தர்மத்தின் பலன்!

 

தர்மம் தலை காக்கும் என்பது வழக்கு. தர்மத்தின் வழி சற்று சிரமமானதாக இருக்கலாம்; ஆனால், அதுவே முடிவில் சுகத்தை அளிக்கக் கூடியதாக அமைந்துவிடும்.
அதனால், முதலில் காணப்படும் அசவுகர்யத்தையோ, துன்பத்தையோ கண்டு பயந்து, தர்மத்தை விட்டு விட வேண்டாம். தர்மம் என்ன சொல்கிறதோ, அதன்படி நடக்க வேண்டும். அதர்மம் என்பது ஆரம்பத்தில் சுகம் போலத்
தெரியும்; ஆனால், அது கடைசியில் துன்பத்தில் கொண்டு விடும். தர்மம் என்றால், பிறருக்கு கொடுத்து உதவுவது
மட்டுமல்ல… பிறருக்குக் கொடுத்து உதவுவது என்பது உபகாரம் தான். இதற்கும் புண்ணியம் உண்டு தான். ஆனால்,
தர்மத்தில் சொன்னபடி, தர்ம சாஸ்திரத்தில் சொன்னபடி நடப்பது தான் முழுமையான தர்மம்.
தர்மத்தின் பலன்!இப்படி, தர்ம வழியில் நடப்பது சிரமமானதாக இருந்தாலும், மனித வாழ்க்கையில் அமைதியைத் தருவது தர்ம வாழ்க்கை தான். தர்ம வாழ்வு என்பது சத்தியம், அகிம்சை, பொறாமை போன்ற துர்குணங்களை விலக்கி, நியாயமான வழிகளில் பொருள் தேடி, இருப்பது போதும் என்ற திருப்தியோடு வாழ்வது. ஆனால், மனிதனுக்கு திருப்தி சுலபமாக
ஏற்படுவதில்லை.
ஒன்று இருந்தால், மற்றொன்றுக்கு ஆசைப்படுகிறான். இந்த ஆசைக்கு முடிவே இல்லை. தீயில் என்ன போட்டாலும், எவ்வளவு போட்டாலும் அது போன இடம் தெரிவதில்லை. மேலும், மேலும் போடச் சொல்கிறது. இதே போலத்தான் ஆசை என்பதும். ஒண்டு குடித்தனம் இருப்பவன், தனி வீட்டுக்கு ஆசைப்படுகிறான்; நடந்து போகிறவன், வாகனத்தில் செல்ல ஆசைப்படுகிறான். இது, சகஜம் தான் என்றாலும், தன் தகுதிக்குத் தகுந்தபடி ஆசை இருக்க வேண்டும். பிறரை ஏமாற்றியோ, களவு, கொள்ளை மூலமாகவோ ஆதாயம் பெறுவது பாவம் மட்டுமல்ல; ஆபத்தை வரவழைத்துக் கொள்வதும் ஆகும்.
அதனால், இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழலாம். தம் ஆசைகள் நிறைவேற வேண்டுமானால் பகவானை பிரார்த்திக்கலாம். பகவான் விரும்பினால் கொடுப்பான். அதற்கு காலமும் ஒன்று சேர வேண்டும். காலம் வரும் போது நிச்சயம், கொடுப்பான். அதனால், அதிகமாக ஆசைப்பட்டு, மன வேதனைப்படாமல், நாம் செய்த புண்ணியத்துக்குத் தகுந்தபடி தான் பகவான் கொடுத்திருக்கிறான் என்ற எண்ணத்தோடு தர்ம வழியில் நடப்பவன், என்றாவது ஒரு நாள் சுகம் பெறுவான்.

- வைரம் ராஜகோபால் (ஜூன் 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
ஆசுவாசமாய் நிறம்பி கொண்டிருக்கும் மேகங்களைப் பார்க்கும்போது அதன் அழகை ரசிக்கும் மனோபக்குவம் பலருக்கு வருவதில்லைதான். அது அழைத்துவர இருக்கிற மழையைச் சமாளிக்க, முடிந்தவரை முடக்கிவிட, அது முடியாமல் போக வரும் கோபத்தை யார் மேலாவது அல்லது எதன் மேலாவது காட்டுவது, சொல்லப்போனால் ...
மேலும் கதையை படிக்க...
பழனியம்மா!
""பழனியம்மா... ரெடியாயிட்டியா புள்ளே?'' ""ரெடியாயிட்டுதேன் இருக்கேன்...'' ""முத்துலட்சுமி போட்டோவையும், ஜாதகத்தையும், மஞ்சப் பைல வச்சு, குலுக்கைக்கு மேல வச்சிருக்கேன். அதை எடுத்தாந்திரு.'' ""ஆகட்டும் மாமா.'' பழனியம்மாவும், குழந்தை ஆர்த்தியும் அமர்க்களமாக டிரஸ் அணிந்து, பழனிவேலு சொன்ன மஞ்சப்பையையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர். ""இதென்ன புள்ள மேக்கப்பு? பீரோவுல ...
மேலும் கதையை படிக்க...
தூண்டி முள்ளில் குத்தப்பட்டிருந்த புழு துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு மீன், ஆகா, மனிதனின் கருணையே கருணை! எனக்காக அவன் எங்கேயோ இருந்த புழுவைத் தேடிப்பிடித்து தூண்டி முள்ளில் வேறு குத்தி, தண்ணீருக்குள் அல்லவா விட்டிருக்கிறான்? என்றது நன்றியுடன். அட முட்டாளே! கருணையாவது, ...
மேலும் கதையை படிக்க...
சென்னையிலிருந்து வந்திருக்கும் நண்பர்களை அப்படியே லைஃப் ஸ்டைல் மால் ஷாப்பிங்கிற்கு அழைத்துச் செல்வதில் இப்போதெல்லாம் ஏக குஷி. அப்படித்தான் அன்றும் நண்பர்கள் அரங்கநாயகியும் சிவாபிள்ளையும் லைஃப் ஸ்டைலைப் பார்த்து மலைத்துப் போய் நின்றதைக் காண சின்னதாக ஒரு பெருமை எட்டிப்பார்த்தது. என்னவோ ...
மேலும் கதையை படிக்க...
தரிசு நிலம்!
இன்று, நகரங்கள் ஆதிக்கம் செலுத்தி, கிராமங்களின் வளத்தை கறந்து விடுகின்றன. இதனால், கிராமங்கள் நாசம் அடைந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆதிக்கம் மறைந்து, கிராமங்களுக்கு, நகரங்கள் துணையாக இருந்து உதவ வேண்டும் என்று, என்னுடைய மனோபலம் எனக்குக் கூறுகிறது. கிராமங்களைச் சுரண்டுவது, திட்டமிட்டு ...
மேலும் கதையை படிக்க...
நேற்றைக்கு ராதா
பழனியம்மா!
கருணை – ஒரு பக்க கதை
லைஃப் ஸ்டைல்
தரிசு நிலம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)