கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2022

70 கதைகள் கிடைத்துள்ளன.

கரிகாலனும் சேரமானும்

 

 (1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கரிகாலன் என்பவன் தலைசிறந்த சோழ நாட்டு மன்னன். இவன் இளமையில் மிகுந்த அல்லலை அடைந்தான். தொல்லைகளால் துய ருற்றான். ஆனால், முயற்சியை இழக்கவில்லை. மேலும் மேலும் முயற்சியைக் கைக்கொண்டு முன்னேற்றம் அடைந்தான். சிறையிலிட்டுப் பெருந்தீக்கொண்டு இவனைக் கொல்லுதற்கு இவன் பங்காளிகள் சூழ்ச்சி செய்தனர். அத்துன்பமும் இவனை நெருங்கவில்லை. வயது நிரம்பிக் கட்டிளைஞனான இவனுக்கு ஓர் ஆவல் உண்டாயிற்று. அஃதாவது, தண் தமிழ் நாடே


புதர் மண்டியிருந்த மன வீடு

 

 கதை கேட்க:https://www.youtube.com/watch?v=Kt7nRv6CLvs ஒரு மீற்றர் இடைவெளியில், கால் கடுக்க அரை மணி நேரமாக் காத்திருந்து வாங்கி வந்திருந்த பொருள்கள் அவளின் குளிரூட்டியை வண்ண வண்ண நிறங்களில் அலங்கரித்திருந்தன. கடையில் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்க நேர்ந்தபோதல்லாம், காந்தத்தின் ஒத்த முனைகள் ஒன்றையொன்று தள்ளிவிட்டது போல ஆளுக்கு ஆள் விலகியோடியதையும், ஏதோ ஒரு கள்ள வேலை செய்கிற மாதிரி அக்கம் பக்கம் பார்த்துப் பார்த்துப் பொருள்களைக் கூடையில் போட்டதையும் அவை அவளுக்கு நினைவூட்டின. “ம்ம், ஆளுக்காள் அவையவைக்குப் பிடிச்ச திரையளோடை


அவனுக்கு மன்மத மயக்கம் அவளுக்குக் கண்மத மயக்கம்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜான்சிராணி லட்சுமிபாய் மிகவும் அழகாக இருப்பாளாம். அவள் முகம் உருண்டையாகவும், கண்கள் பெரிதாகவும், பேரொளி மிக்கதாகவும் இருக்குமாம். ஜான்சிராணியைப் போலவே, பூங்கோதை என்ப வளும் அழகாகத்தான் இருந்தாள். அவளது முகமும் அம்பு விழிகளும் அப்படித்தான் இருந்தன. அந்த ஜான்சிராணி, நடுத்தர உயரமுடையவளாம். பூங்கோதையும் அப்படித்தான் இருந்தாள். இந்தியப் பெண்கள் கல்வி கற்று முன்னேறவும், பூவும் பொட்டுமிழந்து வேதனைப்படும் விதவைகளின் துயர் தீரவும், தம்


விடிவு வரும்

 

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தலையைச் சொறிந்து கொண்டாள் ஈஸ்வரி. எவ்வளவு நேரந்தான் இப்படியே இருந்து, இருந்து யோசிக்க முடியும். எவ்வளவு நேரந்தான் மனத்தில் நினைந்து நினைந்து ஏங்கி, ஏங்கி அழமுடியும். எவ்வளவு நேரந்தான் வாசற்படிக்கட்டில் ஒற்றைக்காலை நிமிர்த்தி ஊன்றி, ஒரு கையை அதன் மேல் நீட்டி, தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கமுடியும். எவ்வளவு நேரந்தான் அந்த மங்கல் மாலைப் பொழுது தொடர்ந்து நீடிக்க முடியும். உயிர்துடிக்கும் மாலை


டீச்சர்

 

 “ஹெல்மெட் போட்டுக்கோ, வண்டியை ஸ்ட்ராட் பண்ணறதுக்கு முன்னாடி ஸ்டேண்டை எடுத்துடு” அம்மா மனப்பாடமாய் ஒப்புவிப்பது போல் இருந்தது பிருந்தாவுக்கு. அம்மா நீ டீச்சர் வேலையில இருந்து ரிட்டையர்டாயிட்டாலும், இன்னும் டீச்சராவே இருக்கே. நான் எப்பவும் கரெக்டா இருப்பேன்னு உனக்கு தெரியாதா? கொஞ்சலாய் அம்மாவிடம் சொல்லி விட்டு அம்மா சொன்ன எல்லா வேலை களையும் செய்து விட்டே வண்டியை எடுத்தாள். மகள் ஸ்கூட்டியில் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த யசோதாவுக்கு மகள் சொன்ன “எல்லாம் கரெக்டா செய்வேன்” என்று சொன்னது மனதில்


புரியாத கணக்கு…

 

 இரண்டு முறை விடாமல் அடித்த அழைப்பு மணி நித்யாவுக்கு எரிச்சலூட்டியது.. ‘இந்த பலராமனுக்கு நேரம் காலம் கெடையாது…சரியான பிடுங்கல்.’ அழைப்பு மணியை வைத்தே யாரென்று சொல்லிவிடலாம்.. பலராமன் தான்..!!!! வேறுயார் மதியம் மூன்று மணிக்கு விடாமல் காலிங்பெல்லை அமுக்க முடியும்..?? ‘இருங்க..பல்ராம்..எத்தன தடவ சொல்லியிருக்கேன் காலிங்பெல் மேலேயே கைவச்சிட்டு.. ஒருதடவ அமுக்கிட்டு எடுக்கத் தெரியாது…??” “பாப்பாவா…?? கோவிச்சுக்காத…எனக்கு அதெல்லாம் புரியவே மாட்டேங்குது.!! அம்மா இல்ல…??? வரச் சொல்லு…!!” “பல்ராம்…அம்மா தூங்குறாங்க..இரண்டு நாளா உடம்பே சரியில்ல…தொந்தரவு பண்ணாத…” “என்ன


வழித்தோன்றல்

 

 மழை நசநசத்துத் தூறிக்கொண்டிருந்தது. மேற்கத்தியத் தோற்கருவிகளின் ஒட்டுமொத்த முழக்கம் போல இடி முழங்கிற்று. அடர்த்தியாய் விரவியிருந்த இருள் நடுவே வேர் பிடித்து ஓடிய ஒரே ஒரு மின்னலில், அந்தத் தெருவில் எல்லாரும் விநாடியில் ஆயிரத்தில் ஒருபாகம் பகலில் இருந்தார்கள். சந்திரமோகன் அந்த மழையில் ரப்பர் செருப்புகள் நடந்தான். தெப்பலாய் நனைந்தும் நிதானமாய் நடந்தான். வீடு வந்ததும் வெளிக்கதவு திறந்து நுழைந்தான். விளக்கு எதுவுமே போட்டிருக்கவில்லை. படுக்கை அறையில் எட்டிப்பார்த்தான். மெத்தையில் போர்வை போர்த்தியபடி மனைவியும், குழந்தையும் படுத்திருப்பது


தண்டனை..!

 

 இருபது வருடங்களுக்குப் பிறகு பிள்ளையைப் பார்க்க மனசுக்குப் பரவசமாக இருந்தது அன்னபூரணிக்கு. அதே சமயம் அவன் ஒட்டி, உலர்ந்து, தாடி மீசையுமாய் இருப்பதைப் பார்க்க…. துக்கம் வந்து தொண்டையை அடைத்தது. “அப்பாடி.. ! ரோசம் !” என்று மலைத்து உள்ளுக்குள் பெருமூச்சு விட்டாள்.. அப்படியே கண்களை அகல விரித்துக் கடந்த காலம் சென்றாள். அப்போது…. சுந்தர் பத்தாம் வகுப்பு முடித்த வயசு பதினாறு பையன். படிப்பில் தோல்வி என்பதால் மேற்கொண்டு படிக்க இயலாமல் துண்டு விழுந்த பாடத்தை


தனிஷ்டா பஞ்சமி பஞ்சமி பேய்

 

 முகவுரை மனிதனாகப் பிறந்தால் எல்லாருக்குமே பொதுவாக பேய்களை பற்றி ஒரு திகில் இருக்கும். பேய்களை பற்றி பேசினாலே கண்களை மூடிக் கொள்பவர்கள் நிறையப் பேர். பயமில்லாதது போல் காட்டிக் கொண்டு, பயந்தாங்கொள்ளியாக வீரவேஷம் போடுபவர்கள் பேய்கள் உறங்குவதில்லையாம் என்ற்று சொல்லுகிறார்கள். தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும் வரை அலைந்தபடியே இருக்குமாம். அதுவும் கொலை பட்ட அல்லது தற் கொலை செய்தவரின் ஆவி மறு பிறவி எடுக்கும் மட்டம வரை ஆளைந்து கொண் திரியுமாம். பேய்கள் அல்லது ஆவிகள்


வாஷிங்டனில் திருமணம்

 

 (1999ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 2 | அத்தியாயம் 3 | அத்தியாயம் 4 “இதுதான் வாஷிங்டன் டி.ஸி.” என்றான் பஞ்சு. “அதென்னடா டி.ஸி.ஏ.ஸி.ன்னு?… வாஷிங்டன் என்று சொன்னால் போதாதோ?” என்று கேட்டார் மாமா. “ஒரு வேளை இங்கெல்லாம் டி.ஸி. கரென்ட்டாயிருக்கும்” என்றார் சாம்பசிவ சாஸ்திரிகள். அம்மாஞ்சி வாத்தியாருக்குச் சிரிப்பு தாங்கவில்லை. “சாஸ்திரிகள்! உமக்குத் தெரியாவிட்டால் அசட்டுப் பிசட்டென்று உளறாதேயும். டி.ஸி. என்றால் அது இனிஷியலய்யா. இது