நெஞ்சம் மறக்குமா?

0
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 10, 2024
பார்வையிட்டோர்: 165 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நேர்காணல் நடைபெற இருந்த எல்லா நாற்காலிகளிலும் வந்தவர்கள் உட்கார்ந்திருக்க, உட்கார இடம் இல்லாமல் கையில் கோப்புடன் நின்றிந்தான் மோகன். எதிரே இளம் பெண்கள் பலர் குழுமி ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

“நமக்கு எங்கே இந்த நிறுவனத்திலே வேலை கிடைக்கப் போகுது?” நம்பிக்கை இல்லை அவனுக்கு. தண்ணீர் இல்லாச் செடி போல அவன் தன்னம்பிக்கை தளர்ந்திருந்தது கையிலிருந்த பட்டங்களைப் புரட்டினான். எல்லாம் அவனைப் பார்த்துச் சிரித்தன -பி.எஸ்.சி. யில் தங்கப் பதக்கம்… கல்லூரி நாடகத்தில் சிறப்பாக நடித்ததற்கு முதல் பரிசு வாங்கிய நற் சான்று இதழ்,விளையாட்டுகளில் வாங்கிய சான்றிதழ்கள் என்று திறமைகள் அவனிடம் குவிந்திருந்தன என்பதை அவனின் அப்பட்டங்கள் பறை சாற்றின.

“சாந்தாராம்” என்று கடைநிலை ஊழியர் பெயர் சொல்லி அழைத்ததும், உட்கார்ந்திருந்த இளைஞன் ஒருவன் உள்ளே போனதும், அந்த இடத்தில் போய் அமர்ந்தான் மோகன்.

“இதப் பாரு, மோகன்”… இதோ நான் ஓய்வு பெற்று நான்காண்டு ஆச்சு: உன் தங்கச்சி தாவணிக்குப் மாறிப் பல நாள் ஆச்சு, உனக்கு இன்னும் வேலை கிடைச்ச பாடில்லை, இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் இப்படியே நாளை ஓட்டறது!” சதாசிவம் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சொன்னார்;

“அப்பா!… நானும் ஏறாத இடம் இல்ல, போகாத நிறுவனம் இல்ல; யாரு வேலை கொடுக்கிறா, எவன் நற் சான்றிதழ்களைப் பார்க்கிறான்.” அப்பா எதிரே சரி சமமாய் முகம் கொடுத்துப் பேசிவிட்டு, “அய்யோ… அப்பாக்கிட்டே அப்படிப் பேசியிருக்கக் கூடாது” என வருத்தப்பட்டான்.

“மோகன்”… என்று கடைநிலை ஊழியர் பெயர் சொல்லி அழைத்ததும் நினைவு திரும்ப உள்ளே ஓடினான். குளிர்பதன அறை குளிர் ஊட்டியது அவனை.

“உட்காருங்க…” அணிந்திருந்த கண்ணாடியை உயர்த்திக் கொண்டே சொன்னார் அந்த நிறுவனத்தின் மேலாளர்.

“உங்க பேரு”?

“மோகன்”

“நற் சான்றிதழ்களைக் கொடுங்க, பார்க்கலாம்” எழுந்து நீட்டினான். ஒவ்வொன்றாகப் புரட்டியவரின் விழிகள் வியப்பால் உயர்ந்தன அதைப் பார்த்த மோகனின் மனசுக்குள் மகிழ்ச்சி ஒரு விநாடி பொசுக்கென்று தோன்றி மறைந்தது.

“ஐஸ்வரியாராய்… தெரியுமா? உங்களுக்கு”- திடீரென இப்படிக் கேட்பார் என மோகன் எதிர்பார்க்கவில்லை.

“தெரியும், ஐயா”… முன்னாள் உலக அழகிதானே…?”

“ஆமாம் அவங்க நடிச்ச முதல் படம் என்ன தெரியுமா”…

“மன்னியுங்கள், ஐயா! தெரியாது, படிப்பப் பத்திக் கேளுங்க. விளையாட்டைப் பத்திக் கேளுங்க… இல்ல, வேறு செய்திகளைக் கேளுங்க அதைவிட்டுட்டு இன்னைக்குப் பல இலட்சம் இளைஞர்களைக் கெடுக்கிற திரைப் படத்தைப் பற்றிக் கேட்காதீங்க, ஐயா: எனக்குத் தெரியாது.”

“தெரியாதுன்னாக் கூட எதையும் தெரிஞ்க வச்சிக்கிறது நல்லது, இல்லையா…?”

“எல்லோருக்கும்.. எல்லாம் தெரியணும்ன்னு அவசியமா? ஐயா!”

“நல்லாப் பேசறீங்க… சரி, கடிதம் அனுப்புவோம், நீங்க போகலாம்…” அவர் சொன்னதும் உட்கார்ந்திருந்த நாற்காபியை அழுத்தித் தள்ளிவிட்டு எழுந்து, தள்ளு கதவை வெறுப்பாய்த் தள்ளிய படி வெளியேறினான் மோகன்.

“ஒரு நிமிடம் நில்லுப்பா!” யாரோ பேசிய குரல் கேட்டுத் திரும்பினான் மோகன். வெள்ளை உடையில் இருந்தார் அந்த ஆள்.

“என்ன ஐயா! கூப்பிட்டிங்களா…?”

“ஆமாம்… நான்தான் கூப்பிட்டேன், நீ சதாசிவத்தின் பையன்தானே? “நெற்றியைச் கருக்கிக் கேட்டார்.

“எங்க… அப்பாவைத் தெரியுமா! ஐயா?”

“ம்… நானும் அவரும் வகுப்புத் தோழர்கள்;” என்றவர், அவன் தோளில் கைபோட்டபடிச் சிற்றுண்டிச் சாலைக்கு அழைத்துப் போனார்.

“இங்க… நீங்க வேலை செய்யிறீங்களா? ஐயா!

“ஆமாம் மேலாளராக இருக்கேன் “என்றவர்,” இரண்டு தேநீர் போடுப்பா” என்று தேநீருக்குச் சொன்னார். “சரி, நேர்காணலிலே என்ன சொன்னாங்க…: !”

“கடிதம் அனுப்பறாங்களாம்”

“தம்பி! அந்த வேலைக்குப் பணம் வாங்கிக்கிட்டு ஆள் போட்ட்ச்சு.. சும்மாக் கண் துடைப்புக்கு நேர் காணல் நடத்தறாங்க. உங்க அப்பாக்கிட்ட சொன்னேனே, என்னை வந்து பார்க்கச் சொல்லி!வரபியே!
போகட்டும், விடு !இந்தா, என் வீட்டு முகவரி, வச்சிக்க அஞ்சு மணிக்கு வீட்டுக்கு வா, எழுத்தர்பதவி இந்த மாதக் கடைசியில காலியாகுது, அதுக்கு ஏற்பாடு பண்ணித் தர்றேன்” அவன் கிசுகிசுத்தார், தேநீர் வந்தது! உற்சாகத்துடன் குடித்தான் மோகன்.

“உங்க அப்பாவை… நிரம்பக் கேட்டதாச் சொல்லு. மறக்காமல் வந்துடு” சொல்லிவிட்டு எதிரே வந்து நின்ற அலுவலக வண்டியை நோக்கி ஓடியவரைத் திகைப்புடன் பார்த்தான் மோகன்.

“கோதண்டராமன்” என்ற பெயர்ப்பலகை தொங்கியது. வீடு பெரிய மாளிகையாகக் காட்சியளிக்க “வாசலில், “நாய்கள் எச்சரிக்கை கண்களில் பட்டதும் பயந்துகொண்டே கதவைத் திறந்து கொண்டு உள்ளே
நுழைந்ததும், கட்டியிருந்த நாய் துள்ளிக் குதித்துக் குரைத்தது. “

யாருப்பா அது… ?” கோதண்டராமன் கைபியைச் சரி உள் கதவைத் திறந்தார்.

“அட மோகன் !… வா, உள்ளே வா!” மடக்கிச் கவரில் நாற்காலியை விரித்துப் போட்டு அமரச் சொன்னார். கூடத்தில் தொங்கிய திரைச் சீலை காற்றில் படபடத்து அவன் மேல் வந்து மோத நாற்காலியைநகர்த்தித் தள்ளிப் போட்டு உட்கார்ந்தான்.

“என்னப்பா… சாப்பிடறே…”

“பரவாயில்லை, ஐயா”

“சிறிது காபி மட்டும் சாப்பிடு…” சொல்லிவிட்டு உள்ளே போனார், பார்வையைச் கழல விட்டான். விதம் விதமான பொருள்கள், நவீன யுகத்தில் பயன்படக் கூடிய வசதியான சாதனங்கள் எல்லாம் உரிய இடத்தில் அணி வகுத்து இருந்த அழகைப் பார்த்து வியந்தான்

அப்போது தான் தற்செயலாய் அறை ஒன்றில் மாட்டப் பட்டிருந்த திருமணப் புகைப் படம் அவன் கண்ணில் பட்டது அதைச் சற்று உற்றுப் பார்த்தான்; அதிர்ச்சியாய் இருந்தது. யாரோ ஒருவனோடு மாலையுடன் சிரித்த முகமாய் மணக் கோலத்தில் அவன் நேசித்த பிரபா.

“பிரபா..! உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா!” அவனால் அதைச் சீரணிக்க முடியவில்லை.

கல்லூரியில் படித்த போது தான் பிரபா அவனுக்கு அறிமுகம் ஆனாள். பிரபாவின் சுவைக்கும், மோகனின் சுவைக்கும் சில கருத்துகளில் ஒத்துப் போனதால் அவர்கள் மனமும் ஒத்துப் போகக் காரணமானது..

“எனக்குப் திருப் பள்ளி எழுச்சின்னா உயிர், தினமும் காலையில் அதைக் கேட்காமல் முழிப்பு வராது. உங்களுக்கு…

“எனக்குச் சிவப்பு வண்ணம்னா நிரம்ப விருப்பம். உனக்குச் சிவப்பு வண்ணம் பிடிக்குமா…”

கடைக் கண் பார்வை பார்த்துச் சொன்ன பிரபாவை எப்படியும் அடைந்தே தீரணும் என்ற மன உறுதி அப்போது தான் அவனுள் எழுந்தது. “ஏன்… மோகன், இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நாம காதலர்களாப் பூங்கா, கடற் கரைன்னு கத்தறது? எங்க அப்பா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றார், நீங்க இப்ப ஒரு வேலையில் இருந்தா அப்பாக்கிட்ட சொல்பி அனுமதி வாங்குவேன்.”

“என்ன பண்ணச் சொல்றே, பிரபா, வேலை கிடைக்க மாட்டேங்குதே”

“இப்ப…அப்பாக் கிட்ட சொல்றேன்னு வையுங்க… பையன் என்ன வேலை பார்க்கிறார்ன்னு கேட்பார், என்ன சொல்றது…? அதுக்குப் பிறகு ஒரு வேளை கஞ்சி ஊத்துவானான்னு கேட்பார் அதுக்குப் பதில் என்ன சொல்ல முடியும்… சிறிது யோசிச்கப் பாருங்க”

“இதுலே யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு? பிரபா! நிரந்தர வேலை ஒன்னு கிடைச்சாத் தான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நான் ஒரு முடிவோட இருக்டிகன். அது வரைக்கும் உங்க அப்பா கிட்டே ஏதாவது ஒரு காரணத்தச்சொல்லி நம் கல்யாணத்தை நீ தள்ளிப் போட முடியாதா?”

“இல்லை மோகன்! அதுக்கு வாய்ப்பே இல்ல… எனக்காக உங்க கொள்கைகளை நீங்க மாத்திக்கக் கூடாதா, தயவுசெய்து.

“முடியாது…! முடியாது ! என்னாலே மாத்திக்க முடியாது!” சத்தம் போட்டுக் கத்தினான்.

“தம்பி… என்னப்பா ஆச்சு…?” கோதண்டராமன் ஓடி வந்து கேட்டார். கையில் காபித் தட்டு இருந்தது.

“ஒண்ணுமில்லை! ஐயா!… சமாளித்த படித் தளர்ந்திருந்த மனசையும், உடலையும் சற்று நிமிர்த்திக் கொண்டவன் அவர் கொடுத்த காபியை வாங்கிச் கவைக்கத் தொடங்கினான்.”

“காபி.. எப்படிப்பா இருக்கு… நானே போட்டு எடுத்து வந்தேன்” என் சம்சாரம் மக வீட்டுக்குப் போயிருக்கா! எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன், அதோ அந்தக் கல்யாணப் புகைப் படத்திலே இருக்கிறது என் பையன், வங்கியிலே இருக்கான், அது மருமக, பிரபா பக்கத்துத் தெருப் பள்ளியிலே ஆசிரியையா இருக்கா.

“அப்படியா ஐயா… ?” கலங்கிய கண்களைக் கைக் குட்டை வைத்து மறைத்தான்.

“அப்ப… நான் புறப்படறேன், ஐயா…” என்று மோகன் ஏழமுயன்றான்

“அடே… நீ வந்த காரியத்தை மறந்துட்டேன், பாரு. உனக்கு வேலைக்குச் சொல்பிட்டேன். கடிதம் போடுவாங்க. அதுலே என்ன, பணம் சிறிது எதிர் பார்க்கறாங்க… அப்பாக் கிட்டே சொல்லு, வங்கியில எதுவும் பணம் போட்டிருப்பார்!” மிக இயல்பாகச் சொன்னார்.

“சரி ஐயா!… அவரிடம் சொல்லி விட்டு வெளியே வந்தான் வாசபில் மூன்று சக்கர வண்டி ஒன்று வந்து நின்றது.”.

“தாத்தா! தாத்தா!.. பக்கத்து வகுப்புப் பையன் என் காலணியைப் பிச்சிட்டான்.” கையில் தொங்கிய காலணியோடு ஓடி வந்த சிறுவன், மோகனை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

“சரி… சரி… தச்கக்கலாம்! மேசையில காபி வச்சிருக்கேன், குடிச்சிட்டு அம்மா வர்றத்துக்குள்ள வீட்டுப் பாடத்தை எழுது” என்றார்.

“என் பேரன், மூன்றாம் வகுப்பிலே படிக்கிறான், எனக்குக் கூடப் பயப்பட மாட்டான். அவங்க அம்மாவுக்கு அப்படிப் பயப்படுவான்” என்று சொன்ன கோதண்டராமனிடம் காபியை உறிஞ்சிக் கொண்டே, “யாரு தாத்தா இவரு…? என்றான்.

“மாமாடா”… கோதண்டராமன் சொன்னார்.

“மாமாவா”… அப்ப எனக்கு இனிப்பு மிட்டாய் வாங்கித் தர்றீங்களா…” என்று மோகனின் காலைக் கட்டிக் கொண்டான் சிறுவன்.

“உன் பேரு என்னன்னு சொல்லு… உனக்கு இனிப்புமிட்டாய் வாங்கித் தர்றேன்” என்றபடிக் குனிந்து அவன் தோளை ஆசையாய்த் தொட்டான்

“டேய், மாமா கேட்கறார்ல்ல… சொல்லு” கோதண்டராமன் தன் பேரனை அதட்டியதும், மழலைக் குரலில் தொண்டையின் அடிப் பாகத்திபிருந்து வெளிவரச் கத்த உச்சரிப்பில் சொன்னான் “மோகன்.”

– நாகை எம்.பி.அழகியநாதன், மன்னார்குடி

– மனங்கவர் மலர்கள் , முதற் பதிப்பு: ஜூன் 2005, சிங்கைத் தமிழ்ச் செல்வம், சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *