பொறுப்பு – ஒரு பக்க கதை

 

தனிக்குடித்தனம் போய்விடுவது என்று முடிவெடுத்து விட்டேன்.

அதைக் கணவரிடம் சொன்னதும், முதலில் கடிந்து கொண்டார்.

”நாம தனியாப்போயிடறதுதாங்க நல்லது!”

தீர்க்மான என்னுடைய வார்த்தைக்குக் கணவர் கட்டுப்பட்டார்.

ஓரிரு நாட்களில் லாரியில் சாமான்களை ஏற்றியதும் மருமகளிட்ம் சொன்னேன்.

”நாங்க தனியாப் போயிடறோம் ஷர்மிளா! அப்பத்தான் உனக்குக் குடும்ப பொறுப்பு வரும். கரண்ட் பில் கட்டறது, ரேசன்ல போய் சர்க்கரை வாங்கறது, வீட்டை சுத்தமா வச்சுக்கறது,
குழந்தையை ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போறதுனு… பொறுப்பு வரும்.

கூட இருந்து எல்லாத்துக்கும் நாங்க உதவி செய்துட்டிருந்தா … உனக்குக் குடும்ப பொறுப்பு வராது! இனி நீ ஆச்சு… உன் குடும்பம் ஆச்சு! வந்துட்டு இருக்கிற பத்தாயிரம் ரூபாய் பென்ஷன் உனக்கும் உன் மாமவுக்கும் போதும். வரட்டுமா…?

மகனும் மருமகளும் அதிர்ச்சியிலிருந்து விடுபடுவதற்குள் புறப்பட்டு விட்டோம்.

- திருப்பூர் அலோ (5-8-09) 

தொடர்புடைய சிறுகதைகள்
""அவுலவுலே...'' ""அவுலவுலே.....'' அந்த வாரத்து இதழில் ஆயன் கடிதங்கள் நூல் பற்றிய மதிப்புரையை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்த சந்திரனின் கவனத்தை அந்தக் குரல் சற்றே இழுத்தது. இருந்தாலும் படிக்கும் விஷயத்தில் இருந்த ஈர்ப்பினால் சந்திரன் மீண்டும் படிப்பில் ஆழ்ந்து போனான். கொஞ்ச நேரம் ...
மேலும் கதையை படிக்க...
ஏலக்காய் போட்டதனால் இறைச்சிக் குழம்பிலிருந்து கும்மென்று மணம் வந்தது. அடுப்பினடியில் உட்கார்ந்திருந்த பார்வதிக்கு வியர்த்துக் கொட்டியது. இருந்தாலும் இன்று இப்படி உட்கார்ந்து பிள்ளைகளுக்குச் சமைப்பதில் மகிழ்ச்சி இருந்தது. இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து அதிகாலை ஷி·ப்டும் ஓவர் டைமுமாக சனி ஞாயிறு உட்பட ...
மேலும் கதையை படிக்க...
கனவுகளின் மதிப்பெண்
இப்போது எல்லாம் இது மாதிரி ஓடுகள் உள்ள கூரையைப் பார்க்க முடியாது. வெள்ளைக்காரன் இந்தியா வுக்கு டாட்டா சொல்லும் முன், கட்டி விட்டுப்போன கட்டடம். அதன் பெரிய சிமென்ட் தூண்களும் மர உத்தரங்களும் தொலைவில் இருந்து பார்ப்பவர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும். அருகில் ...
மேலும் கதையை படிக்க...
சரவணனுக்கு ஏக்கமாக இருந்தது யாராவது ‘மணி என்னவாகிறது?’ என்று கேட்கும் பொழுது இடது கையை உயர்த்திப் பார்த்து மணி சொல்லும் மற்ற மாணவர்களை பார்க்கும்பொழுது அவனுக்கு ஏக்கமாக இருக்கும். அவன் வகுப்பில் அவனைப் போல் ஒன்றிரண்டு பேரைத் தவிர மற்ற மாணவர்கள் எல்லோருமே ...
மேலும் கதையை படிக்க...
லண்டனிலிருந்து விமானம் புறப்படக் கொஞ்ச நேரம் இருக்கும்போதுதான் அவள் வந்தாள். தனது கையில் போர்டிங்கார்ட்டை வைத்துக்கொண்டு,தான் இருக்கவேண்டிய இடத்தைத் தேடினாள். அவசரப் பட்டு வந்ததால் அவளது சுவாசம் அதிகமாகவிருந்தது. நீல நிறத்தில் சிவப்புக் கரை போட்ட ஷிபோன் சேலை அவள் உடலைத் ...
மேலும் கதையை படிக்க...
அவுலவுலே… அவுலவுலே…
நல்லவராவதும் தீயவராவதும்
கனவுகளின் மதிப்பெண்
கைக்கடிகாரம்
அப்பாவின் சினேகிதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)