கொலைகாரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 5, 2023
பார்வையிட்டோர்: 1,504 
 

தானே புயல் பிரிக்க எண்ணினாலும் பிரிக்க முடியாத ஜன்னல் வைத்துப் பின்னப்பட்ட அழகான கூட்டை, அன்பரசின் வீட்டின் மாடியில் சிட்டுக்கள் கட்டிருந்தன. அன்பரசின் வீட்டை எச்சங்களால் எப்போதும் அலங்காரம் செய்து வைப்பது சிட்டுகளின் வழக்கம். வேலைகள் முடித்து வீட்டுக்குத் திரும்பி கொண்டிருந்தான் அன்பரசு. வீட்டு வாசலில் கிடந்த எச்சங்களை மிதித்துவிட்டதால், ஒத்தக்காலைத் தூக்கியவாறு அண்ணாந்து பார்த்தான். மறுபடியும், குருவிகள் கூடு கட்டிருந்தது.

குருவிகள் எச்சத்தால் வாசலை அசிங்கம் செய்கிறது என்பதற்காகப் போன மாசம்தான்! கூடுகளை அகற்றி இருந்தான். “ச்சே, ச்சே” “இதே எழவா இருக்கே”..! என்று அலுத்துக்கொண்டே.. “அம்பிகா…! தண்ணீ கொண்டு வாடீ !” என்று மனைவியை அழைத்தான்.

‘முதல்ல…இந்த கூடுகளை கலைக்கனும்’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

“பார்த்து வரக் கூடாதா?” என்று ஒரு வாளி தண்ணீரை அவன் காலில் கொட்டினாள்.

“போ டீ. இவ வேரே!”

கை, கால் கழுகிட்டு வந்து சாப்பிட அழைத்தாள் .

“ம்…ம் சரி..!” என்றான்.

வீட்டு வேலைகளெல்லாம் முடித்து கடிகாரத்தைப் பார்த்தாள். ஒன்பதைத் தாண்டி இருந்தது.

அன்பரசு,அம்பிகாவின் ஒரே இளவரசன் இன்பா, ஏழாம் வகுப்பு படித்துவருகிறான். வீட்டுப் பாடம் முடித்துவிட்டு, மொபைல்கேம் விளையாடி கொண்டிருந்தான்.

“டேய்..! டைம் என்ன ஆச்சி தெரியுமா? இன்னும், என்னா மொபைல் கையுமா இருக்கே? மொபைலே வச்சிட்டு வரப் போறியா இல்லையா?” என்று மகனை அழைத்தாள். “கொஞ்ச நேரம்மா! ப்ளிஸ்” என்று கெஞ்சி கேட்டான். “நாளைக்கு ஓ ஸ்கூலுக்கு வந்து சொல்ரேன்” என்பது போல் சப்தம் கேட்டது.. .

“மோபைல் வச்சிட்டேன் ம்மா!”.

அவள் பக்கத்தில் படுத்துக்கொண்டான்.

”சாமியே வேண்டிகிட்டு, தூங்கு. காலையில் ஸ்கூல் போகனும்லே” என்றாள்.

“சரி மா!” என்றான்.

மரம் வெட்டும் தொழில் செய்து வரும் அன்பரசு அசதியில் படுக்கைக்குச் சென்றான்.

இருள் கவ்விய இரவைக் கொஞ்சம், கொஞ்சமாக விழுங்கி, கதிரவன் வெளிவரத் தொடங்கியது.

கணவனை வேலைக்கு அனுப்பிவிட்டு, சமையல் வேளைகளை முடித்து, பள்ளிக்கூடம் செல்லத் தயாரானான மகனிடம், “நல்லா படிக்கனும், எல்லாத்தையும் சாப்பிடனும்” என்று டாட்டா காட்டி அனுப்பி வைத்தாள்.

பள்ளிக்கூடம் செல்லும் வழியில், தனது தந்தை ஆணி வேரோடு மரங்களை வெட்டி எறியும் காட்சிகளை நண்பர்களோடு பார்த்துக் கொண்டே சென்றான் .

காடு,மரங்களை அழித்து மனைகளாக மாற்றிய சந்தோஷத்தில் மகன் ஆசையாகச் சாப்பிடும் கேக்குகளை வாங்கி வீடு வந்துச் சேர்ந்தான்..

“ஹனி கேக் இருக்கு சாப்பிடு”.

”வேண்டாம் பா”..

”ஏன்?”

“இது வாங்க ஏது பணம் ப்பா?”

அன்பரசை நிலைகுலையச் செய்தான்.

“ஏன்னாடா புதுசா கேட்குரே? இன்னைக்கு மரங்கள் வெட்டி சம்பாதிச்சப் பணத்தில் வாங்கினது”.

“இல்லை!. இது பல உயிர்களை அழிச்சி, அந்தப் பணத்தில் வாங்கினக் கேக் எனக்கு வேண்டாம். நீயே சாப்பிடு” என்று தட்டி விட்டான்.

சற்று நேரம் அதிர்ச்சியில் உயிர் நின்று மீண்டும் வந்தது போல் இருந்தது அவனுக்கு. வியர்வைத்துளிகள் எட்டிப்பார்க்கத் தொடங்கின.

“டேய் என்ன சொல்ரே?” என்று வினவினான்.

சமையலறையிலிருந்த அம்பிகா “என்னாடா சொன்னேன்னு..?” அவனை அடிக்கக் கையை ஓங்கி வந்தாள்..

“ஏய் சும்மா இரு. அவன் சின்ன பையன். ஏதோ தெரியாம பேசுரான்.”

வடிந்த வியர்வைகளைத் தொடைத்துக் கொண்டே மனைவியைச் சமாதானம் செய்தான்.

“நான் ஒன்னும் தெரியாமல் சொல்லலை. தெரிஞ்சிதான் சொல்றேன்”.” என்று தனது கேள்விக்கு வலுக் கொடுத்தான் இன்பா .

“டேய்!. கொலை என்றால் என்னான்னு தெரியுமா? ஒரு உயிரை கொன்றால் தான் டா கொலை. ஓ.. அப்பா…! எந்த உயிரையும் கொலைச் செய்யலை. அவர் காலைலேண்டு வேர்வை வேக்க, வேக்க மரங்களை வெட்டி அதுல சம்பாதிச்சி, ஹனி கேக்கை வாங்கி வந்தாரு டா. இதைப் போய் கொலை அப்படி, இப்படி சொல்ரே” என்று பதறினாள்.

“மரத்துக்கு உயிர் இல்லையாம்மா?” என்று கேள்வியைத் தொடர்ந்தான்.

அன்பரசு, அம்பிகா ஒரு கணம் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். தங்கம் விலையைப் போன்று பீ,பி உச்சத்தைத் தொட்டது. மகனின் கேள்வி புரியாமல் ”என்னடா சொல்றே.! ஒன்னும் புரியல!” என்றாள்.

”இன்னைக்கு எங்க பள்ளிக்கூடத்தில் மரம் நடுதல் விழாவில்: சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள்…இந்தத் திருக்குறளுக்கு எங்க மிஸ் விளக்கம் சொன்னாங்க மா.

நமக்குத் தேவையான பணங்கள் கிடைத்தாலும், நாம் அடுத்தவருக்கு துன்பம் செய்யக் கூடாதாம். அதான், நல்லவர்களின் பண்பாம்.

அப்படி பார்த்தா! மரங்கள் நாம் உயிர் வாழ உதவி செய்கின்றன. பிறப்பு முதல், இறப்பு வரை மரங்கள் நமக்கு உற்ற நண்பனா இருக்கின்றன. மரங்களை வெட்டினா அதுக்கு தீங்கு செய்வது போல் தானே ஆகும். அதனாலே மரங்களை வெட்டக்கூடாது. யாராவது மரங்களை வெட்டினா! ‘உயிருள்ள மனிதனை வெட்டினா கொலை ஆகும் போது, உயிருள்ள மரங்களை வெட்டினா! கொலை ஆகாதான்னு?’ அவங்க கிட்ட எங்க மிஸ் கேட்க சொன்னாங்க.”

“அப்பா மரங்களை வெட்றத நான் ஸ்கூளுக்கு போகும்போது பார்த்து இருக்கேன். அதான், ம்..மா அப்பா கொலை செஞ்சதா சொன்னேன்!.”

”நீனும் தானே! யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது சொன்னே. மரங்களை வெட்டுவதால் மரங்களுக்குத் தீங்கு செய்வதா ஆகாதாம்மா?”. பச்சை மரங்களை வெட்டினா மரங்களுக்கு வலிக்காதமா? அவைகளுக்கும் உயிர்தானே இருக்கு!” என்று கேட்டான்.

அவனின், கனத்த பேச்சுக்கள் கூரிய வால் போன்று பாய்ந்தன.

“மரங்களை வெட்ட வேண்டாம்ன்னு சொல்லும்மா” என்று கோரிக்கை வைத்தான் .

உடல் முழுவதும் நெரிஞ்சி முள் படர்வது போன்றே உணர்வு அன்பரசிற்குள் பயணிக்கத் தொடங்கியது .

மகனுக்குப் பதில் கூற முடியாமல் காட்டாறு வெள்ளம் போன்று இருவருக்கும் கண்ணீர் துளிகள் ஓடத் தொடகின.

மகனைக் கட்டிப்பிடித்து “டேய் இன்பா ! உன்னைப் பிள்ளையாய் பெற்றதற்கு ரொம்ப சந்தோஷப் படுறேன் டா”.

“நமக்கு ஜாலியா தங்க வீடு இருக்கு அதுல தங்குறோம். அப்பா மரங்களை வேட்டினதாலே. வீடு கட்ட இடம் இல்லாமல், நம்ம வீட்டில் குருவி கூடு கட்ட வருதுமா. ஏன் மா அது தங்க போற வீட்டை நாமோ வெட்டனும்?அது பாவம் மா!” என்றான்.

“வேண்டாம்ங்க! இந்த தொழிலை நம்ம பிள்ளைக்காக இன்னையோடு விட்ருங்க” என்றாள்.

கண்ணை தொடைத்துக் கொண்டே. “மரம் வெட்டுவதில் இவ்வாளவு விஷயம் இருக்குன்னு எனக்கு தெரியாது. இன்பா! இனிமே நான் மரம் வெட்ட போக மாட்டேன். நம்ம நலத்தில் விவசாயம் செய்யப் போறேன். நான் இதுவரை வெட்டிய மரங்களுக்கு பகரமாக நம்ம ஊரில் மரங்கள் நடப் போறேன்” என்றான்.

“தேங்க்ஸ் ப்பா!” என்று கூறி அப்பாவைக் கட்டிப்பிடித்து முத்தமழைப் பொழிந்தான் இன்பா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *