முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்ளவும்.
நம்மை அழிக்க திட்டம் போடுகிறார்கள். அதை கிள்ளியெறிய வேண்டும். ஆலோசனைகள் அள்ளி வழங்க தவறாமல் வரவும்.
பிட் நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டது.
கூட்டம் நடத்தும் அரங்கில் நாற்காலிகள் போடப்பட்டிருந்த து. தலைமை விருந்தினராக “டெங்கு மன்ன ன்64-ஆம் கொசு” கம்பீரமாக மூக்கை முன்னால் துருத்தி கொண்டு அமர்ந்திருக்கிறார்.
“உறிம், ஆலோசனைகளை அள்ளி வழங்குக” என்று ஆணை பிறப்பிக்கிறார்.
“இதுதான் நமக்கு சரியான காலம், மழைக்காலத்தில்தான் நம்மினத்தைப் பெருக்கி கொள்ள முடியும், சந்தர்ப்பத்தை வீணாக்கி விட கூடாது. எனவே நாம் எல்லோரும், மழைப்பெருகி வெள்ளமாக வர வேண்டும். அப்படி வந்தால்தான், அங்காங்கே தேங்கி நிற்கும் வாய்ப்புள்ளதால், இனப்பெருக்கத்திற்கு ஆதரவாய் இருக்கும்” என்றது.
இரண்டாவது எழுந்த அது ” மழைப் பெருகினால் மட்டும் போதாது, அங்காங்கே குண்டும் குழியுமாக இருந்தால்தான், அதில் தண்ணீர் தேங்க வாய்ப்பு ஏற்படும். ஆகையால், தொலைபேசி ஊழியர்கள், மின்சார ஊழியர்கள், கேபிள் புதைப்பவர்களுக்கு ஆதரவாக அவர்களை கடிக்காமல், மற்றவரை கடிக்கலாம், இரத்த த்தைக் குடிக்கலாம் “ என்றது.
மூன்றாவது எழுந்த அது ” இப்போதுள்ள சூழ்நிலையில் யாரும் நம்மைக் கண்டு கொள்ள மாட்டார்கள். ஒரு பக்கம் அரசியல் பிரச்சினை, வியாபாரிகளுக்கோ ஜி.எஸ்.டி பிரச்சினை, இல்லத்தரசிகளுக்கோ, டி.வி சீரியல் பிரச்சினை, சினிமா கார ர்களுக்கு “மெர்சலான“ மிரட்டல் பிரச்சினை, ஆண்களுக்கு எல்லாமே பிரச்சினை, ஆதலால் நம்மை பெருக்கி கொள்ள, ”நம்மை ..நாமே” முன்னிறுத்தி முன்னேறுவோம், “வாழ்க கொசு ராஜ்யம்” என்று கோஷமிட்டு அமர்ந்தது.
இப்படி ஒவ்வொன்றாய் கருத்து கூற, கடைசியில் ஒரு கொசு எழுந்திருக்க முடியாமல் தள்ளாடியவாறே… மயக்க நிலையில்… “என்ன நியாயமிது, மண்ணென்னெய் தட்டுப்பாடு இருக்கும் போது அதை மருந்தில் கலந்து என் மீது அடிக்கிறார்கள். ஆதலால் என் மீது மண்ணென்னை தெளித்தவர்கள் மீது கொ.ஆ.பரிபாலன சட்டத்தின்படி அவர்களிடமிருந்து விளக்கம் பெற நோட்டிஸ் அனுப்ப வேண்டும் என்றது.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த “டெங்கு மன்ன்ன் 64-ம் கொசு“ “பலே, நீங்கள் தான் என் தளபதிகள், நம் ராஜ்யம் வளரட்டும், நமது எல்லைகளை பெருக்கி, நம் சந்ததியரை பெருக்குவோம். என்று வீரமுழக்கப்பட்ட போது… “மாநகராட்சியின் “டெங்கு ஒழிப்பு“ வாகனத்தின் மருந்து புகை அந்த அரங்கில் உள்ளே புகுந்த தில்…….“டெங்கு மன்ன்ன் 64-ஆம் கொசு” மயக்கமுற்றது.
மண்ணென்னெய்க்கு மயக்கமான” கொசுவார்” தெளிவாகி அரங்கத்தை விட்டு பறந்து….. மாநகராட்சி வாகன ஓட்டுநரின் இருக்கைக்கு கீழே சாம்ராஜ்யத்தை துவங்கியது. இனிமேல் அதுதான் “டெங்கு மன்னன் 65-ம் கொசு” என்று தன்னை அறிவித்து கொண்டது.
டெங்கு மன்னன் 64-ம் கொசு ராஜ்யம் கதையினை தளத்தில் பதிவிட்டு ஊக்கப்படுத்துவதற்கு மிக்க நன்றி. இளம் எழுத்தாளர்கள் தங்களை மெருகேற்றி கொள்ள உதவும் அருமையான தளமாக இருப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்