முகூர்த்தம் நெருங்கிக்கொண்டு இருந்தது. சாஸ்திரிகள் மந்திரம் சொல்லிக்-கொண்டு இருந்-தார். மணமகன் அதை அரையும்குறையுமாகக் காதில் வாங்கி, திருப்பி உச்சரிப்-பதாக பாவ்லா பண்ணிக்-கொண்டு இருந்தான்.
அப்போது, சாஸ்திரிகளின் இடுப்பில் வெற்றிலை டப்பி மாதிரி சொருகப்பட்டு இருந்த செல்போன் ஒலிக்க, தான் நிறுத்தச் சொல்லும் வரை மாவிலையால் அக்னி -யில் நெய் வார்த்துக்கொண்டு இருக்கும்படி மணமகனுக்கு உத்தரவு இட்டுவிட்டு, செல்-போனை ஆன் செய்து பேசத் தொடங்–கினார்.
“அடடா! எப்போ? த்சொ… த்சொ..! நல்ல மனுஷன். பாவம், சின்ன வயசுதான் இல்-லியோ?” என்றவர், மணமகனிடம், “நெய்ப் பந்தம்… ஸாரி, நெய் வார்த்தது போறும். எழுந்-திருங்கோ!” என்றபடி தானும் எழுந்தார்.
“சரி, நான் வந்துடறேன். நீ மூங்கில், ஓலைக்கெல்லாம் சொல்லிடு. மண்ட-பத் துல… ஸாரி, மயானத்துல விசாரிச்சு டைம் கேட்டுப் புக் பண்ணிடச் சொல்லு! ம்… ஒரு நிமிஷம்..” என்றவர், மணமகன் வீட்டாரிடம், “தாலி அ…ழுத்தமா முடிய-ணும். நாத்த னாரை வரச் சொல்லுங்கோ!” என்று உத்தரவு போட்டுவிட்டு, செல்போனில் தொடர்ந்தார்…
“என்னது! ஒன்பதாம் நாள்தான் காரியத்தை ஆரம்பிக்கப் போறாளா? அதை அப்புறம்
பார்த்துக்கலாம். கெட்டிமேளம்… கெட்டிமேளம்… மாங்கல்யம் தந்துநா…”
இப்படி ஒருவழியாக மணமகனின் கால் விரலைக் கட்டி… அடச் சே! கால்கட்டு போட்டாச்சு!
எனக்கு வந்த ஆத்திரத்தில், சாஸ்திரி-களின் செல்போனைப் பிடுங்கி அக்னிக்கு ஆகுதியாகக் கொடுக்கலாமா என்று தோன்றியது.
– 31st அக்டோபர் 2007