கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: February 1, 2024
பார்வையிட்டோர்: 6,597 
 

என் குறிப்பு – இந்தக் கதையை தன்னிலையில் எழுதுவதில் ஒரு சொகரியம் இருக்கிறது, படித்து முடித்தபின் அந்த செகெரியம் புரியும்.

திருப்பட்டி 7 கி.மீ. என்று அறிவித்துவிட்டு சாலையோர கல் ஓடியதும் நான் படித்து கொண்டிருந்து புத்தகத்தை மூடினேன். பஸ்சின் ஜன்னல் வழியே சுவாரசியமாகப் பார்க்கத் துவங்கினேன்.

திட்டுத் திட்டாகப் பாறைகள் சூரிய வெளிச்சம் வாங்கி ஜுரமாக அனல் வீசின. சாலையோரச் செடிகள் தண்ணீர் கோரிக்கையுடன் முகம் வாடியிருந்தன. கடந்து சென்ற, கருங்கல் க்ரஷர் தூவின கறுப்பு துசி மரங்களில் படிந்திருந்தன. மேகங்கள் கும்பலாக யாத்திரையில், இதை எல்லாம் ரசிக்காமல் என் பக்கத்து சீட்காரன் நித்திரையில்.

திருப்பட்டிக்கு நான் முதல் முறையாக வருகிறேன். அங்கே எனக்குத் தெரிந்த ஒரே முகம் நடேசன். அவனுடைய போதாத காலம் ரூரல் டிரைனிங் என்று அவனுடைய பாங்க் தனது திருப்பட்டி கிளைக்கு அனுப்பி வைத்தது. ஒரு வருடமாயிற்று. திருப்பட்டி கிளையில் இவனும் இன்னொரு கிளார்க்கும் மட்டும்தானாம். பாதி நேரம் பகோடா சாப்பிட்டு சினிமா பத்திரிகை படிப்பார்களாம். எப்போதாவது ஒரு ஆசாமி தோளில் ஆட்டைத் தூக்கிப் போட்டுக் கொண்டு வந்து நேரம் என்ன என்று வாட்ச் கட்டின இவர்களை விசாரித்து விட்டுப் போவானாம்.

நகர வாழ்க்கையில் இருந்து விலகி ஒரு மாற்றத்துக்காக நாலு தினங்கள் என்னோடு வந்து தங்கேன் என்று எல்லா கடிதங்களிலும் கடைசி வரியாக நடேசன் எழுதியிருந்தான் என்றாலும்…

நான் புறப்பட்டது அந்த மாற்றத்தைத் தேடி அல்ல. திருப்பட்டியில் உள்ள ஒரு குகையைப் பற்றி அவன் எழுதியிருந்த விஷயம்தான் என்னை ஈர்த்தது.

அதற்கு முன்… என்னைப்பற்றி கைகுலுக்கி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை – பெயர் – சுந்தர், இருபத்தி ஒன்பதே கால் வயது. சென்னையில் ஒரு உயர்நிலைப் பள்ளியில் பி.டி. மாஸ்டர். தமிழில் விளையாட்டு வாத்தியார். மிகப் பிடித்தவை – சாகஸங்கள். உதாரணமாக…. பள்ளிக்கூட கிணற்றில் தவறி விழுந்த எருமை மாட்டை தனி நபராகப் போராடி காப்பாற்றியது. பொழுதுபோக்கு – மலையேறுதல். நேரமும், சூழ்நிலையும் அனுமதித்தால் எவரெஸ்ட்டின் உச்சிமுடியை உலுக்கிப் பார்த்து விட்டு வரும் லட்சியத்தை உள்ளே ஒரு ஓரத்தில் வைத்திருக்கிறேன்.

குகையப் பற்றி ஆரம்பித்தேனில்லையா?

திருப்பட்டியில் ஒரு மலை இருக்கிறதாம். சறுக்கு மலை என்று வழங்கு பெயராம். அந்த மலையில் ஒரு குகை. அதற்கு ஆள் விழுங்கி குகை என்றும் பெயராம். ரொம்ப நாளாக அந்த குகை இருப்பதே மக்களுக்குத் தெரியவில்லையாம். மேய்ச்சலுக்கு போன ஒரு ஆடு குகைக்குள் சென்று காணாமல் போனதும், அதன் மேய்ப்பன் இரண்டு பேரைத் துணைக்கழைத்துக் கொண்டு ஸ்தலத்திற்கு விரைந்தானாம். டார்ச் லைட், அரிக்கேன் விளக்கு எல்லாம் எடுத்துக் கொண்டு மூன்று பேரும் படிப்படியாய் இறங்கிச் சென்ற குகைக்குள் சென்றார்களாம். உடனே குகை அவர்களை ஜீரணம் செய்து விட்டதாம்.

ஊரில் பெரிய மனுஷன் என்கிற நரைத்த தலையொன்றை உடனே மற்ற நரைத்த தலைகளைக் கூப்பிட்டு ஆலோசித்து, “ஊர்ல தெய்வகுத்தம் ஏதோ நடந்திருக்கு. அதனாலதான் குகை ஆளை விழுங்குது – மூணு வருஷம் தொடர்ந்து அம்மனுக்கு திருவிழா எடுத்தா சரியாப் போய்விடும்” என்று தீர்ப்பெழுதியதாம்.

டைனமைட் வைத்து உடைத்துப் பார்க்க விரும்பிய போலீசை ஊர் பஞ்சாயத்தின் உத்தரவு வழி மறித்ததாம்.

மக்கள் சேர்ந்து ஒரு முரட்டு பாறாங்கல்லை உருட்டி வந்து குகை வாசலில் நிறுத்து குகைக்குள் யாரு செல்ல வேண்டாம். எச்சரிக்கை!” என்று போர்டு எழுதி வைத்து விட்டார்களாம்.

இந்த சமாச்சாரங்கள் பூராவும் பாங்க் செலான் காகிதத்தின் பின்புற வெள்ளைப் பகுதியில் பல கடிதங்களில் நடேசன் எழுதியவை.

பள்ளி விடுமுறை துவங்கியதுமே என்னைப் புறப்பட வைத்தது அந்த குகையின் சுவாரசியமே.

“திருப்பட்டிக்கு யாரோ டிக்கெட் வாங்கினாங்களே”

கண்டக்டரின் குரலில் கலைந்து நான் எழுந்து கொண்டேன். அவசரமாக ஒரு சின்ன பெட்டி, ஒரு பெரிய பெட்டியுடன் என்னை உதிர்த்து மூஞ்சியில் செம்மண் வீசிவிட்டு பஸ் புறப்பட்டது. சின்னப் பெட்டியில் என் உடைகள். பெரிய பெட்டியில் – பலவகையான உபகரணங்கள், அவைகளில் ஒன்று, ஆக்ஸிஜன் நிரம்பிய சிலிண்டரும், அதனுடன் இணைந்த மாஸ்க்கும்.

எனக்காச்சு , அந்த குகைக்காச்சு!

நான் போன போது நடேசன் கைலி கட்டின தொடையை ஆட்டிக் கொண்டே ஏழும், மூணும் எத்தனை என்று கால்குலேட்டரில் கணக்கு போட்டுக் கொண்டிருந்தான்.

அந்த மற்றொரு கிளார்க் வெள்ளரிப் பிஞ்சு கடித்துக் கொண்டு கிரிக்கெட் கேட்டுக் கொண்டிருந்தான்.

“ஏனப்பா இது என்ன பேங்கா? இல்லை வீடா?”

“வாடா, வாடா, உக்காரு” என்ற நடேசன், ரோமாபுரியில் இருக்கும் போது ரோமானியனாக இரு என்ற ஆங்கிலப் பழமொழி சொன்னான்.

“நடேசா, முதல்ல நான் அந்த குகையைப் பார்க்கணும்.”

“என்ன அவ்வளவு அவசரம்?”

“உண்மையைச் சொல்லணும்னா அந்தக் குகையைப் பத்தி நீ எழுதலைன்னா நான் இங்கே வந்திருக்கவே மாட்டேன். எனக்கு உடனே அதைப் பார்க்கணும்.”

“சரி வா. சக்திவேல், தூங்கிடாதீங்க வந்துடறோம்” என்ற புறப்பட்டான் நடேசன்.

“இதென்ன இவ்வளவு பெரிய பெட்டி?”

“சொல்றேன்.”

டாக்குமெண்டரி படங்களில் ஷெனாய் பின்னணியில் வறட்சியைப் பற்றி காட்டும் காட்சிகள் வழியில் தெரிந்தன. ஒவ்வொரு வீடும் சுதந்திரமாக காற்று வாங்கியது. ஆலமரத்தில் பக்கத்து ஊர் டாக்கீசில் பெரிய இடத்துப் பெண் என்று தட்டி தொங்கியது – ஒண்ணிலிருந்து பத்து எண்ணுவதற்குள் ஒரு மளிகைக் கடை, ஒரு பெட்டிக் கடை, ஒரு டீக்கடை, ஒரு சலூன் கொண்ட பஜார் கடந்து போய் விட்டது. மர நிழலில் ஒரு தைல வியாபாரி கால் ஆணி எடுத்துக் கொண்டிருக்க, அந்த ஆசாமி பிரசவம் போல அலறினான். அம்மன் கோவில் சாத்தியிருந்தது. வாசலில் அரச மரம். அதன் ஒரு கிளை பாக்கிவிடாமல் மஞ்சள் துணியில் சுற்றின சின்னச் சின்ன மூட்டைகள் கட்டிவிடப் பட்டிருந்தன. (அநேகமாக பிள்ளை வரம்)

சறுக்குப் பாறை மனித நடமாட்டமில்லாததால் புதர் மண்டின வெடிப்புகளுடன், வாகன இடங்களில் சுண்ணாம்பில் எழுதின தீப்பெட்டி விளம்பரத்துடன் இருந்தது. குறிப்பிட்ட குகை வாசலுக்கு மேலேறி வருவதற்குள் நடேசனுக்கு மூச்சு முழுக்க வெளிவந்து விட்டது.

“இதுதான் பார்த்துக்கப்பா?” என்றான்.

தன் இடுப்புயரத்திற்கு அந்தப் பாறாங்கல் குகை வாசலுக்கு முன்னால் முழுக்க மூடாமல் இடைவெளி விட்டு நின்றது. அருகே தரக போர்டு பாறாங்கல்லுடன் கட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில், இது ஆள் விழுங்கி குகை. உள்ளே யாரும் செல்லக் கூடாது. எச்சரிக்கை!” என்று சிவப்பு மையில் எழுதியிருந்தது.

“இந்த விஞ்ஞான யுகத்திலயும் மூட நம்பிக்கையைப் பார் நடேசா” என்றேன்.

“அப்படிச் சொல்லாதே சுந்தர். நானும் முதல்ல சிரிச்சேன். ஆனா நான் உனக்கு லெட்டர்ல எழுதின அத்தனைத் தகவல்களும் உண்மை . முதல்ல மூணு பேர் காணாமல் மீட்டரில் தொலைந்து போனது.

“வேணாம்டா இந்த விஷப் பரிட்சை” என்றான் நடேசன் கவலையாக.

“பயப்படாதே. ஏதோ ஒரு விஞ்ஞான பூர்வமான காரணம் உள்ளே ஒளிஞ்சிருக்கு. அதைக் கண்டு பிடிக்காமல் பின் வாங்கக் கூடாது. சரியா பதினெட்டாவது மீட்டர்ல கல் மறையுது. அதனால்” என்று என் இடுப்பில் கயிற்றைக் கட்டிக் கொண்டேன். “நீ எண்ணிக் கிட்டே வா. பதினேழாவது மீட்டர் அடையாளம் குகைக்குள்ளே நுழைஞ்சதும் கயித்தைப் பிடிச்சி இழு. அது எனக்கு சிக்னல். அந்த இடத்திலேர்ந்தே அலசிப் பார்த்துட்டுத் திரும்பிடறேன். என்ன?”

அரைகுறை மனதோடு சம்மதித்தான். சுற்றி நின்ற மக்களைப் பார்த்துக் கையசைத்துவிட்டு குகைக்கு உள்ளே செங்குத்தாக இறங்கின. சின்னப் படிகளில் நிதானமாக இறங்க ஆரம்பித்தேன்.

சிறிது நேரத்தில் வெளி உலக வெளிச்சமோ, சத்தமோ இல்லாமல் போய், என் நெற்றியில் அணிந்த டார்ச் வெளிச்சத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் நடப்பவன் போல மெதுவாக இறங்கினேன். என் முதுகில் அந்த இணைப்புக் கயிறு தொடர்ந்து வந்தது. என் கணக்கில் நான்கு படிகள் ஒரு மீட்டர். அதன்படி படிகள் இறங்கினதும் பதினைந்து மீட்டர் கடந்து வந்துவிட்டதை உணர்ந்தேன். அதன் பிறகு இன்னும் மெதுவாக இறங்கினேன். கறுப்பு! கறுப்பு! கறுப்பு!

மேலும் எட்டு படிகள் இறங்கியதும் 17வது மீட்டர் இங்கும் கறுப்பு! கறுப்பு! கறுப்பு! முதுகில் கயிறு இழுக்கப்பட்டு சிக்னல் கிடைத்த போது, நான் கால் வழுக்கி அடுத்த நான்கு படிகளில் சறுக்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *