விவரம் தந்தார் சுப்புடு.

“ஷாமியானாவும் போட்டாச்சு. தேர் வேலையும் அநேகமா முடிஞ்ச மாதிரிதான். கொடியேற்றத்துக்குத்தான் நாள் குறிப்பிடணும். அதுக்காகத்தான் வெயிட் பண்றோம்” என்று காரியதரிசி யோஷினாரியிடம் சொன்னார் கோபாலகிருஷ்ணன்.

“இந்த வாரம் சக்ரவர்த்தி முடிசூட்டு விழா நடக்குது எல்லா நாடுகளிலிருந்தும் பெரிய பெரிய தலைகளெல்லாம் வராங்க. ஜப்பான்லயே இந்த மாதிரி ஒரு விழா நடந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு அமையணும் என்பது எங்கள் அவா. உங்க பிரஸிடெண்ட்கூட வராரோ முடிசூட்டு விழா முடிஞ்சதும் அடுத்த வாரமே கொடியேற்று விழாவை நடத்திடலாம்” என்றார் யோஷினாரி.

“பழம் நழுவிப் பாலில் விழுந்த மாதிரி இருக்கு எங்களுக்கு. தேரோட்டம் நடத்த வந்த இடத்துல முடிசூட்டு விழாவும் பார்க்கப் போறமே” என்றார் மனோரமா.

***

மறுநாள் காலை கிஜிமா போனில் கூப்பிட்டாள்:

“ஜார்ஜ்! பார்லரிலிருந்து டயரியை வாங்கிக் கொண்டு விட்டீர்களா? சந்தோஷம்தானே! இந்த நாட்டில் எந்தப் பொருளும் தொலைந்து போகாது. தொலைந்தாலும் கிடைத்து விடும். ரொம்ப நேர்மையான தேசம்” என்றாள்.

“இப்போது தான் நிம்மதி ஆச்சு!” என்றான் ஜார்ஜ்.

“பாரிஸிலிருந்து உங்கள் நண்பர் யாரோ வரப்போவதாகச் சொன்னீர்களே, வந்துவிட்டாரா?”

“இன்று வருவதாகச் சொல்லியிருந்தான். ஃப்ளைட்டில் இடமில்லை என்பதால் நாளை வருகிறானாம். நாம் இன்று உயினோ மியூஸியம் பார்க்கப் போகலாமா?”

“அங்கே அப்படி என்ன பார்க்கப் போகிறீர்கள்? ரொம்பப் பெரிய தோட்டம். மூன்று நாள் தேவைப்படும்”

“ஜப்பானில் அவசியம் பார்க்க வேண்டிய இடமாம் அது. ஐ மஸ்ட் என்று நண்பன் கட்டளையிட்டிருக்கிறான். நாளை அவன் வந்ததும் முதல் கேள்வியாக ‘உயினோ பார்த்தாயா?’, என்றுதான் கேட்பான்.”

“அவர் உங்கள் நண்பரா அல்லது அதிகாரியா, உத்தரவு போடுவதற்கு? அது சரி; உயினோ ரொம்ப முக்கியமோ?”

“ஆமாம். அங்கே இந்தியத் தேர் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம். அதை நான் பார்த்தாக வேண்டுமாம்.”

“அந்தத் தேரை ஜோடித்து இம்பீரியல் பாலஸ் அருகே கொண்டுபோகப் போகிறார்கள். ஜப்பான் சக்ரவர்த்தி தேரோட்டம் பார்க்க மிகவும் ஆர்வமாயிருக்கிறார். இதற்காக இந்த அரசு எல்லா ஏற்பாடுகளையும் கவனித்து வருகிறது. டயட் பில்டிங்கில் ஒரு தனி ஸெஷனே மும்முரமாய் வேலை செய்கிறது. வெளி நாடுகளுக்குக் கடிதங்களும், டெலக்ஸ் செய்திகளும் பறந்து கொண்டிருக்கின்றன” என்றாள் கிஜிமா.

“எனக்கு இன்றே அந்தத் தேரைப் பார்த்துவிட வேண்டும். நீயும் என்னோடு வா” என்றான் ஜார்ஜ்.

வழக்கம்போல் ஸனாய் பில்டிங் வாசலில் சந்தித்தார்கள். அங்கிருந்து ஸப்வேயில் இறங்கி ரயில் பிடித்து உயினோ போய்ச் சேர்ந்தார்கள். அங்கே தேரையும் தேர்ச் சக்கரங்களையும் ஜார்ஜ் உன்னிப்பாய் கவனித்துப் பார்த்த செய்தி பழைய கதை.

***

அன்று ஜார்ஜ், ஓட்டலுக்குத் திரும்பியதும் ‘அந்த விஸிடிங் கார்டை தன் டயரிக்குள் யார் வைத்திருப்பார்கள்?’ என்று மண்டையைக் குழப்பிக் கொண்டான்: அந்த மர்மம் அவனை இரவு முழுதும் தூங்கவிடவில்லை. அந்த விஸிடிங் கார்டில் இருந்த டெலிபோன் நம்பருக்குப் போன் செய்ய நினைத்தான். ரிஸீவரை எடுத்தான். சற்று யோசித்துவிட்டு மறுபடியும் வைத்து விட்டான். ‘பென்னட் வரட்டும். அவன் யோசனைப்படி செய்யலாம்’ என்று தீர்மானித்தான்.

- தொடரும்…

முதற் பதிப்பு – ஜனவரி 1991 

தொடர்புடைய சிறுகதைகள்
வசூலான வாடகை
கதை கேட்க: https://www.youtube.com/embed/JL8ZLhE7PjU (1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாசகர்களுக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நான் எழுத் துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில மெளனப் பிள்ளையார் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இப்போது அதையே திரு.கோபுலுவின் ...
மேலும் கதையை படிக்க...
வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!
அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 புள்ளி சுப்புடு பரம திருப்தியோடு ஏப்பம் விட்டுச் கொண்டு வந்தார். 1 "அரண்மனை சாப்பாடு ரொம்ப பலம்போல இருக்கு!" என்றார் மனோரமா. "ஆமாம்; மனுஷனுக்குச் சாப்பாட்ல கிடைக்கிற திருப்தி வேற எதுலயும் கிடைக்காது. எடைக்கு எடை பொன்னை அள்ளிக்" கொடுங்க. போதும்னு ...
மேலும் கதையை படிக்க...
வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!
அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 "காமத்துப்பாலில் ஒரு சுவாரசியமான குறளைச் சொல்லி அதுக்கு அர்த்தம் சொல்ல முடியுமா?" - திருக்குறள் ஷோஜோவிடம் கேட்டார் புள்ளி. "வெல்லப் பிள்ளையாரில் எல்லாப் பக்கமும்தான் இனிக்கும். அதுபோல எல்லாக் குறளுமே சுவாரசியம் தான். ஒரு குறள் சொல்றேன், கேளுங்க." தாம்வீழ்வார் மென்தோள் ...
மேலும் கதையை படிக்க...
அரச மரம் சலசலத்துக் கொண்டிருந்தது. அதனடியில், கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து டீ குடித் தபடியே, செய்திகளை முந்தித் தரும் நாள் தாள் ஒன்றில் ஆழ்ந்திருந்தார் ஆலங்காட்டுச் சாமியார். கமலா (வயது இருபது) என்ற பெண்ணும் ஜெயசந் திரன் என்ற வாலிபனும் (வயது 27) ஓட்டல் ...
மேலும் கதையை படிக்க...
வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!
அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 "தேரை நகர்த்த ஆரம்பிக்கலாமா?" 'என்று பொதுவாகக் கேட்டார் கோபாலகிருஷ்ணன், விழாவேந்தனும் தேர்த் தொண்டர் ' களும்பச்சைக் கொடி காட்ட அங்கங்கே தயாராக நின்றார்கள். சக்ரவர்த்தியும் அவர் மனைவியும் மற்ற அரண் மனை வாசி களும் தேர் நகரப் போ வதை ...
மேலும் கதையை படிக்க...
பங்களூர் மெயிலில்
பங்களூர் மெயிலில் அன்று கூட்டமேயில்லை. மெயில் புறப்பட வேண்டிய நேரத்துக்கு ஐந்து நிமிஷ நேரம் தாமதித்துப் புறப்பட்டும்கூட, ஜனங்கள் வந்த பாட்டைக் காணோம். எனவே அந்த வண்டி, 'இனி மேல் வந்தால் ஏறமுடியாது' என்று எச்சரிப்பதைப் போல், நீண்ட ஊதலுடன் கிளம்பிற்று. என்ஜினிலிருந்து ...
மேலும் கதையை படிக்க...
‘எதிர்வாதம்’ ஏகாம்பரம்
''ஏகாம்பரம், பேப்பரில் பார்த்தாயா! சினிமா ஸ்டார் கங்காதேவி கல்யாணத்திலே பத்தாயிரம் பேருக்குச் சாப்பாடாம். காலையிலே ஆரம்பித்த பந்தி ராத்திரி பன்னிரண்டுமணி வரைக்கும் நடந்ததாம். தெரியுமா உனக்கு?'' ''சரிதாண்டா, இதைப் போய் ஒரு பெரிய அதிசயமாகச் சொல்ல வந்துட்டே! சினிமா ஸ்டார்தானேடா? செலவழிக்கட்டுமே; நானும்கூட ...
மேலும் கதையை படிக்க...
கலியுகக் கர்ணன்
(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாசகர்களுக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நான் எழுத் துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில மெளனப் பிள்ளையார் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இப்போது அதையே திரு.கோபுலுவின் அற்புதமான சித்திரங்களுடன் ...
மேலும் கதையை படிக்க...
வைத்தியர்
(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாசகர்களுக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நான் எழுத் துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில மெளனப் பிள்ளையார் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இப்போது அதையே திரு.கோபுலுவின் அற்புதமான சித்திரங்களுடன் ...
மேலும் கதையை படிக்க...
வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!
அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 கொடியேற்று விழா நிகழ்ச்சிக்கு காலை . ஒன்பது மணிக்கு நேரம் குறிப்பிட்டிருந்ததால் விழாவேந்தன் இரவெல்லாம் கண்விழித்து அரண்மனை கிழக்கு வாசலில் பெரிய மாநாடுபோல் ஷாமியானா போட்டு, 'இகபானா' அலங்காரங்களுடன் மேடை அமைத்திருந்தார். சக்ரவர்த்தி குடும்பத்தார், ஜப்பான் நாட்டுப் ...
மேலும் கதையை படிக்க...
வசூலான வாடகை
வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!
வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!
ஊரார்
வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!
பங்களூர் மெயிலில்
‘எதிர்வாதம்’ ஏகாம்பரம்
கலியுகக் கர்ணன்
வைத்தியர்
வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)