கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2021

90 கதைகள் கிடைத்துள்ளன.

குழாயடி

 

 “அம்புஜம், அடியே அம்புஜம் ” “என்னன்னா, இதோ.. ஏன்னா இப்ப ஏன் காத்தாலே இப்படி கத்துறேல்” “அடியே , நேக்கு ஆபீஸ்க்கு லேட் ஆகிடுச்சுடி, நோக்கு என்ன ,ஆத்துல நன்னா உட்கார்ந்துட்டு இருக்கே, வெளியே போறவாளுக்கு தான் அதோட கஷ்டம் தெரியும் டி, சத்த நேரம் ஆனாலும் இந்த தெரு சனங்க கூடியுரும்டி, அவாளாம் கிளம்புறதுக்குள்ள நான் தெருவவிட்டு வெளியே போனுமோலியோ அதான்டி , சேரி நான் போய்வரேன், நீ தாப்பால போட்டுக்கோடி ஏதும் வேணும்னா ஆபீஸ்க்கு


பெண்

 

 மிதுலாவின் மனம் படபடத்தது காரணம் அன்று தனது மகள் மைமாவின் பத்தாம் ஆண்டு பரீட்சை முடிவுகள் வெளிவரும் நாள்,இரவு முழுவதும் அதையே நினைத்துக் கொண்டு இருந்ததால் தூக்கம் போய் தற்போது தலைவலியும் சேர்ந்துக் கொண்டது,என்னம்மா உனக்கு பிரச்சினை நான் எழுதிய பரீட்சைக்கு முடிவு வரும்,அதற்கு ஏன் நீ இவ்வளவு டென்ஷன் ஆகி உட்கார்ந்து இருக்க என்றாள் மைமா,உனக்கு என்னடி தெரியும் பக்கத்து வீட்டு கவிதா முதல் கொண்டு அனைவரும் உன்னுடைய பரீட்சை முடிவுக்காக தான் காத்து இருக்கார்கள்


பரத் VS சுசிலா

 

 கட்டிக்கொண்டிருந்த மேம்பாலத்தில் வெல்டு வைத்து, நெருப்புப் பூக்களை உதிர்த்துக் கொண்டிருந்தார்கள். வெட்டிப் போட்ட மணல் மேடுகளின் மேல் படகுகளாக அசைந்தசைந்து கார்கள் ஊர்ந்தன. ஓர் ஏராள் அசைவில் பரத்மேல் சரிந்து நிமிர்ந்த சுசிலா, “எத்தனை மணிக்கு வரச் சொன்னார் பரத்…?” “மணியெல்லாம் சொல்லலை. உடனே வாங்கன்னார். அதனாலதான் உனக்கு பனியன் மாத்தக்கூட அவகாசம் கொடுக்க முடியலை….” என்ற பரத், சாலையின் சிக்கலிலிருந்து மீண்டு, கியர் மாற்றி, உதட்டில் சிகரெட் வைத்துக் கொண்டன். லைட்டர் கிளிக்கிப் பற்ற வைத்த


இருபது வருஷங்களும் மூன்று ஆசைகளும்

 

 (1973ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒன்று | இரண்டு | மூன்று அந்தக் கிழமை என்னுடைய அறை நண்பனும் ஏதோ அவசர அலுவலென்று கூறி வீட்டிற்குப் போய்விட்டான். நான் மிகவும் கவன மாகச் சூட்கேசிற்குள் வைத்திருந்த சேர்ட்டை எடுத்து அன்று அணிந்து கொண்டேன். கண்ணாடியின் முன்பாக நின்று என்னைப் பல கோணங்களிலும் பார்த்து என்னை நானே ஆசையோடு மோகித்துக்கொண்டேன். இவ்வளவு காலமும் இப்படி ஆடை அணியாதிருந்த காரணத்தினால் எவ்வளவு


மரத்தடிக் கடவுள்

 

 (1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வா மகனே, இப்படி வா! அடடா! இந்த மழையிலே இப்படித் தவிக்கிறாயே! பாவம்! ஆமாம், இதுதான் என்ன உக்கிரமான மழை!) நகரத்தை நரகமாக்கும் மழை அல்லவா இது? ஜல தாரையை ஒளித்து நவநாகரிக நகரத்தை நிர்மாணிக்கிறான் மனிதன். மனிதன் ஒளித்ததை இந்த மழை அம்பலமாக்கிவிடுகிறதே! அடேயப்பா! இந்த மழையின் சர வீச்சிலே வேதனை தாளாத மண்ணாந்தை மாதிரி கட்டிடங் களெல்லாந்தான் எப்படி நெளிகின்றன!


பாற் கஞ்சி

 

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “ராமு, என் ராசவன்னா குடிச்சுடுவாய், எங்கே நான் கண்ணை மூடிக்கொள்கிறேன். குடிச்சிடு பார்க்கலாம். நாளைக்குப் பாற் கஞ்சி…” “சும்மாப்போம்மா. நாளைக்கு நாளைக்கென்று எத்தனை நாளா ஏச்சுப்பிட்டாய். என்ன தான் சொல்லேன். கூழ் குடிக்க மாட்டேம்மா” “இன்னும் எத்தனை நாள் பஞ்சமடா? வயலிலே நெல் முத்தி விளைஞ்சு வருது. ஒனக்கு வேணாம்னா பாற்கஞ்சி தாரனே” “கூழைப் பார்த்தாலே வவுத்தைப் புரட்டு தம்மா. முடியா துன்னா


மீசை வைத்த கேயிஷா

 

 ஒரு கணவன் மனைவி. எல்லாக் காதலர்களையும்போல, உலகின் அத்தனை காதல்களையும்விட ஒரு படி அதிகமாகக் காதலித்துக் கல்யாணம் முடித்த கணவன் மனைவி. திருமணமாகி ஐந்து வருடங்களாகின்றன. இருவருக்கும் வேலை. வேலை முடிந்து வீடு. வந்ததும் ஆளாளுக்குக் கையில் ஒரு ஐபாட். யார் யாருடனோ சட்டிங். எதுவெதற்கோ சிரிப்பு. இருவருக்கும் பொதுவாக வரவேற்பறையில் ஓடிக்கொண்டிருக்கும் டிவி. இவர்கள் தமக்கிடையில் மனம்விட்டுச் சிரிப்பதும் பேசுவதும் அவ்வப்போதும் சிணுங்கும் தொலைபேசி அழைப்புகளோடுதான். மற்றும்படி டிவியின் விளம்பர இடைவேளைகளில் “மதியம் என்ன சாப்பிட்டாய்?”,


காதல் சடுகுடு

 

 அவள் வாழ்க்கை நிஜங்களை வார்த்தைகளில் வடித்து வரிகளை நிரப்பிக் கொண்டிருந்தாள். அவளின் இரண்டாவது மகள் அவளிடம் சென்று என்ன மம்மி எழுதிறீங்க? எனக்கு உம்மாக்குடு! ………. கின்ர காடின்ல பட்டபிளை படம் கீறி கலர் பண்ணிக்கொண்டு வரச்சொல்லி மிஸ் சொன்னவ கீறித்தாறீங்களா மம்….! மழலை மொழி பேசும் அந்தச் சின்னவளின் வயது நாலு. படத்தைக் கீறிக் கொடுத்தவுடன் அவள் தாயின் கன்னத்தில் முத்தத்தை உதிர்த்துவிட்டு அவள் தன் அறைக்குப் போய்விட்டாள். அவள் தாயின் எண்ணங்கள் மட்டும் வண்ணத்துப்


என்னைப் பார் காய்ச்சல் வரும்

 

 பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 இஸ்லாமிய நண்பர் கொடுத்த நீரை எடுத்துக் கொண்டு பெரியப்பா நிஷாவின் அறைக்குச் சென்றார். அந்த நீரை வழக்கமாகக் குடிக்கக் கொடுக்கப்படும் நீராக நிஷாவிடம் பெரியப்பா கொடுத்தார். அதைக் குடித்த மறுகணமே நிஷாவின் உடலில் ஒரு நடுக்கம் ஏற்பட்டு மொத்த உடலும் சிலிர்த்துள்ளது.‌ இதைக் கண்ட பெரியப்பா திடுக்கிட்டுப் போனார். பிறகு உடல் சாதாரண நிலையை அடைந்ததும், பெரியப்பா அந்த நீரைக்கொண்டு நிஷாவின் முகத்தைக் கழுவினார். அதன்


பர்ஸன்டேஜ்!

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சர்மா கடத்த அரை மணி நேரமாகத் தத்தளித்துக் கொண்டிருந்தார். மானேஜர் நல்ல மூடில் இருப்பதாக அவர் அறையிலிருந்து வந்த ‘ஓஹோ …ஹோ..” என்ற சிரிப்பொலி தெரிவித்தது. உள்ளே பேசிக் கொண்டிருக்கும் ஆசாமிகள் வெளியேறியதும் போய் விஷயத்தைச் சொல்லி விடவேண்டும். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா? இத்தனைக்கும் அவர் யார்? எத்தனை வருஷ சர்வீஸ் அவருக்கு நேற்றைக்கு வத்தவனெல்லாம் அவரைக் கிள்ளுக் கீரையாக