கேரளத்தில் எங்கோ…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 2, 2023
பார்வையிட்டோர்: 913 
 

(1988ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10

அத்தியாயம்-7

மடிமேல்-தோசைமேல் கண் விழுந்தது. திடீரெனப் பசி கொழுந்து விட்டது. தோசை ஆறிவிட்டது. பசை வரண்டு விட்டது. விண்டு குழம்பில் தோய்த்தேன், குழம்பு ஆறிப்போச்சு. உர்ஸ் செய்யும் பாகத்துக்கும் எனக்கும் பொதுவாக ராசி கிடையாது. மனம் போல மாங்கல்யம். இந்தச் சமயத்தில் இந்தப் பழமொழிக்கு என்ன பொருள்?

வாயில் ஒரு கனைப்பு. மிஸ்டர் ஜ்யார்ஜ் வாசலில், பல்குச்சியை மாட்டிக் கொண்டு நின்றார். அந்தப் பல் குச்சிக்கு அர்த்தமே கிடையாது. பல் விளக்கியுமிருப்பார்; விளக்காமலுமிருப்பார். வெறும் வாய்க்கு ஒண்ணு,தோசைத் தட்டை நீட்டினேன், அப்படியே வாங்கிக்கொண்டார். ‘மள மள’ வென முறித்து வாயில் போட்டுக் ண்டே. 

“உர்ஸ் ஏதோ பறைஞ்சது” 

“எஸ், வில் யூ பாயிட்?” 

“உர்ஸ் ஒரு ஸில்லி ” 

“அப்போ நீங்கள் அனுப்பலியா?” 

‘”நோ, நோ சாமியோட அனுப்ப என்ன?” 

“தேங்க்யூ.” 

“உர்ஸ் ஒரு மான் குட்டி. ஒரு இன்னசன்ட்.” 

“நிச்சயமா.”

“மதராசி ஒரு வனப்ரதேசம். ஓநாய்கள், புலிகள்.” 

”ஓ?!” 

“அப்பா தாகம் வரட்றது.”

“தோசை தண்ணீர் கேட்கிறதாக்கும்” என்று சட்டென எழுந்தேன். ஆனால் அவர் கையமர்த்தினார். அர்த்தமுள்ள கபடுப் புன்னகை கண்களில் உதயமாகி, உடனே வாய்க்கு இறங்கி கன்னங்களில் வியாபித்தது. ஓஹோ! புரிந்து விட்டது. நெஞ்சில் கோபம் எலி பிராண் டிற்று. பேரம் இந்த லைனில் போகிறதா? உர்ஸ் ‘அப்ப னைச் சரியாக்கிடற வழி இதுதானா? சுயநலம் என்றால் புத்தி எப்படியெல்லாம் போகிறது? ஆனால் ஆசை காட்டி னவன் நான்தானே? என் சுயநலத்துக்கு நானும் விலை கொடுத்துத்தானே ஆகணும்? அவளைக்கூட அழைத்துச் செல்வதில் சுவாரஸ்யமான கட்டங்கள் – இன்னும் அவை தெளிவாகயில்லை. ஆனால் உருப்பிரிந்து விட்டன. தோன்ற ஆரம்பித்துவிட்டன. 

கனைப்பு – யோசனை கலைந்து நிமிர்ந்தேன். ஐந்து விரல்களைக் குவித்து விரித்தார். 

உருவாகவே என்னுள் கோபம் படமெடுத்து விட்டது. ராஸ்கல், பாட்டிலுக்கு அடிப்போடுகிறான், மொந்தைக்கு சிங்கியடிக்கிறவனுக்கு வந்த வாழ்வு- 

நான் மறுப்பில் தலையை ஆட்டி இரண்டு விரல்களைக் காட்டினேன். ‘V” ஃபார் விக்டரி. 

மனுசன் பதிலுக்கு விரலைக் காட்டக் கூட இல்லை. பாதங்களைத் தரை மண்ணுள் தோண்டி ஊன்றிக் கொள் ளும் விதத்திலிருந்தே, வெற்றி தனக்குத்தான் பண்ணிக் கொண்டு விட்டார். அவ்வளவு தன்னம்பிக்கை. 

“நான் கொடுப்பேன் என்று உங்களுக்கு என்ன நிச்சயம்?” 

புன்னகை புரிந்தார். இந்தக் கஜப் போக்கிரியை ஏன் என் மனம் இன்னும் பன்மையிலேயே நினைக்கிறது? ஆளுக்கு, எதிராளியைக் கட்டியாளும் ப்ரஸன்னம் இருந்தது. 

உள்ளேபோய் ஐந்து நோட்டுகளைக் கொணர்ந்து, அவர் கைகளுக்கு மாறும் தறுவாயில் வேணுமென்றே தரையில் விட்டேன். என் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வதுதான் எப்படி? 

மிஸ்டர் ஜ்யார்ஜ் இணங்கவில்லை. புன்னகை புரிந்த வண்ணம் என்னைப் பார்த்துக்கொண்டே பாதங்களைத் தரையில் இன்னும் அழுந்தத் தோண்டிக் கொண்டு நின்றார். 

அந்த நிமிஷம். நாங்கள் ஒருவரையொருவர் கரித்த கரிப்பு கருகல் நெடி அடித்தது. 

நான்தான் தோற்றேன். சினிமாவில் இந்த கௌபாய் கட்டம் எனக்குப் பொறுக்க முடியவில்லை. குனிந்து பொறுக்கியெடுத்து அவர் கையுள் திணித்தேன். நான்தான் பலஹீனன். அவன் நின்ற நிலையில் காலத்துக்கும் கல்தூணாய் நிற்பான். 

எனக்கு ஒரு ஸலாம் அடித்து விட்டு விர்ரெனத் திரும்பிப் போய் விட்டான். 

ஊரிலிருந்து திரும்பி வந்ததும் இடத்தைக் காலி பண்ணிவிட வேண்டியதுதான். உர்ஸ்? 

இன்று மாலையே எங்கேனும் இவர் உருண்டு கிடக்கும் இடத்தைத் தேடிப்பிடித்து தலை நசுங்க ஒரு பாராங் கல்லை இவன் மேல் போட்டால்தான் எனக்கு வயிற்றெரிச்சல் பாதியேனும் தீரும். ஆனால் அது சாத்திய மல்ல. நான் வேறு ஊர் ஆள். அதுவும் கிழக்கத்தி ஆள், சுருக்கத் துப்புத் துலக்கி ஆகி விடும். கையில் காப்புப் பூட்டி விடுவார்கள். தவிர,உடனே இப்போ மெயிலைப் பிடித்தாகணும். 

கடவுள் நியாயங்களை வழங்கும் வழியே தனி. ஜ்யார்ஜ் பாடு சுகம்.உர்ஸ் பாடு சுகம். உற்றவர் மற்றவர் துரத்தலுக்குப் பயந்து எங்கேயோ ஓடிவந்து ஒளிந்து கொண்டிருக்கும் என்னை வளை தோண்டியெடுத்து வேட்டையாடி, எவர்களிடமிருந்து ஓடி வந்தேனோ, அவர் களிடமே என்னை விரட்டுவது தான் அவர் வழி. 

நாசத்துக்கே வசிய சக்தி இருக்கிறது. 

இரவில், விளக்கு வெளிச்சத்தில் பல்லி வேட்டை எத்தனை தடவை பார்த்திருக்கிறேன்!

பாச்சை, ஈசல், தத்துக்கிளி பறந்து பறந்து, தத்தித் தத்தி பல்லியின் அசைவற்ற உடலைத்தான் சுற்றிச்சுற்றி வருகின்றன. வேறெங்கேனும் தொலையக் கூடாதா? எத்தனையோ முறை விரட்டியும் பார்த்தாச்சு. அந்தக் கொட்டாத கண்களுக்கு என்னதான் வசிய சக்தியோ? அங்கேயே தான் அதன் வாயருகேதான் –

“லபக் ஒன்றன் விதி க்ளோஸ். அடுத்ததின் முறை வந்தாச்சு. அது போல் இருக்கிறது என் கதி. 

உனக்கு இவ்வளவு ஞானபூர்வமாக எல்லாம் தெரிந்திருந்தால் நீ போவானேன்? மதுரம் எக்கேடு கெட்டுப் போகட்டும். 

அந்த அளவுக்கு என்னிடம் பக்குவம் இல்லையே! பாசக்கயிறுதான் மேலே விழுந்தாச்சே! 

எப்பவோ ஒரு சேதி படித்தேன். எங்கேயோ- வட நாட்டில் – ஒரு சிலந்தி தன் நூலால் பாம்பையே கட்டி விட்டதாம். இசைகேடாக நேர்ந்து விட்ட சமாச்சாரம். நாள் கணக்கில் போராட்டம். வீட்டுக்காரன் இயற்கையின் நியதியைத் தடுக்க மறுத்து விட்டான். பிறரையும் நுழைய விடவில்லை. பாம்பு தன் பிணைகளில் நெளிகிறது. நூல் அற அற, மேலே மேலே புதுக்கட்டுக்கள் அதன் மேல் விழுந்து கொண்டே இருக்கின்றன. 

குளிர்ந்த வாடை போல் உர்ஸ் உள்ளே நுழைந்தாள். உர்ஸ்தானா? இதுமாதிரி உர்ஸைப் பார்த்ததே எனக்கு மறந்து போச்சு. 

தொட்டு மையிட்டுக் கொள்ளலாம் போன்ற அந்த மரப்பாச்சிப் பளபளப்புக்குப் புடவையின் தும்பைத் துல்லியம் கண்ணைப் பறித்தது. ரவிக்கையும் முண்டு மாகவே அவளைப் பார்த்துப் பார்த்துப் பழகிப்போன கண் களுக்கு அவளை ஒழுங்காகப் புடவையில் காண்பதே ஒரு சிறு அதிர்ச்சி. சந்தோஷமான அதிர்ச்சி. 

இத்தனைக்கும் சாதாரண மல்துணிதான். 

நடுவகிடு எடுத்து, அழுந்த வாரி, பின்னல் அப்படி ஒன்றும் நீளமில்லை. ஆனால் நல்ல அடர்த்தி. காலில் செருப்பு. கழுத்தில் மெல்லியதொரு சங்கிலி, உமா கவரிங்க் என்று கண்டு கொள்ள பூதக்கண்ணாடி வேண்டாம். எனக்கே தெரிகிறதே! கையில் ஒரு சின்ன பிரயாணப் பெட்டி. அதன் பிடியில் இரண்டு, கைகளையும் சேர்த்துக் கொண்டு அதை லேசாய் ஆட்டியபடி, முகத்தில் சந்தோஷ லஜ்ஜை குழும… 

கொஞ்சம் கலராய் மட்டும் இருந்தால்… சென்னையில் ஆகாசத்தின் கூரையையே தூக்கி விடுவாள். இப்பவும் என்ன கேட்டுப் போச்சு? 

கனைத்துக் கொண்டு கோபத்தை வரவழைத்துக் கொண்டேன். ஆனால் கோபம் சுபாவமாகவே அடி யெடுத்துக் கொடுத்த வேகத்தில் என்னைத் தாக்கிற்று. என்னால்தான் அவளை ஒண்ணும் செய்ய முடியாது. அவள் கடப்பாரைக் கஷாயம் குடித்தவள். 

“அச்சனை சரியாக்கிட வழி உன்னுடையதுதானே? பணம் பறிக்கச் சொல்லிக் கொடுத்தது நீதானோ?’ 

என் குரல் ஸ்தாயி ஏறிக்கொண்டே போய் உச்சத்தில் அசிங்கமாய், கௌரவமிழந்து உடைந்தது. 

“அச்சனை சாமி அறியும்” அழுத்தமான அமைதிக்கு மறுபெயர் உர்ஸ். 

“ஐம்பது ரூபாயாக்கும்!-‘ அஞ்சுவிரல்களையும் அல்லாசாமி மாதிரி அவள் முகத்தெதிரே காட்டிக் கொண்டு பட்டாணி வெடிப்பது போன்று குதித்தேன். 

”நான் ஐம்பது ரூபாய்கள் பொற மாட்டேனா?” அட, சமயம் வந்தால் தமிழ் தமிழாகவே வரும்போல இருக்கே? 

”உன் அப்பனுக்கு நீ அப்போ ஐம்பது ரூபாய்தான் பொறுவையா?” 

“அச்சன் கூடக்கேட்டால் சாமி கொடுக்குமா?” 

ஓ…மை காட்! இவளை என்ன செய்வது? 

தலையை இருகைகளிலும் பிடித்துக் கொண்டு விட்டேன். 

அடுப்படியில் தோசைமாவு திறந்தபடி. அடுப்பில் நெருப்பு தானே நீர்த்துக் கொண்டு, எல்லாம் போட்டது போட்டபடி. 

இவளை எப்படிக் கொடுமைப் படுத்தலாம்? எப்படி யேனும் இவளைத் தலையிறக்கம் காணவேணும். 

என்னில் குரூரக் கோடு நெளிந்தது. எப்படியேனும் எனக்காக அந்தத் தோசை மாவு துளியேனும் அந்த முகத் தில் தெறித்து, அடுப்புக்கரி துளியேனும் அந்தப் புடவையில் ஈஷி- 

“என்ன சமைப்பதாக உத்தேசமில்லையா? “

“இன்று அந்த ப்ளான் இல்லை”. 

“உன் ப்ளான் என்னவோ?” 

“ஹோட்டல் மீல்ஸ். ஞான் திருவனந்தபுரத்தில் ஒரு ஸ்தலம் அறிஞ்னு. எனக்கு நான் விஜ், சாமிக்கு விஜ் ஸ்பெஷல் செட் ஏனங்கள். சாமிக்கி ஒர்ரி வேண்டா-” 

“உர்ஸ் உனக்கு ஹ்ருதயம்னு ஒண்ணு இருக்கா? இருந்தால் அதில் இருட்டு, ஒட்டடை, வௌவால், துரிருசல் தொங்கிக்கொண்டு…” 

சாந்தமாக என் அருகே அமர்ந்தாள். 

எங்களுக்கு ஹ்றுதயம் கட்டுப்படி ஆகாது! 

எனக்கு நாக்கு, வாய்க் கூரையை முட்டிற்று. 

சொல்லி வைத்தாற்போல் ஒரு பட்சி ‘கக்கடரிட்’ வெனச் சிரித்தது. 

கடைசி வார்த்தை எனக்குக் கிடையாது என்கிற சாபம் என்று வாங்கிக் கொண்டேன்? அவள் அமைதியாகத் தன் கை நகங்களைச் சிந்தித்துக் கொண்டிருந்தாள். 

என் ஜன்னல்களைக் கூட நான் மூடியாச்சு. என் கூரை, என் சுவர்கள் பத்திரமாயிருக்கின்றன. நான் இல்வாதவள் இல்லாதவரின் தத்துவம் இது தானா? இரவின் காற்றுக்கள் போல நீ ஊளையிட்டுக் கொண்டிரு… என்று தன் மௌனத்தால் போதிக்கிறாள். 

திருவனந்தபுரத்துக்குப் பஸ்ஸில் தொற்றிக் கொண்டு திருவனந்தபுரம் சேர்ந்ததும் எங்கள் வருகைக்கும் சென்னைக்குத் தந்தி அடித்து கருணாகரனிடம் போய்க் கெஞ்சிக் கூத்தாடி இன்னும் கொஞ்சம் பணம் பெயர்த்துக் கொண்டு உர்ஸைப் பார்த்தவுடன் அவர் புருவங்கள் நெற்றி ஏறி, முன் மண்டை வழுக்கையில் தத்தளித்ததைப் பார்க்கணுமே! (சரிதான், பார்த்துக் கொண்டுதானே  இருக்கிறேன்!) 

ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு – 

ஜங்ஷனுக்குப் போய் – நல்ல வேளை உட்கார வேணும். ரிஸர்வேஷன் கிடைத்ததே உன்பாடு என்பாடு நல்ல வேளை உர்ஸ் கூட இருந்ததால் பெண்டிர் கௌண்டரில் டிக்கட் சற்று சுருக்கக் கிடைத்தது. 

வண்டியில் இடம் கண்டு பிடித்து ஏறி உட்கார்ந்து கொண்டு – உர்ஸ் எப்படியோ தனக்கு இடம் ஜன்ன லண்டை பிடித்து விட்டாள் – நான் ‘உஸ்’ என்று ஒருதரம் சொல்வதற்குள், கருணாகரன் நான் எதிர்பாராமல் திடீரென ப்ளாட்பாரத்தில் எங்கள் எதிரே உதயமானார். கையில் ஒரு கணிசமான பார்சல். 

“ஹி! ஹீ!! q!!! நினைப்பு வந்தது. நீண்ட பிரயாணமாச்சே!” பார்சலை அவளிடம் நீட்டினார் இல்லை அவள் கையுள் திணித்தார். ஸ்பரிசம் பட்டது தான். கருணாகரனுக்கு முகம் அசல் உதயசூரியன் போல ஆகி விட்டது. வண்டி புறப்படும் வரை இருவரும் நெடுநாள் பழகியவர் போல மளையாளத்தில் என்னவோ பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தனர். என்னைச் சட்டை செய்யவேயில்லை. 

நெற்றி வேர்வையைத் துடைக்கும் சாக்கில் நெற்றியில் அடித்துக் கொண்டேன். 

ஐயோ சபலமே! 

அத்தியாயம்-8

சென்னை 

வண்டி செங்கோட்டை வந்ததும், பூமி சமவெளியாக வியாபித்து அதன் மேல் வானத்தின் கவியல் கண்டதும் எனக்கு என்னவோ மலைகள் வைத்த சிறையினின்று விடு பட்டாற் போன்றதொரு வெளிச்சம். ஐந்து வருடங் களுக்குப் பின்னல்லவா வருகிறேன்! 

இந்தத் திடீர் மாறுதல் கண்டு உர்ஸ் குழந்தை போல் கொக்கரிப்பாள் என்று எதிர் பார்த்ததற்கு அவளிடம் அதுபோல் எதிர்ச் செயல் ஏதும் தென்பட வில்லை. தன் உணர்ச்சிகளை சீசாவில் அடைத்துக் கொண்டிருந்தாளோ அல்ல பாதிப்பே ஏதும் இல்லையோ? 

உர்ஸ் எமத் தீனி தின்கிறாள்.கருணாகரன் கொடுத்த பார்ஸலை அவள் தான் காலி பண்ணினாள். கணிசமாக ஒரு மிக்ஸ்சர் பொட்டலம், ஒரு பெரிய ரொட்டி. பிறகு பூணலூரில் மதியம் சாப்பாடு. இப்போ பிற்பகல் சிற்றுண்டிக்குத் தயாராகி விட்டாள். அவளைக் கரித்து என்ன பயன்? என் வயதில் சிறுசுகளுடன் போட்டி போட முடியுமா? 

சென்னை சேர்ந்தபின் அது வீடோ, ஹோட்டலோ எதுவாயினும் சரி மாற்றி மாற்றி ஒரு வாரத்துக்கு வெட்ட ணும். அடை, சேவை, மோர்க்கூழ், அரிசி உப்புமா, குழம்பு மாவு உப்புமா – சே, மானம் போக நாக்கு இப்படியா செத்துப் போகணும்? 

எங்கே செத்துப் போச்சு? 

உடல் செத்தாலும் ருசிகள் சாகா, 

எனக்கும், குழந்தைகளுக்கும் இதுவே ஒரு சச்சரவு. 

“அப்பா வேலையிலிருந்து ஓய்வு வாங்கிண்டு வீட்டோடு அடைஞ்சாலும் அடைஞ்சா, எப்பவும் தீனிதானா ஸ்மரணை? இன்னிக்கு என்ன சமையல்? அடுத்து என்ன டிபன்? சாப்பிட்ட வாய்க்கு நொறுக்குத் தீனி முறுக்கு, கிறுக்கு, சீடை, தட்டை? சே, படுபோர்”. 

என்னைச் சொல்றான்கள், இவன்கள் குறைத்துத் தின்கிறான்களா? இஷ்டப்படி சுற்றி விட்டு வெளியே தின் பது போதாமல், வேளையில்லா வேளையில் திரும்பி வந்து, ‘என் வீதம் எங்கே?’ என்று சட்டம் பேசித் தட்டுத்தட் டாகக் காலி பண்ணுவது அவர்களுக்கும் தெரிவதில்லை. அவர்கள் அம்மைக்கும் தெரிவதில்லை. போதும் போதாக்கு ‘ஜமா’ சேர்த்துக்கொண்டு வந்து, மாதக் கடைசியில் ஒன்று இருக்கும், ஒன்று இருக்காது- நான் என்ன இப்போ மாதச் சம்பளக்காரனா, ஒழுங்காய்த் தவறாத வருமானத்துக்கு?- இவர்கள் அடுக்குள் நிலவரம் தெரியாமல் அல்லது அது பற்றி அக்கறையே இல்லாமல் அதைக் கொண்டுவா இதைக் கொண்டுவா என்று அட்டகாசம் பண்ணுகையில், சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் பொருமிய படி எத்தனைமுறை என் அறையில் சிறையிருந்திருப்பேன், இருக்க முடியும்? 

என் வீட்டில் நானே செல்லாக் காசாக மாறிக்கொண் டிருக்கும் உறுத்தல் தாங்கக் கூடியதாக இல்லை. இவர்கள் இனிமேல் தலையெடுத்து நாலுகாசு தன்னதென்று, சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால் இவர்களையும் கட்டிப் பிடிக்க முடியாது; இவர்கள் தாயாரையும் கட்டிப் பிடிக்க முடியாது. 

“சிறுசுகள் கொஞ்சம் அப்பிடியுமிப்பிடியுமாத் தானிருக்கும். நாம் தான் விட்டுக் கொடுத்துண்டு போகணும்? 

“சிறுசுகளாக நாங்கள் இருந்த போது இப்பிடியா இருந்தோம்? இப்போ இவர்களை என்னக் காலை கட்டிப் போட்டு வைத்திருக்கிறது, என்ன தட்டுக் கெட்டுப் போகிறது?” 

“உங்கள் காலம் வேறு; இந்தக் காலம் வேறு. உங்கள் அம்மா உங்களைத் தன் முன்றானையில் முடிச்சுப்போட்டு வைச்சிருந்த மாதிரி இப்போ முடியுமா?’ 

பெண்கள் எவ்வளவு யதார்த்த வாதிகள், அந்தந்த நிலைமையின் வார்ப்பிடத்தில் அதற்கேற்றபடி அளவாகி விடுகிறார்கள். அந்த சுலபம் ஏன் நம்மிடத்தில் இல்லை? 

இந்த உதவாக்கரை யோசனை அதன் பல்வேறு ரூபங்களில் என்னை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கையி லேயே, மதுரை எப்போது வந்தது? 

வண்டியைத் தள்ளியபடி, தலை மேல் கூடைகளிலும், தோள்மேல் தட்டுகளிலும் சரக்குகளின் அறைகூவலின் இரைச்சல்களின் இடையே உர்ஸின் குரல் என்னைத் தேடி வந்தது. நான் குத்துக்கல்லாய் எதிரே உட்கார்ந்திருக்கிறேன்: 

“ஊணா என்னவாச்சு?” 

“ஊணா? உனக்கு எப்படிப் பசிக்கலாம்? பசிக்க என்ன நியாயமிருக்கு?” 

உலகத்திலேயே பெரிய ‘ஜோக்’ கைக் கேட்டாற்போல் உர்ஸ் கைகொட்டிச் சிரித்தாள். 

இவளுடைய வேங்கைப்புலி சாப்பாடு கண்டு இவளைப் பிடிக்கவில்லை. 

ஒருவர் மேல் பிடித்தம் தோன்றுவதற்கும், விடுவதற் கும் இடைக்கோடு இவ்வளவு மெலிந்த இழையா? அல்ல, இதுவும் என் வயதின் கோளாறா? 

மதுரம் அப்பவே சொல்வாள்: கொட்டடா குடையடான்னு இருந்த இடத்தைவிட்டு நகராமல் கண்ணை உருட்டி உருட்டிப் பார்த்துண்டு, யார் யார் என்ன என்ன செய்யறான்னு கவனிக்கறதே உங்களுக்குத் தொழிலாப் போச்சு, காலைமாலை காலாற ஹாய்யா நடந்துட்டு வர்றதுதானே! எதையுமே இப்படி காவல் காத்தால் எதுவுமே தாங்காது.” 

மதுரத்தின் இடி சொல் ஒரு பக்கம் இருக்கட்டும். அதனால், மூளும் கோபம் ஒரு பக்கம் இருக்கட்டும். அவள் சொல்வதில் உண்மை இருக்குமோ? இந்த வயதுக்கே குற்றம் கண்டு பிடிக்கும் சுபாவம் வந்து விடுமோ? பிறகு தான் ஆவதுதான் என்ன? ஊர் திரும்புகையிலே கூடவே குழப்பங்கள் எதிர் கொள்கின்றன. அஞ்சு வருடங்கள் விடு பட்ட மாதிரி இருந்தேன். ஆனால் மாதிரிதான் போலும். 

ஜன்னல் வழி பனி சில்லென்று மோதிற்று. போர்வைக் கடியில் உடல் வெடவெடத்தது. எழுந்து கண்ணாடிக் கதவை இறக்குகிறேன். கூடவே நிலா துணை வந்து கொண்டிருக்கிறது. அதற்குக் குளிர் கிடையாதா? வானத்தை மேகத்தை நக்ஷத்திரக் கூட்டங்களிடையே என்ன லகுவாய் அலட்சியமாக சவாரி செய்கிறது! சிரிக் கிறது. என் சஞ்சலத்துக்கு சந்திரனே சாக்ஷி. 

எதிர் பெஞ்சில் உர்ஸ் நிம்மதியாகத் தூங்கிக் கொண் டிருக்கிறாள். சுருண்டு படுத்துக் கொண்டு நேர்த்தியான விலங்கு.நானும் கண்ணயர்ந்திருக்க வேண்டும். 

செங்கற்பட்டு! செங்கல்பட்டு!!” ப்ளாட்பாரத்தில் போர்ட்டர்களின் அறை கூவலில் விழித்துக் கொண்டேன். பொல பொலவென பொழுது புலர்ந்திருந்தது. 

அப்புறம் தூக்கம் வரவில்லை. ஜன்னலுக்கு வெளியே வண்டியின் இரு மருங்கிலும் பனி நீலம் அடர்ந்து குமைந்து புகைந்து புழுங்கிற்று. 

சூரியன் உதித்தபின்னரும் ஆங்காங்கே புல்தரைகளில், குளம் குட்டை ஏரிஜலம் விளிம்பில் குன்றுகளின் சரிவில் தாங்கும் மூடுபனித்திட்டுகளினூடே வெய்யிலின் கிரணங் கள் தூலங்கட்டி வான மாளிகையை ஒளித் தூண்களால் தாங்கும் விந்தையை நான் கண் கொட்டா வியப்பில் அதிசயித்துக் கொண்டிருக்கையிலேயே வண்டித் தொடர் அவுட்டரைத் தாண்டி லயன் மாறி கம்பீரமான கிழட்டு நடையில் மூன்றாவது ப்ளாட்பாரத்துள் நுழைந்து கொண்டிருந்தது. 

எந்த ரயில்வே ஸ்டேஷனிலும் – அதிலும் எழும்பூரில் கேட்கவே வேண்டாம் – ஒரு வண்டி புறப்படுமுன்னோ அல்ல வந்து அடைந்த உடனோ காணும் அந்த முகூர்த்தப் பரபரப்பை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதிலேயே ஒரு அலாதிப் பரபரப்பு. 

  • கூட்டிலிருந்து விழுந்துவிட்ட குருவிக் குஞ்சை எடுத் துக் கொண்டாற் போல உள்ளங்கை மேல் உள்ளங்கை பொத்தி, தன்னுள் தன்னை இறுக்கிப் பிடித்துக்கொண்டு, வழி தப்பி விட்டாற்போல் லேசான திக்ப்ரமையில் வண்டித் தொடரின் வேகத்துக்கு ஏ ற்ப எங்களைத் தேடும் பிரயாசையில் அப்படியும் இப்படியுமாகத் தலையசைப் புடன்- 

வண்டி நின்று இறங்கி, அவன் நகர ஆரம்பிக்குமுன் நாங்கள் தான் அவளை முதலில் அடைந்தோம். நான் என் கைப்பையுடன், உர்ஸ் தன் பெட்டியுடன். 

”மது!” 

ரயில் பெட்டிகளின் ஜன்னல்களையே எனக்காகத் துருவிக்கொண்டிருந்த நாட்டம். திடுக்கிட்டுத் திரும்பி நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நேர்முகமானதும், கோடுகள் அழிந்து அந்த தரிசனம் அனுபவ பூர்வமின்றி வார்த்தையில் விண்டிடல் அல்ல. அந்த முயற்சியில் கூட ஒரு அபசாரமோ என்னவோ? எனக்கென்னவோ அப்போ அப்படித் தோன்றிற்று. பிரிந்தும் கூடியும், கூடியும் பிரிந்தும், சண்டை போட்டுக் கொண்டும், சமாதானமாகி யும், மானங்கெட்டும் எப்படியேனும் எதற்காக வாழ் கிறோம் என்கிற கேள்விக்கு ஒரு துள்ளு மீன் பதில். ஆனால் அந்த மீன் துள்ளு நேரத்துக்குத்தான் அந்த விளக்கம். அந்த வெளிச்சம் – முழுக்கப் புரியுமுன் – அது புரிவதற்குமில்லை – மீன் கடலுக்குள் புகுந்தாச்சு. அந்தத் தருணத்தில் எழும்பூர் சந்திப்பின் அந்த நெரிசலில் (என் கணக்கில்) நாங்கள் இருவர் மட்டும்தான். ஒருவருக்கு மற்றவர் – மதுரம் உன்னிடம் இன்னும் ‘மாஜிக்’ இருக்கு. 

அவள் கண்கள் விரிந்தன. முகம் ஒளி கண்டது. 

என்னென்னவோ இதுவரை நான் பட்டதெல்லாம் வீண பயம் என தெரிந்ததும் எவ்வளவு பெரிய சுமையிறக்கம்! 

“என்ன? நீயே வந்திருக்கே? உன் பிள்ளைகள் எல்லாம் என்னவானார்கள்?” 

“அவாளவாள் பிஸி” புன்னகை புரிந்தாள். 

“ஓ. மறந்தேனே.மதுரம் இது உர்ஸ் -இவள்- இவர்கள் வீட்டில்தான் நான் குடியிருக்கிறேன். உர்ஸ் இது மதுரம், இது யார்னு நான் சொல்லத் தேவையில்லை”. 

கையில் பெட்டிப் பிடியை மாட்டிக் கொண்டபடியே உர்ஸ் கைகூப்பினாள். மதுரம் அவளை அப்படியே ஒரு கையால் அணைத்துக்கொண்டாள். 

“சரி, போவோமா?” 

நடந்து வெளி வருகையில், ஓரக் கண்ணால் கவனிக்கிறேன். 

அவள் எங்களை நடத்திச் சென்றது டாக்ஸிக்கு அல்ல. கார் குட்டிதான். ஆனால் தனிக்கார். மதுரம் என்னைப் பார்த்து வெற்றிப் புன்னகை புரிந்தாள்.அதான் அவளுடைய ஸஸ்பென்ஸ். பெற்றவள் பெருமை. இருக்க வேண்டியது தானே! ட்ரைவர் எனக்கு ஸெல்யூட் அடித் தான். சீருடையிலிருக்கிறான். 

மூன்று பேரும், பின்னால் நெருக்கிப் பிடித்து உட்கார்ந்து கொண்டோம். 

ஸோ! சியாமா பரமபத படத்தில் பெரிய ஏணியில் ஏறிவிட்டான். ஏற்கனவே எனக்கு சவால் விட்டிருக்கிறான். 

“நான் இந்த வீட்டு சகாப்தத்தையே மாற்றி அமைப் பேன்” என்று. 

“சியமந்த் சித்திரை வாக்கில் ஜெர்மனிக்குப் போவான் போலிருக்கு. அவன் ஆபீஸில் அனுப்பறா”. 

‘சியமந்தா!”நான் புரியாமல் விழித்தேன். 

அவள் கன்னம் சிவப்பேறிற்று. “அதான் நம்ப சியாமா தான்”

“ஒஹ்ஹோ? ஸஹாப்தம் பேரிலும் நடக்கறாப் போலி ருக்கு. ஸாதா ஸாமிநாதன் நான் இங்கிருக்கும்போதே சாமாவாகி, சியாமாகமாறி, இப்போ சியமந்தாக்கும்!”

‘சியாமந்துக் கல்யாணம் கூடும் போல இருக்கு!” 

இப்போ எனக்கு வண்டி எங்கு திரும்பிற்று என்று கூடத் தெரியவில்லை. ஏதோ ஒரு பாலத்தைக் கடந்து கொண்டிருந்தோம். அடியில் வெள்ளம் வேகமாய்ப் பாய்ந்து கொண்டிருந்தது. ‘அப்போ உனக்கு உடம்பு ஒன்று மில்லையா? கலியாணத்துக்கு என்னை வரவழைக்க உன் உடம்பு ஒரு சூழ்ச்சியா?” 

“அப்போ எனக்கு உடம்புக்கு ஏதேனும் இருக்க ணும்னு ஆசைப்படுகிறீர்களா?’ 

“அப்போ உனக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லையா?” 

”உஸ்’ அவள் கை, என் மேல் தங்கி அமர்த்திற்று. எனக்குக் குரல் தடித்ததும் உர்ஸ் ஜன்னலுக்கு வெளியே கவனமானாள். 

”இத்தனைநாள் கழித்தும் ரயில்வே ஸ்டேஷனி லிருந்தே நம் குஸ்தி தொடங்கணுமா?” 

“நம் வாழ்க்கையே தர்க்கத்தின் தொடர்கதையாக ஆகி விட்டதே.”

“அதைத்தான் நானும் கேட்கிறேன். அது என் தலை யெழுத்தா?” 

“உன் தலையெழுத்தல்ல. உன் தராசின் தடுமாற்றம்!” 

“என்னவோ புரியாமல் உங்கள் பாஷையில் பேசுங்கோ?” 

என் சிரிப்பு புகைந்தது. “உனக்கா புரியாது? மது, கொஞ்சம் கூட மாறவில்லை.” 

“ஏன், நீங்கள் உங்கள் பிள்ளை கலியாணத்துக்கு வர மாட்டீர்களா? வரக்கூடாதா?” 

“இப்போ எனக்கென்ன தெரியும்? அப்படியே உண்மையைச் சொல்லி என்னை அழைத்துப் பார்க்கிறது தானே!” 

அவள் தன் தலைமேல் கை வைத்துக் கொண்டாள். “இல்லை சத்யமா எனக்கு உடம்பு சரியில்லை”. அவள் கண்கள் துளும்பின. நான் அடங்கிப் போனேன். 

– தொடரும்…

– கேரளத்தில் எங்கோ… (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1988, ஐந்திணை பதிப்பகம், சென்னை. 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *