கதையாசிரியர் தொகுப்பு: துடுப்பதி ரகுநாதன்

113 கதைகள் கிடைத்துள்ளன.

அரசு அதிகாரி!

 

 கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் ஒரே பரபரப்பு! துப்பாக்கி ஏந்திய போலீஸை நிரம்பிக் கொண்டு, போலீஸ் ஜீப்கள் சத்தம் செய்தபடி வேகமாகப் பறந்து கொண்டிருந்தன. சுங்கத்திலிருந்து உக்கடத்திற்குப் போகும் சாலையில் நிறைய புல்டோஷர்கள் தன் ‘பக்கட்’ களை தூக்கிக் கொண்டி தயார் நிலையில் இருந்தன. கூட்டம் கூட்டமாக சுங்கத்தில் வழியில் நின்று மக்கள் ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தார்கள். டூவிலரில் வந்த ஒருவன் வண்டியை நிறுத்தி “என்ன பிரச்னை?…” என்று ஆர்வத்தோடு கேட்டான். “அதையேன்


ரிஷி!

 

 சமையலறையில் ஏதோ வேலையாக இருந்த கல்யாணி மாடிப் படிக்கட்டில் யாரோ உருண்டு விழுவது போல் சத்தம் கேட்டு, வாசலுக்கு ஓடி வந்தாள். மாடிப் படிகட்டுகளிலிருந்து கீழே உருண்டு வந்து விழுந்த அவள் கணவர் வாசு, எழுந்து உட்கார்ந்து கொண்டு, உடைந்து போன தன் மூக்கு கண்ணாடியை பொறுக்கிக் கொண்டிருந்தார். பக்கத்து வீட்டுப் பரமசிவம் யார் பேச்சையும் கேட்காத கர்வம் பிடித்த மனிதர்! அவர்கள் வீட்டு காம்பௌண்ட் சுவருக்கு இரண்டடி தள்ளி வரிசையாக தென்னை மரங்களை அவர் வீட்டில்


நல்ல மகன்!

 

 நீங்க எல்லோருமே பத்திரிகைகளில் வரும் சிறுகதைகளை விரும்பிப் படிப்பவர்கள் தானே! அம்மாவின் பெருமைகளைப் பற்றி, சிறப்புகளைப் பற்றி இதுவரை ஆயிரம் கதைகள் படித்திருப்பீர்கள்! கொஞ்ச காலமாக நல்ல அப்பாக்களைப் பற்றியும் நிறைய கதைகள் வரத் தொடங்கி விட்டன! நல்ல அம்மா, நல்ல அப்பாக்கள் மட்டும் தான் நம்மிடம் இருக்கிறார்களா? நம்மிடம் நல்ல மகன்களும் இருக்கிறார்கள்! மகன்கள் என்றால் பொண்டாட்டி பேச்சைக் கேட்டுக் கொண்டு, வயசான காலத்தில் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு போய் தள்ளும் மகன்களைப் பற்றித்


மர்ம நோய்!

 

 வேந்தனின் கண்டிஷன் வெகு சீரியஸ்! டாக்டர்களே நம்பிக்கை இழந்து விட்டார்கள்! வேந்தன் அரசியலில் நுழைந்து 50 வருடங்களாகி விட்டன! கட்சியின் கிளை செயலாளரில் ஆரம்பித்து, கட்சியின் மாவட்டச் செயலாளர் என்று சுமார் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேல் கடினமாக உழைத்திருக்கிறார். அதனால் கட்சி மேலிடத்திற்கு செல்ல பிள்ளையாக வலம் வந்தார். அவரை கட்சியே வற்புறுத்தி எம்.எல்.ஏ. வுக்கு ஒரு முறை நிறுத்தியது. அந்த ஐந்து வருடப் பதவியில் அவர் நிறைய தெரிந்து கொண்டார். அதனால் அடுத்த முறை


டைட்டில் கார்டு!

 

 கோவை பீளமேட்டில் தொழிலதிபர் கோமதி நாயகத்தின் பங்களா. குழந்தை காணாமல் போய் இருபத்தி நான்கு மணி நேரமாகி விட்டது. குடும்பமே துடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர் செல்போனுக்கு ஒரு வீடியோ கால்! குழந்தை பற்றிய தகவலாக இருக்கும் என்று பதறிப் போய் பார்த்தார் கோடீஸ்வரன் கோமதி நாயகம்! “ஐயோ!…. அம்மா!….எனக்கு பயமா இருக்கு !” என்று கத்தி கதறிய குரல் அவரின் அருமை பேத்தி சித்ரலேகாவின் குரல் தான்! அவரை சுற்றி நின்று கோமதி நாயகத்தின் குடும்பமே


தமிழ் பெண்!

 

 சிவராமன் நியூ ஜெர்ஸிக்குப் போய் கிட்டத்தட்ட முப்பது வருஷங்களாகி விட்டன. இன்று சிவராமனும் அவர் மகன் ஶ்ரீதரும் அமெரிக்காவில் புகழ் பெற்ற டாக்டர்கள். சிவராமனின் மகன் ஶ்ரீதர் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் அமெரிக்காவில் தான்! சிவராமனுக்கு தன் மருமகள் தமிழ்நாட்டுப் பெண்ணாக இருக்க வேண்டும் என்று ஆசை! கோவையிலிருக்கும் தந்தை விசுவநாதனுக்கு விபரமாக எழுதி, மகனை ஒரு மாத விடுப்பில் கோவைக்கு அனுப்பி வைத்தார். விசுவநாதன் தன் மனைவி சாந்தியுடன் நியூஜெர்ஸிக்குப் போய் மாதக் கணக்கில்


உடையாத கொலு பொம்மைகள்!

 

 சிதம்பரம் பூங்கா. மாலை ஆறுமணிக்கு வழக்கமாக கூடும் அந்த ஐந்து முதிய நண்பர்களும் ஒதுக்குபுறமாக இருக்கும் இரண்டு பெஞ்சுகளில் உட்கார்ந்து கொண்டு அவரவர் வீடுகளில் தங்களுக்கு நடக்கும் மரியாதை குறைவான விஷயங்களை வேதனையோடு சொல்லிக் கொண்டிருந்தார்கள்! அவர்கள் எல்லோருக்கும் சுமார் என்பது வயசு இருக்கும்! எல்லோரும் பதவியில் இருந்து ஓய்வு பெற்று, இருபது வருஷங்களுக்கு மேலான பென்சன் வாங்கும் முதியவர்கள்! பதவி காலத்தில் சம்பாதித்த வீடு, வாசல், பாங்கு பேலன்ஸ் எல்லாம் மகன், மகளுக்கு கொடுத்து விட்டு,


நல்ல சம்பளம்! – ஒரு பக்க கதை

 

 “ஏண்டா!… வயசு இருபதாகுது!…… படிப்பு தான் ஏறலை…எட்டாவதோடு நின்று விட்டாய்….. ஏதாவது ஒரு கடையில் ஒரு வேலை தேடிக் கொள்ள துப்பு இல்லே? …காலங்காத்தாலே தோட்டத்திற்கு வந்து வக்கணையா இளநீர் சீவி குடித்துக் கொண்டிருக்கிறாய்?….” “அப்பா!…இன்னையோட இந்த பேச்சை வுட்டு விடு!… நானும் மெட்ராஸில் வேலை தேடிக் கொண்டேன் …புதன் கிழமை நான் அங்கு போய் வேலையை ஏத்துக்கப் போறேன்!..” “இவரு பெரிய ஐ.ஏ. எஸ். படிச்சிருக்கிறாரு… இவருக்கு மெட்ராஸில் கூப்பிட்டு வேலை தருகிறாங்களாம்!..” “அப்பா! என்


எழுத்துக் கூலி!

 

 முழு நிலவு பத்திரிகை ஆசிரியர் எழுத்து வேந்தன் தமிழ் எழுத்துலகில் மிகவும் புகழ் பெற்ற கதாசிரியர்களில் ஒருவர். அவர் எழுதிய பல நாவல்கள் திரைப் படங்களாக வந்து, வெள்ளி விழா கொண்டாடியுள்ளன! அதனால் அவர் தன் நாவல் ஒன்றுக்கு பத்து லட்சம் டிமாண்ட் செய்து வாங்கி விடுவார். அவர் சொந்தமாக முழு நிலவு என்ற பெயரில் ஒரு பத்திரிகையும் நடத்திக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் என்ற இடத்தில் அவர் பெயர் போடுவதாலேயே அந்தப் பத்திரிகையை நிறைய தமிழ் வாசகர்கள்


வீட்டுக்கு ஒரு….! – ஒரு பக்க கதை

 

 மழை வேண்டுமானால் வீட்டுக்கு ஒரு மரம் நட வேண்டும் என்று ஒரு காலத்தில் தொகுதி மக்களிடம் தீவிர பிரச்சாரம் செய்த அந்த முன்னாள் அமைச்சரின் சட்டசபைத் தொகுதியின் இடைத் தேர்தலும், இந்த பாராளுமன்றத் தேர்தலோடு வந்து விட்டது! அதனால் அவர் குட்டி போட்ட பூனை மாதிரி தொகுதியில் தினசரி வலம் வந்து கொண்டிருந்தார். அவர் தொகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு டாஸ்மாக் கடை இருந்தது. அதை உயர் நீதி மன்ற உத்திரவுப் படி மூட வேண்டிய நிர்ப்பந்தம்