ஐந்து குட்டிக் கதைகள்!

 

மொத்தம் ஐந்து குட்டிக் கதைகள். இந்த ஐந்தையும் தனித்தனியாக வாசித்தால் தனித்தனி குட்டிக் கதைகளாகத் தெரியும். அதையே ஒன்றாகப் படித்தால் ஒரே கதையாகவும் விளங்கும்.

மாப்பிள்ளையும், பொண்ணும்!

“பொண்ணு உன் தங்கச்சி மவனுக்குதானே?”

“ம்ம்… சும்மா கொடுத்துடுவேனா? என் அண்ணன் புள்ளைக்கு அவ பொண்ணை தந்தாவணும். பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குறது தான் எங்க குடும்பத்து வழக்கம்”

“சொந்தத்துலே கொடுத்தா அதுகளுக்கு பொறக்குற புள்ளைகளுக்கு ஊனம் வரும்னு சொல்றாங்களே?”

“சொல்றவங்க ஆயிரம் சொல்லட்டும். அதுக்கோசரம் உறவை வுட்டுத் தந்துட முடியுமா?”

பிறந்து ஒரு நாள் கூட ஆகாத ‘பொண்ணு’ தூங்கிக் கொண்டிருந்தாள். அப்பா, அம்மாவோடு ஹாஸ்பிடலுக்கு வந்திருந்த ‘மாப்பிள்ளை’ குச்சி மிட்டாய் சப்பிக் கொண்டிருந்தான்.

யாரைடி கட்டிப்பே?

“தோ.. குமாரு வந்துட்டான். இன்னொரு வாட்டி சத்தமா சொல்லு!”

“கொமாருமாமாவைத்தான் பெரியவளானா கல்யாணம் கட்டிப்பேன்!”

கொமாருமாமா வெட்கத்தோடும், வெறுப்போடும் அடிக்கத் துரத்தினான். அத்தைகள் பாதுகாப்பில் ஒளிந்துகொண்டவளை பிடிக்கவியலாத இயலாமையில் அழுதுகொண்டே, “நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்.. அதுமாதிரி பேசவேணாம்ணு சொல்லு!”

அவனது அழுகை சிரிப்பையும், குதூகலத்தையும் சொந்தங்களுக்கு தந்தது. திரும்ப கேட்டார்கள். “ஏய் நீ பெரியவளானா யாரைடி கட்டிப்பே?”

“ம்…….” இம்முறை அவள் யோசித்துக் கொண்டேயிருக்க…

அரண்டுபோன அவன் மனசுக்குள் கத்தினான். “கொமாரு மாமாவைத் தான் கட்டிப்பேன்னு சொல்லுடி சனியனே!”

கொருக்கலிக்கா, முந்திரிக்கா!

தென்னை ஓலைகளுக்கு இடையே பார்த்தபோது புத்தம் புதுசாய் தெரிந்தாள். ஓலை பின்னிக் கொண்டிருந்தான் முறைமாமன்.

முதன்முறையாய் அழகாய் தெரிந்தாள். கன்னங்கள் சிகப்பிட்டிருந்தது. போனவாரம் விளையாடும் போதுகூட, ’கொருக்கலிக்கா முந்திரிக்கா நிறைய நிறைய கொண்டுவா!’ ராகத்தில், ’கொமாரு மாமா கொமாரு மாமா என்னை கல்யாணம் கட்டிக்கோ!’ என்று பாடி, செமஅடி வாங்கினாள். பெண் உடனே பெரியவள் ஆகிவிடுகிறாள். ஆண் அப்படியேதான் இருக்கிறான். இப்போது அவள் கட்டிக்கச் சொல்லி கேட்கமாட்டாளா என்று ஏங்கினான்.

“மாமா” மெல்லிசாக கூப்பிட்டாள்.

‘என்ன?’

“என்னைக் கட்டிக்கிறியா மாமா?”

“போடி மூக்குச்சளி. உன்னை எவன் கட்டிப்பான்?”

செருப்பால அடிப்பேன்!

“ம்ம்ம்.. எவ்ளோ நேரம் சும்மா இருப்ப? ஏதாவது பேசேன்?”

“என்ன பேசுறது?” சொல்லியாக வேண்டும் என்று தோன்றினாலும், எப்படி சொல்லுவது என்கிற தயக்கத்தில் இருந்தான்.

“சும்மா ஏதாவது பேசேன்” அவளே தூண்டினாள்.

“உங்கிட்டே திடீர்னு ‘ஐ லவ் யூ’ சொன்னா என்ன பண்ணுவே?” நூல்விட்டான்.

“செருப்பால அடிப்பேன்” மிரண்டுப்போய் எழுந்து விட்டான்.

“சொன்னது என் அத்தைப்பையனாயிருந்தா செருப்படிக்குப் பதிலா கிஸ் அடிப்பேன்” சத்தமின்றி, முணுமுணுப்பாய் தலைகுனிந்து சொன்னாள்.

அத்தைப்பையனான அவனுக்கு கடற்காற்றின் சத்தத்தில் அவள் சொன்னது கேட்கவேயில்லை.

பஜாரியான தேவதை!

“நீ பார்க்க எப்படி இருப்பே?”

“ஜோதிகா மாதிரி இருப்பேன்”

“நானும் சூர்யா மாதிரி இருப்பேன்”

“அப்படியா? ரொம்ப பொய் பேசுவியா?”

“ஆமாம். சூர்யா மாதிரி இருப்பேன்னு சொன்னது பொய்”

“அதானே பார்த்தேன்?”

“சூர்யாவை விட சூப்பரா இருப்பேன்”

“அட்றா…. அட்றா…. நேருல பார்க்கலேன்னு சொல்லிட்டு இஷ்டத்துக்கு அள்ளி விடறியா?”

“நேர்ல வேணா பாப்போமே?”

“பார்க்கலாம் சார். நேரா உங்க வீட்டுக்கு வாங்க”
“அய்யய்யோ பொண்டாட்டி. நீயாடி? இது என்ன புது நம்பர்?”

“என் பிரெண்டோட நம்பர். முதல்லே வீட்டுக்கு வாடா. வெச்சுக்கறேன்”

தேவதைகள் வானத்திலிருந்து குதிப்பதில்லை. மாமன்களுக்கு மகள்களாக பிறக்கிறார்கள். என்ன? கல்யாணம் கட்டிக் கொண்டதற்குப் பிறகுதான் பஜாரிகளாக மாறிவிடுகிறார்கள்.

(நன்றி : தினகரன் வசந்தம் 17-4-2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
"நான் ஒண்ணாவது படிக்கறப்பவே அவன் பிரச்சினை ஆரம்பிச்சிடிச்சி. நான் எந்த கலர் டிரஸ் போடுறனோ அதே கலர்லே அவனும் டிரஸ் பண்ணுவான். நான் எதுவெல்லாம் வாங்குறனோ அதுவெல்லாம் அவனும் அடம்பிடிச்சி வாங்குவான். என்னோட பக்கத்து வீட்டு பையன் என்கிறதாலே நான் என்னவெல்லாம் ...
மேலும் கதையை படிக்க...
"அம்மா! ராமு புதுசா பேட் வாங்கியிருக்கான். அவன் கூட கிரவுண்டுக்கு வெளையாட போறேம்மா" "கிருஷ்ணா ஒழுங்கா சமர்த்தா போய் படுத்து தூங்கு. லீவு வந்தாலே போதுமே. வெய்யில்ல சுத்த கிளம்பிடுவியே" "அம்மா. ப்ளீஸ்மா ஹோம் ஒர்க் எல்லாம் சமர்த்தா முடிச்சிட்டேம்மா. ப்ளீஸ்மா." "சொன்னா கேட்க மாட்டே. ...
மேலும் கதையை படிக்க...
டமாருக்கு நாய்கள் என்றாலே ஆவாது. நைட்டு சரக்கடித்துவிட்டு போதையில் தள்ளாடிக்கொண்டு வரும்போது இருட்டில் தெருவில் தூங்கும் சொறிநாய்களை மிதித்துவிடுவான். ஒரு குடிகாரனுக்கு இதற்கு கூட உரிமையில்லையா என்ன? உயிரே போய்விட்டது போல அந்த நாய்கள் 'வாள் வாளென்று' கத்தி அதனாலேயே அவனுக்கு ...
மேலும் கதையை படிக்க...
இளையகண்ணனுக்கு வயது நாற்பது இருக்கலாம். நரைத்த தன் தலையை நன்கு மைபூசி மறைத்திருந்தாலும், சில இடங்களில் எட்டிப் பார்க்கும் நரையை ‘பித்த நரை' என்று சொல்லிக்கொள்வார். பழைய பாக்யராஜ் படங்களின் கதாநாயகிகள் அணிவது போல தடிமனான கறுப்பு ப்ரேம் கண்ணாடி. முதுமையால் ...
மேலும் கதையை படிக்க...
'ம்ஹூம்... இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அடக்கிக்கொண்டு கிடப்பது! இனிமேல் சத்தியமாக முடியாது.' மனோகர் தூங்க முடியாமல் அவஸ்தைப்பட்டான். 'இனிமேல் நைட் பத்து மணிக்கு மேல் டி.வி-யே பார்க்கக் கூடாது. பலான பாட்டுங்களாப் பார்த்து அவஸ்தை ஆயிடுது.' மனோகர் 27, கன்னி கழியாத பையன். ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு சிறுவயதாக இருந்தபோது மடிப்பாக்கத்தில் முடிவெட்டும் கடை எல்லாம் இருந்ததாக நினைவில்லை. கன்னியப்பன் ஒவ்வொருத்தர் வீடாக வந்து முடிவெட்டி விட்டு செல்வார். ஞாயிற்றுக்கிழமைகளில் அவருக்கு வேலை அதிகம். பெருசுகள் எல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் முடிவெட்டிக் கொள்ளும் என்பதால் வாரநாட்களில் தான் பையன்களுக்கு ...
மேலும் கதையை படிக்க...
“இயற்கையை பழிக்காதேடா பாவி..” அப்பா அடிக்கடி சொல்வார். அடிவானம் கறுக்கும்போதே எங்களுக்கெல்லாம் அடிவயிற்றில் அச்சம் எழும். தூறல் விழ ஆரம்பித்தாலே ‘எழவெடுத்த மழை’ என்று இயல்பாக எங்கள் உதடுகள் உச்சரிக்கும். அப்பாவுக்கு கண்மூடித்தனமாக கோபம் வரும். நாங்கள் மழையை வசைபாடும்போதெல்லாம், அவர்தான் மழைக்கு வக்காலத்து ...
மேலும் கதையை படிக்க...
குமரனுக்கு அந்த கனவு ஆறாவது படிக்கும்போது வந்திருக்கலாம். பத்தாவது படிக்கும் அண்ணன்கள் வெள்ளிக்கிழமை மாலை குசுகுசுவென்று பேசிக்கொள்வதும் சனிக்கிழமை காலை எட்டரை மணிக்கெல்லாம் சைக்கிள் எடுத்துக் கொண்டு ஓடுவதும் அந்த வயதில் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்தியிருக்கலாம். என்ன ஏதுவென்று விசாரித்தபோது தான் ...
மேலும் கதையை படிக்க...
“அண்ணே! 'ஆன்மீகம்'னா என்ன?” “தம்பி! 'ஆன்மீகம்'னா வைப்ரேஷன், அதிர்வுகள்!” “புரியவில்லை. கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?” “நம்மை ஏதாவது ஒரு விஷயம் ஈர்க்கும்போது நம் உடலளவிலும், மனதளவிலும் சில அதிர்வுகள் ஏற்படும்!” “அதுமாதிரி நான் உணர்ந்ததில்லையே?” “கண்டிப்பாக எப்போதாவது உணர்ந்திருப்பாய். உனக்கு தெரிந்திருக்காது. அதீத மகிழ்ச்சியும், அதீத சோகமும் ...
மேலும் கதையை படிக்க...
“ஏன் அந்த தாத்தா வித்தியாசமா டிரெஸ் பண்ணியிருக்காரு?” டிவியில் ஏதோ செய்திகளுக்கு இடையில் காட்டப்பட்ட அந்த தேசத்தலைவரை பார்த்ததும் கேள்வி கேட்டான் நவீனன். பத்து வயது தான் ஆகிறது. பதினாறு வயதுக்கான அறிவு அவனுக்கு. கண்டது, கேட்டது எதையுமே கேள்விக்குள்ளாக்குவான். “அது ஒரு ...
மேலும் கதையை படிக்க...
போலி!
அப்பாவி அடிமைகளுக்கு!
நாய்க்காதலன்!
ஓட்ரா வண்டியை!
13B யாவரும் நலம்!
மோகன் அண்ணா!
தோகை விரி!
மீசை!
ஆன்மீகம்!
தியாகம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)