கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2021

120 கதைகள் கிடைத்துள்ளன.

ஜூலியஸ் ஸீஸர்

 

 (1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதை உறுப்பினர் ஆடவர் 1. ஜூலியஸ் ஸீஸர் : ரோமின் ஒப்பற்ற வெற்றி வீரன், படைத்தலைவன் – பொது மக்கள் மனங்கவர்ந்த முடிசூடா மன்னன்-கிளர்ச்சிக்காரரால் கொலையுண்டவன் –ஸீஸர் ஆவி. 2. அந்தோணி : வீரன், ஆனால் இன்ப வாழ்வினன். கேளிக்கை விருப்பினன் nஸர் நண்பன் – நாத்திற மிக்க பேச்சாளி – கிளர்ச்சிக்காரரை எதிர்த்தவன். 3.காஸியஸ் : ஸீஸரைக் கொல்ல முயன்ற கிளர்ச்சிக்காரருள்


க்யூவில் வந்தவர்கள்

 

 சர்வாதிகாரி ஹிட்லர் எழுதியதாகச் சொல்லப்பட்ட உலகெங்கும் பரபரப்பு உண்டாக்கிய – ரகசிய டயரிகள் கடைசியில் போலி என்று நிரூபிக்கப்பட்டது உங்களுக்குத் தெரிந்ததே… ஆதாரம்: சர்வதேச செய்திப் பத்திரிகைகள். இதிகாச, புராண, சரித்திர பிரபலஸ்தர்களின் பர்சனல் டயரிகளை நான் படித்துப் பார்த்தது உங்களுக்குத் தெரியாததோ! ஆதாரம்: விடியற்காலையில் நான் கண்ட கனவு. “மடையா! மாற்றான் தோட்டத்து டயரிகளைப் படிப்பது மானம் கெட்ட செயல்” என்னைத் தூற்றாதீர்கள். இதிகாச புராண சரித்திரப் புள்ளிகள் எனது அதிகாலை சொப்பனத்தில், வரிசையாக க்யூவில்


இறுமாப்புள்ள இளவரசி

 

 (1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நல்லவராகிய ஓர் அரசருக்கு, ஒரு காலத்தில், வடிவழகியாகிய ஒரு பெண் இருந்தாள். அவளுடைய எழிலைப்பற்றி உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் கேள்விப்படாதவரே இல்லையெனலாம். ஆனால், அவள் எந்த மன்னனையும் இளவரசனையும் மணந்துகொள்ள மறுத்து வந்தாள். கடைசியாக, அரசர், ஒரு நாள், தமக்குத் தெரிந்தும் தெரியாமலும் இருந்த அரசர்கள், இளவரசர்கள், பிரபுக்கள், சீமான்கள் பலரையும் தமது சபைக்கு வரும்படி ஏற்பாடு செய்து, இளவரசி அவர்கள் அனைவரையும்


மங்கையர்க்கரசி

 

 (1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காட்சி – 1 – 14 காட்சி – 15 இடம்: கொலைக்களம் முதல் கொலைஞன்: தாயே! இந்த வழியா தப்பிப் போயிடுங்க. மங்கை: என்னை வெட்டும்படி அல்லவா மஹாராஜாவின் கட்டளை. இரண்டாவது கொலைஞன்: எங்க மஹாராணியா இருக்குற ஒங்க எப்படியம்மா கொல்றது. ஐயோ பாவம்! ஒங்களுக்கா இந்த கெதி வரணும். மங்கை: கொனை விலக்க முடியாத விதியை நினைத்து….வேதனைப்படுவதால் பயன்? கப்பல்


பிள்ளையாருடன் நான்!

 

 வழக்கம்போல் வேகமாக எங்கள் தெரு மரத்தடி பிள்ளையாருக்கு கையை வீசி வணக்கம் போட்டு விட்டு பறப்பவன் இன்று நின்று நிதானமாய் “பிள்ளையாரப்பா நீதாப்பா காப்பத்தணும்”, மனதுக்குள் வேண்டிக்கொண்டு கன்னத்தில் போட்டு விட்டு பிள்ளையாரை பார்த்தேன். அலங்காரத்தில் இருந்தாலும் சரி சாதாரணமாய் இருந்தாலும் சரி முகத்தில் ஒரு புன்னகையை காட்டித்தான் உட்கார்ந்திருப்பார். இன்று ஏனோ கொஞ்சம் அதிகப்படியான் புன்சிரிப்பை காட்டுவது போல் எனக்கு தோன்றீயது. என்ன பிள்ளையாருக்கு அலங்காரம் அதிகமா இருக்கு, மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். சட்டென்று பிள்ளையார்


கண்ணாத்தாவின் காதல் கதை…

 

 ஆத்தா….!!! கண்ணம்மா கொரலே சரியில்ல.. எப்பவும் சிரிச்சுகிட்டே வார கண்ணம்மாவா இது..? “எங்கண்ணு…எஞ்சாமி…! ஏம்புள்ள.. கண்ண கசக்கிட்டு ஓடியாராப்புல…என்ன வெசயம்.? கண்ணம்மா பதில் ஏதுங் கூறாம ஆத்தா மடியில தொப்புன்னு விழுகுறா.. விசிச்சு, விசிச்சு அழுகுற சத்தம் மட்டும் கேக்குது.. “ஏ..புள்ள..எந்திரி… சொல்லு கண்ணு… என்ன நடந்துபோட்டுதுன்னு இப்படி அழுகுறவ..? வெவரமா சொன்னாத்தானே வெளங்கும்…! கண்ணம்மா மொகத்த நிமித்தி பாக்குறா கண்ணாத்தா…!! கண்ணெல்லாம் செவசெவன்னு…மொகமெல்லாம் வீங்கி….! விசுக்குனு எழந்தவ… “ஆத்தா…அந்த கொடுமைய நான் என்னன்னு சொல்ல.. கண்ணாலத்துக்கு


ஒரு வீட்டுக்கு இரண்டு கிழவிகள் அதிகம்

 

 அன்று Herzogin-Luisehaus என்கிற அம் முதியவர்கள் இல்லத்துக்குப் போயிருந்தேன். அவர்களோடு நட்பாகப்பேசி, அவர்களின் குறைகளைக்கேட்டு அவற்றுக்கு ஆவன செய்யவேண்டியதுதான் என் ஊழியம். அவர்களின் பிரச்சனை என் இயலுமைக்கும் மேற்பட்டதென்றால் மேலிடத்துக்குத் தெரிவிக்கவேண்டும். அன்றைய நாளில் நான் கவனிக்க வேண்டியிருந்தவர் எனக்குப் புதியவரல்ல. 72 வயது,. மிகவும் வசதியான அப்பெண்மணியின் பெயர் Monika Ahlemann (விலாங்கு என்று பொருள்) அவர் பாவித்த Mercedes C – Class Luxury Coupe ரக சீருந்து இன்னும் அவர் வீட்டுத்தொழுவத்தில் நிற்கிறதாம்.


குறை நிறை வாழ்க்கை..! – ஒரு பக்க கதை

 

 வெளியே சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்து அமர்ந்திருந்த கணவனைப் பார்த்த வைதேகிக்கு அதிர்ச்சி.! எந்த நேரம் வெளியே சென்று திரும்பி வந்தாலும் முகம் மலர்ச்சியாக இருக்கும். இன்று எங்கு, என்ன நடந்தது…? – உள்ளுக்குள் கேள்வி எழ… “சந்துரு…”மெல்ல அழைத்து அருகில் அமர்ந்தாள். பேசவில்லை. மெளனமாக இருந்தார். “ஏன் ஒரு உம்முன்னு இருக்கீங்க..? “வாஞ்சையாகக் கேட்டு முகத்தை உற்றுப் பார்த்தாள். “ஒ…. ஒன்னுமில்லே…”சந்துரு மெல்ல சொன்னார். குரலில் சுரத்தி இல்லை. “விசயத்தைச் சொல்லுங்க….?” “ரகுராமன் வீட்டுக்குப் போனேன்.”


என்றும் நீ எங்கள் செல்ல மகன்

 

 பார்த்திபனுக்கும், வசந்திக்கும் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. குழந்தை பாக்கியம் கிட்டவில்லை அவர்கள் பல டாக்டர்களிடம் ஆலோசனை கேட்டார்கள் . காரணம் அறிய பல பரி சோதனைகள் செய்ய வேண்டும் செலவாகும் என்றார்கள் . குழந்தை கிடைக்க சிலர் இனத்தவர்கள் சொன்னார்கள் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யுங்கள் நிச்சயம் குழந்தை பிறக்கும் என்று அவர்கள் ஏறி இறங்காத கோவில் கள் இல்லை /எல்லாம் செய்தாகிவிட்டது குழந்தை அவர்களுக்கு பிறக்கவில்லை என்ற மனக்கவலை அவர்களை வாட்டியது ஒரு பிரபல


வேண்டப்படாதவர்கள்

 

 வீட்டின் கொல்லைப்புறம் தாண்டி மரங்களும் செடி கொடிகளும் புதர்களும் அடர்ந்தன. பூமிமேல் உதிர்ந்த இலைகளும் சருகுகளும் காலடியில் புதைந்து புதைந்து ஜமக்காளம் விரித்தாற்போல் பரவிக் கிடந்தன. அந்த இடமெல்லாம் விலையாகி விட்டதாகக் கேள்வி. ஆனால் இன்னும் கட்டிடங்கள் எழும்பவில்லை. இப்போதைக்கு முயற்சி இருப்பதாகவும் தெரியவில்லை. அவர் ஆபீஸ் போனபின் தன் சாப்பாட்டையும் அடுக்குள் காரியங்களையும் முடித்துக்கொண்டு வாசற் கதவைத் தாளிட்டுவிட்டு, உஷை அனேகமாய் இங்கேதான் பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பாள். ஒரு மரத்தின் மேல் சாய்ந்தபடி, புட்களின் அரட்டையைக்