கடத்தல் – ஒரு பக்க கதை

 

ஆரவாரத்தோடு திருப்பதி தேவஸ்தானத்தில் நுழைந்தார் கைலாசம். சுற்றிலும் படைபலத்தோடு இருந்தார். மனதில் பெருமிதம் நிறைந்திருந்தது. அவர் நினைத்தபடியே ஒரு மணி
நேரத்தில் சாமி தரிசனம் நிறைவேறியது.கைலாசம் செய்த கடத்தல் வேலைக்கு கூலியாக மட்டும் பத்து லட்சம் ரூபாய் கிடைத்திருந்தது. தனது தொழில் கச்சிதமாக முடிந்ததால் அதற்கு காணிக்கை செலுத்துவதற்காகத்தான் திருப்பதிக்குச் சென்றிருந்தார்தரிசனம் முடிந்து வெளியே வந்தவர் கோயிலை ஒரு வலம் வந்து உண்டியலின் அருகே சென்றார்.ஒரு லட்ச ரூபாயை
ஒட்டு மொத்தமாகப் போட்டார். சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டாரகள்.

ஆலயப்பிரவேசம் முடிந்ததும் மிடுக்கோடு வெளியே வந்தார் கைலாசம்.

‘கடத்தல் பிஸினசில் என்னை மிஞ்ச யார் இருக்கா? கைலாசமா கொக்கா?” இறுமாப்போடு கூறினார். சுற்றியிருந்த ஜால்ராக்கள் ஆமோதிப்பதைப் போல தலையை ஆட்டினார்கள்.

அப்போது ‘டிரிங்…டிரிங்..’ என மொபைல் அலறியது. எடுத்துப் பேசினார் கைலாசம்.

‘ஐயோ…நாம மோசம் போயிட்டோம்ங்க.நம்ம பொண்ணு காலேஜ் விட்டு வரும்போது யாரோ கடத்திக்கிட்டு போயிட்டாங்க. பத்து லட்ச ரூபாய் கொடுத்தால்தான் விடுவாங்களாம். நீங்க உடனே புறப்பட்டு வாங்க’ மறுமுனையில் அவரது மனைவி அலறுவதைக் கேட்டு இடி விழுந்ததைப் போல் அரண்டு போனார் கைலாசம்.

- செல்வராஜா (டிசம்பர் 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
பாளையங்கோட்டை, திருநெல்வேலி. காலை பத்து மணிக்கே வெயில் உக்கிரமாக தகித்தது. மாணிக்கம் தன்னுடைய பலசரக்கு கடையின் வியாபாரத்தில் மும்முரமாக இருந்தான். வேலைசெய்யும் மூன்று கடைப் பையன்களும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு ...
மேலும் கதையை படிக்க...
அப்பறவையானது உயர்ந்த விஷங்கள், உணவு இதில் மட்டும் கவனம் செலுத்தும். உணவாக கிடைப்பதற்கு அரிதான கனிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்ணும். குடிக்க மூங்கில் உள்ளே தேங்கி நிற்கும் மழை நீரை மட்டுமே பருகும். வசிப்பதும் அவ்வாறே. தான் வசிக்கும் இடத்தில், தொடர்ந்து வாழமுடியாத ...
மேலும் கதையை படிக்க...
குரு-சிஷ்யன்!
கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை... சிவசு வாத்தியாரை திண்டுக்கல் பஸ்சில் பார்ப்போம் என்று... தொண்ணூறு களின் ஆரம்பம். பள்ளி படிப்பை முடிக்கும் போது... சிவசு வாத்தியார் இன்றைக்கும் அன்று போலவே இருக்கிறார். ""நீ... நீங்க... தண்டபாணி தானே!'' ""ஆமாம் சார்... நீங்க சிவசு சார் தானே... ...
மேலும் கதையை படிக்க...
"தோழர் விருப்பப்படி அவர் இறந்த பிறகு பிரேதத்தை அவரது உற்ற நண்பர்கள் நீளவாக்கில் இரண்டு குழி வெட்டி தோழரை இரண்டாகப் பிளந்து இரண்டு குழிகளிலும் அடக்கம் செய்து விட்டார்கள். காற்று சூழ்ந்திருக்கிறது , மதியத்தில் டைனோசர்கள் புற்கள் மேய்ந்து கொண்டிருக்கின்றன." *** ஈரோடு பாரதி ...
மேலும் கதையை படிக்க...
“ஊரில், அம்மாவுக்கு உடல் நலமில்லை!’ மன சஞ்சலத்தில் இருந்தாள் சரஸ்வதி! அழைத்து வரலாம் என்றால், ஊரில் இவர் அம்மாவுக்கும் உடல் நலமில்லை! அதிகப்படியாக ஒரு ஆளுக்கு மேல் வீடும் தாங்காது. வருமானமும் போதாது. தன் அம்மா மேல் உயிரையே வைத்திருக்கும் அவரிடம் எப்படிச் சொல்வது, நானும் ...
மேலும் கதையை படிக்க...
ட்யூஷன் வாத்தியார்
கடல் மீன்
குரு-சிஷ்யன்!
தோழர் இறந்து விட்ட பின்பும் ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது
அம்மா – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)