கதைத்தொகுப்பு: தினமலர்

472 கதைகள் கிடைத்துள்ளன.

வெற்றிக்குள் ஒரு தோல்வி!

 

 மொட்டை மாடியில், அண்ணாந்து படுத்து, வானத்தில் கொட்டிக் கிடந்த நட்சத்திரத்தை எண்ணிக் கொண்டிருந்தான் சஞ்சய். மனசு, எதையும் யோசிக்கும் திறனற்று நிர்சலனமாய் இருந்தது. காபி டம்ளருடன், மாடிக்கு வந்த வள்ளிக்கண்ணு, மகன் அருகில் பூரிப்பாய் வந்து, ‘என்னய்யா… இங்க வந்து படுத்துக்கிடக்குறே… உங்கப்பா உன்ன காணலன்னு கீழே தேடிட்டு இருக்காரு… நம்ம உறவு முறையில, எத்தனை பேர் போன் செய்து கேட்டாங்க தெரியுமா…’ அவள் சொல்லி முடிக்கும் முன், அழகுநம்பி வாயெல்லாம் பல்லாய் மாடிக்கு வந்தார். ‘சஞ்சய்,


மரு(று)மகள்!

 

 “வா கோமதி… நீ வருவேன்னு தான் நானும், சாப்பிடாம உட்காந்து இருக்கேன்; தட்டு போடட்டுமா…” வாஞ்சையுடன் கேட்ட அண்ணி வசந்தாவை, அன்பு மேவ பார்த்தாள் கோமதி. வசந்தா சமையல் அறைக்குள் சென்று, தட்டை எடுத்து வந்து பரிமாறுவதற்குள், கோமதியின் கண்கள், வீட்டை அலசின. கொஞ்சம் உள்ளடங்கி இருந்தாலும், விசாலமான, காற்றோட்டமான அழகான வீடு. இரண்டு படுக்கையறை, ஹால் வசதியுடன் அக்காலத்திலேயே சவுகரியமாக வீட்டை கட்டியிருந்தார் வசந்தாவின் கணவன். அதை, மகன்கள் இருவரும் எடுத்துக் கட்டி, மேல்தளத்தில் பெரியவனும்,


இலக்கணத்தில் வாழு!

 

 கோவிலைச் சுற்றி இரைந்து கிடந்த நந்தியாவட்டைப் பூக்களை கண்களிலேயே சேகரித்துக் கொண்டிருந்தாள் ராதா. வெண்மையும், காவியும் கலந்த கோவில் சுவர்கள் இவளிடம் மவுனமாய் பேசாமல் பேசின. ஒருமுறை கிருஷ்ணனிடம் கோவில் சுவரைப் பற்றி விவாதித்த நினைவு வந்து போனது. ஏன்… எப்பவும் கோவில் சுவர்ல மட்டும் வெள்ளையும், காவியும் கலந்து அடிக்கிறாங்க. அதுக்கு ஏதாவது காரணம் இருக்குமோ…’ சுவரில் படர்ந்து இருந்த காவி நிறத்தை நகக்கண்ணில் சுரண்டியபடி இவள் கேட்ட போது, கிருஷ்ணனுக்கு கோபம் தான் வந்தது.


டீச்சர்

 

 “ஹெல்மெட் போட்டுக்கோ, வண்டியை ஸ்ட்ராட் பண்ணறதுக்கு முன்னாடி ஸ்டேண்டை எடுத்துடு” அம்மா மனப்பாடமாய் ஒப்புவிப்பது போல் இருந்தது பிருந்தாவுக்கு. அம்மா நீ டீச்சர் வேலையில இருந்து ரிட்டையர்டாயிட்டாலும், இன்னும் டீச்சராவே இருக்கே. நான் எப்பவும் கரெக்டா இருப்பேன்னு உனக்கு தெரியாதா? கொஞ்சலாய் அம்மாவிடம் சொல்லி விட்டு அம்மா சொன்ன எல்லா வேலை களையும் செய்து விட்டே வண்டியை எடுத்தாள். மகள் ஸ்கூட்டியில் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த யசோதாவுக்கு மகள் சொன்ன “எல்லாம் கரெக்டா செய்வேன்” என்று சொன்னது மனதில்


அம்மா என்றால் அன்பு!

 

 பல பலவென பொழுது விடியும்போது, ராஜாவின் கார், காரைக்காலைத் தாண்டி, திருமலைராயன் பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது. “இந்தப் பக்கம் தானே, சுந்தரேசன் ஊர் பெயர் சொன்னான்… ஆங்… நிரவி…’ காரை நிறுத்தி, எதிரில் வந்த பைக்காரரிடம் கேட்டான். “நிரவின்னு… இங்கே ஒரு ஊர்…” “அதோ… ரைட்லே ரோடு போகுது பாருங்க, அது வழியே போனா நிரவி தான்,” என்று சொல்லி பைக்காரர் வேகமெடுக்க, காரை வலப் பக்கமாகத் திருப்பினான் ராஜா. வளைந்து நெளிந்து சென்ற சாலை


திலகாவும்…மாலாவும்…!

 

 “மாலா வேலை எல்லாம் முடிச்சிட்டியா..?திலகா பக்கத்து வீட்டு காம்பவுண்டிற்குள் எட்டி கேட்க , “இதோ வந்துட்டேங்கா.. 12 மணி சீரியலுக்குள்ள சாதம் வச்சுடாலாம்னு உலை வச்சேன்.. அதுக்குள்ள நீங்க கூப்பிடவே சிம்ல வைச்சிட்டு வந்துட்டேன்…” “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..? நேத்து நான் மார்க்கெட் பக்கம் போயிட்டிருந்தப்ப எதிர்த்த வீட்டு கமலாவோட பொண்ணு எவனோ ஒருத்தன் கூட பைக்ல போயிட்டுருந்தா…என்னை பார்த்ததும் பார்க்காத மாதிரி திரும்பிகிட்டா..காலேஜ் போறன்னு இப்படிதான் சுத்தறா போலிருக்கு….” “அப்படியாக்கா.. என்னவோ எப்பவும் நாம


அர்ப்பணிப்பு – ஒரு பக்க கதை

 

 “ஏதோ.. நினைவுகள்.. கனவுகள்…” அமைதியான அந்த அதிகாலையிலே செல்போன் அழைத்தது.. ‘யாரா இருக்கும்’.. என்று நினைத்தவாறே அட்டன் செய்தார் பிரதாபன். “ஹலோ.. நான் சேது பேசறேன்”, என்ற குரலைக் கேட்டவருக்கு தூக்கி வாரிப்போட்டது. “டே.. எப்படிடா இருக்க?.. எங்க இருக்க..? எங்களையெல்லாம் மறந்துட்டியா? ஏன்டா.. ஊருக்கே வரமாட்டேங்கறே?”, என்று கேள்விகளை அடிக்கிக் கொண்டே போனார். ஆமாம்… எத்தனை வருஷமாச்சு… ஏழு வருடங்களாக ஒரு பேச்சு மூச்சில்ல..ஆர்மில சேர்ந்திட்டதா காத்துவாக்குல ஒரு சேதி வந்தது.. அவ்வளவு தான்..அதனால் தான்


காலுக்குச் செருப்பாய்…

 

 “ஒங்க காலுக்குச் செருப்பா கிடந்த என் பிள்ளாண்டான இப்படி வீசிட்டியேப்பா. நாய்க்கு எலும்புத் துண்ட வீசற மாதிரி நா பெத்த மவன போலிசில வீசிட்டியே. ஒன்ன விட்டா அவனுக்கு ஆருப்பா” மாருதியின் நவீன அவதாரமான அந்தக் காரை பளபளக்க வைத்துவிட்டு கீழே எறியப்பட்ட கந்தல் துணிபோல் கீழே கிடந்த பொன்னம்மா எழுந்தாள். சற்றே உடம்பை நகர்த்தியவள் சுந்தரத்தைப் பார்த்து விட்டாள். அந்த அழுக்குத்துணி காற்றால் தூக்கப்பட்டு ஒரு கம்பு முனையில் விழுந்தால் எப்படித் தோன்றுமோ அப்படிப்பட்ட தோற்றத்தோடு


ஈரத்துணி

 

 அன்று அலுவலகப் பவுர்ணமி நாள். ஆனாலும் – பட்டப் பகலிலேயே உதித்த இந்தப் பவுர்ணமி, அந்த அலுவலகவாசிகளில் சிலருக்கு, வளர்பிறைகளின் பரிபூரணம். பலருக்கோ தேய்பிறைகளின் துவக்கம். சுருக்கமாகச் சொல்லப்போனால், சம்பள நாள். துக்கமாய், துக்கிரியாய், விடை தெரியாப் புதிராய், விரக்தியாய், பற்றற்ற யோகியாய், மீனா போன்ற ஒரு சிலருக்கு மகிழ்ச்சியாய், பல்வேறு மனோ வடிவங்களைக் காட்டும் மாதக் கடைசி உழைப்பு நாள். அலுவலகப் பொருளாளன் – அதாவது கேஷியர் எனப்படும் காசாளர், தேசிய வங்கியில் இருந்து, கொண்டு


சோறு முக்கியம் பாஸ்

 

 “அந்த வில்லேஜ்ஜுல எதுக்கு தினமும் இவ்வளவு இறப்பு நிகழுது?.. அவ்வளவு வீரியமா அங்க கொரோனா இருக்கு?” “தெரியல சார்.. நான் நம்ம டாக்டர் டீம அங்க அனுப்பி வைக்கறேன்… அது நம்ம மாவட்டத்து எல்லையில ரொம்ப தூரம் தள்ளி ஒதுக்குப்புறமா இருக்கற வில்லேஜ்கறதால, இதுவரைக்கும் யாரு கண்ணுலேயும் படமா இருந்துச்சு.. ஆனா… கடந்த அஞ்சு நாளா.. அஞ்சு, பத்து, இருபது, நாப்பது, அம்பதுனு இறந்தவங்க எண்ணிக்கை கூட கூட இப்ப கவர்ன்மென்ட் கவனத்துக்கு வந்திருச்சு… “ஓக்கே.. நீங்களும்