கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 13, 2022
பார்வையிட்டோர்: 3,465 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

செல்வராசா அமைதியின்றித் தவித்தான். அவன் எதிர் பார்த்த மாதிரி எதுவுமே நடக்கவில்லை. காலத்தின் மந்தகதியான சுழற்சியில் எல்லாமே மாறிவிடுமென அவன் எதிர்பார்த் தான். மனிதர்கள் நல்லவர்களாகி விடு வார்கள்; சுயநலத்தை மட்டுமல்லாமல் பரநலத்தைப் பற்றியும் சிந்திப்பவர்க ளாய் இருப்பார்கள்; பேராசை பிடித் தவர்களாய் இருக்க மாட்டார்கள். தாம் வாழும் காலத்தைப் பற்றி அடிக் கடி நினைப்பவர்களாய் – நல்லவற்றை மட்டுமே செய்பவர்களாய் – மற்றவர்களின் மனங்கள் நோகாது நடப்பவர்களாய் – நாம் வாழும் காலத்தின் உன்னதமான தியாகங்களை உணர்ந்தவர்களாய்…

எல்லாமே வீணாகிவிட்டது. மனி தன் அதேமாதிரித்தான் வாழ்கின்றான் – முதல் மனிதனைப் போல; முரட்டுத் தோற்றம், கோரப்பற்கள், நீண்ட சடைகள், வெறித்த பார்வை, நிர்வாணக் கோலம் மாறி இருக்கலாம். ஆனால் அதேமாதிரித்தான்…. தவிர்க்கப்பட்ட பழத்தைப் புசிக்கும் அங்கலாய்ப்புடன், வெறியுடன், தீராத மோகத்துடன், காட்டுமிராண்டித் தனத்துடன்…

எல்லாரும் உபதேசிக்கிறார்கள். உபதேசம் செய்யும் உன்னதமான கலையில் எல்லாரும் வல்லவர்களாக இருக்கிறார்கள். உபதேசம், நன்னடத்தை , நற்பழக்க வழக்கங்கள், நல்வாழ்க்கை.

எள்ளானாலும் ஏழாகப் பகிர வேண்டுமென்பார்கள். ஆனால் சுவையான பண்டங்களை ஒருவருக்கும் கொடாது ஒழித்து வைத்துத் தின்பார்கள்.

ஆரோக்கியமான வாழ்வுக்கு உயிர்ச்சத்துக்களின் இன்றியமையாமை பற்றி உபதேசம் செய்வார்கள். ஆனால் அரிசியை நன்றாகக் குற்றித் தீட்டிச் சமைப்பார்கள். அரிசிக் கஞ்சியை வடித்து கன்றுக்குட்டிக்குக் கொடுத்துக் கொழுக்க வைப்பார்கள்.

சுகாதாரப் பழக்கவழக்கங்கள் ளென்று நீட்டி முழங்குவார்கள். கை கால் அலம்பிச் சாப்பிடமாட்டார்கள். உடைகளைத் தோய்த்து உடுத்தமாட்டார்கள், மலசலம் கழித்தபின் கால் கழுவமாட்டார்கள்.

நீதி, நேர்மை, நியாயமெனப் பேசுவார்கள். ஆனால் மற்றவர்களுடான கொடுக்கல் வாங்கல்களில் சரியாக நடந்து கொள்ளமாட்டார்கள்.

செல்வராசா ஏமாந்து போனான். வாழ்க்கையே வேஷம் போடுதல் என்பதாகப் போயிற்று. வேஷம் போடுபவர்களே வாழத் தெரிந்தவர்கள் என்பதாயிற்று. நன்றி மிக்கவர்களாய் வாலைக்குழைகின்றவர்கள் – எதிரிகளைக் கண்டால் குரைக்கின்றவர்கள் நாய் வேஷம் போட்டவர்கள்; குழைந்து பதுங்கி ஏமாற்றுகின்றவர்கள் – நரி வேஷம் போட்டவர்கள்; நம்மைவிட ஆளில்லை என்று நெஞ்சை நிமிர்த்தி நடக்கின்றவர்கள் – யானை வேஷத்தினர்; எதற்கும் மருண்டு ஒதுங்குகின்றவர்கள் – மான் வேஷதாரிகள்; ஆடி மயக்குபவர்கள் மயில் வேஷம் போட்டவர்கள். உலகமே வேஷதாரி களின் உலகமாகப் போயிற்று.

செல்வராசா செல்வராசாவா கவே இருக்க விரும்பினான். தான் நினைப்பதே – தான் உழல்வதே தனது வாழ்க்கை என்று நம்பினான். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்; மற்ற வர்கள் என்ன சொல்வார்களென்று எல்லாம் பார்க்காது, தன் வாழ்வு யாத்திரையின் நாற்பது வருடங்களைக் கடந்திருந்தான் அவன்.

இளமைப் பருவத்து நினைவுகள் வசீகரம் மிக்கவையாக இருந்தன. ஒரு இனிய கனவு போல அப்பருவம் கழிந்துவிட்டது. நடையாய் நடந்து தொலை தூர நகரத்துப் பாடசாலைக் குச் சென்ற நாட்கள் மங்கிய பதிவு களாய் மனத்தில் மிதக்கின்றன. பரந்து விரிந்து விழுதூன்றி நிழல் பரப்பி நிற்கும் ஆலமரம்; மாரி வெள்ளத்தில் நிரம்பும் கோவில் குளம் ; இலந்தை மரங்களும் விளா மரங்களும் நிறைந்த பற்றைக் காடுகள். இவற்றிலெல்லாம் இளம் பறவைகளாய் குதூகலித்துத் திரிந்த நண்பர்கள் கூட்டம். அப்போ தெல்லாம் செல்வராசா செல்வராசாவாகவே இருந்தான். அவனின் நினை.வுகள், அவனின் ஆசைகள், அவனின் கனவுகள் எல்லாம் அவனுடையவா கவே இருந்தன. அவன் மகிழ்ச்சியாக இருந்தான்; துக்கம் மிக்கவனாகச் சுற்றித் திரிந்தான்; எல்லைகாண முடியாத சோகத்தில் ஆழ்ந்து கிடந்தான்.

இளமைப்பருவத்து இனிய கனவு கள் அவனுள் முளை கொண்டிருந்த காலம், காணும் காட்சிகளிலெல்லாம் நளினமும், துடிப்பும், வசீகரமும் இழை இழையாய் பின்னி, இன்னிசைமயமாய் பொலிந்து கொண்டிருந்த பருவம், கண் அசைவும், கைவீச்சும், ஒய்யார நடையும், பின்னனின் நெளிவும், மின்னலடிக்கும் புன்னகையுமாய் – உலதாமே கவர்ச்சிக் கணைகளால் அவனை இனிமையான துயரத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்த வேளைகள். இனம் புரியாத ஏக்கத்தில் அவன் தவித்துக் கொண்டிருந்தான். என்ன வென்று சொல்லமுடியாத ஒரு தவிப்பு. ஏதேதோ எதிர்பார்ப்பு, இரவெல்லாம் கனவுகள். பகலில் ஒரு மோன மயக்கம்.

இளமையின் தவிப்பு என்று சொன்னார்கள். அவனுக்கு இணையாக ஒருத்தியைப் பிணைத்து வைத்தார்கள்.

தாபம், மோகம், தவிப்பு எல்லாம் அடங்கிப் போயிற்று. வாழ்வின் அர்த்தங்கள் புரிந்தன போலிருந்தன. ஒரு இனம்புரியாத அமைதி கவிந்தது. ஒரு சாந்தம் மனதில் நிரம்பிற்று, எல்லாமே அழகாய் – அமைதியாய் பொலிந்து போயிருந்தது.

இதிலெல்லாம் செல்வராசா செல்வராசாவாகவே இருந்தான்.

இணைந்த வாழ்க்கை தொடக்கத்தில் இரம்மியமானதாகவே இருந்தது. நாட்களின் நகர்வில் முரண்கள் தலைகாட்டத் தொடங்கின. தான் நினைப்பது போல உலகம் இல்லை என்ற பாடத்தையும் முதன்முதலில் தன் இணையிடமே அவன் கற்றான்.

மனிதர்கள் வேறு வேறானவர்கள்; மனங்கள் வேறு வேறானவைகள்; பழுத்து விழும் இலைகள் காற்றில் சுழன்று சுழன்று மிதக்கும் அழகில் அவன் திளைத்த போது – அவன் குப்பைகள் என்று மரங்களையே வெட்ட முற்பட்டான். அவன் நாயுடனும், கோழிகளுடனும், கன்றுக்குட்டி யிடமும் பரிவாய் நடந்து, அவற்றுடன் ஒன்றிய போது – அவள் பைத்தியம் என்று கேலி பேசி, அவன் மனம் நோகச் செய்தாள். அவன் வானொலியில் மதுரைச் சோமுவின் சங்கீதத்தை இரசித்த போது – அவள் கிழவனின் உளறல் என்பதாய் அதைத் திருகிக் குலைத்தாள், அவன் அவளைத் தன் நேசத்திற்கும் நம்பிக்கைக்குமுரியவள் என்பதாகக் கொண்டு கரைந்த போது, அவள் அவனை தனக்கேயான வெறும் சடப்பொருள்களில் ஒன்றாகவே கருதி நடந்தாள்.

செல்வராசா தனக்குள் உடைந்து போனான். அப்போதும் கூட அவன் ‘தானாகவே’ இருந்து ஒரு கவிதை எழுதினான்.

என்னுடைய காலங்கள் இப்படியே போகிறது.. வர்ணமில்லை, வடிவமில்லை வார்த்தைகளை மீறி நிற்கும் அமைதியில்லை அழகுமில்லை ;

எந்நாளும் ஓர் நாளாய் தடமழியா அத்தடத்தில் என்னுடைய காலங்கள் இப்படியே போகிறது. தரித்து நிற்க முடியாமல் தறிகெட்டுப் போகிறது

என்னுயிரின் வேதனையை இவ்வுலகில் யாரறிவார். என் இதயத் தாபங்களை இங்கெவரோ அறிந்திடுவார். என் நரம்பின் துடிப்பெல்லாம்….. என் இதயப் பிழி வெல்லாம்………. என் கவிதை – என் கனவு – என் காதல் – என் அன்பு – எல்லாமே இவ்வுலகில் பார்ப்பாரே இல்லாத பால் நிலவாய் போகிறது எனக்கென்று எவருமில்லை என்னை உணர்தற்காய் என்னை உயர்த்து தற்காய் என்னை உருக்கி உயிரழிய வைப்பதற்காய் என்னைக் கரைப்பதற்காய்…… என்னுடனே ஒன்றியதில் தானும் கரைவதற்காய்…….. எனக்கென்று எவருமில்லை. எனக்கென்று எவருமில்லை நான் தனியன் நான் தனியன் என்னுடைய காலங்கள் இப்படியே போகிறது

இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு செல்வராசா மாறிப் போனான். தன் சுயத்தை – தனித்துவத்தை இழந்தவ னானான்; வெறும் நடைப்பிணமாய்ப் போனான்.

கால நீரோட்டத்தில் ஒரு திவலை யாய் அவன் வாழ்வும் ஓடும்போது – ஒரு பிரளயமாய் சம்பவங்கள் நிகழத் தொடங்கின. ஒழுங்கைகளில் இரா ணுவ ட்றக்குகள் ஓடத்தொடங்கின. எங்கெங்கிருந்தோ எல்லாம் இளைஞர் கள் திரண்டார்கள். வெடிச் சத்தங்கள் கேட்கத்தொடங்கின. மூட்டை முடிச் சுகளுடன் மக்கள் அகதிகளாய் இடம் பெயர்ந்தார்கள். விமானங்கள் குண் டுகளை வீசித் தள்ளின; எமது மண் ணில் அகால மரணங்கள் அதிகரித் தன; அங்கவீனர்கள் பெருகினார்கள். வாழ்வே சாவுக்கான எதிர்பார்ப்பு என்பதாய் மாறிப் போனது.

எங்கெங்கிருந்தெல்லாமோ இளை ஞர்கள் ஆண்களும் – பெண்களுமாக முளைத்தெழுந்தார்கள். அவர்கள் அணி திரண்டு போர்ப்பயிற்சி பெற் றார்கள். எமது மண்ணில் காற்றடம் பதித்த எதிரியை கலைக்க முனைந் தார்கள்; விழுப்புண் பெற்றார்கள்; மாவீரர் ஆனார்கள். மீண்டும்…மீண் டும் – இளையவர்கள் முளைத்தார்கள்.

மாபெரும் தியாகம் – தம்மை ஆகு தியாக்கிடும் தியாகம், எதிரியிடமிருந்து எமது மண்ணை விடுவிக்கும் போரில் … தம்மையே அர்ப்பணிக்கும் எல்லை காணமுடியாத தியாகம்..

அவனின் பூமி விடுதலை பெறும் அவன் பிறந்த மண்ணிலிருந்து எதிரி கள் அகற்றப்படுவார்கள். பாட சாலை நாட்களில் அவன் திரிந்த இடங்களில் எல்லாம் சுதந்திரக் கொடி பறக்கும். அகதிகளாய் ஆனவர்கள் மீண்டும் தமது மண்ணுக்குத் திரும்புவார்கள். பழையபடியே அர்த்தமுள்ள வாழ்வின் உயிர்த்துடிப்பின் சலனங்கள் எழும்பும்.

செல்வராசா உற்சாகம் மிக்கவ னானான். தனித்த வாழ்வின் சோகங் களை மறந்து இயங்கத் தொடங்கி னான். கதைகள், கவிதைகள், கட்டு ரைகளென எழுதத் தொடங்கினான். இனிக்கும் உம் உயிரை அர்ப்பணிக்கத் துணிந்து விட்ட எம்மண்ணின் புதல்வர்களே! உம்மை நினைக்கையிலேகல்லும் கசிந்துருகும்; காற்றும் நின்றசையும்; வான வெளியும் ஒளிப் பொட்டாய் நீர் சிந்தும் எம்மினிய புதல்வர்களே! எம்மனமோ எரிமலையாய் குமுறியெழும்.

ஆனால் மனிதர்களை நினைக்கும் போது, செல்வராசா அமைதியின்றித் தவித்தான். இந்த மண்ணில் நிகழும் மகத்தான நிகழ்வுகளைப் புரியாதவர் களாய் – சுயநலத்தை மட்டுமே சிந்திப் -பவர்களாய் – சாதாரணமானவர்க ளாய்… வேஷதாரிகளாய் – பேச்சொன் றும் செயலொன்றுமாய் வாழ்பவர்களாய்…

செல்வராசா செல்வராசாவாகவே இருக்க முயன்றான்.

– வெளிச்சம் 1993.07

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *