கதைத்தொகுப்பு: த்ரில்லர்

138 கதைகள் கிடைத்துள்ளன.

கல்லறை

 

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பிரான்ஸிஸ் தேவசகாயத்துக்கு இரவு மறுபடியும் அந்தக் கனவு வந்தது. அதனாலோ என்னவோ அவர் வெகு நேரம் தூங்கிவிட்டார். அன்று எப்படியும் காலை 7.30க்குக் கிளம்பிவிட வேண்டும் என்று திட்டம் போட்டி ருந்தார். அப்படி புறப்பட்டால் தான் பொஸ்டன் நகரத்து வீதிகளின் ஒத்துழைப்போடு 8.00 மணிக்கு அலுவலகத் துக்குப் போய்ச் சேரலாம்; 7.35க்குப் புறப்பட்டால் 8.20 மட்டும் இழுத்துவிடும்; 7.40 என்றால் நிச்சயம் 9.00


வேட்டை

 

 “இது உண்மையாக நடந்த சம்பவம்பா. ரொம்ப வருசங்களுக்கு முன்னே நான் வேலை பார்த்த ஊரில் நடந்தது.” — என்ற பீடிகையோடு பக்கத்து வீட்டு பெரியவர் தான் சொல்லப் போகிற கதையின் அஸ்திவாரத்தை பலமாகப் போட்டார். சுற்றிலும் எங்கள் குடும்பத்தினர்கள் உட்கார்ந்திருக்கிறோம். அவர் கதை சொல்கிற போது, அது ஒரு நாடகம் பார்க்கிற மாதிரியே பாவங்களோடு இருக்கும். நடுவுல தெருவால போற நாய், தோட்டத்தில பறக்கிற பட்டாம்பூச்சிகள், தட்டான்கள், பையனுங்க ஓட்டிக்கிட்டு போற பனங்குடுக்கை வண்டிங்க, அவங்க பேசிக்கிட்டு


மர்ம வெளி

 

 நண்பர் ஒருவர் கூறியதன் பொருட்டு அந்த மிகப் பாழடைந்த மண்டபத்தினைக் காணும் ஆவல் ஏற்பட்டது. பழைய மன்னர்கள் காலத்து அரண்மனை அல்லது பழைய மன்னர்கள் குடியிருந்த வீடு எனக் கூறலாம். தஞ்சாவூர்ல உள்ள மக்கள் வரலாறு குறித்த பல விஷயங்களை வாய்மொழிச் செய்தியாக அவ்வப்போது கூறிச் செல்கின்றனர். இது அவர்களின் இயல்பான வாழ்வுடன் ஒன்றியதொரு விஷயமாக உள்ளது. மேலும் வரலாற்றுச் கால எச்சங்கள் தஞ்சாவூரிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும், இப்பகுதியெங்கும் காணப்படுகின்றன. கோயில்கள், அரண்மனைகள், குளங்கள், மண்டபங்கள், இப்படி


ஏதோ ஒன்னு இருக்கு…

 

 சிந்துவிற்கு எழுத்தாளர் சுஜாதா எழுதிய புத்தகங்கள் மீது மோகம். அன்றும் வழக்கம் போல வாசலில் தன்னை மறந்து “மூன்று குற்றங்கள்” வாசித்துக் கொண்டிருந்தாள். “வெளக்கேத்துற நேரமாச்சே.. மூஞ்ச கழுவி பொட்டு வச்சு தலைசீவி லட்சணமா இருப்போம்னுலாம் தோணாது… தொடப்ப கட்ட… போயி அந்த சைலஜாவ பாரு… ” மீண்டும் சிந்துவை வசைப்பாடினாள் அவள் அம்மா விசாலம். “சரி நான் போய் அப்ப சைலஜாவ பாத்துட்டு வரேன்… ” நீல நிற டாப்பின் மீது கறுப்பு நிற துப்பட்டாவை


பச்சை ரத்தம்

 

 ‘இன்றைக்கு வேலைக்குப் போக வேண்டாம்’ என மனதுக்குள் ஒரு குரல் காலையிலிருந்து கேட்டுக்கொண்டே இருந்தது. இரவு நெடுநேரம் கழித்து தூங்கியதால், அயர்ச்சியாக இருக்கிறது போலும். உடல் அயர்ச்சியாக இருந்தால் மனதும்; மனது அயர்ச்சியாக இருந்தால் உடலும் அயர்ச்சி அடைவது இயல்புதானே. அதனால்தான் காலையில் தூக்கம் கலைந்த பின்னரும் கண் மூடி, உடலை தளர்த்திப் படுத்திருந்தேன். ஏதோ நினைவு வந்தவனாய் சட்டென்று சோம்பல் உதறி எழுந்தேன். காலைக்கடன் கழித்து, குளித்து முடிந்ததும், காலை சிற்றுண்டி உண்டு, இதோ பேருந்து


மனப் பிராந்தி

 

 இது ஒரு மனநோயாகத்தான் இருக்கவேண்டும். அல்லது. பைத்தியத்தின் ஆரம்பகட்டமாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு அடிக்கடி எழுகிறது. ஆனால் ஒன்று மட்டும் நான் நிச்சயமாகச் சொல்ல முடியும். நான் ஒரு கோழை. பயந்தாங்கொள்ளி. ஆமாம். இதைப்பற்றி எனக்கு “இத்னியூண்டு சந்தேகம் கூடக் கிடையாது. நான் சூரப்புலி மாதிரி வாயடி அடிப்பதைச் சிலர் கேட்டிருக்கக் கூடும். அது எனது மனசின் அடிமட்டத்தில் பரவியிருக்கிற பயம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக நான் கையாள்கிற தந்திரம்தான். இருட்டில் வெளியே செல்வது என்றாலே


ஏலியன்

 

 மருத்துவமனை வளாகம் ஒரே பரபரப்பாக இருந்தது. வெளியே செய்தி சேனல்களும், பத்திரிக்கையாளர்களும் நேரலையில் ஆளுக்கொரு கருத்தை கூறிகொண்டும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அழுகைகளை படம் பிடித்து கொண்டும் இருந்தனர். மருத்துவமனை ஊழியர்கள் அங்கும் இங்கும் ஓடிய வண்ணம் காயம்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்த்து கொண்டு இருந்தனர். மருத்துவமனையே அழுகுரலால் நிரம்பி வழிந்தது. மருத்துவமனை முழுவதும் போலீஸ் கட்டுபாட்டில் இருந்தது. உள்ளே இருந்து மருத்துவமனை டீன் வெளியே வரவும், பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்து கேள்விகளை அடுக்கினர். இதுவரை எத்தனை உயிர் போயிருக்குது?


சண்டை

 

 எங்கும் புகை மண்டலம், திடீர் திடீரென்று சீறிக்கொண்டு செல்லும் குண்டின் சத்தம், திடீரென்று பெரும் சூறாவளி சத்த்த்துடன் தலைக்கு மேல் பறந்து சென்று “டொம்” என்று விழுந்து பெரும் சத்தத்துடன் வெடிக்கும் பீரங்கி குண்டுகள். இடை இடையே தட தவென ஓடி வந்து கொண்டிருக்கும் பூட்ஸ் கால்களின் சத்தம். பதுங்கு குழிக்குள் இருந்த ராஜேஸ் தனது அதிகாரியும் நண்பனுமான ஹம்ஸாவிடம் சொல்லிக்கொண்டிருக்கிறான், ஹம்ஸா, நாம் இப்ப எழுந்து அடுத்த பக்கம் ஓடிடலாமா? வேண்டாம், குண்டு மேல பறக்கறதுனால


கனவில்லை, நிஜம்!

 

 ஷாலினி ஒரு இருட்டறையில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள், சரியாகச் சொன்னால் உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்தாள். அவளது உடை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஏதோ திரைச்சீலையை உடலில் சுற்றி வைத்ததுபோல. அது போதாதென அறை முழுக்க வெவ்வேறு இடங்களிலிருந்து திரைச்சீலை துணித் துண்டுகள் போன்றவைகள் அவள் உடையுடன் இணைந்திருந்தன. அவள் அந்த உடையின் இணைப்புகளை வியப்பாக பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரென ஒரு அமானுஷ்ய சத்தம் கேட்டது, தாங்க முடியாமல் ஷாலினி இரு காதுகளையும் பொத்திக் கொண்டாள். அப்போது ஒரு கை அவளை


விடாது கருப்பு

 

 ஆழ்ந்த உறக்கம். குளிர்காலத்தில் காற்றாடியை 12ஆம் நம்பரில் வைத்து, போர்வைக்குள் கதகதப்பாக சுகமாக தூங்குவது வழக்கம். அப்படி ஒருசுகமான உறக்கத்தில், தீடிரென கதவை தட்டும் சத்தம். யாராக இருக்கும் இந்த நடுநிசியில்? போதாக்குறையாக யாராவது சீக்கிரமா கதவதொறங்களேன் என்று ஒரு பரிட்சையம் இல்லாத ஆண்குரல். ஓட்டின் மேலே மழைநீர் வடிவதற்காக போடப்பட்ட தகரத்தில் உறங்கி கொண்டிருந்த தாய்பூனையும் அழுவது போன்ற குரல் கொடுக்க, திகில் பற்றி கொண்டது மனதில். இதயதுடிப்பைக்கேட்க முடிந்தது. சரி எழுந்து கொள்வோம் என்று